search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பதக்கம்"

    • 2 முதல் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு 3 சக்கர சைக்கிள் போட்டி நடைபெற்றது.
    • 2,3,4,5-ம் இடங்களை பிடித்த குழந்தைகளுக்கு வெள்ளி பதக்கம் பரிசாக வழங்கப்பட்டது.

    சுவாமிமலை:

    கும்பகோணம் கார்த்தி வித்யாலயா பள்ளியில் 2 முதல் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு 3 சக்கர சைக்கிள் போட்டி நடைபெற்றது.

    போட்டியில் கும்பகோணம் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பள்ளிகளில் இருந்து 100-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கலந்து கொண்டனர்.

    போட்டியானது 3 நிலைகளாக நடைபெற்றது.

    போட்டியில் முதல் இடம் பிடித்த குழந்தைக்கு தங்க பதக்கமும், முறையே 2,3,4,5-ம் இடங்களை பிடித்த குழந்தைகளுக்கு வெள்ளி பதக்கமும் பரிசாக வழங்கப்பட்டது.

    விழாவில் கார்த்தி வித்யாலயா பள்ளி தலைவர் கார்த்திகேயன் கலந்து கொண்டு வெற்றிபெற்ற குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கினார்.

    மேலும், கலந்து கொண்ட அனைத்து குழந்தை களுக்கும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

    இதுகுறித்து பன்னாட்டு பள்ளி தாளாளர் பூர்ணிமா கார்த்திகேயன் கூறுகையில்:-

    போட்டியானது குழந்தைகளை ஊக்கு விக்கும் வகையிலும், புத்துணர்ச்சி அளிக்கும் விதமாகவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது என்றார்.

    முன்னதாக பள்ளி முதல்வர் அம்பிகாபதி அனைவரையும் வரவேற்றார்.

    விழாவில் ஆசிரியர்கள், மாணவ- மாணவிகள், பெற்றோர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • போட்டியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.
    • யோகா போட்டியில் கலந்து கொண்டு வெண்கல பதக்கம் பெற்றுள்ளார்.

    நாகப்பட்டினம்:

    மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் சார்பில் அகில இந்திய தடகள போட்டிகள் கோவாவில் நடைபெற்றது.

    போட்டியில் பல மாநிலங்களில் இருந்து சுமார் 300-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர்.

    இதில் நாகை இ.ஜி.எஸ் பிள்ளை பொறியியல் கல்லூரியில் 2-ம் ஆண்டு படிக்கும் ஜனனி என்ற மாணவி யோகா போட்டியில் கலந்து கொண்டு வெண்கல பதக்கம் பெற்றுள்ளார்.

    வெற்றிபெற்ற மாணவியை இ.ஜி.எஸ். பிள்ளை கல்வி குழும இணைச்செயலாளர் சங்கர் கணேஷ், துறை தலைவர் கணேசன், அருள் செல்வன், முதலாம் ஆண்டு துறை தலைவர் தீபா மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

    • நாடு முழுவதும் இருந்து வீரர் - வீராங்கனைகள் பங்கேற்றனர்.
    • சப்- ஜூனியர் 59 கிலோ பிரிவில் சென்னையை சேர்ந்த அபிஷேக் பால்ஜோஸ்வா தங்கம் வென்றார்.

    ஜாம்ஷெட்பூர்:

    இந்திய வலுதூக்குதல் சம்மேளனம் சார்பில் தேசிய சீனியர், சப்- ஜூனியர் வலுதூக்குதல் போட்டி ஜாம்ஷெட்பூரில் 3 தினங்கள் நடைபெற்றது. ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் நடைபெற்ற இந்த போட்டியில் நாடு முழுவதும் இருந்து வீரர் - வீராங்கனைகள் பங்கேற்றனர்.

    இதில் தமிழக அணிக்கு 2 பதக்கம் கிடைத்தது. சப்- ஜூனியர் 59 கிலோ பிரிவில் சென்னையை சேர்ந்த அபிஷேக் பால்ஜோஸ்வா தங்கம் வென்றார்.

    சீனியர் 59 கிலோ பிரிவில் நந்தகோபால் வெண்கல பதக்கம் பெற்றார். பதக்கம் வென்ற இருவரையும் தமிழ்நாடு வலுதூக்குதல் சங்க பொதுச் செயலாளர் இளங்கோவன், சென்னை மாவட்ட வலுதூக்குதல் சங்க செயல் தலைவர் விஜயபாஸ்கர் ஆகியோர் பாராட்டினார்கள்.

    • 12 நாடுகளை சேர்ந்த மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.
    • வேதாரண்யம் மாணவி மஹாதி 2-ம்இடம் பெற்றுகோப்பை பெற்றார்.

    வேதாரண்யம்:

    வேதாரண்யம் நகராட்சி ராஜாளி காடு பகுதியைச் சேர்ந்தவர் ஹரிஹரன் - வேதா தம்பதியினரின் மகள் மஹாதி (வயது 11).இவர் 6-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    சென்ற ஆண்டு மாநில அளவில் நடைபெற்ற மனநிலை வேக எண்கணித போட்டியில் (அபாகஸ்) முதலிடம் பெற்றார்.

    தற்போது சென்னை மகாபலிபுரத்தில் உலக அளவில் நடந்த அபாகஸ் போட்டியில் பங்கு பெற்றார்.

    இதில் 12 நாடுகளை சேர்ந்த மாணவ மாணவிகள் பங்கேற்றனர்.

    இதில் வேதாரணியம் மாணவி மஹாதி இரண்டாம் இடம் பெற்றுகோப்பை மற்றும் வெள்ளி பதக்கத்தை பெற்றார்.

    வெற்றி பெற்ற மாணவி மஹாதியை நாகை மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கிஸ் பாராட்டினார் .

    • அருள் ஆனந்தர் கல்லூரி மாணவி வெள்ளி, வெண்கல பதக்கம் வென்றார்.
    • வீரர், வீராங்கனைகள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

    மதுரை

    முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளை–யாட்டு போட்டிகள் சென் னையில் நடைபெற்று வரு–கின்றன. இதில் தமிழகத்தின் பல்வேறு பள்ளி, கல்லூ–ரிகளில் இருந்து வீரர், வீராங்கனைகள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்ற–னர்.

    இதில் மதுரை அருகே உள்ள கருமாத்தூர் அருள் ஆனந்தர் கல்லூரியில் முத–லாம் ஆண்டு பயின்று வரும் மாணவி மாரிச்செல்வி சென்னை யில் 100 மீட்டர் ஓட்டப்ப ந்தயத்தில் வெள் ளிப் பதக்கத்தையும், 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெண்க ல பதக்கத்தையும் வென்றார்.

    பதக்கங்கள் பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்த மாணவியை அதிபர் ஜான் பிரகாசம், செயலர் அந்தோ–ணிசாமி, கல்லூரி முதல்வர் அன்பரசு, இணை முதல்வர் சுந்தரராஜன், கல்லூரி விளையாட்டுத்துறை ஒருங் கிணைப்பாளர் இன் னாசி ஜான், உடற்கல்வி இயக்கு–னர் வனிதா, உடற் கல்வித் துறை தலைவர் வீர பர–மேஸ்வரி மற்றும் சக மாணவ, மாணவிகள், பெற் றோர்கள் பாராட்டி–னர்.

    • சிலம்ப பயிற்சியாளரிடம் 7 ஆண்டுகளாக பயிற்சி பெற்று வருகின்றனர்.
    • பதக்கம் வென்றவர்களை ஊர் மக்கள் பாராட்டினர்.

    பூதலூர்:

    பூதலூர் அருகே உள்ள கண்டமங்கலம் கிராமத்தை சேர்ந்த சேகர் என்ற விவசாயி மகன் கணேஷ் திருச்சியில்தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்து வருகிறார்.

    அதேபோன்று கண்டமங்கலம் கிராமத்தை சேர்ந்த ராமதுரை, என்ற விவசாயியின் மகள் வினிதா தஞ்சை தனியார் கல்லூரியில் பி.காம்., சிஏ., இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார் .

    2 பேரும் சரவணன் என்ற சிலம்பு பயிற்சியாளரிடம் 7 ஆண்டுகளாக பயிற்சி பெற்று வருகின்றனர்.

    தமிழ்நாடு இளைஞர்கள் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நடத்தும் முதலமைச்சர் கோப்பைக்கான மாநிலஅ ளவிலான கல்லூரி மாணவர்கள் பிரிவில் சிலம்பு போட்டியில் பங்கேற்றனர்.

    இதில்கணேஷ் முதலிடமும் வெற்றி பெற்று தங்க பதக்கமும் ரூ 1 லட்சம் பரிசு பெற்றார்.

    அதேபோன்று கல்லூரிபயிலும் பெண்கள் பிரிவில் சிலம்பு போட்டியில் பங்கேற்று2-ம் வது இடத்தைப் பிடித்து வெள்ளிபதக்கமும் பெற்று இரண்டு மாணவர்களும் தங்களுடைய கிராமத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.

    பதக்கம் வென்ற இருவரையும் உறவினர்கள் மற்றும் ஊர் மக்கள் பாராட்டி சிறப்பு வரவேற்பு அளித்தனர்.

    • சமூகத்தில் போதைப் பொருளை ஒழிப்பதற்காக கடுமையாகவும், உண்மையாகவும் உழைக்கும் அதிகாரிகள், போலீசாரை ஊக்கு விக்கும் வகையில், முதல்-அமைச்சர் பதக்கம் புதிதாக வழங்கப்படும் என, அறிவித்தார்.
    • உயர் அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு, முதல்-அமைச்சரின் பதக்கம் வழங்க, தமிழக முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

    நாமக்கல்:

    தமிழக முதல்-அமைச்சர் ஸ்டாலின், சட்டசபையில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை மானிய கோரிக்கையின்போது, சமூகத்தில் போதைப் பொருளை ஒழிப்பதற்காக கடுமையாகவும், உண்மையா கவும் உழைக்கும் அதிகாரி கள், போலீசாரை ஊக்கு விக்கும் வகையில், முதல்-அமைச்சர் பதக்கம் புதிதாக வழங்கப்படும் என, அறிவித்தார்.

    2023-ம் ஆண்டு, சர்வ தேச போதை ஒழிப்பு மற்றும் சட்டவிரோத கடத்தல் தடுப்பு தினத்தை யொட்டி, உயர் அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு, முதல்-அமைச்சரின் பதக்கம் வழங்க, தமிழக முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

    அதன்படி, கோவை மாவட்ட எஸ்.பி. பத்ரிநாரா யணன், தேனி எஸ்.பி. டோங்கரே பிரவின் உமேஷ், சேலம் சப்-டிவிஷன் ரெயில்வே டி.எஸ்.பி. குணசேகரன், நாமக்கல் எஸ்.ஐ. முருகன், புதுச்சத்தி ரம் போலீஸ் குமார் ஆகியோருக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

    முதன் முறையாக மாநில அளவிலான விருது பட்டி யலில், நாமக்கல் மாவட் டத்தை சேர்ந்த எஸ்.ஐ., மற்றும் போலீஸ் என 2 பேர் இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    முதல்-அமைச்சர் பதக்கத்துக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள எஸ்.ஐ., முருகன், போலீஸ் குமார் ஆகியோருக்கு, போலீஸ் உயர் அதிகாரிகள், சக போலீசார் வாழ்த்துகள் தெரிவித்தனர்.

    • அரசு பள்ளிகளை சேர்ந்த 20-க்கும் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
    • போட்டியில் 6 மாணவிகள் தங்க பதக்கம் பெற்றனர்.

    நாகப்பட்டினம்:

    தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலம் சார்பில் இளைஞர்களுக்கான டேக்வாண்டோ போட்டி-23 புதுச்சேரியில் ஞாயிற்றுக்கி ழமை நடைபெற்றது.

    இப்போட்டிக்கு நாகை மாவட்டத்தில் உள்ள திருமருகல்,திருப்புகலூர் புறாகிராமம் உள்ளிட்ட அரசுப்பள்ளிகளைச் சேர்ந்த 20- மாணவ மாணவிகள் இப் போட்டியில் பங்கேற்றனர்.

    இதில் மாணவிகள் 6 பேர் தங்கப்பதக்கமும், மாணவர்கள் 5 பேர் தங்கப்பதக்கமும், 6 சில்வர் பதக்கமும் பெற்றனர்.

    போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளை பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் பாராட்டினர்.

    இதற்கான ஏற்பாடுகளை கிரண்ட் மாஸ்டர்கள் இளங்கோவன், பாண்டியன் பயிற்சியாளர் மாஸ்டர் வெங்கடேசன் முன்னாள் தலைமை ஆசிரியர் சுப்பிரமணியன் மற்றும் குணசேகரன் ஆகியோர் செய்திருந்தனர்.

    • பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் கைது செய்யப்படவில்லை.
    • அவரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி தொடர்ந்து போராட்டம் நடந்து வந்தது.

    பாலியல் குற்றச்சாட்டுக்குள்ளான மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷன் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி டெல்லியில் தொடர்ந்து மல்யுத்த வீரர், வீராங்கணைகள் போராடி வந்தனர். பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது போக்சோ உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவர் கைது செய்யப்படவில்லை. அவரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி தொடர்ந்து போராட்டம் நடந்து வந்தது.

    இதனையடுத்து பாராளுமன்ற கட்டடம் திறப்பு விழாவையொட்டி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், மல்யுத்த வீரர், வீராங்கனைகள் பாராளுமன்றம் நோக்கி அமைதி பேரணி நடத்த திட்டமிட்டனர். அதன்படி, மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டம் நடத்த போலீசார் அனுமதி மறுத்த நிலையில் தடையை மீறி பேரணியாக சென்றனர். அப்போது, தடையை மீறி சென்ற அவர்களை போலீசார் கைது செய்து பிறகு விடுவிக்கப்பட்டனர்.

    இந்நிலையில் நாட்டிற்காக வென்ற பதக்கங்களை கங்கையில் வீசப்போவதாக மல்யுத்த வீரர்கள் அறிவித்துள்ளனர். டெல்லியில் போராடி வரும் மல்யுத்த வீரர்கள் ஹரித்வாரில் உள்ள கங்கை நதியில் இன்று மாலை பதக்கங்களை வீச முடிவெடுத்துள்ளனர்.

    மேலும் இந்தியா கேட்டில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துவோம் என போராட்டத்தில் ஈடுபட்ட மல்யுத்த வீரர்கள் தெரிவித்துள்ளனர்.

    • 16 மாவட்டங்களை சேர்ந்த 56 அணிகள் போட்டியில் கலந்து கொண்டன.
    • வெற்றிபெறும் அணிக்கு கோப்பைகளும், அணியை சேர்ந்த 20 பேருக்கு பதக்கங்களும் வழங்கப்படும்.

    திருவாரூர்:

    மாநில தரைப்பந்து கழகம் மற்றும் திருவாரூர் மாவட்ட தரைப்பந்து கழகம் இணைந்து நடத்தும் மாநில அளவிலான 16-வது தரைப்பந்து போட்டி திருவாரூரில் உள்ள தனியார் பள்ளியில் நேற்று தொடங்கியது.

    இந்த போட்டியினை திருவாரூர் மாவட்ட தரைப்பந்து கழகத் தலைவர் ஹபீப் முஹமது தொடங்கி வைத்தார்.

    இதில் மாநில தரைப்பந்து கழக செயலாளர் விஷ்ணுவிகாஷ், மாவட்ட தரைப்பந்து கழக செயலாளர் மகேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த போட்டி 14 வயதிற்கு உட்பட்டோர் மற்றும் 19 வயதுக்குட்பட்ட ஆண் பெண் இருபாலருக்கும் நடைபெறுகிறது.

    இதில் சென்னை, காஞ்சிபுரம், தூத்துக்குடி, செங்கல்பட்டு, கிரு ஷ்ணகிரி, கன்னியாகுமரி, தென்காசி, நாமக்கல் உள்ளிட்ட 16 மாவட்டங்களைச் சேர்ந்த 56 அணிகள் பங்கு பெறுகின்றன.

    ஒவ்வொரு அணியும் மூன்று முறை மற்ற அணிகளுடன் மோத உள்ளன.

    இதில் இரண்டு பிரிவுகளிலும் தேர்வாகும் நான்கு அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றவர்கள் ஆவார்கள்.

    இந்த போட்டி இன்று தொடங்கி நாளை வரை நடைபெறுகிறது.

    இதில் ஒரு அணிக்கு 20 நபர்கள் இருப்பார்கள். இதில் 6 நபர்கள் மட்டுமே களத்தில் விளையாடுவார்கள்.

    மீதமுள்ள 14 நபர்கள் மாற்று ஆட்டக்காரர்களாக பயன்படுத்தப்படுவார்கள்.

    மேலும் நாளை நடைபெறும் இறுதி போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு கோப்பை மற்றும் பதக்கங்கள் வழங்கப்பட உள்ளன.

    வெற்றி பெறும் அணிக்கு கோப்பைகளும் அணியைச் சேர்ந்த 20 நபர்களுக்கு பதக்கங்களும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • சீனியர் பிரிவு நீளம் தாண்டுதலில் 7.52 மீட்டர் தூரம் குதித்து தேசிய அளவில் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.
    • சீனியர் பிரிவு 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 12.39 நொடிகளில் ஓடி தேசிய அளவில் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார்.

    திருப்பூர் :

    திருப்பூரை சேர்ந்த சக்திவேல் மற்றும் பரமேஸ்வரி தம்பதியின் மகன் சன்மத் தர்ஷன். தடகள வீரர். இவர் குஜராத் மாநிலம் நாடியட்டில் நடைபெற்ற "20வது தேசிய பெடரேஷன் கப்" 20 வயதுக்குட்பட்டோருக்கான தடகள சேம்பியன்ஷிப் போட்டியில், சீனியர் பிரிவு நீளம் தாண்டுதலில் 7.52 மீட்டர் தூரம் குதித்து தேசிய அளவில் வெள்ளிப்பதக்கம் வென்றுள்ளார்.

    மேலும் ஹரியானா மாநிலம் பஞ்ச்குலா-வில் நடைபெற்ற 4வது கேலோ இந்தியா யூத் கேம்ஸ்தடகளப்போட்டியில் நீளம் தாண்டுதலில் 7.34 மீட்டர் தூரம் குதித்து தேசிய அளவில் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார்.

    அதேபோல திருப்பூரை சேர்ந்த மரிய முத்துராஜா மற்றும் ஸ்டெல்லா ஜோஸப் தம்பதியரின் மகள் ஏஞ்சல் சில்வியா. தடகள வீராங்கனை. இவர் ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் நடைபெற்ற "கிராண்ட் பிரிக்ஸ் 4" தடகள சேம்பியன்ஷிப் போட்டியில் சீனியர் பிரிவு 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் 12.39 நொடிகளில் ஓடி தேசிய அளவில் வெண்கலப்பதக்கம் வென்றுள்ளார்.

    திருப்பூரை சேர்ந்த தடகள வீரர்கள் இருவரையும் பாராட்டி கெளரவிக்கும் விதமாக திருப்பூர் தடகள சங்கத்தின் தலைவரும், தமிழ்நாடு தடகள சங்கத்தின் துணைத்தலைவருமான சண்முகசுந்தரம் தலைமையில் ஐ.பி.எக்ஸ். எக்ஸ்போர்ட்ஸ் நிறுவன நிர்வாக இயக்குநருமான நிரஞ்சன், காவல் ஆய்வாளர் முத்துக்குமார்உள்ளிட்ட திருப்பூர் தடகள சங்க நிர்வாகிகள் இருவருக்கும் பொன்னாடை அணிவித்து விளையாட்டு சீருடைகள் அடங்கிய பெட்டகத்தை வழங்கினர். 

    • நேபாள நாட்டில் நடந்த சர்வதேச யோகா போட்டியில் சாதனை படைத்த சகோதரிகளுக்கு வரவேற்பு அளித்தனர்.
    • இதில் சக்தி பிரியா தங்கப்பதக்கத்தையும், விஷாலி வெண்கலப்பதக்கத்தையும் வென்றனர்.

    வத்திராயிருப்பு

    நேபாள நாட்டில் நடந்த சர்வதேச யோகா போட்டியில் இந்தியாவின் சார்பில் விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு தாலுகாவிற்கு உட்பட்ட வ.புதுப்பட்டியை சேர்ந்த சகோதரிகளான விஷாலி (18), சக்தி பிரியா (17) ஆகியோர் பங்கேற்றனர். இதில் சக்தி பிரியா தங்கப்பதக்கத்தையும், விஷாலி வெண்கலப்பதக்கத்தையும் வென்றனர்.

    இருவரும் நேற்று காலை சொந்த ஊரான வ.புதுப்பட்டி கிராமத்திற்கு திரும்பினர். பதக்கம் வென்ற சகோதரிகள் இருவருக்கும் கிராம மக்கள் மற்றும் உறவினர்கள் வரவேற்பு அளித்தனர்.

    பின்னர் இருவரையும் கிராம மக்கள் பேரணியாக அழைத்து சென்றனர். பதக்கம் வென்ற சகோதரிகள் கூறுகையில், நாங்கள் யாரிடமும் யோகா பயிற்சி பெறவில்லை. யூடியூப் மூலமாக பயிற்சி செய்ய கற்றுக்கொண்டோம். ஏழ்மை நிலையில் உள்ள எங்களுக்கு தமிழக அரசு சிறந்த பயிற்சியாளரை நியமித்தால் இன்னும் பல பதக்கங்களை வெல்ல முடியும் என்றனர். 

    ×