என் மலர்
நீங்கள் தேடியது "Cup"
- ராமநாதபுரத்தில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நடந்தன.
- இதனை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தொடங்கி வைத்தார்.
ராமநாதபுரம்
ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டு மைதானத்தில் விளை யாட்டு மேம்பாட்டு ஆணை யத்தின் மூலம் தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் தொடக்க விழா மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் நடந்தது. அப்போது அவர் பேசியதாவது:-
விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் விதமாக தமிழ்நாடு முதல்-அமைச்சர் கோப்பைக்கான பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.
அத்தகைய போட்டிகள் நடைபெறும்போது விளை யாட்டு வீரர்கள் அதிக ஆர்வமுடன் கலந்து கொண்டு தங்கள் திறமைக்கு ஏற்ற போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்று மாநில அளவில் நடைபெறும் போட்டியிலும் மற்றும் தேசிய அளவில் நடைபெறும் போட்டியிலும் பங்கேற்று வெற்றி பெற்று சிறந்த வீரர்களாக திகழ்ந்திட வேண்டும்.
அந்த வகையில் தற்போது இறகுப்பந்து, மேசைப்பந்து, கையுந்து பந்து, கால்பந்து, கபாடி, ஆக்கி, கூடைப்பந்து, நீச்சல் போட்டி, டென்னிஸ், கிரிக்கெட் ஆகிய போட்டிகள் வருகிற 26-ந்தேதி வரை நடைபெறுகிறது.
இப்போட்டியில் அதிகளவு ஆர்வமுடன் பங்கேற்று பயன் பெற்றிட வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
அதன் பிறகு 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தை மாவட்ட கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் கொடியசைத்து ெதாடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்து, மாவட்ட விளையாட்டு அலுவலர் தினேஷ் குமார் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- சுமார் 300-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.
- வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு கோப்பை, சான்றிதழ், ரொக்கம் வழங்கல்.
பாபநாசம்:
பாபநாசம் ரோட்டரி சங்கம் மற்றும் தஞ்சை மாவட்ட சதுரங்க கழகம் இணைந்து நடத்தும் 10-ம் ஆண்டு சிவஞான முதலியார் நினைவு மாநில அளவிலான சதுரங்க போட்டி கபிஸ்தலத்தில் நடைபெற்றது. பாபநாசம் ரோட்டரி சங்க தலைவர் அறிவழகன் தலைமை தாங்கினார்.
தஞ்சை மாவட்ட சதுரங்க கழக துணை தலைவர் செந்தில்குமரன் பழனிவேல், இணை செயலாளர் பண்டாரவாடை நவநீதகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை தலைவர் சரவணன் அனைவரையும் வரவேற்றார்.
போட்டியை முன்னாள் ரோட்டரி மாவட்ட ஆளுநர் பாலாஜி தொடக்கி வைத்தார். போட்டியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுமார் 300-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.
இதில் வெற்றி பெற்ற 80 பேருக்கு தஞ்சை மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் முத்துச்செல்வன் பரிசு கோப்பை, சான்றிதழ், ரொக்கம் ஆகியவை வழங்கி பாராட்டினார்.
பாபநாசம்அரசு வழக்க றிஞர் வெற்றிச்செல்வன், கபிஸ்தலம் ஊராட்சி மன்ற தலைவர் சுமதி குணசேகரன், துணை தலைவர்கள் செந்தில்நாதன், சீனிவாசன், சிவராஜ், ஜாகீர் உசேன், இணை செயலாளர் சிவக்குமார், பொருளாளர் வினோத், செயலாளர் சந்தோஷ், திருச்சி மாவட்ட செயலாளர் தினகரன், நாகை மாவட்ட செயலாளர் சுந்தர்ராஜ், புதுக்கோட்டை மாவட்ட செயலாளர் கணேசன், மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் வெற்றி வேந்தன் ஆகியோர் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவ- மாணவிகளை பாராட்டினர்.
விழாவில் சதுரங்க வீரர்கள், பெற்றோர்கள், மாவட்ட, தாலுகா பொறுப்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் தஞ்சை மாவட்ட சதுரங்க கழக செயலாளர் சிலம்பரசன் நன்றி கூறினார்.
- போட்டிகளில் 5 மாவட்டங்களிலிருந்து 1300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
- அரசு பள்ளிக்கான போட்டியில் சோழபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி கோப்பையை வென்றது.
கும்பகோணம்:
கும்பகோணம் அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 75 வது சுதந்திர தின அமுத பெருவிழாவோடு IQAC, தமிழ், ஆங்கிலம், கணிதம், வணிகவியல் மற்றும் காட்சி தொடர்பியல் துறைகள் இணைந்து நடத்தும் மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கு இடையேயான நுண்க லைகள் திறன் போட்டிகள் நடைபெற்றன.
இவ்விழா விற்கு அன்னை கல்வி குழும தலைவர் டாக்டர் அன்வர் கபீர் தலைமையேற்றார்.
அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் மாணிக்கவாசுகி முன்னிலை வகித்தார். அன்னை கல்வி குழும செயலர் ஹிமாயூன் கபீர் வாழ்த்துரை வழங்கினார்.
துணை முதல்வர்கள் பேராசிரியர் இள ஞ்செழியன், பேராசிரியர் ராஜா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
உள்தர உத்தரவாத மதிப்பீட்டு குழு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் லதா கல்லூரியின் அறிமுக உரையாற்றினார்.
கும்பகோணம் அரசினர் கல்லூரி மேனாள் தமிழ்த்துறை தலைவரும், அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரி மேனாள் முதல்வர் மணி சிறப்புரையாற்றினார்.
மேலும், திருவிடை மருதூர் உட்கோட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஜாபர் சித்திக் மற்றும் திருப்பனந்தாள் கயிலை தேசிக கயிலை மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் புகழேந்தி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றியதோடு மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினர்.
அன்னை கல்விக்குழும செயல் அலுவலர் முனைவர் ராஜ்குமார், நிர்வாக இயக்குநர் ரவி கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.
துணை முதல்வர்கள் பேராசிரியர் இளஞ்செழியன், பேராசி ரியர் ராஜா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
போட்டிகளில் 5 மாவட்டங்களில் இருந்து 1300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
அரசு பள்ளி க்கான போட்டியில் சோழபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியும் மெட்ரிக்பள்ளிக்கான போட்டிகளில் கபிஸ்தலம் ஜாக் அண்ட் ஜில் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியும் கோப்பையை வென்றது.
நிகழ்ச்சியின் முதலாவதாக முனைவர் லொயோலா பீரிஸ் வரவேற்றார்.
இறுதியாக பேராசிரியர் சுபாஷினி நன்றி உரையாற்றினார். இதில், பேராசிரியர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.