search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கோப்பை"

    • இந்நிலையில் ரசிகர்கள் பலரும் சமூக வலை தளத்தில் 'விராட் கோலி' கேலி செய்து மீம்ஸ்கள் உருவாக்கி உள்ளனர்
    • வேடிக்கையான மீம்ஸ்கள் மூலம் தங்கள் எதிர்வினைகளை வெளிப்படுத்தினர்

    மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடர் 2 -வது சீசன் கடந்த பிப்ரவரி 23- ந்தேதி தொடங்கி நேற்று வரை நடந்தது.

    இப்போட்டியில் டெல்லி கேபிடல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, மும்பை இந்தியன்ஸ், யுபி வாரியர்ஸ் மற்றும் குஜராத் ஜெயிண்ட்ஸ் என 5 அணிகள் இடம் பெற்று விளையாடின.டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நேற்று இறுதிப்போட்டி நடந்தது.

    இறுதி ஆட்டத்தில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மகளிர் அணி வெற்றி பெற்று, டெல்லி கேபிடல்ஸ் மகளிர் அணிக்கு எதிராக 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மகளிர் பிரீமியர் லீக் 2024 பட்டம் பெற்றது. 

    சாம்பியன் பட்டம் வென்று ஸ்மிருதி மந்தனா தலைமையிலான ஆர்சிபி அணி அசத்தியதை ரசிகர்கள் கொண்டாடினர்.

    இந்நிலையில் ரசிகர்கள் பலரும் சமூக வலை தளத்தில் 'விராட் கோலி' கேலி செய்து மீம்ஸ்கள் உருவாக்கி உள்ளனர்.மேலும்சில வேடிக்கையான மீம்ஸ்கள் மூலம் தங்கள் எதிர்வினைகளை வெளிப்படுத்தினர்.

    அதில் ஒரு சில 'மீம்ஸ்கள்' வருமாறு:

    தூள்' படத்தில் நடிகை ரீமா சென்-ஐ கவருவதற்காக உடற்பயிற்சி செய்வது போல் விவேக் ஏமாற்றுவார். அப்போது, திடீரென பறவை முனியம்மா, அந்த காகிதத்தாலான உடற்பயிற்சி பொருட்களை எல்லாம் தூக்கி எறிவார்.

    அதுமட்டுமல்லாமல், இந்த கருமத்தைதான் ராத்திரி முழுக்க ஒட்டிட்டு இருந்தியா என்று நக்கல் செய்வார். அதேபோல் பறவை முனியம்மாவாக ஆர்சிபி மகளிர் அணியையும், விவேக்காக ஆர்சிபி ஆடவர் அணியையும் மாற்றி, 16 சீசனா இந்த கோப்பையை ஜெயிக்க தான் உருட்டிட்டு இருந்தியா என்று உருவாக்கப்பட்டு உள்ளது.




     

    சந்திரமுகி படத்தில் ரஜினிகாந்த் ஒரு வாரத்தில் வீட்டில் இருந்து புறப்படுவதை எண்ணி வடிவேலு, நாசர் மகிழ்ச்சி அடைவார்கள். அப்போது ரஜினிகாந்த், ஒரு மாதம் இருந்து செய்ய வேண்டிய வேலையை ஒரு வாரத்தில் முடித்துவிட்டேன் என்பார்.

    அதனை ஆர்சிபி மகளிர் அணி பேசுவதாக மாற்றி, எங்களோட ஆடவர் அணி 16 வருஷமா பண்ணாததை.. நாங்கள் 2 சீசனிலேயே செய்து முடித்துவிட்டோம் என்று உருவாக்கப்பட்டு உள்ளது

    அதேபோல நடிகர் வடிவேலு அரசியல் வாதியாக வெள்ளை வேட்டி, சட்டை துண்டு அணிந்து மிரட்டலாக நடந்து வருவது போலவும் அவருக்கு அடியாளாக கம்புடன் விராட் கோலி நடந்து வருவது போலவும் " பெண்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்துக்காக 16 வருசமாக காத்திருந்த ஒரே டீம்" ..என்ற வாசகத்துடனும் மீம்ஸ் உருவாக்கப்பட்டு உள்ளது.

    இதேபோல கிரிக்கெட் ரசிகர்கள் ஆயிரக்கணக்கான மீம்ஸ்கள் உருவாக்கி இணைய தளத்தில் பதிவிட்டு உள்ளனர்.

    • இறுதிப்போட்டி வருகிற 15-ந் தேதி மாலை நடைபெறுகிறது.
    • வெற்றி பெறும் அணிக்கு சேம்பியன் கோப்பை வழங்கப்படும்.

    தஞ்சாவூர்:

    அகில இந்திய கால்பந்து கழகம் அறிவுறுத்தல் படி தமிழ்நாடு கால்பந்து கழக வழிகாட்டுதலின் பேரில் தஞ்சாவூர் கால்பந்து சங்கம் சார்பில் இன்று தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு மைதானத்தில் மாநில அளவிலான மாவட்டங்களுக்கு இடை யேயான 20 வயதிற்கு உட்பட்ட இளைஞர் கால்பந்து போட்டி தொடங்கியது.

    பல ஆண்டுகளுக்குப் பிறகு தொடங்கிய இந்த கால்பந்து போட்டி வரும் 15-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    இதில் காஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை, தஞ்சாவூர், சிவகங்கை, நீலகிரி உள்பட 27 மாவட்டங்களில் இருந்து வீரர்கள் கலந்து கொண்டனர்.

    இன்று நடந்த முதல் போட்டியில் தஞ்சாவூர் கால்பந்து சங்கம் மாவட்ட அணியும், கரூர் கால்பந்து சங்கம் மாவட்ட அணியும் மோதின.

    இந்த போட்டியை தஞ்சை மாவட்ட விளையா ட்டு அலுவலர் டேவிட் டேனியல் தொடங்கி வைத்தார்.

    மாவட்ட உடற்கல்வி அலுவலர் கற்பகம், தமிழக கால்பந்து கழகத் துணைத் தலைவரும் தஞ்சை மாவட்ட கால்பந்து சங்கம் தலைவருமான சிவானந்தம், செயலாளர் வேலுச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கால்பந்து போட்டியில் நடுவர்களாக 12 பேர் பணியாற்றுகின்றனர். இறுதிப்போட்டி வருகிற 15ஆம் தேதி மாலையில் நடைபெறுகிறது.

    இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு சேம்பியன் கோப்பை வழங்கப்படும்.

    இந்த போட்டியில் சிறப்பாக விளையாடும் வீரர்களை தேர்வு குழுவினர் கண்கா ணித்து அதிலிருந்து சுமார் 40 வீரர்களை தேர்வு தேர்வு செய்யப்பட்ட வீரர்களுக்கு முறையாக பயிற்சி அளித்து அதிலிருந்து 22 பேர் தேர்வு செய்யப்படுவர்.

    அவர்கள் தமிழ்நாடு அணிக்கு தேர்ந்தெ டுக்கப்படுவர்.

    அதனை தொடர்ந்து தேசிய அளவிலான மாநில ங்களுக்கு இடையேயான போட்டியில் கலந்து கொண்டு விளையாடுவர்.

    • தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 28 அணிகள் கலந்து கொண்டன.
    • 3-ம் இடத்தை டெல்டா வடுவூர் அணியும் பிடித்தது.

    மன்னார்குடி:

    மன்னார்குடி அடுத்த பயங்காடு கிராமத்தில் மாநில அளவிலான கபடி போட்டி 3 நாட்கள் நடைபெற்றது.

    போட்டியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 28 அணிகள் கலந்து கொண்டன. போட்டியின் இறுதி ஆட்டமானது நேற்று நடை பெற்றது.

    இதில் சென்னை சாய் கபடி அணி முதல் இடத்தை பிடித்து, ரூ.40 ஆயிரம் ரொக்கம் மற்றும் கோப்பை வென்றது.

    தொடர்ந்து, 2-ம் இடத்தை தமிழ்நாடு வனத்துறை காவல்துறை அணியும், 3-ம் இடத்தை டெல்டா வடுவூர் அணியும் பிடித்தது.

    போட்டியை காண சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்.

    • ஆசிரியை மாலதியை தி.மு.க.வினர் பொன்னாடை அணிவித்து பாராட்டினர்.
    • ராஜா எம்.எல்.ஏ., மற்றும் தி.மு.க.வினர் பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

    தென்காசி:

    தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வான தென்காசி மாவட்டம் வீ.கே.புதூர் அரசு பள்ளியின் ஆசிரியை மாலதியை தென்காசி தெற்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் ஜெயபாலன் தலைமையில் தி.மு.க.வினர் நேரில் சென்று பொன்னாடை அணிவித்து கோப்பை வழங்கி பாராட்டினர்.

    நிகழ்ச்சியில் தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் ராஜா எம்.எல்.ஏ., மாநில மகளிர் அணி செயலாளர் ஹெலன் டேவிட்சன், மாநில சுற்றுச்சூழல் அணி தலைவர் டாக்டர் பூங்கோதை ஆலடி அருணா, முன்னாள் எம்.பி. விஜிலா சத்யானந்த், ஆலங்குளம் யூனியன் சேர்மன் திவ்யா மணிகண்டன் மற்றும் மகளிரணி நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்ட னர்.

    • கடந்த 28-ந் தேதி முதல் 3 நாட்கள் போட்டிகள் நடைபெற்றது.
    • முதலிடம் பிடித்த அணிக்கு ரூ.30 ஆயிரம் ரொக்கம் கொடுக்கப்பட்டது.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை இந்திய விளையாட்டு ஆணையம் சாய் விளையாட்டு மைதானத்தில் மாநில அளவிலான 9-வது ஆடவர் கால்பந்தாட்ட போட்டி மூன்று நாட்கள் நடைபெற்றது.

    சக்தி நினைவு கால்பந்து கழகம் மற்றும் மயிலை கால்பந்து கழகம் இணைந்து நடத்திய போட்டியில் மயிலாடுதுறை சென்னை கோயம்புத்தூர் திருச்சி மதுரை, சேலம் காரைக்கால் மற்றும் கேரளாவில் இருந்து ஒரு அணி என பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 24 அணிகள் பங்கேற்றன. நாக் அவுட் முறையில் போட்டிகள் நடத்தப்பட்டன.

    கடந்த 28ஆம் தேதி முதல் 3 தினங்கள் நடைபெற்ற போட்டியில் இறுதிப்போட்டிக்கு மயிலாடுதுறை மயிலை கால்பந்து கழக அணியும் திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி அணியும் தகுதி பெற்றன. இறுதிப்போட்டி நேற்று பரபரப்பாக நடைபெற்றது. இதில் மயிலை கால்பந்து கழகம் 3 க்கு 1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

    முதலிடம் பிடித்த மயிலாடுதுறை அணிக்கு வெற்றிகோப்பை 30 ஆயிரம் ரொக்க தொகையும், 2ம் இடம் பெற்ற திருச்சி செயின்ட்ஜோசப் அணிக்கு வெற்றிகோப்பை மற்றும் 25 ஆயிரம் ரொக்கதொகை வழங்கப்பட்டன.

    மேலும் அரையிறுதி போட்டியில் விளையாடி 3ம் இடம்பிடித்த காரைக்கால் அணி, 4ம் இடம் பிடித்த சென்னை சிடானி எஃப்சி அணிக்கு கோப்பை களும் ரொக்கபரிசும் வழங்கப்பட்டன.

    இதில் அனைவரையும் பாராட்டி தமிழ்ச் சங்கத் தலைவர் பவுல்ராஜ் பரிசுகள் வழங்கி பாராட்டினர்.

    • போட்டிகளில் 40-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டன.
    • பெண்கள் பிரிவில் முதல் 2 இடங்களை ஸ்ரீகிருஷ்ணா பள்ளி, ஸ்டஅக்-ஹைடெக் பள்ளி பெற்றன.

    ஆலங்குளம்:

    இடைகால் ஸ்டஅக்-ஹைடெக் பள்ளியில் 3-ம் ஆண்டு ஸ்ரீசொக்கலிங்கம் ஞானப்பூ நினைவு சுழற்கோப்பைக்கான மாநில அளவிலான கோகோ போட்டிகள் நடைபெற்றன.

    போட்டிகளில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 12 மற்றும் 14 வயதிற்குட்பட்ட மாணவ- மாணவிகள் 40-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொண்டன. ஆண்களு க்கான 12 வயதிற்குட்ப ட்டோர் பிரிவில் முதல் 2 இடங்களை புதுச்சேரி அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் ஸ்டஅக் ஹை-டெக் பள்ளி பெற்றன. பெண்கள் பிரிவில் முதல் 2 இடங்களை கன்னியா குமரி ஸ்ரீகிருஷ்ணா மேல்நிலைப் பள்ளி மற்றும் ஸ்டஅக்-ஹைடெக் பள்ளி பெற்றன. ஆண்களுக்கான 14 வயதிற்குட்பட்டோர் பிரிவில் முதல் 2 இடங்களை புதுச்சேரி அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா மேல் நிலைப்பள்ளி பெற்றன. பெண்கள் பிரிவில் முதல் இரண்டு இடங்களை ஸ்ரீகிருஷ்ணா மேல்நிலைப் பள்ளி மற்றும் கிராமக் கமிட்டி மேல்நிலைப்பள்ளி பெற்றன. வெற்றி பெற்ற அணிகளுக்கு வெற்றி க்கோப்பை, பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ்களை பள்ளி தலைவர் முருகன், தாளாளர் புனிதா செல்வி, முதல்வர் பிரவின்குமார் மற்றும் பள்ளி ஆலோசகர் ஜோசப் ஆகியோர் வழங்கினர். போட்டிக்கான ஏற்பாடு களை பள்ளியின் உடற்கல்வி துறை ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

    • ஆசிய ஆக்கி போட்டியில் இந்தியா இதற்கு முன்பு 3 முறை பட்டம் வென்றுள்ளது.
    • இன்று பாளை வ.உ.சி. மைதானத்தில் உள் அரங்கில் பொதுமக்களுக்கு கோப்பை காட்சிப்படுத்தப்பட்டது.

    நெல்லை:

    ஆசிய ஆண்கள் ஆக்கி சாம்பியன்ஸ் டிராபி போட்டி ஆகஸ்ட் 3-ந்தேதி சென்னையில் தொடங்க உள்ளது.

    இந்தியா 3 முறை பட்டம்

    ஆகஸ்ட் 12-ந்தேதி வரை நடைபெற உள்ள இந்த ஆக்கி போட்டியில் ஆசியாவில் இருந்து 6 அணிகள் கலந்து கொள்ள உள்ளன. இந்த ஆசிய ஆக்கி போட்டியில் இந்தியா இதற்கு முன்பு 3 முறை பட்டம் வென்றுள்ளது. இந்த முறையும் வெற்றி பெறுவதற்கு வீரர்கள் ஆயத்தமாகி வருகின்றனர்.

    இந்நிலையில் ஆசிய ஆண்கள் சாம்பியன்ஸ் டிராபி கோப்பை தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் சென்று வர வேண்டும் என்பதற்காக சமீபத்தில் சென்னையில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

    நெல்லை வந்தது

    தொடர்ந்து நேற்று கன்னியாகுமரிக்கு வந்தடைந்த இந்த கோப்பை யானது இன்று பாளை வ.உ.சி. மைதானத்தில் உள் அரங்கில் பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தப்பட்டது. முன்னதாக, கன்னியா குமரியில் இருந்து கொண்டு வரப்பட்ட இந்த டிராபியை அர்ஜுனா விருது பெற்ற வீரர் மணத்தி கணேசன் பெற்றுக்கொண்டார்.

    பின்னர் மேடையில் இருந்த சிறப்பு விருந்தினர்களிடம் அதனை ஒப்படைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளர்களாக மேயர் சரவணன், முன்னாள் அமைச்சர் டி.பி.எம். மைதீன்கான், முன்னாள் எம்.பி. விஜிலா சத்யானந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    இதில் மாவட்ட விளையாட்டுத்துறை அலுவலர் கிருஷ்ண சக்கர வர்த்தி வரவேற்றார். ஆசிய ஆக்கி கோப்பை பற்றிய வரலாறை முன்னாள் விளையாட்டு அலுவலர் ஆக்கி யூனிட் ஆப் நெல்லை தலைவர் சேவியர் ஜோதி சற்குணம் எடுத்துரைத்தார்.

    அதனைத் தொடர்ந்து டிராபியை அம்பைக்கு எடுத்து செல்லும் நிகழ்ச்சி தொடங்கியது.

    நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மாணவ- மாணவிகளுக்கும், வீரர்களுக்கும் கலெக்டர் கார்த்திகேயன் மரக்கன்று கள் வழங்கினார். மேலும் வீரர்களுக்கு ஆக்கி மட்டை வழங்கப்பட்டது. தொடர்ந்து ஆக்கி தொடர்பான காட்சி போட்டி நடைபெற்றது.

    • மாவட்ட அளவிலான கைப்பந்து, கால்பந்து என பலவகையான போட்டிகள் அன்னை சத்யா மைதானத்தில் நடந்தது.
    • தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து மொத்தம் 65 பேர் கலந்து கொள்ள உள்ளனர்.

    தஞ்சாவூர்:

    தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் மாவட்ட அளவில் தடகளம், நீச்சல், கூடைப்பந்து, கபடி, சிலம்பம், இறகுபந்து, கால்பந்து, வளைகோல்பந்து, கையுந்துபந்து, மேசைப்பந்து ஆகிய போட்டிகள் இருபாலருக்கும் கடந்த ஜனவரி 31-ந் தேதி முதல் பிப்ரவரி 25-ந் தேதி வரை தஞ்சாவூர் அன்னை சத்யா விளையாட்டு மைதானத்தில் நடந்து முடிந்தது. பள்ளி மாணவ, மாணவியர்கள், கல்லூரி மாணவ, மாணவி யர்கள், பொதுப்பிரிவி னர்கள், மாற்றுத்திற னாளிகள் மற்றும் அரசு ஊழியர்கள் என ஐந்து பிரிவுகளாக நடத்தப்பட்டது.

    மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா கடந்த 18-ந் தேதி தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம், கரிகாற்சோ ழன் கலையரங்க த்தில் நடைப்பெற்றது. இதில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு த்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு பரிசு வழங்கினார்.

    இந்த நிலையில் தமிழகம் முழுவதும் மாவட்ட அளவிலான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் இன்று சென்னையில் தொடங்கியது. இந்த போட்டியானது அடுத்த மாதம் 25ஆம் தேதி வரை நடை பெறவுள்ளது. இப்போட்டிகளில் தஞ்சாவூர் மாவட்டத்தினை சேர்ந்த மாணவ- மாணவிகள், வீரர், வீராங்கனைகள் மொத்தம் 694 பேர் கலந்து கொள்கி ன்றனர். முதலாவதாக இன்று முதல் அடுத்த மாதம் 4-ம் தேதி வரை பள்ளி மாணவ, மாணவிகள் கபடி, வாலிபால் மற்றும் பள்ளி, கல்லூரியைச் சேர்ந்த மாணவ- மாணவிகளுக்கான சிலம்பம் விளையாட்டுப் போட்டிக ளிலும் தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து மொத்தம் 65 பேர் கலந்து கொள்ள உள்ளனர்.

    இவர்கள் அனைவருக்கும் அன்னை சத்யா விளையாட்டரங்கில் இருந்து அரசு பஸ் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. போட்டியில் கலந்து கொள்ளும் வீரர், வீராங்க னைகள் நேற்று இரவு தஞ்சையில் இருந்து அரசு பஸ்களில் சென்னைக்கு அழைத்து செல்லப்பட்டனர். இவர்களுடன் உடற்கல்வி ஆசிரியர்கள், ஆசிரிய- ஆசிரியைகள், மாவட்ட பயிற்றுனர்கள் ஆகியோரும் சென்றனர்.

    சென்னை செல்லும் பஸ்களை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் கொடி அசைத்து வாழ்த்தி வழி அனுப்பி வைத்தார். மேலும் சீருடையும் வழங்கினார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட விளையாட்டு அலுவலர் டேவிட்டேனியல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • முதல்-அமைச்சர் கோப்பை சிறந்த காவல் நிலையமாக காரைக்குடி வடக்கு போலீஸ் நிலையம் தேர்வு செய்யப்பட்டது.
    • சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் பாராட்டி வாழ்த்தினார்.

    காரைக்குடி

    தமிழ்நாடு முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான சிறந்த போலீஸ் நிலையமாக காரைக்குடி வடக்கு போலீஸ் நிலையம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதற்கான கோப்பையை, சென்னையில் டி.ஜி.பி. சைலேந்திரபாபுவிடம் காரைக்குடி வடக்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் பெற்றுக் கொண்டார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி உட்கோட்டத்திற்குட்பட்ட காரைக்குடி வடக்கு போலீஸ் நிலையமானது, குற்ற நடவடிக்கைகள் குறைப்பு, பொதுமக்களின் புகார் மீது தீர்வு காண்பது, ேபாலீஸ் நிலைய பராமரிப்பு ஆகியவற்றில் சிறப்பாக செயல்பட்டு வந்தது.

    இதன் அடிப்படையில் 2021-ம் ஆண்டுக்கான சிவகங்கை மாவட்ட அளவிலான சிறந்த காவல் நிலையமாக தேர்வு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து காரைக்குடி உட்கோட்ட உதவி போலீஸ் சூப்பிரண்டு, காரைக்குடி வடக்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசாரை சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் பாராட்டி வாழ்த்தினார்.

    • முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நடந்தன.
    • மதுரையை சேர்்ந்த மாணவ-மாணவிகள் பதக்கம் வென்று சாதனை படைத்தனர்.

    மதுரை

    மதுரையில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பாக முதல்-அமைச்சர் பதக்க விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நடந்த இந்த போட்டியில் ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த விளையாட்டு போட்டியில் 1970-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    இதில் 45 பரிசுகளில் மூன்றில் ஒரு பங்கு பரிசை இந்தியன் சிலம்பப்பள்ளி மாணவ-மாணவிகள் வென்றனர். இவர்கள் தங்கம், வெள்ளி, வெண்கல பரிசுகளை வென்று சாதனை படைத்தனர். கல்லூரி மாணவர் விஜய ராஜன் சுருள்வாள், ஒற்றைக் கம்பு விளையாட்டில் தங்கமும் வெள்ளி பதக்க மும், ஜெயக்குமார் அலங்காரவீச்சில் தங்கப்பதக்கம் வென்றார்.

    அஜீதா இரட்டைக் கம்பு விளையாட்டில் தங்கப்பதக்கம் வென்றார். பள்ளிகள் அளவில் நடந்த சிலம்பாட்ட போட்டியில் பாலமுருகன் வெள்ளி பதக்கத்தையும், ஜாலினி வெள்ளிப்பதக்கமும், பொது பிரிவில் மாணவி ஏஞ்சலின் ஜெனிபர் வெண்கல பதக்கங்களையும் வென்று சாதனை படைத்தார். இவர்களில் நான்கு பேர் மாநில அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர். பரிசு பெற்ற மாணவ மாணவிகளை தலைமை பயிற்சியாளர் மாமல்லன் எஸ்.எம்.மணி, பயிற்சியாளர் வடிவேல், சந்திரா, ஒருங்கி ணைப்பாளர் நிஜாமுதீன், பயிற்சியாளர்கள் கராத்தே கண்ணன், கனிராஜ் மற்றும் பெற்றோர்கள் பாராட்டி னர்.

    • 18 முதல் 30 வயதிற்கு உட்பட்டவர்கள் சுமார் 25 அணிகளாக கலந்து கொண்டனர்.
    • முதலிடம் பிடித்த அணியினருக்கு ரூ.50 ஆயிரம் ரொக்கம் மற்றும் கோப்பை வழங்கப்பட்டது.

    சுவாமிமலை:

    கும்பகோணம் கால்பந்து கழகம், சிட்டி யூனியன் வங்கி ஆகியவை இணைந்து நடத்திய மாநில அளவிலான எழுவர் கால்பந்தாட்ட போட்டி கும்பகோணம் நகர மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் 3 நாட்களாக நடைபெற்றது. கும்பகோணம் மாநகர தி.மு.க. செயலாளர் சு.ப.தமிழழகன், துணை போலீஸ் சூப்பிரண்டு மகேஷ்குமார் ஆகியோர் போட்டியை தொடங்கி வைத்தனர். இதில் தஞ்சாவூர், திருச்சி, கடலூர், புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 18 முதல் 30 வயதிற்கு உட்பட்டவர்கள் சுமார் 25 அணிகளாக கலந்து கொண்டு விளையாடினர்.

    போட்டியின் நிறைவு நாளில் பரிசளிப்பு விழா நடந்தது. விழாவிற்கு தஞ்சை வடக்கு மாவட்ட தி.மு.க. விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் பொறியாளர் சிவகுமார் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக கல்யாணசுந்தரம் எம்.பி., கும்பகோணம் மாநகர தி.மு.க. செயலாளர் சு.ப.தமிழழகன் ஆகியோர் கலந்து கொண்டு முதலிடம் பிடித்த சென்னை எண்ணூர் நடராஜ் மெமோரியல் கிளப் அணியினருக்கு ரூ.50 ஆயிரம் மற்றும் கோப்பை, 2-ம் இடம் பிடித்த கும்பகோணம் முரட்டு சிங்கிள் புட்பால் கிளப் அணியினருக்கு ரூ.30 ஆயிரம் மற்றும் கோப்பை, 3-ம் இடம் பிடித்த தஞ்சாவூர் அத்லெடிக்ஸ் புல்ஸ் அணியினருக்கு ரூ.20 ஆயிரம் மற்றும் கோப்பை, 4-ம் இடம் பிடித்த பாண்டிச்சேரி செலக்டேடு செவன்ஸ் அணியினருக்கு ரூ.10 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை வழங்கி வெற்றி பெற்றவர்களை பாராட்டினர்.

    விழாவில் ஓய்வு பெற்ற வருமான வரித்துறை ஊழியர் அசோக்குமார், தனியார் தொண்டு நிறுவனத்தை சேர்ந்த பாபு, லியோன் சேவியர், சென்னை போக்குவரத்து உதவி ஆய்வாளர் மூர்த்தி, தீயணைப்புத்துறை இளங்கோவன், நகர மேல்நிலைப்பள்ளி பழைய மாணவர்கள் சங்க செயற்குழு உறுப்பினர்கள் ரவிச்சந்திரன்,

    கண்ணன், பரமகுரு, தி.மு.க. தலைமை பொதுக்குழு உறுப்பினர் ராஜேந்திரன், சங்கர் மற்றும் பாலகிருஷ்ணன் ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக முன்னாள் உடற்கல்வி ஆசிரியர் பாலகுரு போட்டியை தொகுத்து வழங்கினார்.

    முடிவில் உதயகுமார் நன்றி கூறினார்.

    • மாநில கபடி போட்டி வடிவேல்கரை அணி சாம்பியன் பட்டம் வென்றது.
    • 4 முதல் 16 பரிசுகள் கோப்பைகளும், ரொக்க பணமும் வழங்கப்பட்டது.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் நேதாஜி கிரிக்கெட் கிளப், பி.டி.பி ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் கிராம மக்களுடன் இணைந்து 5-ம் ஆண்டு மாநில கபடி போட்டியை நடத்தியது. பேரூராட்சி தலைவர் மு. பால் பாண்டி யன் தலைமை தாங்கி போட்டி களை தொடங்கி வைத்தார். போலீஸ் இன்ஸ் பெக்டர் நித்திய பிரியா முன்னிலை வகித்தார். தமிழகம் முழுவதும் 106 அணிகள் பங்கேற்று மின் ஒளியில் இரவிலும் பகலிலும் விளையாடினர். இறுதியில் 5 அணிகள் இறுதி ஆட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்டது.

    இந்த போட்டியில் முதல் இடம் பெற்ற வடிவேல்கரை அணிக்கு கே.டி.ரஞ்சித் நினைவு சுழல் கோப்பையும் மற்றும் கவுன்சிலர் கார்த்திகா ராணி மோகன் சார்பாக ரொக்க பணம் ரூ.20 ஆயிரம் வழங்கப் பட்டது. 2-ம் இடம் பிடித்த தொண்டூர் அணிக்கு மாயக் கண்ணன் சகோதரர்கள் சார்பாக ஆர்.எஸ்.மீனாட்சி தர்மராஜ் நினைவு சுழல் கோப்பை, கூட்டுறவு சங்கத் தலைவர் அய்யாசாமி நினைவாக வைரமணி சகோதரர்கள் சார்பாக ரொக்க பணம் ரூ.15 ஆயிரம் வழங்கப்பட்டது. 3-ம் இடம்பிடித்த மேலக்குயில்குடி அணிக்கு முன்னாள் ராணுவ வீரர் ராஜா சகோதரர்கள் சார்பாக சோனை நினைவு சுழல் கோப்பையும், சுந்தர ஜெயமணி சார்பாக ரொக்க பணம் ரூ.10 ஆயிரமும் வழங்கப்பட்டது. அதுபோல் 4 முதல் 16 பரிசுகள் கோப்பைகளும், ரொக்க பணமும் வழங்கப்பட்டது.

    போட்டியின் நடுவர்களாக தமிழ்நாடு அமைச்சூர் கபடி கழகத்தை சேர்ந்த மூர்த்தி தலைமையில் சுரேஷ்,பாண்டி செல்வம், பாலமுருகன், காமேஸ்வரன் ஆகியோர் பணி செய்தனர். இதன் ஏற்பாடுகளை நேதாஜி கிரிக்கெட் கிளப் மற்றும் பி.டி.பி விளையாட்டு கிளப்பினர் செய்திருந்தனர்.

    ×