search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோவில் திருவிழா"

    • கூடலூர் கிழக்கு முத்தாலம்மன் கோவில் திருவிழா ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் நடைபெறும் .
    • பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். மாலை முளைப்பாரி ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்தது

    கூடலூர்:

    கூடலூர் கிழக்கு முத்தாலம்மன் கோவில் திருவிழா ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் நடைபெறும் . அதன்படி நேற்று கோவில் திருவிழா விமர்சையாக கொண்டாடப்பட்டது . இதையொட்டி அதிகாலையில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி வீதி உலா வந்தார். அதனைத் தொடர்ந்து பெண்கள் மாவிளக்கு எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.

    மேலும் கோவில் வளாகத்தில் பெண்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். மாலை முளைப்பாரி ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்தது. அத்துடன் பக்தர்கள் சிவன், முருகன், விநாயகர், கலைமகள், லட்சுமி , காளி தேவி உள்பட கடவுள் வேடம் அணிந்து டிராக்டர் வண்டிகளில் வந்தனர்.

    மேலும் தப்பாட்டம், தேவராட்டம் , கேரள செண்டை மேளம் , பேண்டு வாத்தியம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழாவிற்கான ஏற்பாடுகளை கூடலூர் ஒக்கலிகர் (காப்பு) மகாஜன சங்க நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    • திருக்கழுக்குன்றம் அடுத்த இரும்புலிச்சேரியில் மாரியம்மன் கோவில் உள்ளது.
    • இருதரப்பினரும் கொடுத்த புகாரின் பேரில் திருக்கழுக்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரை கைது செய்தனர்.

    திருக்கழுக்குன்றம்:

    திருக்கழுக்குன்றம் அடுத்த இரும்புலிச்சேரியில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழாவில் இருதரப்பினரிடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் கத்தி வெட்டில் 2 பேர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

    இதுகுறித்து இருதரப்பினரும் கொடுத்த புகாரின் பேரில் திருக்கழுக்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேவன், அசோக், வெங்கடேசன் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

    • 15 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவையொட்டி கிராமமே விழாக்கோலம் பூண்டது.
    • 100-க்கும் மேற்பட்ட பன்றிகளுக்கு மாலை மரியாதை செய்து மேளதாளங்கள் முழங்க கிராமத்தின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்‌.

    மேட்டுப்பாளையம்:

    கோவை மாவட்டம் அன்னூர் அருகே கரியாக்கவுண்டனூர் கிராமத்தில் பழமையான அண்ணன்மார் பட்டத்தரசி அம்மன் கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை திருவிழா நடைபெறுவது வழக்கம். கடந்த 2019-ம் ஆண்டு கொரோனா காரணமாக திருவிழா நடைபெறாமல் இருந்தது.

    இந்தாண்டு இந்த கோவில் திருவிழா கடந்த 15-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. 15 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவையொட்டி கிராமமே விழாக்கோலம் பூண்டது.

    விழாவின் முக்கிய நிகழ்வான பன்றி குத்துதல் நிகழ்வு நேற்று நடைபெற்றது. கிராம மக்கள் 100-க்கும் மேற்பட்ட பன்றிகளுக்கு மாலை மரியாதை செய்து மேளதாளங்கள் முழங்க கிராமத்தின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.

    பன்றி ஊர்வலத்தை கொம்பன் ஊர்வலம் என அழைக்கும் கிராம மக்கள், இப்பன்றிகளை கோவிலில் பலியிட்டு, கடவுள்களுக்கு படைத்து வழிபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளதாக கூறுகின்றனர்.

    மேலும் தங்கள் வேண்டுதல் நிறைவேற ஆடு மற்றும் பன்றிகள் கோவிலுக்கு தானமாக வழங்குவதை வழக்கமாக கொண்டுள்ளதாகவும், தொழில் வளம் பெறுக விவசாயம் செழிக்க கிராம மக்கள் ஒற்றுமையுடன் இருக்க இந்த திருவிழா நடத்தப்படுவதாகவும் தெரிவித்தனர்.

    சாலையில் மாலை மரியாதையுடன் பன்றிகள் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்படும் வினோத நிகழ்ச்சியை அன்னூர் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர்.

    • ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர்
    • 2 பேர் கைது

    செய்யாறு:

    செய்யாறு அடுத்த பெரிய வேலி நல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயகாந்தன் (வயது 35). ஊர் நாட்டாண்மைதாரர்.

    இந்த பகுதியில் ஓசூர் அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கூழ் வார்த்தல் திருவிழா நடத்துவது குறித்து கடந்த 28-ந் தேதி கிராம மக்களுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    அதே பகுதியை சேர்ந்த இளைய குமார் (23) என்பவருடன் கோவில் திருவிழாவில் பேனர் வைப்பது தொடர்பாக ஜெயகாந்தனுடன் தகராறு ஏற்பட்டது. அப்போது திடீரென ஜெயகாந்தனை இளைய குமார் இரும்பு கம்பியால் தலையில் தாக்கி உள்ளார்.

    இதில் ஜெயகாந்தனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதனை ஜெயகாந்தனின் அண்ணன் ஜெயக்குமார், தந்தை பெருமாள், தாயார் தங்கமணி ஆகியோர் தட்டி கேட்டனர்.

    இளைய குமாருக்கு ஆதரவாக அவரது தந்தை மற்றும் உறவினர்கள் ஜெய காந்தனின் குடும்பத்தினரிடம் தகராறில் ஈடுபட்டனர்.

    அப்போது இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதில் ஆத்திரமடைந்த இளைய குமாரின் உறவி னர்கள் கட்டை மற்றும் இரும்பு ராடால் ஜெய காந்தனின் உறவினர்களை சரமாரியாக தாக்கியுள்ளனர்.

    காயமடைந்த ஜெயகாந்தனின் குடும்பத்தி னரை அங்கிருந்தவர்கள் மீட்டு செய்யாறு அரசு மருத்துவ மனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து செய்யாறு போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது .

    அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து இளைய குமார், மற்றும் தங்கராஜ் ஆகியோரை கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

    • 43-ம் ஆண்டு திருவிழா 22ம் தேதி சாமி சாட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.
    • இன்று அதிகாலை முளைப்பாரி, அக்னி சட்டி முதலியவைகளை எடுத்துக்கொண்டு முக்கிய வீதிகளின் வழியாக கோவிலை வந்தடைந்தனர்.

    ஆத்தூர்:

    ஆத்தூர் அருகே சின்னாளப்பட்டி பஸ் நிலையம் அருகே உள்ள சக்தி காளியம்மன், முனியப்பன், ஊர்க்காவல் சாமி கோவிலில் ஆண்டுதோறும் சாமி கும்பிடு திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி 43-ம் ஆண்டு திருவிழா 22ம் தேதி சாமி சாட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது.

    30, 31 ஆகிய தேதிகளில் கரகம், மாவிளக்கு, தீச்சட்டி, பொங்கல் வைத்து பக்தர்கள் வழிபட்டனர். நேற்று இரவு 12 மணிக்கு அழகர் தோப்புக்கு சென்று கரகம் ஜோடித்து பக்தர்கள் வழிபட்டனர். இன்று அதிகாலை முளைப்பாரி, அக்னி சட்டி முதலியவைகளை எடுத்துக்கொண்டு முக்கிய வீதிகளின் வழியாக கோவிலை வந்தடைந்தனர்.

    ேகாவில் முன்னால் ஆடு பலியிட்டு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை நிர்வாக கமிட்டியினர் செய்திருந்தனர். அன்னதானமும் நடைபெற்றது.

    • முதலாம் ஆண்டு நிறைவு விழாவும், 2ம் ஆண்டு தொடக்க விழாவுமாக கடந்த 26 ம் தேதி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • கோவில் வளாகத்தில் இருந்து தேர்பவனி தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்று வைகை சாலை சந்திப்பு வழியாக வந்து மீண்டும் ஆலயத்தை அடைந்தது.

    ஆண்டிபட்டி:

    ஆண்டிபட்டியில் உள்ள அடைக்கல மாதா தேவாலயம் பழமை வாய்ந்தது. இந்த தேவாலயத்திற்கு கடந்த ஆண்டு புதிய கட்டிடம் கட்டப்பட்டு அர்ச்சிப்பு பெருவிழா நடைபெற்றது. அதனை தொடர்ந்து தற்போது முதலாம் ஆண்டு நிறைவு விழாவும், 2ம் ஆண்டு தொடக்க விழாவுமாக கடந்த 26 ம் தேதி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    தொடர்ந்து நவநாள் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. இதனை ெதாடர்ந்து விசேஷ திருப்பலி கோவிலில் நடைபெற்று, அடைக்கலமாதா சிலை அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வைக்கப்பட்டு தேர் பவனி நடைபெற்றது .கோவில் வளாகத்தில் இருந்து தேர்பவனி தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்று வைகை சாலை சந்திப்பு வழியாக வந்து மீண்டும் ஆலயத்தை அடைந்தது.

    அதனை தொடர்ந்து அனைவருக்கும் உணவு பரிமாறப்பட்டது. விழா நிகழ்ச்சிகளுக்கு தேனி மாவட்ட அருள் தந்தை முத்து தலைமையேற்று நிகழ்ச்சியை நடத்தினார். இந்த நிகழ்ச்சியில் ஆண்டிபட்டி சேவா மிஷனரி அருள் சகோதரிகள், தேனி காணிக்கை அருட் சகோதரிகள், கமலவை அருட் சகோதரிகள் மற்றும் ஆண்டிபட்டி சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த கிறிஸ்தவ பெருமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

    • அணைக்கட்டு போலீசார் புருஷோத்தமன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலகணேசன், பாபு என்கிற யோகானந்தன், ஸ்ரீநாத் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அடுத்த சின்ன ஊணை பகுதியில் மாரியம்மன் கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து நேற்று நள்ளிரவு கரக ஊர்வலம் நடைபெற்றது.

    அதே பகுதியை சேர்ந்தவர்கள் புருஷோத்தமன் (வயது 23). இவர் ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் லேப்டெக்னிசியனாக வேலைபார்த்து வந்தார்.

    திருவிழாவுக்காக ஊருக்கு வந்திருந்தார். இவரது நண்பர் தீபன் (28). இவர்கள் எதிர் வீட்டை சேர்ந்த சுப்பிரமணி என்பவரது மகன்கள் பாலகணேசன் (27), பாபு என்கிற யோகானந்தம் (42), ஸ்ரீநாத் (44) சுமன் (30) மற்றும் உறவினர் முனுசாமி (50). இந்த நிலையில் கரக ஊர்வலத்தில் மேளம் அடித்து சென்றதாக தெரிகிறது.

    அப்போது இரு தரப்பினரிடையே நடனம் ஆடுவது குறித்து வாய் தகராறு ஏற்பட்டது. கை கலப்பாக மாறி ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். ஆத்திரமடைந்த சுப்பிரமணி மகன்கள் மற்றும் உறவினர்கள் புருஷோத்தமனையும், தீபனையும் சரமாரியாக தாக்கி மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தினர்.

    இதில் புருஷோத்தமனுக்கு பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் கீழே விழுந்து துடிதுடித்தார்.

    அருகே இருந்தவர்கள் அவரை மீட்டு ஸ்ரீபுரத்தில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே புருஷோத்தமன் இறந்துவிட்டதாக கூறினர்.

    படுகாயம் அடைந்த தீபன் அணைக்கட்டு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அணைக்கட்டு போலீசார் புருஷோத்தமன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலகணேசன், பாபு என்கிற யோகானந்தன், ஸ்ரீநாத் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இது சம்பந்தமாக வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு திருநாவுக்கரசு மற்றும் அணைக்கட்டு போலீசார் தனிப்படை அமைத்து தப்பி ஓடிய முனுசாமி, சுமனை தேடி வருகின்றனர்.

    கரக ஊர்வலத்தின் போது ஏற்பட்ட தகராறில் வாலிபர் கத்திக்குத்தில் இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    • விழாவை யொட்டி பால்குடம் மற்றும் முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது.
    • சுற்று வட்டா ரத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்டம், தா.அய்யம்பட்டி கிராமத்தில் தேசத்து மாரியம்மன் கோவில் திருவிழா மற்றும் கோவிலின் 3-ம் ஆண்டு வருஷாபிஷேக விழா கொடியேற்றம் மற்றும் கங்கனம் கட்டும் நிகழ்ச்சி யுடன் தொடங்கியது.

    விழாவை யொட்டி பால்குடம் மற்றும் முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. பின்னர் அம்மனுக்கு கூழ் ஊற்றி சிறப்பு வழிபாடும், அபிஷேக ஆராதனையும் நடைபெற்றது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மாவிளக்கு ஊர்வலம் நேற்று நடை பெற்றது. இதில் தேசத்து மாரியம்மன் கோவிலுக்கு ஏராளமான பெண்கள் மேளதாளங்கள் முழங்க மாவிளக்கு எடுத்து ஊர்வ ளமாக சென்றனர்.

    இந்த ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக கோவிலை வந்தடைந்தது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு வழிபா டுகள் மற்றும் மகா தீபார தனை நடைபெற்றது. இதை த்தொடர்ந்து வேடி யப்பன் கோவிலுக்கும் மாவிளக்கு ஊர்வலம் நடைபெற்றது.

    இதில் சுற்று வட்டா ரத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இன்று முனியப்பனுக்கு மாவிளக்கு எடுக்கும் ஊர்வ லமும், நாளை மஞ்சள் நீராட்டு விழாவும் நடக்கிறது.

    இதற்கான ஏற்பாடுகளை முன்னாள் எம்.எல்.ஏ. வேலுசாமி மற்றும் விழா குழுவினர் செய்து வருகிறார்கள்.

    • கார் மோதியதில் 15க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
    • புகைப்பட கலைஞர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் பஸ்நிலையம் அருகே உள்ள கவரை தெருவில் அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆடித்திருவிழா நடைபெற்றது.

    இதையொட்டி நேற்று இரவு அம்மன் வீதி உலா நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட அம்மன் வீதி உலா காஞ்சிபுரம் பாவாஜி தெருவில் இரவு 11 மணி அளவில் சென்று கொண்டிருந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் சாமி ஊர்வலத்தில் பின்தொடர்ந்து நடந்து சென்றனர். கோவில் விழாவை படம் பிடிப்பதற்காக அப்பகுதியை சேர்ந்த புகைப்படகலைஞர் வெங்கடேசனை (வயது50) ஏற்பாடு செய்து இருந்தனர். அவர் அம்மன் வீதி உலா, பக்தர்கள் கூட்டத்தை படம் பிடித்தபடி சென்றார். அப்போது சாலையில் எதிரே வந்த கார் ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி பக்தர்கள் கூட்டத்துக்குள் புகுந்தது. இதில் புகைப்பட கலைஞர் வெங்கடேசன் மற்றும் சாமி தரிசனம் செய்தவர்கள் மற்றும் வேடிக்கை பார்த்தவர்கள், இசைக்கலைஞர்கள் மீது கார் பயங்கரமாக மோதி நின்றது. இதில் 15-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.

    இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பக்தர்கள் காயம் அடைந்தவர்களை மீட்டு செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி புகைப்பட கலைஞர் வெங்கடேசன் பரிதாபமாக இறந்தார். மேலும் 15 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதையடுத்து கோவிலில் ஆடி மாத திருவிழா பாதியில் நிறுத்தப்பட்டது.

    காரை தாறுமாறாக ஓட்டி விபத்து ஏற்படுத்தியவரை பொதுமக்கள் பிடித்து தர்மஅடி கொடுத்தனர். விசாரணையில் அவர் காஞ்சிபுரத்தை சேர்ந்த சரவணன் என்பது தெரிந்தது. அவரை விஷ்ணுகாஞ்சி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சாமி ஊர்வலத்தில் பக்தர்கள் கூட்டத்துக்குள் கார் புகுந்து புகைப்பட கலைஞர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • பெரியாண்டவர் சாமி கரகம் ஜோடிக்கப்பட்டு, வான வேடிக்கையுடன், அபிஷேக ஆராதனை நடைபெற்றது. பின்னர் கிடா வெட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • நூற்றுக்கணக்கான பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றும் வகையில் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் பில்லம நாயக்கன்பட்டி அருகே கஸ்தூரி நாயக்கன்பட்டி உள்ளது. இங்கு பெரி யாண்டவர்,கஸ்தூரி அம்மன், முனிசாமி ஆகிய கோவில்கள் உள்ளது. இந்த கோவில்களில் 12ஆண்டு களுக்கு பிறகு ஆடி திருவிழா நடைபெற்றது.

    கடந்த 1ஆம் தேதி காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் திருவிழா தொடங்கியது. செவ்வாய்க்கிழமை பெரியாண்டவர் சாமி கரகம் ஜோடிக்கப்பட்டு, வானவேடிக்கையுடன், அபிஷேக ஆராதனை நடைபெற்றது. பின்னர் கிடா வெட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கதிர் நரசிங்க பெருமாளுக்கு பொங்கல் வைத்து அபிஷேக ஆரா தனை மற்றும் முனிசாமி கோவிலில் பொங்கல் வைத்து கிடா வெட்டி அபி ஷேக ஆராதனை நடை பெற்றது.

    பின்னர் பெரியாண்டவர் கோவில் முன்பாக நூற்று க்கணக்கான பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றும் வகையில் பூக்குழி இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து அம்மன் ஆபரண பெட்டி, பெரி யாண்டவர் கரகம், முளைப்பாரி ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அருகே உள்ள கங்கையில் விடப்பட்டது. இதில் நூற்று க்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா விற்கான ஏற்பாட்டினை ஊர் பொதுமக்கள் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.

    • எம்.கே. நகர் கிருஷ்ணாபுரம் பகுதியில் சக்தி மாரியம்மன் கோவில் கூழ் ஊற்றும் திருவிழா நடைபெற்றது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து அன்பரசு, விக்னேஷ் உள்ளிட்ட 4 பேரை கைது செய்தனர்.

    பென்னாகரம்,

    தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே உள்ள எம்.கே. நகர் கிருஷ்ணாபுரம் பகுதியில் சக்தி மாரியம்மன் கோவில் கூழ் ஊற்றும் திருவிழா நடைபெற்றது.

    அதேபகுதியை சேர்ந்த தொழிலாளி பிரதாப் (வயது 30), அன்பரசு(20), விக்னேஷ் (19), சசிகுமார் (21) ஆகியோருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. வின்னேஷ் தரப்பினர் பிரதாப்பை தாக்கினர்.

    இதில் படுகாயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் பென்னாகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அன்பரசு, விக்னேஷ் உள்ளிட்ட 4 பேரை கைது செய்தனர்.

    • விருதுநகர் அருகே கோவில் திருவிழாவில் பந்தலுக்கு தீ வைக்கப்பட்டது.
    • கட்டனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருச்சுழி

    விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே உள்ள உளுத்தி மடை ஊராட்சிக்கு உட்பட்ட பி.வாகைக்குளம் கிராமத்தில் பிறைவுடைய அய்யனார், சுந்தரவள்ளி அம்மன் கோவில் கும்பாபி ஷேகம் கடந்த ஜூன் மாதம் 25-ந்தேதி நடைபெற்றது.

    48 நாட்கள் மண்டல பூஜை விழாவையொட்டி கோவில் பகுதியில் பந்தல் அமைக்கப்பட்டு அன்ன தானம் நடந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் நடந்த கிடாய் வெட்டும் நிகழ்ச்சிக்கு பின்னர் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

    மேலும் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் சாமி தரிசனம் செய்துவிட்டு வீட்டுக்கு புறப்பட்டு சென்றனர். இந்த நிலையில் நேற்று அன்னதான விருந்திற்காக போடப் பட்ட பந்தல் மர்மமான முறையில் தீப்பற்றி எரிந்தது.

    இந்த தீ மள மளவென கொட்டகை முழுவதும் எரிந்து நாசமானது. இதனையடுத்து அன்னதான பந்தலுக்கு மர்ம நபர்கள் யாரேனும் தீ வைத்தார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்ற கோணத்தில் கட்டனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×