search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பள்ளியில் இசை- நாட்டியக்கலை சங்கம திருவிழா
    X

    போட்டிகளில் வென்ற பள்ளிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

    பள்ளியில் இசை- நாட்டியக்கலை சங்கம திருவிழா

    • மான்ஃபோர்ட் சி.பி.எஸ்.இ பள்ளி முதல் பரிசை பெற்று கோப்பையை கைப்பற்றியது.
    • நடனம், பாடல், மேற்கத்திய நடனம் மற்றும் கிராமிய நடனம் சிறப்பாக நடைபெற்றது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் தாமரை பன்னாட்டுப்பள்ளியில் தஞ்சாவூர், திருச்சி, திருவாரூர், நாகை மாவட்டங்களிலுள்ள பள்ளிகளுக்கிடையேயான இசை, நாட்டிய, நாடக கலைகளின் சங்கம திருவிழா "ஆரோஹண்" என்ற தலைப்பில் நடைபெற்றது.

    விழாவில் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகள் என 38 பள்ளிகள் போட்டிகளில் கலந்து கொண்டன. விழாவில் திரைப்பட புகழ் ஜாஃபர் சாதிக் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அவர் கூறியதாவது:- 'ஒவ்வொருவரும் முதலில் தன்னை நம்ப வேண்டும்.

    அப்போதுதான் மற்றவர்கள் நம்மை நம்புவார்கள். மேடை ஒன்றுதான் அதில் வெற்றி, தோல்வி என்பது இல்லை என்றார்.போட்டிகளில் அதிக பரிசுகளை பெற்று அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் பிரிவில் வல்லம் அரசு மாதிரி உயர்நிலைப்பள்ளியும், தனியார் மற்றும் சி.பி.எஸ்.இ பள்ளிகள் பிரிவில் திருச்சி மான்ஃபோர்ட் சி.பி.எஸ்.இ பள்ளியும் முதல் பரிசை பெற்று கோப்பையை கைப்பற்றியது.போட்டிகளில் வென்ற பள்ளிகளுக்கு தாமரை பன்னாட்டுப்பள்ளியின் தலைவர் வெங்கடேசன், துணைத்தலைவர் நிர்மலாவெங்கடேசன், முதுநிலை முதல்வர் ஜெயஸ்ரீ பத்ரிநாத், கும்பகோணம் தாமரை பன்னாட்டு ப்பள்ளியின் முதல்வர் விஜயா ஸ்ரீதர், இடைநிலை ஒருங்கிணைப்பாளர் சர்மிளா ஆகியோர் பரிசுகள் வழங்கினர்.

    விழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக தாமரை பன்னாட்டுப்பள்ளி மாணவ- மாணவிகளின் வரவேற்பு நடனம், பாடல், மேற்கத்திய நடனம் மற்றும் கிராமிய நடனம் சிறப்பாக நடைபெற்றது.

    Next Story
    ×