search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சனாதனம் விவகாரம்"

    • சனாதனத்தை பின்பற்றுபவர்கள் இந்தியா கூட்டணியிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
    • உலக நாடுகளின் நண்பனாக இந்தியா வளர்ந்து வருகிறது.

    போபால்:

    மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், தெலுங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறுகிறது.

    இந்த நிலையில் தேர்தல் நடைபெற உள்ள பா.ஜனதா ஆளும் மாநிலமான மத்திய பிரதேசத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை சென்றார். அங்குள்ள பினா பகுதிக்கு சென்ற அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    பினா சுத்திகரிப்பு நிலையத்தில் பெட்ரோ கெமிக்கல் வாரியம் மற்றும் மாநிலம் முழுவதும் 10 புதிய தொழில்துறை திட்டங்கள் உள்பட ரூ.50,700 கோடிக்கும் அதிகமான திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

    விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:-

    இந்தியா கூட்டணியினர் இந்து மதத்துக்கு எதிரான கொள்கையை கொண்டவர்களாக உள்ளனர். இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் நம்பிக்கையை ஒழிக்க எதிர்க்கட்சிகள் அடங்கிய இந்தியா கூட்டணி செயல்படுகிறது. சனாதன தர்மத்தை ஒழிப்பதே இந்தியா கூட்டணியின் நோக்கமாக உள்ளது.

    பாரதம் ஒன்றுபட்டு இருக்க சனாதன தர்மமே காரணமாகும். விவேகானந்தர், லோக்மான்யா திலக்கிற்கு உத்வேகம் அளித்த சனாதனத்தை இந்தியா கூட்டணி அழிக்க நினைக்கிறது. இந்தியாவின் கலாச்சாரத்தை தாக்க ஒரு மறைமுக செயல் திட்டத்துடன் எதிர்க்கட்சிகள் களம் இறங்கி உள்ளது.

    இவர்கள் சனாதனத்தையே குறிவைக்கிறார்கள். சனாதனம் மீதான தாக்குதல் நாட்டின் கலாச்சாரம் மீதான தாக்குதல். சனாதனத்தை எவ்வளவு தாக்கி பேசினாலும் அது வளர்ந்து கொண்டேதான் இருக்கும்.

    ஆண்டாண்டு காலமாக சனாதன தர்மம் இந்திய மக்களை ஒருங்கிணைத்து வருகிறது. இந்தியா கூட்டணியின் அவதூறு கருத்துக்களுக்கு எதிராக அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும். அமைப்பு மற்றும் ஒற்றுமையின் பலத்துடன் அவர்களின் திட்டங்களை முறியடிக்க வேண்டும்.

    சனாதனத்தை பின்பற்றுபவர்கள் இந்தியா கூட்டணியிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

    இன்றைய இந்தியா உலகை இணைக்கும் திறனை வெளிப்படுத்தி வருகிறது. உலக நாடுகளின் நண்பனாக இந்தியா வளர்ந்து வருகிறது. மறுபுறம் சில கட்சிகள் நாட்டையும், சமூகத்தையும் பிளவுபடுத்த முயற்சிக்கின்றன.

    இந்தியா கூட்டணியில் தலைவர் முடிவு செய்யப்படவில்லை. அவர்களின் தலைமைத்துவத்தில் குழப்பம் நிலவுகிறது. எதிர்கட்சிகளின் இந்தியா கூட்டணியில் உள்ளவர்கள் தலைகணம் கொண்டவர்கள்.

    ஜி-20 மாநாட்டை இந்தியா வெற்றிகரமாக நடத்தியது என்பதை நீங்கள் அனைவரும் அறிந்திருப்பீர்கள். ஜி-20 மாநாட்டின் வெற்றிக்கான பெருமை நாட்டு மக்களையே சாரும். இது 140 கோடி மக்களின் வெற்றியாகும்.

    மத்திய பிரதேசத்தை முன்பு ஆட்சி செய்தவர்கள் இந்த மாநிலத்துக்காக ஒன்றும் செய்யவில்லை. ஊழல் மற்றும் குற்றங்களை தவிர அவர்கள் எதுவும் செய்யவில்லை. தற்போது பா.ஜனதா அரசு மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

    இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

    சனாதன தர்மம் ஒழிக்கப்பட வேண்டும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியது நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இதற்கு மத்திய மந்திரிகளும், பா.ஜனதா மூத்த தலைவர்களும் ஆவேசமாக கருத்துக்களை கூறி வந்தனர்.

    இந்த நிலையில்தான் பிரதமர் மோடியும் முதல் முறையாக சனாதன தர்மத்துக்கு எதிராக பேசுபவர்களை கடுமையாக விமர்சித்து இன்று கருத்துக்களை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    மத்திய பிரதேசத்தில் இருந்து இன்று பிற்பகல் பிரதமர் மோடி காங்கிரஸ் ஆளும் சத்தீஸ்கர் மாநிலத்துக்கு செல்கிறார் அங்கு பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.

    • சனாதன தர்மம் குறித்து தி.மு.க. தலைவர்களின் வெளிப்படையான பேச்சுக்கு இந்தியா கூட்டணியில் உள்ள சில தலைவர்கள் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி வந்தனர்.
    • ஒவ்வொரு கட்சித் தலைவர்களும் கருத்து தெரிவித்ததால் இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு தர்ம சங்கடம் ஏற்பட்டது.

    சென்னை:

    தி.மு.க. இளைஞரணி செயலாளர் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் 2-ந்தேதி நடைபெற்ற சனாதன ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்று பேசும்போது, கொசு, டெங்கு காய்ச்சல், மலேரியா, கொரோனா இதையெல்லாம் நாம் எதிர்க்கக் கூடாது. ஒழித்துக் கட்ட வேண்டும்.

    அப்படித்தான் இந்த சனாதனம். சனாதனத்தை எதிர்ப்பதைவிட ஒழிப்பதே நாம் செய்ய வேண்டிய முதல் பணியாகும். சனாதனம் வீழட்டும். திராவிடம் வெல்லட்டும் என்று பேசி இருந்தார்.

    அவரது இந்த பேச்சு இந்தியா முழுவதும் பெரும் விமர்சனத்துக்கு உள்ளானது. பாரதிய ஜனதா கட்சித் தலைவர்கள் உதயநிதி ஸ்டாலினின் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, ராஜஸ்தானில் பேசும்போது சனாதன தர்மத்தை இந்தியா கூட்டணி அவமதிக்கிறது. இந்தியா கூட்டணியில் உள்ள காங்கிரசும், தி.மு.க.வும் வாக்கு வங்கிக்காக சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசுகிறது. வாக்கு வங்கி அரசியலுக்காக இந்தியா கூட்டணி எந்த எல்லைக்கும் செல்லலாம் என்று கடுமையாக தாக்கி பேசி இருந்தார்.

    பா.ஜ.க. ஐ.டி. பிரிவு தலைவர் அமித் மால்வியா பேசுகையில், 'சனாதன தர்மத்தை பின்பற்றும் 80 சதவீத மக்களை இனப்படுகொலை செய்ய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார் என்று குற்றம் சாட்டினார்.

    இதற்கு பதில் அளித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதன தர்மத்தை பின்பற்றும் மக்களை இனப்படுகொலைக்கு அழைக்கவில்லை. பல சமூக கேடுகளுக்கு சனாதன தர்மம்தான் காரணம். எனது பேச்சை தவறாக திரித்து கூறி வருகின்றனர் என்று விளக்கம் அளித்தார்.

    ஆனாலும் உதயிநிதியின் பேச்சுக்கு பல்வேறு கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வந்தனர். திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்காள முதல்-மந்திரியுமான மம்தா பானர்ஜி கருத்து தெரிவிக்கையில், 'இந்தியாவில் உள்ள எல்லா மதங்களுக்கும் ஒவ்வொரு உணர்வு இருக்கிறது. இந்தியா ஒரு மதசார்பற்ற நாடு, அதனால் அனைத்து மதத்தினரையும் நாம் மதிக்க வேண்டும். நான் சனாதன தர்மத்திற்கு மதிப்பு கொடுக்கிறேன். எனவே எந்த மதத்தினரையும் புண்படுத்தும் விதத்தில் பேசக்கூடாது என்று அறிவுரை கூறினார்.

    இதேபோல் ஒவ்வொரு கட்சித் தலைவர்களும் கருத்து தெரிவித்ததால் இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு தர்ம சங்கடம் ஏற்பட்டது.

    சனாதன தர்மம் குறித்து தி.மு.க. தலைவர்களின் வெளிப்படையான பேச்சுக்கு இந்தியா கூட்டணியில் உள்ள சில தலைவர்கள் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி வந்தனர். பாராளுமன்ற தேர்தலின் போது வடமாநிலங்களில் இது பாதிப்பை ஏற்படுத்தி விடும் என்று அச்சப்படத் தொடங்கினர். இதனால் இந்த விஷயத்தை மேலும் மேலும் பேசி பெரிதுப்படுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொண்டனர்.

    இந்த நிலையில் தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று ஒரு அறிக்கை வெளியிட்டு இந்தியா கூட்டணிக்கு பலம் சேர்ப்பீர் என்று கூறியதுடன், பொய், புரட்டு, திட்டமிட்ட அவதூறு பரப்பும் பாரதிய ஜனதாவினரின் திசை திருப்பும் தந்திரத்தை முறியடிப்பீர் என்றும் கவனச் சிதறலுக்கு இடம் தராதீர்கள் என்றும் வேண்டுகோள் விடுத்திருந்தார்.

    அது மட்டுமின்றி சனாதன தர்மம் குறித்து அமைச்சர்களும் கட்சி தலைவர்களும் பேசுவதற்கு அவர் தடை விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    • இமாலய ஊழல் முகத்தை மறைப்பதற்காக சனாதனப் போர்வையைப் போர்த்திப் பதுங்கிக் கொள்ளப்பார்க்கிறது பா.ஜ.க.
    • மாநிலங்களின் அதிகாரத்தை பறித்து மாநில மக்களின் உணர்வுகளை அவமதிக்கிற மக்கள் விரோத ஆட்சி ஒன்றியத்தில் நடந்து வருகிறது.

    சென்னை:

    சனாதனம் பற்றிய விமர்சனம் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    எந்த ஒரு பிரச்சனையையும் உள்நோக்கத்தோடு திரித்து, ஊடகங்களின் துணையோடு பூதாகரமாக ஆக்கி, நாட்டின் அசலான பிரச்சனைகளை மறக்கடிக்கச் செய்து, மக்கள் கவனத்தைத் திசைதிருப்புவதில் பா.ஜ.க.வினர் வல்லவர்கள் என்பதை நாட்டு மக்கள் நன்றாக அறிவார்கள்.

    நாட்டில் நடைபெறும்-பற்றி எரியும் எந்தப் பிரச்சனைக்கும் வாய் திறக்காத பிரதமர் நரேந்திர மோடி, ஒன்றிய அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டி 'சனாதனம் குறித்து தக்க பதில் சொல்லுங்கள்' என்று ஒன்றிய அமைச்சர்கள் அனைவருக்கும் உத்தரவு போடுகிறார் என்றால், அதன் மூலமாக குளிர்காய நினைக்கிறார் என்றே பொருள்.

    சனாதனம் பற்றி ஒன்றிய அமைச்சர்களில் யாராவது ஒருவர் தினந்தோறும் எதையாவது வம்படியாகப் பேசி, அதையே விவாதப் பொருளாக ஆக்கி மக்கள் கவனத்தைத் திசைதிருப்பப் பார்க்கிறார்கள். பா.ஜ.க. ஆட்சியின் தோல்விகளை மறைக்கும் தந்திரத்துக்கு நம்மவர்கள் இடமளித்து விடக்கூடாது.

    2014-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்த பிரதமர் நரேந்திர மோடி தேர்தலுக்கு முன்னால் கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றவில்லை.

    நாளும் வெறுப்பரசியலை ஊக்குவித்து, இந்தியத் திருநாட்டின் அமைதிக்கு ஊறு விளைவிக்கிறார்கள். மக்களின் நம்பிக்கையை இழந்துவிட்ட பா.ஜ.க. அரசு, அதை மறைக்க விளம்பர ஜாலத்தை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறது. அதைத் தான் நாம் அனைவரும் முனைப்பாக பரப்புரை செய்தாக வேண்டும்.

    ரபேல் ஊழலும், அதானி முறைகேடுகளும் உலக சமுதாயத்தின் முன்னால் இந்தியாவைத் தலைகவிழ வைத்துவிட்டன.

    * துவாரகா விரைவுப் பாதைக் கட்டுமானத் திட்டம்,

    * அயோத்தியா மேம்பாட்டுத் திட்டம்,

    * கிராமப்புற அமைச்சகத்தின் ஓய்வூதியத் திட்டம்,

    * எச்.ஏ.எல். விமான வடிவமைப்புத் திட்டம் ஆகிய ஏழு திட்டங்கள் குறித்து சி.ஏ.ஜி. அறிக்கை வெளியாகி இருக்கிறது.

    இந்த 7 திட்டங்களிலும் முறைகேடு நடந்துள்ளன. விதிமீறல்கள் நடந்துள்ளன. நிதியைக் கையாள்வதில் மோசடிகள் அரங்கேறி உள்ளன என்பதை இந்த அறிக்கை அம்பலப்படுத்தி இருக்கிறது. இதன் மொத்த மதிப்பு 7.50 லட்சம் கோடி ரூபாய் என்று சொல்லப்படுகிறது. இந்த இமாலய ஊழல் முகத்தை மறைப்பதற்காக சனாதனப் போர்வையைப் போர்த்திப் பதுங்கிக் கொள்ளப்பார்க்கிறது பா.ஜ.க.

    மாநிலங்களின் அதிகாரத்தை பறித்து மாநில மக்களின் உணர்வுகளை அவமதிக்கிற மக்கள் விரோத ஆட்சி ஒன்றியத்தில் நடந்து வருகிறது. எதிர்க்கட்சிகளை அச்சுறுத்துவது, ஆட்சிகளைக் கவிழ்ப்பது, ஒற்றை ஆட்சி என சர்வாதிகாரப் பாதைக்கு நாட்டை அழைத்துச் செல்வது என்பது உள்ளிட்ட ஆபத்தான முயற்சிகளைப் பட்டியலிட்டு மக்களிடம் சொல்ல வேண்டியது காலத்தின் தேவையாக உள்ளது.

    பா.ஜ.க.வின் ஊழல்-மதவாத-எதேச்சாதிகார முகத்தை அம்பலப்படுத்தி, நடக்க இருக்கும் பாராளுமன்றத் தேர்தலில் அக்கட்சியைத் தோற்கடிப்பதன் மூலம், நாட்டையும் ஜனநாயகத்தையும் பாதுகாப்பது என்ற உன்னதமான இலக்கில் வெல்ல அர்ப்பணிப்போடு செயல்படுவோம். எந்த கவனச் சிதறலுக்கும் இடமளித்துவிடக் கூடாது.

    இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறி உள்ளார்.

    • சத்யராஜ்க்கு ஆறுதல் கூறும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்திப்பு.
    • முதலமைச்சருடன் அமைச்சர்களாக துரைமுருகன், சேகர் பாபு உள்ளிட்டோர் இருந்தனர்.

    நடிகர் சத்யராஜின் தாயார் நாதாம்பாள் காளிங்கராயர் (94) கடந்த மாதம் 11ம் தேதி அன்று வயது மூப்பு காரணமாக காலமானார். இவரது மறைவுக்கு திரையுலகினர், அரசியல் தலைவர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்தனர்.

    இந்நிலையில், சத்யராஜ்க்கு ஆறுதல் கூறும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு இன்று நேரில் சென்று ஆறுதல் கூறினார். முதலமைச்சருடன் அமைச்சர்களாக துரைமுருகன், சேகர் பாபு உள்ளிட்டோர் இருந்தனர்.

    இதையடுத்து நடிகர் சத்யராஜ் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் நேரில் வந்து சந்தித்தது ஆறுதலாக உள்ளது.

    சனாதானம் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெளிவாக பேசியுள்ளார். அமைச்சர் உதயநிதியின் துணிச்சலை பாராட்டுகிறேன்.

    எதிர்ப்புக்கு பிறகு ஒவ்வொரு விஷயத்தையும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கையாளும் விதம் பெருமையாக உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×