search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆசாரிபள்ளத்தில் அடுத்தடுத்து 2 வீடுகளில் திருட்டு கொள்ளையர்கள் கைரேகைகள் சிக்கியது
    X

    ஆசாரிபள்ளத்தில் அடுத்தடுத்து 2 வீடுகளில் திருட்டு கொள்ளையர்கள் கைரேகைகள் சிக்கியது

    • பீரோவில் இருந்த ஒரு கிராம் நகை செல்போன் திருடப்பட்டு இருந்தது.
    • கை ரேகை நிபுணர்கள் வரவ ழைக்கப்பட்டு அங்கு பதி வாகி இருந்த கைரேகை பதிவு செய்தனர். அப் போது கைரேகைகள் சில சிக்கி உள்ளது

    நாகர்கோவில் :

    நாகர்கோவில் அனந்தன் பாலம் சானல் கரை வசந்தம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் பாபு குட்டன் (வயது 41). இவர் வடசேரி பகுதியில் அழகு நிலையம் நடத்தி வருகிறார்.

    இவர் குடும்பத்தோடு தக்கலையில் உள்ள தனது தாயார் வீட்டுக்கு சென்றி ருந்தார். நேற்று காலை வீட்டிற்கு வந்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. பாபு குட்டன் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் உள்ள பொருட்கள் சிதறி கிடந்தது. பீரோவில் இருந்த ஒரு கிராம் நகை செல்போன் திருடப்பட்டு இருந்தது.

    இது குறித்து ஆசாரி பள்ளம் போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி னார்கள். அப்போது பாபுகுட்டனின் பக்கத்து வீட்டில் வசித்துவரும் பால நடேசன் என்பவர் வீட்டை உடைத்து லேப்டாப்பை திருடி சென்றிருப்பது தெரிய வந்தது .அடுத்தடுத்து நடந்த இரண்டு கொள்ளை சம்பவத்திலும் ஒரே கொள்ளை கும்பல் ஈடுபட்டு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    இதையடுத்து கை ரேகை நிபுணர்கள் வரவ ழைக்கப்பட்டு அங்கு பதி வாகி இருந்த கைரேகை பதிவு செய்தனர். அப் போது கைரேகைகள் சில சிக்கி உள்ளது. அந்த கைரேகைகளை பழைய கொள்ளையர்களின் கைரே கைடன் ஒப்பிட்டு பார்த்து வருகிறார்கள். மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டது.

    இது குறித்து ஆசாரிப் பள்ளம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவின் காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.இருவரும் வீட்டில் இல்லாததை நோட்டமிட்டு கொள்ளையர்கள் கை வரிசை காட்டியுள்ளனர்.

    எனவே இந்த கொள்ளை சம்பவத்தில் உள்ளூர் கொள்ளை கும்பலுக்கு தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தே கிக்கிறார்கள். இது தொடர் பாக தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

    Next Story
    ×