search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முதல்-அமைச்சர் கோப்பை சிறந்த காவல் நிலையமாக  காரைக்குடி வடக்கு போலீஸ் நிலையம் தேர்வு
    X

    முதல்-அமைச்சர் கோப்பை சிறந்த காவல் நிலையமாக காரைக்குடி வடக்கு போலீஸ் நிலையம் தேர்வு

    • முதல்-அமைச்சர் கோப்பை சிறந்த காவல் நிலையமாக காரைக்குடி வடக்கு போலீஸ் நிலையம் தேர்வு செய்யப்பட்டது.
    • சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் பாராட்டி வாழ்த்தினார்.

    காரைக்குடி

    தமிழ்நாடு முதல்-அமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான சிறந்த போலீஸ் நிலையமாக காரைக்குடி வடக்கு போலீஸ் நிலையம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதற்கான கோப்பையை, சென்னையில் டி.ஜி.பி. சைலேந்திரபாபுவிடம் காரைக்குடி வடக்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் பெற்றுக் கொண்டார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி உட்கோட்டத்திற்குட்பட்ட காரைக்குடி வடக்கு போலீஸ் நிலையமானது, குற்ற நடவடிக்கைகள் குறைப்பு, பொதுமக்களின் புகார் மீது தீர்வு காண்பது, ேபாலீஸ் நிலைய பராமரிப்பு ஆகியவற்றில் சிறப்பாக செயல்பட்டு வந்தது.

    இதன் அடிப்படையில் 2021-ம் ஆண்டுக்கான சிவகங்கை மாவட்ட அளவிலான சிறந்த காவல் நிலையமாக தேர்வு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து காரைக்குடி உட்கோட்ட உதவி போலீஸ் சூப்பிரண்டு, காரைக்குடி வடக்கு போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசாரை சிவகங்கை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் பாராட்டி வாழ்த்தினார்.

    Next Story
    ×