முன்னாள் படைவீரர்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்17-ந் தேதி நடக்கிறது

பிற்பகல் 3மணிக்கு திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தலைமையில் நடைபெறவுள்ளது. கோரிக்கைகளை விண்ணப்பம் வாயிலாக இரட்டைப் பிரதிகளில் நேரில் சமர்ப்பித்து பயனடையலாம்.
கோப்புபடம்.
கோப்புபடம்.
Published on

திருப்பூர் :

திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- திருப்பூர் மாவட்டத்தை சார்ந்த முன்னாள் படைவீரர் மற்றும்படையில் பணிபுரியும் படைவீரர்கள் மற்றும் அவரைச் சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் 17-3-2023 (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 3மணிக்கு திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மக்கள் குறைதீர்க்கும் நாள்கூட்ட அரங்கில் மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெறவுள்ளது.

எனவே திருப்பூர் மாவட்டத்தை சார்ந்த முன்னாள் படைவீரர்கள் ,படையில் பணிபுரியும் படைவீரர்கள் மற்றும் அவரைச் சார்ந்தோர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை விண்ணப்பம் வாயிலாக இரட்டைப் பிரதிகளில் நேரில் சமர்ப்பித்து பயனடையலாம். இவ்வாறு கலெக்டர் தெரிவித்துள்ளார். 

X

Maalai Malar
www.maalaimalar.com