search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கொள்ளையர்கள்"

    • தேவகோட்டை அருகே பூட்டியிருந்த வீட்டில் கொள்ளையர்கள் புகுந்தனர்.
    • நகை-பணம் கிடைக்காததால் டி.வி.யை திருடிச்சென்றனர்.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை ராம்நகர் பகுதியில் வசிப்பவர் சூசை அருள். இவரது மனைவி அன்னம்மாள் மேரி (வயது 65). இவரது வீடு ராம்நகர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி எதிர்ப்புறம் உள்ளது.

    இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இருவருக்கும் திருமணம் நடைபெற்று ஒருவர் அமெரிக்காவிலும், மற்றொருவர் கோவையிலும் வசித்து வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கணவரை இழந்த அன்னம்மாள் மேரி தனியாக வசித்து வருகிறார்.

    அவர் கடந்த 15 நாட்களுக்கு முன்பு கோவையில் உள்ள தனது மகள் வீட்டிற்கு சென்று விட்டார். அவர் இன்று காலை 4 மணியளவில் தனது வீட்டிற்கு திரும்பி வந்தார். அப்போது அவரது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு கொள்ளை நடந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

    இதுபற்றி அறிந்த அக்கம் பக்கத்தினர் தேவகோட்டை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் டி.எஸ்.பி. கணேஷ்குமார், இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதில் வீட்டில் இருந்த ரூ. 30 ஆயிரம் மதிப்புள்ள எல்.சி.டி.டி.வி. திருடப்பட்டு இருந்தது.

    மேலும் வீட்டில் உட்புறம் உள்ள பீரோக்கள் உடைக்கப்பட்டு பொருள்கள் சிதறி கிடந்தன. ஆனால் அதில் நகைகள்-பணம் எதுவும் வைக்கப்படாததால் கொள்ளையர்கள் டி.வி.யை மட்டும் திருடிச் சென்றுள்ளனர்.

    சிவகங்கையில் இருந்து கைரேகை நிபுணர் குழுவினர் வரவழைக்கப்பட்டு வீட்டில் பதிவாகியிருந்த கொள்ளையர்களின் கைரேககைளை பதிவு செய்தனர். மேலும் அந்தப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. காட்சி பதிவுகளை போலீசார் கைப்பற்றி பார்வையிட்டு வருகின்றனர்.

    ராம்நகர் பகுதிகளில் நடைபெற்று வரும் தொடர் திருட்டு சம்பவத்தால் அந்தப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர். தேவகோட்டை நகரில் கண்காணிப்பு காமிராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது. மேலும் பொதுமக்கள் தாமாக முன்வந்து அவரவர் பகுதிகளில் கண்காணிப்பு காமிராக்களை பொருத்த வேண்டும் என்று டி.எஸ்.பி. கணேஷ்குமார் கேட்டுக் கொண்டார்.

    • மர்ம நபர்கள் வங்கி உள்ளே புகுந்து பூட்டை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டனர்.
    • குற்றவாளிகளை பிடிக்க போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    வேதாரண்யம்:

    நாகை மாவட்டம்,வேதார ண்யம் அடுத்த மருதூர் தெற்கில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி உள்ளது. இந்த வங்கியில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் உள்ளனர்.

    இந்நிலையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பு மேலும், லாக்கரைஉடைக்கும் போது வங்கி காவலாளி முத்து கண்னு வந்துள்ளார். இதை பார்த்த கொள்ளையர்கள் அவரை தாக்கி விட்டு தப்பிச்சென்றனர்.

    இதனால், வங்கியில் இருந்த சுமார் 8 கோடி மதிப்புள்ள நகைகளும், 14 லட்சம் ரொக்கமும் தப்பியது. கொள்ளையில் ஈடுபட்டவர்கள் கேஸ் சிலிண்டரை விட்டு சென்றுள்ளனர். மேலும் சி.சி.டி.வி. ஹார்டு டிஸ்க்கை எடுத்து சென்றுள்ளனர்.

    இதுகுறித்து, வாய்மேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து நாகையில் இருந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டது.

    மோப்பநாய் வங்கியில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தூரம் ஓடிச்சென்று அங்குள்ள வீரன் கோவில் அருகே நின்றுவிட்டது.

    இந்நிலையில், நாகை எஸ்.பி ஜவகர் கொள்ளை முயற்சி நடந்த வங்கியை நேரில் பார்வையிட்டார்.கொள்ளை முயற்சியில் ஈடுபட்டவர்களை பிடிக்க தனிப்படை அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    தனிப்படை போலீசார் அருகில் உள்ள சி.சி.டி.வி. காமிராக்களை ஆய்வு செய்தும், கேஸ் சிலிண்டர் யாரிடம் வாங்கினர்கள்?

    கொள்ளை கும்பல் காரில்வந்தர்களா? உள்ளுர் நபர்கள் யாருக்காவது தொடர்புள்ளதா?

    என பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • இந்த லாரிகள் மூலம் இறால் மீன் உள்ளிட்ட பொருட்களை வெளிமாநிலங்களுக்கு ஏற்றி செல்கின்றனர்.
    • 1 லட்சம் ரூபாய் இருக்கும் என்று லாரியின் உரிமையாளர்கள் கூறுகின்றனர்.

    விழுப்புரம்:

    மரக்காணம் அருகே உள்ள அனுமந்தை கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட லாரிகள் உள்ளது. இந்த லாரிகள் மூலம் இறால் மீன் உள்ளிட்ட பொருட்களை வெளிமாநிலங்களுக்கு ஏற்றி செல்கின்றனர். இந்நிலையில் அனுமந்தை கிராமத்தை சேர்ந்த சகாதேவன், உதயகுமார், வேலு உள்ளிட்டோர்களின் 10-க்கும் மேற்பட்ட லாரிகளை அனுமந்தை டோல்கேட் அருகில் நிறுத்தி வைத்திருந்தனர்.

    இந்த லாரிகளை அவர்கள் பார்த்த பொழுது அதில் 7 லாரிகளில் இருந்த பேட்டரிகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இது குறித்து மரக்காணம் போலீசில் புகார் செய்தனர். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பேட்டரிகளை திருடி சென்றவர்கள் யார்? என்று விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த லாரிகளில் திருடு போன பேட்டரிகளின் மதிப்பு 1 லட்சம் ரூபாய் இருக்கும் என்று லாரியின் உரிமை யாளர்கள் கூறுகின்றனர்.

    • நிலத்தில் வீசி சென்ற அவலம்
    • போலீசார் விசாரணை

    குடியாத்தம்:

    குடியாத்தத்தை அடுத்த மேல்முட்டுக்கூர் ஊராட்சி தட்டாங்குட்டைகிராமத்தில் எட்டியம்மன் கோவில் உள் ளது. இந்த கோவிலில் கடந்த மே மாதம் திருவிழா நடை பெற்றது.

    அப்போது உண்டி யல் திறக்கப்பட்டு, காணிக்கை பணம் எண்ணப்பட்டது. அதன் பின்னர் 5 மாதமாக உண்டியல் காணிக்கை எண்ணப்படவில்லை.

    நேற்று முன்தினம் இரவு பூசாரி வழக்கம்போல பூஜை செய்துவிட்டு கோவிலை பூட் டிக்கொண்டு சென்றுள்ளார்.

    நேற்று காலை வந்து பார்த்த போது கோவில் உண்டியலை காணவில்லை. கோவிலின் பின்பக்கம் சுமார் அரை கிலோமீட்டர் தூரத்தில் ஏரி கால்வாய் அருகே தனியாக நிலத்தில் உண்டியல் கிடந்தது.

    கோவிலின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே நுழைந்த மர்ம கும்பல் உண்டியலை தூக்கிச் சென்று அதிலிருந்து நகைகள் மற்றும் பணத்தை திருடி சென்றுள்ளனர்.

    சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் தங்கள் குழந்தைகளுக்கு எடைக்கு எடை போட்ட நாணயங்களும், சிறு சிறு நகைகளும் அந்த உண்டியலில் இருந்ததாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து ஊர் தர்ம கர்த்தா எஸ்.வி.ராமு, குடியாத்தம் தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக் டர் சிலம்பரசன் உள்ளிட்ட போலீசார் திருட்டு நடை பெற்ற எட்டியம்மன் கோவிலி லும், உண்டியலில் கிடந்த இடத்திலும் பார்வையிட்டனர். மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தி.நகரில் 4 முக்கிய இடங்களில் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
    • எல்.இ.டி. திரைகள் மூலமும் போலீசார் பொதுமக்களிடம் விழிப்புணர்வு மேற்கொண்டு வருகிறார்கள்.

    சென்னை:

    தி.நகரில் 2 ஆயிரம் கொள்ளையர்களை போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். `பேஸ்டேக்' கேமராக்கள் உதவியுடன் இந்த கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

    தி.நகரில் போத்தீஸ் சந்திப்பு, ரங்கநாதன் தெரு சந்திப்பு, பஸ் நிலையம், ரெயில் நிலைய நுழைவு வாயில் பகுதி உள்ளிட்ட 4 இடங்களில் இந்த கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்த கேமராக்களின் பார்வையில் கொள்ளையர்கள் ஊடுருவினால் உடனே அவர்களை கேமரா காட்டி கொடுத்துவிடும். இது தவிர எல்.இ.டி. திரைகள் மூலமும் போலீசார் பொதுமக்களிடம் விழிப்புணர்வு மேற்கொண்டு வருகிறார்கள்.

    தி.நகர் போலீஸ் துணை கமிஷனர் ஆதர்ஸ் பச்சோரா, உதவி கமிஷனர் பாரதிராஜன் ஆகியோரது மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் சுரேஷ் தலைமையிலான போலீசார் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்து உள்ளனர்.

    • சிறிது நேரம் கழித்து பணம் மற்றும் நகைகளை காணாததை கண்ட கருணாநிதி அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து உரிமை யாளர் ராமை யனுக்கு தகவல் தெரிவித்தார். இது குறித்து கருணாநிதி இரணியல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
    • புகாரின் பேரில் சம்பவ இடம் வந்த இரணியல் போலீசார் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிராக் களை ஆய்வு செய்தனர்.
    • அப்போது சி.சி.டி.வி.யில் கொள்ளையர்கள் 2 பேர் நடந்து செல்வது போன்ற காட்சி பதிவாகி இருந்தது. அந்த காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட் டுள்ளது.

    இரணியல், அக்.13-

    திங்கள்நகர் அடுத்த பூசாஸ்தான்விளையை சேர்ந்தவர் ராமையன் (வயது 65).

    இவர் திங்கள்நகர் ராதாகிருஷ்ணன் கோவில் அருகில் நகைக்கடை நடத்தி வருகிறார். இவரது கடையில் அதே பகுதியைச் சேர்ந்த கருணாநிதி (55) என்பவர் வேலை பார்த்து வருகிறார்.சம்பவத்தன்று கருணாநிதி கடையில் இருக்கும் போது 2 வாலிபர்கள் வந்து ஒருவர் ராசிக்கல் கேட்டுள்ளார்.

    கருணாநிதி எடுத்துக் கொடுக்கும் போது மற்றொரு வாலிபர் கல்லாவில் இருந்த ரூ.15 ஆயிரம் ரொக்கப்ப ணம் மற்றும் 16 கிராம் தங்க நகைகளையும் எடுத் துள்ளார். பின்னர் அவர்கள் வாங்கிய ராசிக்கல்லுக்கான பணத்தை கொடுத்து விட்டு வாலிபர்கள் சென்றனர்.

    சிறிது நேரம் கழித்து பணம் மற்றும் நகைகளை காணாததை கண்ட கருணாநிதி அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து உரிமை யாளர் ராமை யனுக்கு தகவல் தெரிவித்தார். இது குறித்து கருணாநிதி இரணியல் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் சம்பவ இடம் வந்த இரணியல் போலீசார் அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிராக் களை ஆய்வு செய்தனர்.

    அப்போது சி.சி.டி.வி.யில் கொள்ளையர்கள் 2 பேர் நடந்து செல்வது போன்ற காட்சி பதிவாகி இருந்தது. அந்த காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட் டுள்ளது.

    • பீரோவில் இருந்த ஒரு கிராம் நகை செல்போன் திருடப்பட்டு இருந்தது.
    • கை ரேகை நிபுணர்கள் வரவ ழைக்கப்பட்டு அங்கு பதி வாகி இருந்த கைரேகை பதிவு செய்தனர். அப் போது கைரேகைகள் சில சிக்கி உள்ளது

    நாகர்கோவில் : 

    நாகர்கோவில் அனந்தன் பாலம் சானல் கரை வசந்தம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பாபு குட்டன் (வயது 41). இவர் வடசேரி பகுதியில் அழகு நிலையம் நடத்தி வருகிறார்.

    இவர் குடும்பத்தோடு தக்கலையில் உள்ள தனது தாயார் வீட்டுக்கு சென்றி ருந்தார். நேற்று காலை வீட்டிற்கு வந்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. பாபு குட்டன் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் உள்ள பொருட்கள் சிதறி கிடந்தது. பீரோவில் இருந்த ஒரு கிராம் நகை செல்போன் திருடப்பட்டு இருந்தது.

    இது குறித்து ஆசாரி பள்ளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி னார்கள். அப்போது பாபுகுட்டனின் பக்கத்து வீட்டில் வசித்துவரும் பால நடேசன் என்பவர் வீட்டை உடைத்து லேப்டாப்பை திருடி சென்றிருப்பது தெரிய வந்தது .அடுத்தடுத்து நடந்த இரண்டு கொள்ளை சம்பவத்திலும் ஒரே கொள்ளை கும்பல் ஈடுபட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    இதையடுத்து கை ரேகை நிபுணர்கள் வரவ ழைக்கப்பட்டு அங்கு பதி வாகி இருந்த கைரேகை பதிவு செய்தனர். அப் போது கைரேகைகள் சில சிக்கி உள்ளது. அந்த கைரேகைகளை பழைய கொள்ளையர்களின் கைரே கைடன் ஒப்பிட்டு பார்த்து வருகிறார்கள். மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது.

    இது குறித்து ஆசாரிப் பள்ளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.இருவரும் வீட்டில் இல்லாததை நோட்டமிட்டு கொள்ளையர்கள் கை வரிசை காட்டியுள்ளனர்.

    எனவே இந்த கொள்ளை சம்பவத்தில் உள்ளூர் கொள்ளை கும்பலுக்கு தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தே கிக்கிறார்கள். இது தொடர் பாக தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    • வடலூரில் மோட்டார் சைக்கிள் கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டனர்.
    • சந்தேகப்படும் படி நின்றுக் கொண்டிருந்த, கலைவாணணை வளைத்துபிடித்தனர்.

    கடலூர்:

    நெய்வேலி பெரியாக்குறிச்சியை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 41)சேராக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் (26). வடலூர் பகுதியை சேர்ந்தவர் முருகன் (60). இவர்களது மோட்டார் சைக்கிள்கள் வெவ்வேறு இடங்களில் திருட்டு போனது. இதுகுறித்து புகாரி ன்பேரில் வடலூர் போலிசார் வழக்குபதிவு செய்து தீவிர புலன்விசாரணை மேற்கொண்டுவந்தனர். வடலூர் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் தீவிர ரோந்துபணியில் வடலூர் அய்யன்ஏரி அருகே ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும் படி நின்றுக் கொண்டிருந்த, கலைவாணணை வளைத்துபிடித்தனர்,

    கலைவாணன் கொடுத்த தகவலின்பே ரில்மற்றவர்களை பிடித்துவிசாரித்தபோது பெரியாக்குறிச்சி புதுநகர் கலைவாணன் (21)சிதம்பரம் மணலூர் விகேஆர் நகர் சிரஞ்சீவி(20),கிளியனூர்பிரகாஷ்ஆகியோர் என தெரிய வந்தது. இவர்கள் மோட்டார் சைக்கிள் கொள்ளையர்கள் ஆவர். இவர்களில் கலைவாணன், சிரஞ்சீவி ஆகிய 2 பேர் கைதுசெய்து வழக்குபதிவு செய்தனர். மேலும் தப்பி ஓடிய கிளியனூர் பிரகாசை போலீசார்தேடி வருகின்றனர். 

    • வாகன சோதனையில் சிக்கிய வழிப்பறி கொள்ளையர்கள் போலி பதிவு எண் வாகனத்தை ஓட்டி சென்றபோது பிடிபட்டனர்.
    • இதுதொடர்பாக போலீசார் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை

    மதுரை மாநகர போக்கு வரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தாஜுதீன் நேற்று நள்ளிரவு காளவாசல் பகுதியில் வாகன சோதனை நடத்தினார். அப்போது அந்த வழியாக ஒரு மோட்டார்சைக்கிள் வந்தது. அதில் 2 வாலிபர்கள் இருந்தனர். மோட்டார் சைக்கிளை நிறுத்தும்படி போலீசார் சைகை செய்தனர்.

    ஆனால் அந்த வாலிபர்கள் மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் சென்றனர். இதனால் சந்தே கம் அடைந்த போலீசார் விரட்டிச் சென்று 2 பேரை யும் சுற்றி வளைத்து பிடித்த னர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணை யில் அவர்கள் மதுைர ஜெய்ஹிந்துபுரத்தை சேர்ந்த சஞ்சய், கோவையை சேர்ந்த கவுரிசங்கர் என்பதும், அவர்கள் வந்த வாகனத்தின் பதிவு எண் போலியானது என்பதும் தெரியவந்தது.

    மேலும் பிடிபட்ட 2 பேரும் பல இடங்களில் செயின் பறிப்பு, கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளது உறுதியாகி உள்ளது. இதுதொடர்பாக போலீசார் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மருமகன் பெரிய செவலையை சேர்ந்த சுகனேஷ் கடந்த 18-ந் தேதி திடீர் என இறந்தார்.
    • போலீசார் வழக்குபதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

    கடலூர்:

    கடலூர் புதுநகர் போலீஸ் சரகம் கோண்டூர் கல்லூரி ஆசிரியர்நகரை சேர்ந்தவர் சீதாராமன். (வயது 60). இவர் வெளிநாட்டில் வேலைபார்த்து வருகிறார்கள். தற்போது ஊருக்கு திரும்பி உள்ளார். இவரது மருமகன் பெரிய செவலையை சேர்ந்த சுகனேஷ். இவர் கடந்த 18-ந் தேதி திடீர் என இறந்தார். இந்த இறப்பு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கான சீதாராமன் தனது குடும்பத்தினருடன் பெரியசெவலை சென்றார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய மர்மநபர்கள் ஜன்னலை உடைத்து உள்ளே புகுந்தனர்.

    பின்னர் பீரோவை உடைத்து அதில் இருந்த நகை-வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்றனர். நேற்று சீதாராமன் ஊருக்கு திரும்பினார். அப்போது வீட்டுக்கதவு திறந்து கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்ற பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு இருந்தது. அதில் இருந்த 19 பவுன் நகை, மற்றும் வெள்ளி பொருட்கள் கொள்ளை போனது கண்டு சீதாராமன் திடுக்கிட்டார். இதுகுறித்து சீதாராமன் புதுநகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குபதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

    • சின்னசேலம் அருகே கணவன் கண்முன் பெண்ணிடம் தாலியை கொள்ளையர்கள் பறித்து சென்றனர்.
    • அதிர்ச்சி அடைந்த செல்வகுமாரும் மகாலட்சுமியும் சத்தம் போட்டு அவர்களை பிடிக்க முயற்சி செய்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் வட்டம் கூகையூர் கிராமத்தை சேர்ந்தவர் மகாலட்சுமி (வயது 35). இவர் சம்பவத்தன்று தனது கணவர் செல்வகுமாரிடம் வீட்டு வாசல் முன்பு பேசிக்கொண்டிருந்தனர். அப்பொழுது மர்ம நபர்கள் 4 பேர் மகாலட்சுமியின் பின்புறமாக அவருக்கு தெரியாமல் வந்தனர். கண் இமைக்கும் நேரத்தில் மகாலட்சுமியின் கழுத்தில் இருந்த 7 பவுன் தாலி சங்கிலியை பறித்துக் கொண்டு ஓடி தப்பி சென்றனர். அதிர்ச்சி அடைந்த செல்வகுமாரும் மகாலட்சுமியும் சத்தம் போட்டு அவர்களை பிடிக்க முயற்சி செய்தனர். ஆனாலும் அவர் கையில் சிக்காமல் தப்பி ஓடி விட்டார்கள். இது குறித்து கீழ்குப்பம் போலீஸ் நிலையத்தில் மகாலட்சுமி கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கை பதிவு செய்து 7 பவுன் தாலி சங்கிலியை பறித்துக் சென்ற4 பேரையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

    • திருநள்ளாறு ரிங்க் ரோட்டில், சந்தேகத்துக்கு இடமாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை நிறுத்தி விசாரித்தனர்.
    • சுமார் ஒரு லட்சம் மதிப்புள்ள மின் மோட்டாரையும், திருட்டுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் போலீசார் கைப்பற்றினர்.

    புதுச்சேரி :

    காரைக்கால் அருகே திருநள்ளாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் அறிவுச்செல்வன் தலைமையில் போலீசார், ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது திருநள்ளாறு ரிங்க் ரோட்டில், சந்தேகத்துக்கு இடமாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை நிறுத்தி விசாரித்தனர். விசாணையில் அவர்கள் கையில் வயலுக்கு நீர் பாய்ச்ச கூடிய, நீர் மூழ்கி மின் மோட்டார் குறித்து முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியதால், போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணையின் முடிவில், திருநள்ளாறு அருகே பாய்ச்ச வைத்திருந்த நீர்மூழ்கி மோட்டரை திருடியது தெரியவந்தது. தொடர்ந்து திருட்டில் ஈடுபட்ட திருநள்ளாறு சுப்ராயபுரம், காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த நேதாஜி(வயது29) மற்றும் அதே பகுதியை சேர்ந்த பவித்ரன்(28) ஆகிய 2 பேரை கைது செய்த போலீசார், அவர்கள் வைத்திருந்த சுமார் ஒரு லட்சம் மதிப்புள்ள மின் மோட்டாரையும், திருட்டுக்கு பயன்படுத்திய மோட்டார் சைக்கிளையும் போலீசார் கைப்பற்றினர்.

    ×