200 பள்ளி குழந்தைகளுக்கு சாப்பிடும் தட்டு, டம்ளர்கள் தி.மு.க., சார்பில் வழங்கப்பட்டது

அரசு பள்ளியில் காலை உணவு வழங்கும் திட்டத்தின் தொடக்க விழா நடைபெற்றது.தி.மு.க. பகுதி கழக செயலாளர் மியாமி ஐயப்பன் தலைமை தாங்கினார்.
பள்ளி குழந்தைகளுக்கு  சாப்பிடும் தட்டு, டம்ளர்கள் வழங்கப்பட்ட காட்சி.
பள்ளி குழந்தைகளுக்கு சாப்பிடும் தட்டு, டம்ளர்கள் வழங்கப்பட்ட காட்சி.
Published on

திருப்பூர் :

திருப்பூர் வடக்கு மாவட்டம் 42 வது வட்ட தி.மு.க. சார்பில் அரசு பள்ளியில் காலை உணவு வழங்கும் திட்டத்தின் தொடக்க விழா நடைபெற்றது.விழாவில் 200 பள்ளி குழந்தைகளுக்கு சாப்பிடும் தட்டு, டம்ளர்கள் வழங்கப்பட்டது.

விழாவிற்கு தி.மு.க. பகுதி கழக செயலாளர் மியாமி ஐயப்பன் தலைமை தாங்கினார். வட்ட செயலாளர் எஸ்.ஆர்.ரமேஷ் முன்னிலை வகித்தார். இதில் பகுதி கழக இளைஞர் அணி துணை அமைப்பாளர் பாரபாளையம் சிவா, மாநகர வர்த்தக அணி பார்த்திபன், போஸ் சரவணன், ஜோதிமணி, பிரதிநிதி செல்ல குட்டி, அவைத்தலைவர் மும்மூர்த்தி, அலுவலக பொறுப்பாளர்கள் முனியாண்டி, ராமராஜ், ஆறுமுகம், இளைஞர் அணி கார்த்திகேயன்,கௌதம்,சசிக்குமார், கனகலட்சுமி, செல்லம் நகர் முத்து ,செல்லம் நகர் தேவராஜ், ஜிம் கார்த்தி, வி.எம். விக்கி, லட்சுமி அம்மாள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com