search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோப்பை"

    • 16 மாவட்டங்களை சேர்ந்த 56 அணிகள் போட்டியில் கலந்து கொண்டன.
    • வெற்றிபெறும் அணிக்கு கோப்பைகளும், அணியை சேர்ந்த 20 பேருக்கு பதக்கங்களும் வழங்கப்படும்.

    திருவாரூர்:

    மாநில தரைப்பந்து கழகம் மற்றும் திருவாரூர் மாவட்ட தரைப்பந்து கழகம் இணைந்து நடத்தும் மாநில அளவிலான 16-வது தரைப்பந்து போட்டி திருவாரூரில் உள்ள தனியார் பள்ளியில் நேற்று தொடங்கியது.

    இந்த போட்டியினை திருவாரூர் மாவட்ட தரைப்பந்து கழகத் தலைவர் ஹபீப் முஹமது தொடங்கி வைத்தார்.

    இதில் மாநில தரைப்பந்து கழக செயலாளர் விஷ்ணுவிகாஷ், மாவட்ட தரைப்பந்து கழக செயலாளர் மகேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த போட்டி 14 வயதிற்கு உட்பட்டோர் மற்றும் 19 வயதுக்குட்பட்ட ஆண் பெண் இருபாலருக்கும் நடைபெறுகிறது.

    இதில் சென்னை, காஞ்சிபுரம், தூத்துக்குடி, செங்கல்பட்டு, கிரு ஷ்ணகிரி, கன்னியாகுமரி, தென்காசி, நாமக்கல் உள்ளிட்ட 16 மாவட்டங்களைச் சேர்ந்த 56 அணிகள் பங்கு பெறுகின்றன.

    ஒவ்வொரு அணியும் மூன்று முறை மற்ற அணிகளுடன் மோத உள்ளன.

    இதில் இரண்டு பிரிவுகளிலும் தேர்வாகும் நான்கு அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றவர்கள் ஆவார்கள்.

    இந்த போட்டி இன்று தொடங்கி நாளை வரை நடைபெறுகிறது.

    இதில் ஒரு அணிக்கு 20 நபர்கள் இருப்பார்கள். இதில் 6 நபர்கள் மட்டுமே களத்தில் விளையாடுவார்கள்.

    மீதமுள்ள 14 நபர்கள் மாற்று ஆட்டக்காரர்களாக பயன்படுத்தப்படுவார்கள்.

    மேலும் நாளை நடைபெறும் இறுதி போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு கோப்பை மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட உள்ளன.

    வெற்றி பெறும் அணிக்கு கோப்பைகளும் அணியைச் சேர்ந்த 20 நபர்களுக்கு பதக்கங்களும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • கபடி போட்டியினை கடையம் பெரும்பத்து ஊராட்சி மன்ற தலைவர் பொன் ஷீலா பரமசிவன் தொடங்கி வைத்தார்.
    • வெற்றி பெற்ற அணியினருக்கு வெற்றி கோப்பை மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது.

    கடையம்:

    கடையம் அருகேயுள்ள கானாவூரில் கபடி போட்டி 2 நாட்கள் நடைபெற்றது. போட்டியினை கடையம் பெரும்பத்து ஊராட்சி மன்ற தலைவர் பொன் ஷீலா பரமசிவன் தொடங்கி வைத்தார். போட்டியில் கருத்தப்பிள்ளையூர், கானாவூர், வெய்க்கால்பட்டி, புலவனூர், குறும்பலாப்பேரி, ஆவுடையானூர் உள்பட பல்வேறு பகுதியை சார்ந்த 70-க்கும் மேற்படட கபடி அணியை சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டு விளையாடினர்.

    போட்டியில் வெற்றி பெற்ற எட்டு அணியினருக்கு வெற்றி கோப்பை மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் கருத்தப்பிள்ளையூரை சேர்ந்த வீரத்தமிழன் அணியினர் முதல் பரிசை பெற்றனர். இரண்டாவது பரிசை 7 கிங்ஸ் அணியினர் பெற்றனர். பரிசு கோப்பையை கடையம் பெரும்பத்து தி.மு.க. நிர்வாகியும், தொழிலதிபருமான பரமசிவன் வழங்கினார். விழாவிற்கான ஏற்பாடுகளை தாமஸ், ஆசீர், துரை மற்றும் 7 கிங்ஸ் கபடி குழு, 7 டிரைவர்ஸ் குழு மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர். 

    • ராமநாதபுரத்தில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நடந்தன.
    • இதனை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தொடங்கி வைத்தார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டு மைதானத்தில் விளை யாட்டு மேம்பாட்டு ஆணை யத்தின் மூலம் தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் தொடக்க விழா மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் நடந்தது. அப்போது அவர் பேசியதாவது:-

    விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் விதமாக தமிழ்நாடு முதல்-அமைச்சர் கோப்பைக்கான பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.

    அத்தகைய போட்டிகள் நடைபெறும்போது விளை யாட்டு வீரர்கள் அதிக ஆர்வமுடன் கலந்து கொண்டு தங்கள் திறமைக்கு ஏற்ற போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்று மாநில அளவில் நடைபெறும் போட்டியிலும் மற்றும் தேசிய அளவில் நடைபெறும் போட்டியிலும் பங்கேற்று வெற்றி பெற்று சிறந்த வீரர்களாக திகழ்ந்திட வேண்டும்.

    அந்த வகையில் தற்போது இறகுப்பந்து, மேசைப்பந்து, கையுந்து பந்து, கால்பந்து, கபாடி, ஆக்கி, கூடைப்பந்து, நீச்சல் போட்டி, டென்னிஸ், கிரிக்கெட் ஆகிய போட்டிகள் வருகிற 26-ந்தேதி வரை நடைபெறுகிறது.

    இப்போட்டியில் அதிகளவு ஆர்வமுடன் பங்கேற்று பயன் பெற்றிட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    அதன் பிறகு 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தை மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் கொடியசைத்து ெதாடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து, மாவட்ட விளையாட்டு அலுவலர் தினேஷ் குமார் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • சுமார் 300-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.
    • வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு கோப்பை, சான்றிதழ், ரொக்கம் வழங்கல்.

    பாபநாசம்:

    பாபநாசம் ரோட்டரி சங்கம் மற்றும் தஞ்சை மாவட்ட சதுரங்க கழகம் இணைந்து நடத்தும் 10-ம் ஆண்டு சிவஞான முதலியார் நினைவு மாநில அளவிலான சதுரங்க போட்டி கபிஸ்தலத்தில் நடைபெற்றது. பாபநாசம் ரோட்டரி சங்க தலைவர் அறிவழகன் தலைமை தாங்கினார்.

    தஞ்சை மாவட்ட சதுரங்க கழக துணை தலைவர் செந்தில்குமரன் பழனிவேல், இணை செயலாளர் பண்டாரவாடை நவநீதகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை தலைவர் சரவணன் அனைவரையும் வரவேற்றார்.

    போட்டியை முன்னாள் ரோட்டரி மாவட்ட ஆளுநர் பாலாஜி தொடக்கி வைத்தார். போட்டியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 300-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

    இதில் வெற்றி பெற்ற 80 பேருக்கு தஞ்சை மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் முத்துச்செல்வன் பரிசு கோப்பை, சான்றிதழ், ரொக்கம் ஆகியவை வழங்கி பாராட்டினார்.

    பாபநாசம்அரசு வழக்க றிஞர் வெற்றிச்செல்வன், கபிஸ்தலம் ஊராட்சி மன்ற தலைவர் சுமதி குணசேகரன், துணை தலைவர்கள் செந்தில்நாதன், சீனிவாசன், சிவராஜ், ஜாகீர் உசேன், இணை செயலாளர் சிவக்குமார், பொருளாளர் வினோத், செயலாளர் சந்தோஷ், திருச்சி மாவட்ட செயலாளர் தினகரன், நாகை மாவட்ட செயலாளர் சுந்தர்ராஜ், புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் கணேசன், மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் வெற்றி வேந்தன் ஆகியோர் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளை பாராட்டினர்.

    விழாவில் சதுரங்க வீரர்கள், பெற்றோர்கள், மாவட்ட, தாலுகா பொறுப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் தஞ்சை மாவட்ட சதுரங்க கழக செயலாளர் சிலம்பரசன் நன்றி கூறினார்.

    • மான்ஃபோர்ட் சி.பி.எஸ்.இ பள்ளி முதல் பரிசை பெற்று கோப்பையை கைப்பற்றியது.
    • நடனம், பாடல், மேற்கத்திய நடனம் மற்றும் கிராமிய நடனம் சிறப்பாக நடைபெற்றது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் தாமரை பன்னாட்டுப்பள்ளியில் தஞ்சாவூர், திருச்சி, திருவாரூர், நாகை மாவட்டங்களிலுள்ள பள்ளிகளுக்கிடையேயான இசை, நாட்டிய, நாடக கலைகளின் சங்கம திருவிழா "ஆரோஹண்" என்ற தலைப்பில் நடைபெற்றது.

    விழாவில் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகள் என 38 பள்ளிகள் போட்டிகளில் கலந்து கொண்டன. விழாவில் திரைப்பட புகழ் ஜாஃபர் சாதிக் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் கூறியதாவது:- 'ஒவ்வொருவரும் முதலில் தன்னை நம்ப வேண்டும்.

    அப்போதுதான் மற்றவர்கள் நம்மை நம்புவார்கள். மேடை ஒன்றுதான் அதில் வெற்றி, தோல்வி என்பது இல்லை என்றார்.போட்டிகளில் அதிக பரிசுகளை பெற்று அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் பிரிவில் வல்லம் அரசு மாதிரி உயர்நிலைப்பள்ளியும், தனியார் மற்றும் சி.பி.எஸ்.இ பள்ளிகள் பிரிவில் திருச்சி மான்ஃபோர்ட் சி.பி.எஸ்.இ பள்ளியும் முதல் பரிசை பெற்று கோப்பையை கைப்பற்றியது.போட்டிகளில் வென்ற பள்ளிகளுக்கு தாமரை பன்னாட்டுப்பள்ளியின் தலைவர் வெங்கடேசன், துணைத்தலைவர் நிர்மலாவெங்கடேசன், முதுநிலை முதல்வர் ஜெயஸ்ரீ பத்ரிநாத், கும்பகோணம் தாமரை பன்னாட்டு ப்பள்ளியின் முதல்வர் விஜயா ஸ்ரீதர், இடைநிலை ஒருங்கிணைப்பாளர் சர்மிளா ஆகியோர் பரிசுகள் வழங்கினர்.

    விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக தாமரை பன்னாட்டுப்பள்ளி மாணவ- மாணவிகளின் வரவேற்பு நடனம், பாடல், மேற்கத்திய நடனம் மற்றும் கிராமிய நடனம் சிறப்பாக நடைபெற்றது.

    • போட்டிகளில் 5 மாவட்டங்களிலிருந்து 1300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
    • அரசு பள்ளிக்கான போட்டியில் சோழபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி கோப்பையை வென்றது.

    கும்பகோணம்:

    கும்பகோணம் அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 75 வது சுதந்திர தின அமுத பெருவிழாவோடு IQAC, தமிழ், ஆங்கிலம், கணிதம், வணிகவியல் மற்றும் காட்சி தொடர்பியல் துறைகள் இணைந்து நடத்தும் மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கு இடையேயான நுண்க லைகள் திறன் போட்டிகள் நடைபெற்றன.

    இவ்விழா விற்கு அன்னை கல்வி குழும தலைவர் டாக்டர் அன்வர் கபீர் தலைமையேற்றார்.

    அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் மாணிக்கவாசுகி முன்னிலை வகித்தார். அன்னை கல்வி குழும செயலர் ஹிமாயூன் கபீர் வாழ்த்துரை வழங்கினார்.

    துணை முதல்வர்கள் பேராசிரியர் இள ஞ்செழியன், பேராசிரியர் ராஜா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

    உள்தர உத்தரவாத மதிப்பீட்டு குழு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் லதா கல்லூரியின் அறிமுக உரையாற்றினார்.

    கும்பகோணம் அரசினர் கல்லூரி மேனாள் தமிழ்த்துறை தலைவரும், அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரி மேனாள் முதல்வர் மணி சிறப்புரையாற்றினார்.

    மேலும், திருவிடை மருதூர் உட்கோட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஜாபர் சித்திக் மற்றும் திருப்பனந்தாள் கயிலை தேசிக கயிலை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் புகழேந்தி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றியதோடு மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினர்.

    அன்னை கல்விக்குழும செயல் அலுவலர் முனைவர் ராஜ்குமார், நிர்வாக இயக்குநர் ரவி கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

    துணை முதல்வர்கள் பேராசிரியர் இளஞ்செழியன், பேராசி ரியர் ராஜா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

    போட்டிகளில் 5 மாவட்டங்களில் இருந்து 1300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

    அரசு பள்ளி க்கான போட்டியில் சோழபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியும் மெட்ரிக்பள்ளிக்கான போட்டிகளில் கபிஸ்தலம் ஜாக் அண்ட் ஜில் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியும் கோப்பையை வென்றது.

    நிகழ்ச்சியின் முதலாவதாக முனைவர் லொயோலா பீரிஸ் வரவேற்றார்.

    இறுதியாக பேராசிரியர் சுபாஷினி நன்றி உரையாற்றினார். இதில், பேராசிரியர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

    • போட்டியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்று விளையாடினர்.
    • இறுதி போட்டியில் திட்டச்சேரி அணியும், சீர்காழி அணியும் மோதியதில் சீர்காழி அணி வெற்றி பெற்றது.

    சீர்காழி:

    மயிலாடுதுறைமாவட்டம் சீர்காழி அடுத்த திருமுல்லை வாசல் கடற்கரையில் தனியார் பள்ளியின் சார்பில் மாநில அளவிலான ஆடவர் பீச் வாலிபால் போட்டிகள் தொடங்கி, இரவுபகலாக மின்னொளியில் நடை பெற்று வந்தது.

    போட்டி க்கு பள்ளி தாளாளர் ராதாகிரு ஷ்ண ன்தலைமை வகித்தார். திருமுல்லை வாசல் ஊராட்சி மன்ற தலைவர் பரிமளா, துணை தலைவர் கலைவாணி முன்னிலை வகித்தனர். பள்ளி முதல்வர் ஜோஸ்வா பிரபாகர சிங் வரவேற்றார்.போட்டியை குட்சமாரிட்டன் பள்ளி இயக்குனர் பிரவீன் தொடங்கி வைத்தார்.

    இப்போட்டியில்தமிழ கத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 30 -க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்று விளையாடினர். இறுதி போட்டியில் நாகப்பட்டினம் மாவட்டம் திட்டச்சேரி அணியும், சீர்காழி அணியும் மோதின. இப்போட்டியில் சீர்காழி அணி வெற்றி பெற்று முதல் பரிசை பெற்றது.

    வெற்றி பெற்ற அணிக்கு கோப்பை மற்றும் சான்றிதழை பள்ளி தாளாளர் ராதாகிருஷ்ணன், பள்ளி இயக்குனர் பிரவீன் ஆகியோர் வழங்கினர். சி.பி.எஸ்.இ பள்ளி செய்தி தொடர்பாளர் பிரேம் நன்றி கூறினார்.

    • முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பிறந்த நாள் விழா கபடி போட்டி நடைபெற்றது.
    • முதல் பரிசு மற்றும் கோப்பையை ஆசீர்வாதபுரம் அணி வென்றது.

    கடையம்:

    கடையம் பெரும்பத்து வெய்க்கால்பட்டியில் மாவட்ட செயலாளர் சிவபத்மநாபன் வழிகாட்டுதலின்படிதி.மு.க. சார்பில், முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பிறந்த நாள் விழா கபடி போட்டி நடைபெற்றது.

    போட்டியினை ஊராட்சி தலைவர் பொன் ஷீலா பரமசிவன் தொடங்கி வைத்தார். போட்டியில் தூத்துக்குடி, நெல்லை, விருதுநகர், தென்காசி உள்பட பல்வேறு பகுதியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டன.

    போட்டியில் முதல் பரிசு மற்றும் கோப்பையை ஆசீர்வாதபுரம் அணியும், இரண்டாம் பரிசை வெய்க்கால்பட்டி அணியும் வென்றது. தொடர்ந்து 10 அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

    போட்டியில் கலந்து கொண்ட கபடி வீரர்கள் அனைவரையும் பொதுமக்கள் பாராட்டினர். முடிவில் கடையம் பெரும்பத்து தி.மு.க. நிர்வாகி பரமசிவன் நன்றி கூறினார்.

    ×