search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "MSDhoni"

  • முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 229 ரன்கள் எடுத்தது.
  • 230 ரன்கள் வெற்றி இலக்குடன் இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது.

  உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகின்றன. இந்நிலையில், உத்தர பிரதேசத்தின் லக்னோவில் உலக கோப்பை தொடரின் 29-வது லீக் ஆட்டத்தில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதி வருகின்றன.

  டாஸ் வென்ற இங்கிலாந்து பவுலிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 229 ரன்கள் எடுத்தது.

  தொடர்ந்து, 230 ரன்கள் வெற்றி இலக்குடன் இங்கிலாந்து அணி விளையாடி வருகிறது.

  இந்நிலையில், பரபரப்பாக நடைபெற்று வரும் இந்த போட்டியை இந்திய கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி தனது மனைவி சாக்ஷியுடன் நேரில் கண்டு ரசித்து வருகிறார்.

  இதன் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

  • டோனி அடுத்தாண்டு ஐபிஎல் போட்டியில் விளையாட உள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது.
  • என்சிசி தொடர்பான ஆய்வு குழுவில் அவருடன் பணியாற்றினேன்.

  குஜராத் அணிக்கு எதிரான இறுதி போட்டியில் வென்று ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற சென்னை அணியையும் அதன் கேப்டன் டோனியையும் பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

  ஐபிஎல் போட்டி முடிந்த பிறகு அடுத்த சீசனிலும் விளையாடுவது குறித்து டோனி கூறியதாவது, மிகவும் உணர்வுப்பூவமான இறுதிப்போட்டியாக இந்த போட்டியை பார்க்கிறேன். எனது கண்கள் குளமாகின. என்னுடைய ஓய்வை அறிவிக்க இதுதான் சிறந்த தருணம். ஆனால், எல்லா இடங்களிலும் எனக்கு கிடைத்த அன்பு அளவு கடந்தது.

  இங்கிருந்து இத்துடன் கிளம்பி விடுவது எளிதானது. ஆனால் கடினமான விஷயம் என்னவென்றால், 9 மாதங்கள் கடினமாக உழைத்து மற்றொரு ஐபிஎல் விளையாட முயற்சிப்பது. ஓய்வு குறித்து யோசிக்க இன்னும் 8 முதல் 6 மாதம் இருக்கிறது. என்று கூறியிருந்தார்.

  இந்த நிலையில் டோனியின் முடிவு குறித்து டுவிட் செய்துள்ள தொழிலதிபர் ஆனந்த் மகிந்திரா, என்சிசி தொடர்பான ஆய்வு குழுவில் அவருடன் பணியாற்றினேன். ஆடுகளத்தில் எவ்வளவு தீவிரமாக செயலாற்றுகிறாரோ, அதே அளவுக்கு அவரிடம் அறிவார்ந்த சிந்தனையும் உள்ளது என உணர்ந்தேன். புதுமையான விஷங்களை செய்வதில் அவர் ஆர்வமாக இருந்தார். நிச்சயம் டோனி வருங்காலத்தில் ஒரு தலைவராக திகழ்வார்.

  டோனி அடுத்தாண்டு ஐபிஎல் போட்டியில் விளையாட உள்ளது மகிழ்ச்சி அளிப்பதாகவும், இருப்பினும் அவர் அரசியலுக்கு வர வேண்டும் என விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

  இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் டோனி, தனது ஓய்வுக்கு பின்னர் ஓவியராக விரும்புவதாக ரகசியத்தை உடைத்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
  இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான டோனி, ஓய்வுக்கு பின்னர் தான் என்ன செய்யப்போகிறார் என்ற ரகசியத்தை உடைத்திருக்கிறார். இது குறித்து வெளியிட்ட வீடியோவில் டோனி கூறியிருப்பதாவது:

  சிறு வயதில் இருந்தே எனக்கு ஒரு சிறந்த ஓவிய கலைஞர் ஆக வேண்டும் என்பது தான் ஆசை. நான் கிரிக்கெட் பயிற்சியில் கவனம் அதிகம் செலுத்தியபோதிலும், ஓவியம் தீட்டுவதை விடவில்லை. நான் வரைந்த சில ஓவியங்களை உங்களிடம் காட்ட விரும்புகிறேன்.

  நான் எனது முதல் ஓவிய கண்காட்சியை துவக்க பணிகள் மேற்கொண்டு வருகிறேன். இதற்கு சில காலம் ஆகும். அதற்கு முன் எனது ஓவியங்களை உங்களுக்கு காட்டுகிறேன். உங்களுக்கு பிடிக்கும் என நம்புகிறேன். நான் ஓவிய கலை துறைக்கு ஒரு வேண்டுகோள் விடுக்கிறேன்.

  எனது அனைத்து ஓவியங்களையும் பாருங்கள். அவற்றில் ஏதேனும் மாற்றம் தேவைப்பட்டால் என்னிடம் கூறுங்கள். அதனை ஏற்று, நான் செய்ய தயாராக இருக்கிறேன். நான் நடத்தவுள்ள ஓவிய கண்காட்சிக்கு அனைவரும் வர வேண்டும் என விரும்புகிறேன்.

  எனது இந்த வீடியோவை காண வந்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

  இவ்வாறு அவர் கூறினார்.

  அதன் பின்னர் ஒரு குறிப்பிட்ட ஓவியத்தை தனது விருப்ப ஓவியமாக காண்பித்தார். இதில் ஒரு சிறுவன் கைகளில் பந்து, பேட் ஆகியவற்றை வைத்து கொண்டு வெற்றி அடைந்த சந்தோஷத்தை வெளிப்படுத்துவது போல தீட்டியுள்ளார். மேலும் அச்சிறுவன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிறமான மஞ்சள் நிற ஆடை, தொப்பி ஆகியவை அணிந்திருப்பது குறிப்பிடத்தக்கது.  

  ஐபிஎல் போட்டியின்போது நடுவருடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி வாக்குவாதம் செய்தார். இந்த விவகாரம் குறித்து இந்திய முன்னாள் கிரிக்கெட் அணி தலைவர் சவுரவ் கங்குலி கருத்து தெரிவித்துள்ளார். #SouravGanguly #MSDhoni
  கொல்கத்தா:

  ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், ஜெய்ப்பூர் சவாய் மான்சிங் ஸ்டேடியத்தில் கடந்த ஏப்ரல் 11ம் தேதி நடந்த 25-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ்-சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் 4 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது.

  போட்டியின் கடைசி ஓவரில் சென்னை அணியின் வெற்றிக்கு 18 ரன்கள் தேவைப்பட்டது. பென் ஸ்டோக்ஸ் அந்த ஓவரை வீசினார். பரபரப்பாக வீசப்பட்ட அந்த ஓவரில் ஒரு பந்து இடுப்புக்கு மேல் வீசப்பட்டது. இது நோ பாலாக முதலில் அறிவிக்கப்பட்டு பின்னர், இல்லை என அறிவிக்கப்பட்டது.  இதை வெளியிலிருந்து பார்த்துக்கொண்டிருந்த டோனி, மைதானத்துக்குள் புகுந்து அந்த பந்தை நோ-பாலாக அறிவிக்கும்படி நடுவர்களுடன் வாக்குவாதம் செய்தார். ஆனால் அவரது கோரிக்கையை நடுவர்கள் ஏற்க மறுத்துவிட்டனர். பின்னர், டோனியை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

  இது குறித்து முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி தலைவர் சவுரவ் கங்குலி கூறுகையில், ‘அனைவரும் மனிதர்கள் தான். அவர் போட்டியில் கூற வந்தது என்ன என்பதை கவனிக்க வேண்டும். அவரது போட்டி மனப்பான்மையை இந்த செயல் தெளிவுப்படுத்துகிறது’ என கூறினார்.

  ஆடுகளத்தில் நடுவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், ஐபிஎல் நடத்தை விதிகளை மீறியதாக டோனிக்கு, போட்டி சம்பளத்தில் 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.  #SouravGanguly #MSDhoni

  ஐபிஎல் தொடரில் 200 சிக்சர்களை அடித்த இந்திய வீரர்களின் பட்டியலில் இடம்பெற போவது டோனியா, ரெய்னாவா அல்லது ரோகித் சர்மாவா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் ஏற்பட்டுள்ளது. #IPL2019 #200sixes #MSDhoni #SureshRaina #RohitSharma
  ஐபிஎல் தொடரின் 12-வது சீசன் வருகிற 23-ம் தேதி சென்னையில் தொடங்குகிறது. இன்னும் 9 நாட்கள் மட்டுமே இருப்பதால் ரசிகர்களிடம் ஐபிஎல் ஜுரம் தொற்றிக் கொண்டது. இதனால் ஐபிஎல் தொடர் குறித்த செய்திகள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன.

  இந்நிலையில், ஐபிஎல் தொடரில் 200 சிக்சர்களை நெருங்குவது யார் என்ற போட்டியில் எம்.எஸ். டோனி, சுரேஷ் ரெய்னா மற்றும் ரோகித் சர்மா உள்ளிட்ட இந்திய வீரர்கள் உள்ளனர்.

  இதுவரை நடந்துள்ள ஐபிஎல் போட்டிகளில் டோனி 186 சிக்சர்களும், சுரேஷ் ரெய்னா 185 சிக்சர்களும், ரோகித் சர்மா 184 சிக்சர்களும் அடித்துள்ளனர்.  இந்தாண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரில் சிக்சர்கள் அடித்து 200 சிக்சர்கள் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைக்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் கிளம்பியுள்ளது.

  ஐபிஎல் தொடரில் சிக்சர் மன்னன் கிறிஸ் கெய்ல் 292 சிக்சர்கள் அடித்து முதல் இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #IPL2019 #200sixes #MSDhoni #SureshRaina #RohitSharma
  ×