search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    டெல்லி கோர்ட்டில் குலாம் நபி ஆசாத் மீது தேசத்துரோக வழக்கு
    X

    டெல்லி கோர்ட்டில் குலாம் நபி ஆசாத் மீது தேசத்துரோக வழக்கு

    காஷ்மீரில் ராணுவ வீரர்கள் தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்படுவதாக கூறிய காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் மீது டெல்லி கோர்ட்டில் தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், எம்.பி.யுமான குலாம் நபி ஆசாத், கடந்த 22-ந் தேதி ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்தார்.

    இந்த பேட்டியின் போது அவர் ‘காஷ்மீர் மாநிலத்தில் ராணுவவீரர்கள் நடத்துகிற தாக்குதல்களில் பயங்கரவாதிகளை விட அப்பாவி மக்களே அதிகம் கொல்லப்படுகிறார்கள்’ என தெரிவித்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இந்த நிலையில் டெல்லியை சேர்ந்த சாஷி பூஷன் என்கிற வக்கீல் குலாம் நபி ஆசாத் மீது டெல்லி கோர்ட்டில் தேசத்துரோக வழக்கை தாக்கல் செய்தார்.

    அவர் தன்னுடைய மனுவில், “தேசத்துரோகம், குற்ற சதி செய்தல், கலகத்தை ஏற்படுத்தும் நோக்கில் ராணுவம் குறித்த தவறான தகவல்களை பரப்புதல் உள்ளிட்ட பிரிவுகளில் குலாம் நபி ஆசாத் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

    இந்த மனு இன்று (சனிக்கிழமை) நீதிபதி முன்பு விசாரணைக்கு வருகிறது.
    Next Story
    ×