search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குலாம் நபி ஆசாத்"

    • குலாம் நபி ஆசாத் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார்.
    • காஷ்மீரில் விரைவில் புதிய கட்சியை தொடங்குகிறார்.

    புதுடெல்லி :

    காங்கிரஸ் மூத்த தலைவரான குலாம் நபி ஆசாத், நேற்று கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகினார். பின்னர் டெல்லியில் தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றுக்கு அவர் பேட்டி அளித்தார். அப்போது அவரது எதிர்கால திட்டம் குறித்து கேட்கப்பட்டது.

    அதற்கு அவர் பதில் அளிக்கையில், 'நான் விரைவில் காஷ்மீர் செல்ல இருக்கிறேன். அங்கு எனது ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்களை சந்தித்து ஆலோசனை நடத்துவேன். பின்னர் காஷ்மீரில் விரைவில் புதிய கட்சியை தொடங்குவேன். பா.ஜனதாவில் இணையமாட்டேன்' என்று தெரிவித்தார்.

    • காங்கிரஸ் கட்சியில் இருந்து குலாம் நபி ஆசாத் விலகி உள்ளார்.
    • குலாம் நபி ஆசாத்தின் மரபணுக்கள் மோடி சார்ந்ததாகி விட்டன.

    புதுடெல்லி :

    காங்கிரஸ் கட்சியில் இருந்து குலாம் நபி ஆசாத் விலகி இருப்பது குறித்து அந்தக் கட்சி கருத்து கூறி உள்ளது.

    இதுபற்றி அந்தக் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில், "காங்கிரஸ் தலைமையால் மிகுந்த மரியாதையுடன் நடத்தப்பட்டவர், தனது மோசமான தனிப்பட்ட தாக்குதல்களால் அதற்கு துரோகம் செய்துள்ளார். இது அவரது உண்மையான தன்மையை வெளிப்படுத்தி உள்ளது. குலாம் நபி ஆசாத்தின் மரபணுக்கள் மோடி சார்ந்ததாகி விட்டன " என தெரிவித்தார்.

    கட்சியின் செய்தி தொடர்பாளர் பவன் கெரா கருத்து தெரிவிக்கையில், " உங்கள் மாநிலங்களவை பதவி முடிவுக்கு வந்த உடனேயே நீங்கள் அமைதி இழந்து விட்டீர்கள். உங்களால் பதவியின்றி ஒரு வினாடி கூட இருக்க முடியாது" என சாடி உள்ளார்.

    • குலாம் நபி ஆசாத், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியுள்ளார்.
    • மூத்த தலைவர்கள் பலரும் காங்கிரசில் இருந்து ராஜினாமா செய்துள்ளனர்.

    ஸ்ரீநகர் :

    காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியான குலாம் நபி ஆசாத், காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியுள்ளார்.

    இதையடுத்து அங்கு மூத்த தலைவர்கள் பலரும் காங்கிரசில் இருந்து ராஜினாமா செய்துள்ளனர்.

    காங்கிரசில் இருந்து விலகியவர்களில் முன்னாள் மந்திரிகள் ஆர்.எஸ்.சிப், ஜி.எம்.சரூரி, மூத்த தலைவர்கள் சவுத்ரி முகமது அக்ரம், முகமது அமின் பத், குல்சார் அகமது ஆகியோர் முக்கியமானவர்கள் ஆவார்கள்.

    இன்னொரு மூத்த தலைவரான சைபுதீன் சோஸ், "குலாம் நபி ஆசாத் பிரச்சினைகளை கட்சிக்குள் பேசி தீர்த்து கொண்டிருக்க வேண்டும். காங்கிரஸ் கட்சியில் அவருக்கு கிடைத்த மரியாதை, வேறெங்கும் கிடைக்காது" என கருத்து தெரிவித்துள்ளார்.

    • ஜம்மு காஷ்மீரில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி நடைபெறுகிறது.
    • இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறலாம் என்று கருதப்படுகிறது.

    ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த மூத்த காங்கிரஸ் தலைவர் குலாம் நபி ஆசாத் இன்று அக்கட்சியில் இருந்து விலகி உள்ளார். மேலும் அந்த மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகளும் குலாம் நபிக்கு ஆதரவாக காங்கிரசில் இருந்து விலகியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

    இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஜம்மு-ஷ்மீரைச் சேர்ந்த பாஜக முக்கியக் குழு உறுப்பினர்களுடன் இன்று ஆலோசனை நடத்தினார். டெல்லியில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அந்த யூனியன் பிரதேசத்தின் தற்போதைய அரசியல் சூழல் மற்றும் அமைப்பு சார்ந்த பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    இந்த கூட்டத்தில் ஜம்மு காஷ்மீர் பாஜக தலைவர் ரவீந்தர் ரெய்னா மற்றும் மத்திய மந்திரி ஜிதேந்திர சிங், தேவேந்திர சிங் ராணா, ஜம்முகாஷ்மீர் பாஜக மேலிட பொறுப்பாளர் தருண் சுக் உள்பட கட்சியின் மூத்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    முன்னதாக ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹாவும், அமித்ஷாவை சந்தித்துப் பேசினார். ஜம்மு காஷ்மீரில் தற்போது நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி முடிந்ததும் அந்த யூனியன் பிரதேசத்தில் இந்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடத்தப்படலாம் என்று கருதப்படுகிறது. 

    • காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் குலாம் நபி ஆசாத்.
    • ஜம்மு காஷ்மீர் மாநில காங்கிரஸ் பிரச்சார குழு தலைவராக நியமனம் செய்த சில மணி நேரத்தில் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

    ஸ்ரீநகர்:

    காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் குலாம் நபி ஆசாத். அகில இந்திய அரசியல் விவகாரக் குழு உறுப்பினர், காஷ்மீரின் முன்னாள் முதல் மந்திரி, முன்னாள் மத்திய மந்திரி உள்ளிட்ட பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.

    இதற்கிடையே, காங்கிரஸ் பிரச்சாரக் குழுத் தலைவராக உள்ள ஆசாத் பதவியேற்ற சிறிது நேரத்திலேயே அபபதவியில் இருந்து விலகினார்.

    இந்நிலையில், பதவியேற்ற சிறிது நேரத்திலேயே அந்தப் பதவியில் இருந்து விலகி அதிர்ச்சியை ஏற்படுத்தினார். தலைவர் பதவி மட்டுமல்ல, மாநில அரசியல் விவகாரக் குழுவில் இருந்தும் அவர் ராஜினாமா செய்துள்ளார்.

    தலைமை மாற்றம் கோரி சோனியா காந்திக்கு கடிதம் எழுதிய 23 தலைவர்கள் குழுவிலும் இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • குலாம் நபி ஆசாத் வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளார்.
    • தலைவர்கள் பலரும் குலாம் நபி ஆசாத், விரைவில் குணமடைய தங்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

    புதுடெல்லி :

    காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மாநிலங்களவை முன்னாள் எதிர்க்கட்சி தலைவருமான குலாம் நபி ஆசாத்துக்கு (வயது 73) கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது.

    இதை அவரே ஒரு டுவிட்டர் பதிவில் நேற்று தெரிவித்துள்ளார். அந்த பதிவில் அவர், "இன்று எனக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளது. வீட்டில் என்னை நான் தனிமைப்படுத்திக்கொண்டுள்ளேன்" என கூறி உள்ளார்.

    ராஜஸ்தான் முதல்-மந்திரி அசோக் கெலாட் உள்ளிட்ட தலைவர்கள் பலரும் குலாம் நபி ஆசாத், விரைவில் கொரோனா தொற்றில் இருந்து மீள்வதற்கு தங்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

    காஷ்மீரில் ராணுவ வீரர்கள் தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்படுவதாக கூறிய காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் மீது டெல்லி கோர்ட்டில் தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், எம்.பி.யுமான குலாம் நபி ஆசாத், கடந்த 22-ந் தேதி ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார்.

    இந்த பேட்டியின் போது அவர் ‘காஷ்மீர் மாநிலத்தில் ராணுவவீரர்கள் நடத்துகிற தாக்குதல்களில் பயங்கரவாதிகளை விட அப்பாவி மக்களே அதிகம் கொல்லப்படுகிறார்கள்’ என தெரிவித்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் டெல்லியை சேர்ந்த சாஷி பூஷன் என்கிற வக்கீல் குலாம் நபி ஆசாத் மீது டெல்லி கோர்ட்டில் தேசத்துரோக வழக்கை தாக்கல் செய்தார்.

    அவர் தன்னுடைய மனுவில், “தேசத்துரோகம், குற்ற சதி செய்தல், கலகத்தை ஏற்படுத்தும் நோக்கில் ராணுவம் குறித்த தவறான தகவல்களை பரப்புதல் உள்ளிட்ட பிரிவுகளில் குலாம் நபி ஆசாத் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

    இந்த மனு இன்று (சனிக்கிழமை) நீதிபதி முன்பு விசாரணைக்கு வருகிறது.
    ×