search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உலக கோப்பை கிரிக்கெட் 2019"

    இங்கிலாந்தில் நடைபெற இருக்கும் 50 ஓவர் உலகக்கோப்பைக்கான வங்காளதேச அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. #WorldCup2019
    10 அணிகள் பங்கேற்கும் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் அடுத்த மாதம் 30-ந்தேதி தொடங்குகிறது. வரும் 23-ந்தேதிக்குள் அனைத்து அணிகளும் 15 பேர் கொண்ட வீரர்கள் பட்டியலை அறிவிக்க வேண்டும் என ஐசிசி தெரிவித்திருந்தது.

    ஒவ்வொரு அணிகளும் தங்களது வீரர்கள் பட்டியலை அறிவித்து வருகிறது. இந்நிலையில் வங்காள தேச அணி இன்று 15 பேர் கொண்ட பட்டியலை அறிவித்துள்ளது. மோர்தசா கேப்டனாகவும், ஷாகிப் அல் ஹசன் துணைக் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    வங்காள தேச அணி விவரம்:-

    1. மோர்தசா, 2. தமிம் இக்பால், 3. லிட்டோன் தாஸ், 4. சவுமியா சர்கார், 5. முஷ்பிகுர், 6. மெஹ்முதுல்லா, 7. ஷாகிப் அல் ஹசன், 8. மிதுன், 9. சபீர் ரஹ்மான், 10. மொசாடெக், 11. சாய்புதீன், 12. மெஹிதி, 13. ருபேல் ஹொசைன், 14. முஷ்டாபிஜூர் ரஹ்மான், 15. அபு ஜயேத்.
    நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வாக்காளர்களுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். #Parthiban #Election2019
    நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் ’பணம் வாங்கிக் கொண்டு வாக்களிக்க வேண்டாம்’ என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். 

    இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், கூறி இருப்பதாவது:-

    ‘மாம்பழமோ? மாபெரும் பழமோ? பழம் தின்று கொட்டை போட்ட அரசியல் வாதிகளுக்கு, தேர்தல் என்பது தேத்துதல் (பணம்). வஞ்சரத்தை வாங்கிக்கொண்டு நெத்திலியை உங்களுக்கு வீசுகிறார்கள். அதுகூட திமிங்கல வேட்டைக்கே. காசு வாங்காமல் ஓட்டு போடுவோம் மேலிடத்தில் ரூபா வாங்காத கட்சிக்கு...



    ஓட்டைப் போடாதீர்கள் ஓட்டைப் போடாதீர்கள் வல்லரசாகப் போகும் இந்தியாவின் கூகுள் வரை படத்தில் ஓட்டைப் போடாதீர்கள் தேர்தல் வந்துடுச்சி துட்டுக்கு ஓட்டைப்போட்டு நம் பிள்ளைகளின் ஆரோக்கிய வாழ்வில் (ஸ்கேன் ரிப்போர்ட்டில்) ஓட்டைப் போடாதீர்கள்’

    இவ்வாறு பார்த்திபன் தெரிவித்துள்ளார்.
    12-வது உலகக் கோப்பை போட்டியில் விளையாட இருக்கும் மகேந்திர சிங் டோனிக்கு இது 4-வது உலக கோப்பை ஆகும். #CWC2019 #MSDhoni #WolrdCup2019
    டோனிக்கு இது 4-வது உலக கோப்பை ஆகும். இதன் முன்பு 2007, 2011, 2015 ஆகிய போட்டிகளில் ஆடி வருகிறார். இதில் 2011-ம் ஆண்டு அவர் உலக கோப்பையை பெற்றுக் கொடுத்து இருக்கிறார்.

    விராட்கோலி 3-வது முறையாக உலக கோப்பையில் ஆடுகிறார். அவர் 2011, 2015 போட்டிகளில் ஆடி இருக்கிறார்.

    ரோகித் சர்மா, தவான், ஜடேஜா, முகமது ‌ஷமி, புவனேஷ்வர் குமார் (2015) மற்றும் தினேஷ் கார்த்திக் (2007) ஆகியோருக்கு இது 2-வது உலக கோப்பையாகும்.

    ஹர்திக் பாண்டியா, லேகேஷ் ராகுல், கேதர் ஜாதவ், விஜய் சங்கர், பும்ரா, யசுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ் ஆகியோர் உலக கோப்பையில் முதல் முறையாக ஆடுகிறார்கள்.

    தினேஷ் கார்த்திக் 2007 உலக கோப்பை அணியில் இடம் பெற்று ஒரு ஆட்டம் கூட விளையாடவில்லை. #CWC2019 #MSDhoni #WolrdCup2019
    சொந்த மண்ணில் பஞ்சாப்பிடம் தோற்றதற்கு இன்று பதிலடி கொடுத்து 3-வது வெற்றியை ராஜஸ்தான் பெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. #KXIPvsRR
    மொகாலி:

    ஐ.பி.எல். போட்டியின் 32-வது ‘லீக்’ ஆட்டம் மொகாலியில் இன்று இரவு 8 மணிக்கு நடக்கிறது.

    இதில் அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப்- ரகானே தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.

    பஞ்சாப் அணி 4 வெற்றி, 4 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று 5-வது இடத்தில் உள்ளது.

    அந்த அணி ராஜஸ்தான் (14 ரன்), மும்பை (8 விக்கெட்), டெல்லி (14 ரன்), ஐதராபாத் (6 விக்கெட்) ஆகியவற்றை வீழ்த்தி இருந்தது. கொல்கத்தா (28 ரன்), சென்னை (22 ரன்), மும்பை (3 விக்கெட்), பெங்களூர் (8 விக்கெட்) ஆகிய அணிகளிடம் தோற்று இருந்தது.

    ராஜஸ்தானை ஏற்கனவே வீழ்த்தி இருந்ததால் பஞ்சாப் நம்பிக்கையுடன் ஆடும். அந்த அணியை மீண்டும் வீழ்த்தி 5-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது.

    கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் பேட்டிங்கில் லோகேஷ் ராகுல் (335 ரன்), கிறிஸ் கெய்ல் (322 ரன்), அகர்வால் (199 ரன்) ஆகியோர் அதிரடியாக ஆடி வருகிறார்கள்.

    பந்துவீச்சில் முகமது ‌ஷமி (10 விக்கெட்), கேப்டன் அஸ்வின் (9 விக்கெட்), சாம் குர்ராண் (7 விக்கெட்) ஆகியோர் நல்ல நிலையில் உள்ளனர்.

    ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 2 வெற்றி, 5 தோல்வியுடன் 4 புள்ளிகள் பெற்று 7-வது இடத்தில் உள்ளது.

    அந்த அணி மும்பை (4 விக்கெட்), பெங்களூர் (7 விக்கெட்) ஆகியவற்றை மட்டுமே வீழ்த்தியுள்ளது. சென்னை சூப்பர் கிங்சிடம் 2 முறையும் (8 ரன், 4 விக்கெட்) தோற்றது. இதேபோல ஐதராபாத் (5 விக்கெட்), கொல்கத்தா (8 விக்கெட்) அணிகளிடமும் தோற்று இருந்தது.

    சொந்த மண்ணில் பஞ்சாப்பிடம் 14 ரன்னில் தோற்றதற்கு இன்று பதிலடி கொடுத்து 3-வது வெற்றியை பெறும் வேட்கையில் ராஜஸ்தான் உள்ளது.

    ராஜஸ்தான் அணியில் பட்லர் (268 ரன்), ஸ்டீவ் சுமித் (186 ரன்), கேப்டன் ரகானே (175 ரன்) போன்ற சிறந்த பேட்ஸ்மேன்களும், ஷிரேயாஸ் கோபால் (8 விக்கெட்), ஆர்ச்சர் (7 விக்கெட்), பென் ஸ்டோக்ஸ் (6 விக்கெட்) போன்ற சிறந்த பவுலர்களும் உள்ளனர்.

    இரு அணிகளும் ஜெய்ப்பூரில் மோதிய ஆட்டத்தில் ‘மன்கட்’ அவுட் ஆனது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது. பட்லரை அஸ்வின் செய்த இந்த ரன் அவுட் விவகாரம் இன்றைய ஆட்டத்தில் எதிரொலிக்கும். இதற்கு தங்களது அபாரமான ஆட்டம் மூலம் ராஜஸ்தான் பதிலடி கொடுக்குமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். #KXIPvsRR
    உலக கோப்பையில் விளையாடும் இந்திய அணியில் ரிஷப் பந்தை தேர்வு குழுவினர் நிராகரித்தது சரியானதுதானா? என்ற கேள்வி எழுந்துள்ளது. #DineshKarthik #RishabhPant #CWC2019
    12-வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டி மே 30-ந்தேதி முதல் ஜூலை 14-ந் தேதி வரை இங்கிலாந்தில் நடக்கிறது.

    உலக கோப்பை போட்டிக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியை எம்.எஸ்.கே.பிரசாத் தலைமையிலான தேர்வு குழு நேற்று அறிவித்தது.

    தமிழகத்தை சேர்ந்த 33 வயதான தினேஷ் கார்த்திக், 28 வயதான விஜய் சங்கர் ஆகியோர் அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    தினேஷ் கார்த்திக் 2-வது முறையாக உலக கோப்பை அணியில் இடம் பெற்றுள்ளார். இதற்கு முன்பு 2007 போட்டியில் ஆடினார். வெஸ்ட் இண்டீசில் நடந்த இந்த உலக கோப்பையில் இந்தியா முதல் சுற்றிலேயே வெளியேறியது. விஜய்சங்கர் உலக கோப்பையில் அறிமுகமாகிறார்.

    இந்திய அணியின் முதன்மை விக்கெட் கீப்பராக டோனி இருக்கிறார். 2-வது விக்கெட் கீப்பராக யார் தேர்வு செய்யப்படுவார் என்பதில் இளம் வீரரான ரி‌ஷப் பந்த், அனுபவம் வாய்ந்த தினேஷ் கார்த்திக் இடையே கடும் போட்டி நிலவியது.

    அதிரடி பேட்ஸ்மேனான ரி‌ஷப் பந்த் தேர்வு செய்யப்படுவார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தேர்வு குழுவினர் அவரை நிராகரித்துவிட்டு தினேஷ் கார்த்திகை தேர்வு செய்தனர்.

    உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் இருந்து ரி‌ஷப் பந்தை புறக்கணித்த தேர்வு குழுவின் முடிவு தவறானவை என்ற எண்ணம் எதிரொலிக்கிறது.

    ரி‌ஷப் பந்தை தேர்வு செய்யாதது தனக்கு மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியதாக முன்னாள் கேப்டனும், கிரிக்கெட் வல்லவருமான கவாஸ்கர் தெரிவித்து உள்ளார்.

    பெரும்பாலான தேர்வு குழுவினர் ரிஷப் பந்தை சேர்ப்பதாகவே இருந்தனர். உலக கோப்பை போட்டி மிகப்பெரியது என்பதால் திறமைக்கு பதிலாக அனுபவத்துக்கு அணி நிர்வாகம் முன்னுரிமை கொடுத்தது. தினேஷ் கார்த்திகை தேர்வு செய்தது. 90 நிமிடம் நடந்த விவாதத்துக்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டது.

    இந்தியாவின் 4-வது வரிசை இன்னும் நிரப்பப்படாமல் இருக்கிறது. இந்த வரிசைக்கு ரி‌ஷப் பந்தை அனுப்பி இடத்தை நிரப்புவார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. தேர்வு குழுவினர் இதை செய்ய தவறிவிட்டனர்.

    இங்கிலாந்து போன்ற ஆடுகளத்தில் ரி‌ஷப் பந்த் போன்ற அதிரடி பேட்ஸ்மேன்கள் கண்டிப்பாக தேவை. 2-வது விக்கெட் கீப்பர் என்ற முறையில் இல்லாமல் அவரை 4-வது வரிசைக்கு தேர்வு செய்து இருக்கலாம்.

    ஏனென்றால் ரிசப் பந்த் விக்கெட் கீப்பிங்கில் இன்னும் முதிரிச்சி அடையவில்லை. ஒரு பேட்ஸ்மேனாக அவரை தேர்வு செய்வது அவசியமானது.

    எதிர்கால இந்திய அணிக்கு அவரை போன்ற அதிரடி பேட்ஸ்மேன் தேவை. இதனால் தேர்வு குழுவினர் அவரை நிராகரித்த முடிவு சரியானதுதானா? என்ற கேள்வி எழுகிறது.

    தினேஷ் கார்த்திகை பொறுத்தவரை 20 ஓவர் போட்டியில்தான் நன்றாக ஆடி வருகிறார். இதனால் உலக கோப்பை அணியில் அவரது தேர்வு பல்வேறு ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. ‘டெத் ஓவர்’ என்று அழைக்கப்படும் ஆட்டத்தின் இறுதி கட்டத்தில் விளையாடுவதில் ரி‌ஷப் பந்த் கெட்டிக்காரர். இளம் வீரராக கருதப்படும் அவருக்கு அணி நிர்வாகம் முன்னுரிமை கொடுத்து தேர்வு செய்து இருக்கலாம்.

    தேர்வு குழுவின் இந்த முடிவானது கிரிக்கெட் ரசிகர்களிடையே மிகந்த ஏமாற்றம் அடைந்தனர். #DineshKarthik #RishabhPant
    உலக கோப்பை போட்டியில் 4-வது வரிசையில் விளையாடக்கூடிய திறமை தன்னிடம் இருப்பதாக தமிழக வீரர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். #dineshkarthik
    உலக கோப்பை அணிக்கு தேர்வாகி இருப்பது குறித்து தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் கூறியதாவது:-

    உலக கோப்பை மிகப்பெரிய போட்டி. இதற்கான அணியில் இடம் பெறுவதை ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தேன். உலக கோப்பைக்கு தேர்வு செய்யப்பட்டது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.

    அனைத்து போட்டிகளிலும் டோனிதான் விக்கெட் கீப்பராக இருப்பார். புகைப்படத்தில் மட்டுமே எனது படம் வரும். அவர் காயம் அடைந்தால் வாய்ப்பு வரும். சிறந்த பேட்ஸ்மேனாக வாய்ப்பு அளிக்கப்படும். 4-வது வரிசையில் விளையாடக்கூடிய திறமை என்னிடம் இருக்கிறது. பின்வரிசையில் ஆடினாலும் என்னால் ஆட்டத்தை நிறைவு செய்ய முடியும்.



    உலக கோப்பை போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள அணி திறமை வாய்ந்தது. நாங்கள் சிறப்பாக ஆடுவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    உலக கோப்பை அணிக்கு தேர்வாகி இருப்பதன் மூலம் எங்களது கனவு நனவாகி இருக்கிறது என்று மற்றொரு தமிழக வீரர் விஜய் சங்கர் கூறி உள்ளார். #dineshkarthik
    ஐ.பி.எல். போட்டியில் நேற்று நடந்த இரண்டு ஆட்டங்களில் தென்ஆப்பிரிக்க பந்து வீச்சாளர்கள் அதிகமாக ஆதிக்கம் செலுத்தினர். #IPL2019
    ஐ.பி.எல். போட்டியில் நேற்று தென்ஆப்பிரிக்க பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தினர்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடும் சுழற்பந்து வீரர் இம்ரான் தாகீர் 4 விக்கெட் வீழ்த்தினார். டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் விளையாடும் ரபடா 4 விக்கெட்டும், கிறிஸ் மொரிஸ் 3 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    டெல்லி அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் ஐதராபாத் 39 ரன் வித்தியாசத்தில் தோற்றது. 156 ரன் இலக்கை எடுக்க முடியாமல் 116 ரன்னில் சுருண்டது. ஐதராபாத் அணியின் கடைசி 8 விக்கெட்டுகள் 15 ரன்னில் சுருண்டதால் பாதிப்பு ஏற்பட்டது. #IPL2019
    கொல்கத்தா அணிக்கெதிரான ஆட்டத்தில் சிறப்பான பந்து வீச்சுக்கு கேப்டன் டோனியின் அறிவுரையே காரணம் என இம்ராம் தாகீர் தெரிவித்துள்ளார். #KKRvsCSK #IPL2019
    கொல்கத்தா:

    ஐ.பி.எல். போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ்சின் அதிரடி நீடிக்கிறது. அந்த அணி கொல்கத்தாவை மீண்டும் வீழ்த்தியது.

    ஈடன்கார்டன் மைதானத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் ஆடிய கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 161 ரன் எடுத்தது.

    தொடக்க வீரர் கிறிஸ் லின் 51 பந்தில் 82 ரன் எடுத்தார். இதில் 7 பவுண்டரியும், 6 சிக்சர்களும் அடங்கும். அவரது அதிரடியை பின்கள வீரர்கள் சரியாக பயன்படுத்திக் கொள்ளவில்லை. இம்ரான்தாகீர் 27 ரன் கொடுத்து 4 விக்கெட் வீழ்த்தினார். ‌ஷர்துல் தாகூர் 2 விக்கெட்டும், சாட்னர் 1 விக்கெட்டும் எடுத்தனர்.

    பின்னர் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் 2 பந்து எஞ்சி இருந்த நிலையில் 162 ரன் இலக்கை எடுத்தது. 19.4 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 162 ரன் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    ரெய்னா 42 பந்தில் 58 ரன்னும், (7 பவுண்டரி, 1 சிக்சர்), ஜடேஜா 17 பந்தில் 31 ரன்னும் (5பவுண்டரி), எடுத்தனர். சுனில் நரேன், பியூஸ்சாவ்லா தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.

    சென்னை அணி பெற்ற 7-வது வெற்றியாகும். தொடர்ச்சியாக 4-வது வெற்றியை பெற்றது.

    ஆட்ட நாயகன் விருது பெற்ற இம்ரான்தாகீர் கூறியதாவது:-

    கேப்டன் டோனியின் அறிவுரைப்படிதான் நான் பந்து வீசினேன். அவரது ஆலோசனை எப்போதுமே பலனை அளிக்கும். அவர் எனக்கு மிகவும் உதவியாக இருந்தார். இது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. நான் விக்கெட்டுகளை வீழ்த்துவதற்கான பாராட்டு எல்லாம் அவரைதான் சாரும்.

    எப்படி பந்து வீச வேண்டும் என்பது பற்றி ஆலோசனை வழங்குவார். கேப்டனின் அறிவுரையை நான் அப்படியே பின் பற்றினேன்.

    நான் பணியை நேசித்து செய்கிறேன். நாங்கள் சிறந்த கிரிக்கெட்டை உருவாக்கி வருகிறோம்.

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றிக்கு ஒருவர் மீது மற்றவர் மதிப்பதே காரணம். எனது விருப்பத்துக்கு ஏற்றவாறு செயல்களை கேப்டன் அனுமதிக்கிறார்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    பாகிஸ்தானை சேர்ந்த தென் ஆப்பிரிக்காவில் வசிக்கும் கழற்பந்து வீரரான இம்ரான் தாகீர் 40 வயதிலும் சிறப்பாக பந்து வீசி வருகிறார். நேற்று 4 விக்கெட் கைப்பற்றியதன் மூலம் அவர் 13 விக்கெட்டை தொட்டு 2-வது இடத்துக்கு முன்னேறி இருக்கிறார்.

    மற்றொரு தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீரர் ரபடா (டெல்லிகேப்டல்ஸ்), 17 விக்கெட் கைப்பற்றி முதல் இடத்தில் உள்ளார்.

    சூப்பர் கிங்ஸ் அணி 9-வது ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத்தை வருகிற 17-ந்தேதி சந்திக்கிறது.

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 2-வது முறையாக சென்னையிடம் வீழ்ந்தது. ஒட்டு மொத்தத்தில் 4-வது தோல்வி ஏற்பட்டது. அந்த அணி அடுத்த ஆட்டத்தில் பெங்களூரை வருகிற 19-ந்தேதி எதிர்கொள்கிறது. #KKRvsCSK
    வான்கடே மைதானத்தில் இன்று நடக்கவுள்ள ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதுகின்றனர். #MIvsRCB #IPL2019
    மும்பை:

    ஐ.பி.எல். போட்டியின் 31-வது ‘லீக்’ ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு நடக்கிறது.

    இதில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் - விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன.

    மும்பை அணி 4 வெற்றி, 3 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்றுள்ளது. அந்த அணி பெங்களூர் (6 ரன்), சென்னை (37 ரன்), ஐதராபாத் (40 ரன்), பஞ்சாப் (3 விக்கெட்) ஆகியவற்றை வென்று இருந்தது. டெல்லி (37 ரன்), பஞ்சாப் (8 விக்கெட்), ராஜஸ்தான் (4 விக்கெட்) ஆகிய அணியிடம் தோற்றது.

    பெங்களூர் அணியை மீண்டும் வீழ்த்தி 5-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் மும்பை இந்தியன்ஸ் உள்ளது. அந்த அணியின் பேட்டிங்கில் குயின்டன் டி காக் (238 ரன்), பொல்லார்ட் (185 ரன்), கேப்டன் ரோகித்சர்மா, சூர்யகுமார் யாதவ் ஆகியோரும் பந்து வீச்சில் பும்ரா (8 விக்கெட்), அல்ஜாரி ஜோசப் (6 விக்கெட்) ஆகியோரும் நல்ல நிலையில் உள்ளனர். பாண்டியா சகோதரர்கள் ஆல்ரவுண்டு வரிசையில் ஜொலிக்க கூடியவர்கள்.

    பெங்களூர் அணி தொடர்ச்சியாக 6 ஆட்டங்களில் (சென்னை, மும்பை, ஐதராபாத், ராஜஸ்தான், கொல்கத்தா, டெல்லி) தோல்வியை சந்தித்தது. பஞ்சாப்பை வீழ்த்தி முதல் வெற்றியை பெற்றது. 1 வெற்றி, 6 தோல்வியுடன் 2 புள்ளிகள் பெற்று கடைசி இடத்தில் உள்ளது.

    சொந்த மண்ணில் மும்பையிடம் 6 ரன்னில் தோற்றதற்கு பழிதீர்த்து 2-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் பெங்களூர் அணி இருக்கிறது.

    சொந்த மண்ணில் அந்த அணி வெற்றி அருகே வந்து வாய்ப்பை இழந்தது. இந்த ஆட்டத்தின் போது நடுவரின் செயல் பெங்களூருக்கு பாதகமாக இருந்தது.

    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி முதல் வெற்றியை பெற கேப்டன் கோலி, டிவில்லியர்ஸ் ஆகியோர் முக்கிய பங்கு வகித்தனர். கோலி இரண்டு அரை சதத்துடன் 270 ரன்னும், டிவில்லியர்ஸ் 232 ரன்னும் (3 அரை சதம்) எடுத்துள்ளனர். பார்த்தீவ் பட்டேல் 191 ரன் எடுத்து உள்ளார்.

    சுழற்பந்து வீரர் யசுவேந்திர சஹாலை மட்டுமே அந்த அணி அதிகமாக நம்பி இருக்கிறது. அவர் 11 விக்கெட் கைப்பற்றி உள்ளார். ஸ்டோனிஸ் ஆல் ரவுண்டர் வரிசையில் கை கொடுக்க கூடியவர்.

    இரு அணிகளும் வெற்றிக்காக கடுமையாக போராடும் என்பதால் ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #IPL2019 #MIvsRCB
    உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய அணி மும்பையில் இன்று அறிவிக்கப்படுகிறது. #BCCI #WorldCup2019 #India
    மும்பை:

    12-வது உலக கோப்பை (50 ஓவர்) கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் மே 30-ந் தேதி முதல் ஜூலை 14-ந் தேதி வரை நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, போட்டியை நடத்தும் இங்கிலாந்து, இந்தியா, தென்ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், வங்காளதேசம், இலங்கை, ஆப்கானிஸ்தான், வெஸ்ட்இண்டீஸ் ஆகிய 10 நாடுகள் பங்கேற்கின்றன. இந்த போட்டிக்கான நியூசிலாந்து அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது.

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான அணிகளை அறிவிக்க வருகிற 23-ந் தேதி கடைசி நாளாகும். இந்த நிலையில் இந்திய கிரிக்கெட் வாரிய தேர்வு குழு கூட்டம் மும்பையில் இன்று பிற்பகல் நடக்கிறது. தேர்வு குழு தலைவர் எம்.எஸ்.கே. பிரசாத் தலைமையில் தேர்வாளர்கள் கூடி ஆலோசித்து அணியை தேர்வு செய்து அறிவிக்கிறார்கள். இந்த கூட்டத்தில் இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி, தலைமை பயிற்சியாளர் ரவிசாஸ்திரி ஆகியோரும் கலந்து கொள்கிறார்கள்.

    சமீபத்தில் நடந்த நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டி தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடித்து இருந்த வீரர்களே பெரும்பாலும் உலக கோப்பை அணியிலும் தொடருவார்கள் என்று நம்பப்படுகிறது. ஓரிரு இடத்துக்கு மட்டுமே புதிய வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கலாம்.

    2-வது விக்கெட் கீப்பர் இடத்துக்கு ரிஷாப் பான்ட், தினேஷ் கார்த்திக் போட்டியில் உள்ளனர். இதில் ரிஷாப் பான்டுக்கு அதிக வாய்ப்பு உள்ளது. லோகேஷ் ராகுல் 3-வது தொடக்க வீரராக இடம் பெறுவார் என்று தெரிகிறது. இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் விக்கெட் கீப்பர் பொறுப்பை கவனித்து வரும் லோகேஷ் ராகுல் 2-வது விக்கெட் கீப்பர் இடத்துக்கும் பரிசீலனை செய்யப்படக்கூடும் என்று சொல்லப்படுகிறது.

    4-வது வீரருக்கான வரிசையில் அம்பத்தி ராயுடு, ஆல்-ரவுண்டர் விஜய் சங்கர், ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் இடையே போட்டி நிலவும். 4-வது சிறப்பு வேகப்பந்து வீச்சாளரை தேர்வு செய்ய முடிவு செய்தால் உமேஷ் யாதவ், கலீல் அகமது, இஷாந்த் ஷர்மா ஆகியோரின் பெயர்கள் பரிசீலனைக்கு எடுத்து கொள்ளப்படும்.

    உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இந்திய உத்தேச அணி வருமாறு:-

    விராட்கோலி (கேப்டன்), ரோகித் சர்மா (துணை கேப்டன்), ஷிகர் தவான், லோகேஷ் ராகுல், டோனி (விக்கெட் கீப்பர்), கேதர் ஜாதவ், ஹர்திக் பாண்ட்யா, விஜய் சங்கர், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ்வர்குமார், முகமது ஷமி, ரவீந்திர ஜடேஜா.

    இதேபோல் உலக கோப்பை போட்டிக்கான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியும் இன்று அறிவிக்கப்படுகிறது.  #BCCI #WorldCup2019 #India
    பெங்களூர் அணி தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்து பஞ்சாப்புடன் முதல் வெற்றியை பெறுமா? என்று அந்த அணி ரசிகர்கள் ஆவலுடன் எதிர் நோக்குகிறார்கள். #IPL2019 #KXIPvRCB
    மும்பை:

    ஐ.பி.எல். போட்டியில் இன்று இரண்டு ஆட்டங்கள் நடக்கிறது. மாலை 4 மணிக்கு நடைபெறும் முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.

    இரவு 8 மணிக்கு மொகாலியில் நடைபெறும் ஆட்டத்தில் அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப்-விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன.

    பஞ்சாப் அணி 4 வெற்றி, 3 தோல்வியுடன் 8 புள்ளிகள் பெற்று 5-வது இடத்தில் இருக்கிறது. அந்த அணி ராஜஸ்தான், மும்பை, டெல்லி, ஐதராபாத்தை வென்றது. கொல்கத்தா, சென்னை, மும்பையிடம் தோற்று இருந்தது.

    சொந்த மண்ணில் அதிரடியாக விளையாடுவதால் அந்த அணி அதை நீட்டித்து 5-வது வெற்றியை பெறும் ஆர்வத்தில் உள்ளது. பஞ்சாப் அணியில் லோகேஷ் ராகுல், கெய்ல், அகர்வால், மில்லர், சாம் குர்ரான் போன்ற சிறந்த வீரர்கள் உள்ளனர்.

    பெங்களூர் அணி தான் மோதிய 6 ஆட்டங்களிலும் தோற்று புள்ளி எதுவும் பெறவில்லை. சென்னை (7 விக்கெட்), மும்பை (6 ரன்), ஐதராபாத் (118 ரன்), ராஜஸ்தான் (7 விக்கெட்), கொல்கத்தா (5 விக்கெட்), டெல்லி (4 விக்கெட்) ஆகியவற்றிடம் தோற்றது.

    பெங்களூர் அணி தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைத்து இன்றைய ஆட்டத்திலாவது முதல் வெற்றியை பெறுமா? என்று அந்த அணி ரசிகர்கள் ஆவலுடன் எதிர் நோக்குகிறார்கள்.

    தென் ஆப்பிரிக்க வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெய்ன் வருகை அந்த அணிக்கு பலம் சேர்க்கலாம். #IPL2019 #KXIPvRCB
    ஐபிஎல் போட்டியின்போது நடுவருடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி வாக்குவாதம் செய்தார். இந்த விவகாரம் குறித்து இந்திய முன்னாள் கிரிக்கெட் அணி தலைவர் சவுரவ் கங்குலி கருத்து தெரிவித்துள்ளார். #SouravGanguly #MSDhoni
    கொல்கத்தா:

    ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் கடந்த ஏப்ரல் 11ம் தேதி நடந்த 25-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ்-சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் 4 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது.

    போட்டியின் கடைசி ஓவரில் சென்னை அணியின் வெற்றிக்கு 18 ரன்கள் தேவைப்பட்டது. பென் ஸ்டோக்ஸ் அந்த ஓவரை வீசினார். பரபரப்பாக வீசப்பட்ட அந்த ஓவரில் ஒரு பந்து இடுப்புக்கு மேல் வீசப்பட்டது. இது நோ பாலாக முதலில் அறிவிக்கப்பட்டு பின்னர், இல்லை என அறிவிக்கப்பட்டது.



    இதை வெளியிலிருந்து பார்த்துக்கொண்டிருந்த டோனி, மைதானத்துக்குள் புகுந்து அந்த பந்தை நோ-பாலாக அறிவிக்கும்படி நடுவர்களுடன் வாக்குவாதம் செய்தார். ஆனால் அவரது கோரிக்கையை நடுவர்கள் ஏற்க மறுத்துவிட்டனர். பின்னர், டோனியை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி தலைவர் சவுரவ் கங்குலி கூறுகையில், ‘அனைவரும் மனிதர்கள் தான். அவர் போட்டியில் கூற வந்தது என்ன என்பதை கவனிக்க வேண்டும். அவரது போட்டி மனப்பான்மையை இந்த செயல் தெளிவுப்படுத்துகிறது’ என கூறினார்.

    ஆடுகளத்தில் நடுவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதாக டோனிக்கு, போட்டி சம்பளத்தில் 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.  #SouravGanguly #MSDhoni

    ×