வடலூரில் அதிரடி மோட்டார் சைக்கிள் கொள்ளையர்கள் கைது

வடலூரில் மோட்டார் சைக்கிள் கொள்ளையர்கள் கைது செய்யப்பட்டனர்.சந்தேகப்படும் படி நின்றுக் கொண்டிருந்த, கலைவாணணை வளைத்துபிடித்தனர்.
வடலூரில் அதிரடி மோட்டார் சைக்கிள் கொள்ளையர்கள் கைது
Published on

கடலூர்:

நெய்வேலி பெரியாக்குறிச்சியை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 41)சேராக்குப்பம் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் (26). வடலூர் பகுதியை சேர்ந்தவர் முருகன் (60). இவர்களது மோட்டார் சைக்கிள்கள் வெவ்வேறு இடங்களில் திருட்டு போனது. இதுகுறித்து புகாரி ன்பேரில் வடலூர் போலிசார் வழக்குபதிவு செய்து தீவிர புலன்விசாரணை மேற்கொண்டுவந்தனர். வடலூர் போலீஸ் சப் -இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் தீவிர ரோந்துபணியில் வடலூர் அய்யன்ஏரி அருகே ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும் படி நின்றுக் கொண்டிருந்த, கலைவாணணை வளைத்துபிடித்தனர்,

கலைவாணன் கொடுத்த தகவலின்பே ரில்மற்றவர்களை பிடித்துவிசாரித்தபோது பெரியாக்குறிச்சி புதுநகர் கலைவாணன் (21)சிதம்பரம் மணலூர் விகேஆர் நகர் சிரஞ்சீவி(20),கிளியனூர்பிரகாஷ்ஆகியோர் என தெரிய வந்தது. இவர்கள் மோட்டார் சைக்கிள் கொள்ளையர்கள் ஆவர். இவர்களில் கலைவாணன், சிரஞ்சீவி ஆகிய 2 பேர் கைதுசெய்து வழக்குபதிவு செய்தனர். மேலும் தப்பி ஓடிய கிளியனூர் பிரகாசை போலீசார்தேடி வருகின்றனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com