என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  மாநில அளவிலான சிலம்பம் போட்டி: வீரத்தமிழச்சி சிலம்ப பள்ளி மாணவ- மாணவிகள் சாதனை
  X

  மாநில போட்டியில் சாதனை படைத்த தஞ்சை மாவட்ட வீரத்தமிழச்சி சிலம்ப பள்ளி மாணவ-மாணவிகள் கவுரவிக்கப்பட்டனர்.

  மாநில அளவிலான சிலம்பம் போட்டி: வீரத்தமிழச்சி சிலம்ப பள்ளி மாணவ- மாணவிகள் சாதனை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • ஒற்றைக்கம்பு, இரட்டைக் கம்பு, நடுக்கம்பு போன்ற பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன.
  • 27 பேர் கலந்து கொண்டு அதில் 24 தங்கப்பதக்கமும் 3 வெள்ளி பதக்கமும் ெபற்று பெருமை சேர்த்துள்ளனர்.

  தஞ்சாவூர்:

  திருச்சி மாவட்டம் நேரு நினைவு கல்லூரியில் நடைபெற்ற மாநில அளவிலான சிலம்பாட்ட போட்டியில் அனைத்து மாவட்டத்தில் இருந்தும் சுமார் ஆயிரம் மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

  மழலையர், மினி சப்-ஜூனியர், சப்-ஜூனியர், ஜூனியர், சீனியர், சூப்பர் சீனியர் போன்ற பிரிவுகளில் ஒற்றைக்கம்பு, இரட்டைக் கம்பு, நடுக்கம்பு, குத்து வரிசை போன்ற பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன.

  அதில் தஞ்சை மாவட்டத்தில் உள்ள வீரத்தமிழச்சி சிலம்ப பள்ளி மாணவ-மாணவிகள் 27 பேர் கலந்து கொண்டனர் . அதில் 24 தங்கப்பதக்கமும் 3 வெள்ளி பதக்கமும் வென்று தஞ்சை மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர்.

  வெற்றி பெற்ற மாணவ-மாணவிகள் மற்றும் வீரத்தமிழச்சி சிலம்பப் பள்ளி ஆசான் உமா (தென்னிந்திய பாரம்பரிய சிலம்ப விளையாட்டு கலைக்கழகம், தஞ்சாவூர் மாவட்ட தலைவர்) ஆகியோருக்கு கழகத் தலைவர்கள் மற்றும் ஊர் மக்கள் சார்பாக பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

  Next Story
  ×