என் மலர்
உள்ளூர் செய்திகள்

போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு கோப்பை வழங்கப்பட்டது.
கபடி போட்டியில் வென்ற அணிக்கு கோப்பை வழங்கல்
- தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 28 அணிகள் கலந்து கொண்டன.
- 3-ம் இடத்தை டெல்டா வடுவூர் அணியும் பிடித்தது.
மன்னார்குடி:
மன்னார்குடி அடுத்த பயங்காடு கிராமத்தில் மாநில அளவிலான கபடி போட்டி 3 நாட்கள் நடைபெற்றது.
போட்டியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 28 அணிகள் கலந்து கொண்டன. போட்டியின் இறுதி ஆட்டமானது நேற்று நடை பெற்றது.
இதில் சென்னை சாய் கபடி அணி முதல் இடத்தை பிடித்து, ரூ.40 ஆயிரம் ரொக்கம் மற்றும் கோப்பை வென்றது.
தொடர்ந்து, 2-ம் இடத்தை தமிழ்நாடு வனத்துறை காவல்துறை அணியும், 3-ம் இடத்தை டெல்டா வடுவூர் அணியும் பிடித்தது.
போட்டியை காண சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர்.
Next Story






