search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குறைதீர்க்கும் நாள் கூட்டம்"

    • சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது.
    • கூட்டத்தில் பங்கு பெற மாற்றுதிறனாளி களுக்கான தேசிய அடையாள அட்டை , உள்ளிட்ட சான்றுகளின் நகல்களை கொண்டு வர வேண்டும்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் அனைவரும் அரசின் திட்டங்கள் பயன் பெற வேண்டி மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டரின் தலைமையில் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நாளை காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது. மாற்றுத்தி றனாளிகளுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகள் அனைவரும் தங்களுக்கு உதவிகள் பெற மாற்றுதிறனாளி களுக்கான தேசிய அடையாள அட்டை , குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை ஆகியவையின் நகல்களை கொண்டு வந்து பயன்பெறலாம். இந்த தகவலை கலெக்டர் ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

    • குறைதீர்க்கும் நாள் கூட்டம் கடந்த 26-ந் தேதி நடைபெறுவதாக அறிக்கை வெளியிடப்பட்டது.
    • மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெறவுள்ளது.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் மே 2023-ம் மாதத்திற்குரிய விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கடந்த 26-ந் தேதி நடைபெறுவதாக அறிக்கை வெளியிடப்பட்டது. தற்ேபாது நிர்வாக காரணங்களை முன்னிட்டு, வருகிற 30-ந்தேதி (செவ்வாய்கிழமை) காலை 11 மணி அளவில் மாவட்ட கலெக்டர் பழனி தலைமையில் விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெறவுள்ளது.

    இக்கூட்டத்தில் விவசாயிகள் சங்க பிரதிநிதிகளும், விவசாயிகளும் கலந்து கொண்டு விவசாயம் சம்மந்தப்பட்ட கோரிக்கைகளை மனுவாக கொடுக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

    • தருமபுரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை வெள்ளிக்கிழைமையன்று 11 மணியளவில் நடக்கிறது.
    • தங்களது குறை களையும், கருத்துகளையும் கூறி பயனடையுமாறு கேட்டுகொள்ளப்படுகிறது

    தருமபுரி,

    தருமபுா மாவட்ட கலெக்டர் சாந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தருமபுரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை வெள்ளிக்கிழைமையன்று 11 மணியளவில் மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் கூட்ட அரங்கில், மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமையில் நடைபெற உள்ளது.

    இதனையொட்டி தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு வேளாண்மை தொடர்பான தங்களது குறை களையும், கருத்துகளையும் கூறி பயனடையுமாறு கேட்டுகொள்ளப்படுகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

    • காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் வளாக அறை எண் 20-ல் நடை பெறவுள்ளது .
    • நுண்ணீர் பாசனம் அமைக்க தேவையான தகவல்கள் வழங்கப்படும்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் 26.4.2023 அன்று மாவட்ட கலெக்டர் வினீத் தலைமையில் காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சியர் வளாக அறை எண் 20 ல் விவசாயிகள் குறை தீர்க்கும்நாள் கூட்டம் நடை பெறவுள்ளது .கூட்டத்தில் முதலாவதாக விவசாயிகளின் கோரிக்கைக்கான மனுக்கள் கலெக்டரிடம் வழங்கிடவும், பின்னர் பதிவு செய்யப்பட்ட விவசாய சங்கங்களில்ஒரு சங்கத்திற்கு ஒருவர் வீதம், தங்களது கோரிக்கைகளை தொகுத்து கலெக்டரிடம் நேரடியாக தெரிவித்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    மேலும் விவசாயிகள் நுண்ணீர் பாசனம் அமைத்திட விவசாயிகளுக்கு ஏதுவாக வேளாண்மை அலுவலர், தோட்டக்கலை அலுவலர் மற்றும் வேளாண் பொறியியல் துறைஅலுவலர்களை கொண்டு வேளாண் உதவி மையம் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள்கூட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

    வேளாண் உதவி மையத்தின் மூலம் விவசாயிகள் நுண்ணீர் பாசனம் அமைக்க தேவையான தகவல்கள் வழங்கப்படும். தக்க ஆவணங்களுடன் வரும் விவசாயிகளுக்கு நுண்ணீர்பாசன மேலாண்மை தகவல் அமைப்பில் (MIMIS PORTAL) பதிவு செய்து கொள்ளவும், வேளாண்- உழவர் நலத்துறை மற்றும் வேளாண் சார்ந்த துறைகளால் அமைக்கப்படவுள்ள கருத்துக்காட்சியிலும் கலந்து கொண்டு விவசாயிகள் பயன்பெறுமாறு கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.   

    • விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் தருமபுரி உதவி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
    • விவசாயிகளிடையே விழிப்பு ணர்வு ஏற்படுத்தும் வகையில் பேனர்கள் அமைக்க போன்ற கோரிக்கைகளை விவசாயிகள் பேசினர்.

    தருமபுரி,

    தருமபுரி கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் தருமபுரி உதவி கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.

    உதவி கலெக்டர் கீதா ராணி தலைமை தாங்கினார். கூட்டத்தில் வனப்பகுதியை ஒட்டியுள்ள விவசாய நிலங்களில் குரங்குகள் நுழைந்து சேதத்தை ஏற்படுத்து கின்றன.

    எனவே குரங்குகளிடம் இருந்து வேளாண் பயிர்களை காக்கும் வகை யில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    வேளாண் தேவைக ளுக்காக அரசு சார்பில் டிரா க்டர் உள்ளிட்ட வேளாண் பணி எந்தி ரங்கள் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் வசம் ஒப்படைக்கப்பட்டு முன்னு ரிமை அடிப்படையில் விவசாயிகளுக்கு வாடகைக்கு வழங்கப்பட்டு வருகிறது.

    ஆனால், இதுகுறித்த தகவல் இன்னும் ஏராளமான விவசாயிகளுக்கு தெரியவில்லை. எனவே, இது தொடர்பாக விவசாயிக ளிடையே விழிப்பு ணர்வு ஏற்படுத்தும் வகையில் பேனர்கள் அமைக்க போன்ற கோரிக்கைகளை விவசாயிகள் பேசினர்.

    விவசாயிகளின் கோரி க்கைகளை கேட்ட உதவி கலெக்டர் அவற்றின் மீது நடவடிக்கை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகத்திற்கு பரிந்துரை செய்யப்படும் என்று கூறினார்.

    இதில் வருவாய், வேளா ண்மை, தோட்டக்கலை உள்ளிட்ட பல்வேறு அரசு துறை அதிகாரிகள், விவசாய சங்கங்கள் மற்றும் அமைப்புகளின் பிரதிநிதிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    • அவினாசி மின் வாரிய அலுவலகத்தில் மின் நுகர்வோர்களின் குறைகளை நேரில் கேட்டறிகிறார்.
    • மின் தொடர்பான தங்கள் குறைகளை நேரில் தெரிவித்து நிவர்த்தி பெறலாம்.

    அவினாசி :

    திருப்பூர் மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் மின் நுகர்வோரின் குறைகளை நேரில் கேட்டறிந்து வருகிறார்.

    அந்த வகையில் நாளை (புதன்கிழமை) அவினாசி மின் வாரிய அலுவலகத்தில் காலை 11 மணிக்கு மின் நுகர்வோர்களின் குறைகளை நேரில் கேட்டறிகிறார். இதில் அந்த பகுதியை சேர்ந்த மின் நுகர்வோர் நேரில் கலந்துகொண்டு மின் தொடர்பான தங்கள் குறைகளை நேரில் தெரிவித்து நிவர்த்தி பெறலாம். இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் பரஞ்ஜோதி தெரிவித்துள்ளார்.

    • இந்த ஆண்டு மார்ச்-2023 திங்கள் வரை 48.92 மி.மீ மழையளவு பெறப்பட்டுள்ளது.
    • 42 ஏரிகளில் விவசாய பயன்பாட்டிற்கு இலவசமாக வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கப்பட உள்ளது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் சாந்தி தலைமையில் நடைபெற்றது.

    இக்கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் சாந்தி பேசும்போது தெரிவித்ததாவது:-

    தருமபுரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு (2022) 1120.8 மி.மீ சராசரி மழையளவு கிடைத்தது. இந்த ஆண்டு மார்ச்-2023 திங்கள் வரை 48.92 மி.மீ மழையளவு பெறப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் வேளாண்மை உழவர் நலத் துறையில் 2022-2023 ஆம் ஆண்டிற்கு 1,67,000 ஹெக்டேர் பரப்பளவில் நெல், சிறுதானியங்கள், பயிறு வகைகள் உள்ளிட்ட உணவு தானிய பயிர்கள் மற்றும் எண்ணெய் வித்துக்கள், பருத்தி, கரும்பு சாகுபடி பரப்பாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    தருமபுரி மாவட்ட ஊரக வளர்ச்சி துறை மற்றும் நீர்வள துறையின் கட்டுபாட்டில் உள்ள 42 ஏரிகளில் விவசாய பயன்பாட்டிற்கு இலவசமாக வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கப்பட உள்ளது.

    விவசாய நிலத்தை மேம்படுத்த வண்டல் மண் தேவைப்படும் விவசாயிகள் உரிய விண்ணப்பத்தினை அளித்து, தகுதி வாய்ந்த விவசாயிகளுக்கு அதிகபட்சமாக நஞ்சை நிலமாக இருப்பின் ஏக்கர் ஒன்றிக்கு 75 கன மீட்டரும், புஞ்சை நிலமாக இருப்பின் ஏக்கர் ஒன்றிக்கு 90 கன மீட்டரும் வண்டல் மண் இலவசமாக எடுக்கலாம்.

    வேளாண்மைத் துறை சார்ந்த அனைத்து திட்டங்களையும் விவசாயிகளுக்கு சரிவர எடுத்துச் சென்று அவர்களின் உற்பத்தியையும், வருமானத்தையும் அதிகரிக்கும் வகையில் வேளாண்மைத் துறையின் அனைத்து நிலை அலுவலர்களும் விவசாயிகளுக்கு வேளாண் சார்ந்த அனைத்து நலத்திட்ட உதவிகளும் கிடைக்கப்பெறுவதை அலுவலர்கள் உறுதி செய்திட வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா, தருமபுரி வேளாண்மை இணை இயக்குநர் விஜயா, கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் சாமிநாதன், வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் மாது, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) (பொ) வி.குணசேகரன், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை துணை இயக்குநர் மாலினி, உதவி திட்ட அலுவலர் (வீடுகள்) தமிழரசன் உட்பட தொடர்புடைய அலுவலர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    • மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் நடைபெற உள்ளது.
    • எரிவாயு முகவர்கள் மற்றும் எண்ணெய் நிறுவன பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில் உள்ள எரிவாயு நுகர்வோர்க ளுக்கான குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 28-ந்தேதி பிற்பகல் 2 மணிக்குதி ருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் திருப்பூர் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெய்பீம் தலைமையில் நடைபெற உள்ளது. கூட்டத்தில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து எரிவாயு முகவர்கள் மற்றும் எண்ணெய் நிறுவன பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளனர்.

    எனவே கூட்டத்தில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள எரிவாயு நுகர்வோர்கள் புகார்கள், குறைபாடுகள் இருப்பின் தங்களது எரிவாயு இணைப்பு புத்தகம் அல்லது அடையாள அட்டையுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டு ள்ளது.

    • காலை 10.30 மணிக்கு மாவட்ட கலெக்டர் வளாக அறை எண்: 20 ல் நடைபெறவுள்ளது.
    • நுண்ணீர் பாசனம் அமைக்க தேவையான தகவல்கள் வழங்கப்படும்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்டத்தில்வருகிற 30-ந்தேதி மாவட்ட கலெக்டர் வினீத் தலைமையில் காலை 10.30 மணிக்கு மாவட்ட கலெக்டர் வளாக அறை எண்: 20 ல் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறவுள்ளது. கூட்டத்தில் முதலாவதாக விவசாயிகளின் கோரிக்கைக்கான மனுக்கள் கலெக்டரிடம் வழங்கிடவும், பின்னர் பதிவு செய்யப்பட்ட விவசாய சங்கங்களில் ஒரு சங்கத்திற்கு ஒருவர் வீதம், தங்களது கோரிக்கைகளை தொகுத்து கலெக்டரிடம் நேரடியாக தெரிவித்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    மேலும், விவசாயிகள் நுண்ணீர் பாசனம் அமைத்திட விவசாயிகளுக்கு ஏதுவாக வேளாண்மை அலுவலர், தோட்டக்கலை அலுவலர் மற்றும் வேளாண் பொறியியல் துறை அலுவலர்களைக் கொண்டு வேளாண் உதவி மையம் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் அமைக்கப்பட்டுள்ளது. வேளாண் உதவி மையத்தின் மூலம் விவசாயிகள் நுண்ணீர் பாசனம் அமைக்க தேவையான தகவல்கள் வழங்கப்படும். தக்க ஆவணங்களுடன் வரும் விவசாயிகளுக்கு நுண்ணீர் பாசன மேலாண்மை தகவல் அமைப்பில் பதிவு செய்து கொள்ளவும், வேளாண் நலத்துறை மற்றும் வேளாண் சார்ந்த துறைகளால் அமைக்கப்படவுள்ள கருத்துக்காட்சியிலும் கலந்து கொண்டு விவசாயிகள் பயன் பெறலாம் என கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.

    • பிற்பகல் 3மணிக்கு திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தலைமையில் நடைபெறவுள்ளது.
    • கோரிக்கைகளை விண்ணப்பம் வாயிலாக இரட்டைப் பிரதிகளில் நேரில் சமர்ப்பித்து பயனடையலாம்.

    திருப்பூர் :

    திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- திருப்பூர் மாவட்டத்தை சார்ந்த முன்னாள் படைவீரர் மற்றும்படையில் பணிபுரியும் படைவீரர்கள் மற்றும் அவரைச் சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் 17-3-2023 (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 3மணிக்கு திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மக்கள் குறைதீர்க்கும் நாள்கூட்ட அரங்கில் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெறவுள்ளது.

    எனவே திருப்பூர் மாவட்டத்தை சார்ந்த முன்னாள் படைவீரர்கள் ,படையில் பணிபுரியும் படைவீரர்கள் மற்றும் அவரைச் சார்ந்தோர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை விண்ணப்பம் வாயிலாக இரட்டைப் பிரதிகளில் நேரில் சமர்ப்பித்து பயனடையலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார். 

    • பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடியாக நடவடிக் கை எடுக்கப்படும்
    • காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர்கள் கலந்து கொண்டனர்.

    தாராபுரம் :

    தாராபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட தாராபுரம், மூலனூர்,குண்டடம்,அலங்கியம் உள்ளிட்ட காவல் நிலையம் சார்பில், மக்கள் குறைதீர்க்கும் மனு நாள் கூட்டம் தாராபுரம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் தனராசு முன்னிலையில் தாராபுரம் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

    கூட்டத்தில் வெகு நாட்களாக தீர்க்க படாத பிரச்சினைகள், மனுதாரர் மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களை அழைத்து இருவரிடமும் சமரசம் செய்து வழக்கை உடனடியாக தீர்த்து வைக்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயதானவர்கள் வசதிக்காக தாராபுரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் மக்கள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது.

    இதில் பாதிக்கப்பட்ட ரவிச்சந்திரன் என்பவர் கூறுகையில், எனது பூர்வீக சொத்தினை எனது 2 மனநலம்பாதிக்கப்பட்ட சகோதரர்கள் மருத்துவ செலவுக்கும் பராமரிப்பு செலவிற்கும் பயன்படுத்தி வருகிறேன். அதனை தி.மு.க.வை சேர்ந்த 2பேர் மோசடி செய்து கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர். பணமும் கொடுக்காமல் பத்திரத்தையும் கொடுக்காமல் மிரட்டி வருகின்றனர். இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    கூட்டத்தில் சுமார் 50க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டது. பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர்.

    கூட்டத்தில் மூலனூர் காவல் ஆய்வாளர் சாகுல் ஹமீது, தாராபுரம் காவல் ஆய்வாளர் மணிகண்டன், குண்டடம் காவல் ஆய்வாளர் முருகாச்சலம், அலங்கியம் காவல் துணை ஆய்வாளர் ஏசுதுரை, தாராபுரம் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் செல்லம் தாராபுரம், குண்டடம்,மூலனூர், அலங்கியம் உள்ளிட்ட காவல் நிலையத்தில் பணிபுரியும் காவலர்கள் கலந்து கொண்டனர்.

    • இரட்டைமடி, சுருக்குமடி மீன்பிடிப்புகளில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரித்துள்ளார்.
    • கலெக்டர். ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் மீனவர் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் கலெக்டர். ஜானி டாம் வர்கீஸ் தலைமையில் மீனவர் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.

    ராமநாதபுரம் மாவட்ட மீனவர்கள் பிரச்சினைகளை மனுக்கள் மூலம் மற்றும் வாய்மொழியாகவும் பதிவு செய்தனர். அவர்களுக்கு தீர்வுகள் அளிக்கப்பட்டது.அப்போது கலெக்டர் கூறியதாவது:-

    கடலுக்கு செல்லும் மீனவர்களுக்கு வழங்கப்படும் அடையாள அட்டை வழங்கும் முறை எளிதாக்கப்பட்டு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் உடனடியாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சட்டவிரோதமான இரட்டைமடி மற்றும் சுருக்குமடி மீன்பிடிப்புகளில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    சேதமடைந்த படகு களுக்கு வழங்கப்படும் நிவாரணத் தொகை மிக விரைவில் வழங்க அறிவுறுத்தப்படும். ரோந்து நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்படும். தமிழ்நாடு கடல்சார் மீன்பிடி ஒழுங்குபடுத்தும் சட்ட விதிமுறைகளை மீறி மீன்பிடிப்பில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது இந்த ஆண்டு மட்டும் சுமார் 420-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

    மேலும் ரூ. 80 லட்சத்துக்கும் மேல் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடலுக்கு செல்லும் மீனவர்கள் பயன்படுத்தும் வகையில் சுகாதார கழிப்பறைகள் கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். நீடித்த நிலையான மீன் பிடிப்பை ஏற்படுத்த மீனவர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிகழ்ச்சியில் மீன்வளத்துறை துணை இயக்குநர் காத்தவராயன், ராமேசுவரம் போலீஸ் துணை சூப்பிரண்டு உமாமகேஸ்வரி, மீன்வளத்துறை உதவி இயக்குநர்கள் அப்துல் காதர் ஜெய்லானி, கோபிநாத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    ×