search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தருமபுரியில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
    X

    தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் சாந்தி தலைமையில் நடைபெற்றது.

    தருமபுரியில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

    • இந்த ஆண்டு மார்ச்-2023 திங்கள் வரை 48.92 மி.மீ மழையளவு பெறப்பட்டுள்ளது.
    • 42 ஏரிகளில் விவசாய பயன்பாட்டிற்கு இலவசமாக வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கப்பட உள்ளது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் சாந்தி தலைமையில் நடைபெற்றது.

    இக்கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் சாந்தி பேசும்போது தெரிவித்ததாவது:-

    தருமபுரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு (2022) 1120.8 மி.மீ சராசரி மழையளவு கிடைத்தது. இந்த ஆண்டு மார்ச்-2023 திங்கள் வரை 48.92 மி.மீ மழையளவு பெறப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் வேளாண்மை உழவர் நலத் துறையில் 2022-2023 ஆம் ஆண்டிற்கு 1,67,000 ஹெக்டேர் பரப்பளவில் நெல், சிறுதானியங்கள், பயிறு வகைகள் உள்ளிட்ட உணவு தானிய பயிர்கள் மற்றும் எண்ணெய் வித்துக்கள், பருத்தி, கரும்பு சாகுபடி பரப்பாக இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    தருமபுரி மாவட்ட ஊரக வளர்ச்சி துறை மற்றும் நீர்வள துறையின் கட்டுபாட்டில் உள்ள 42 ஏரிகளில் விவசாய பயன்பாட்டிற்கு இலவசமாக வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கப்பட உள்ளது.

    விவசாய நிலத்தை மேம்படுத்த வண்டல் மண் தேவைப்படும் விவசாயிகள் உரிய விண்ணப்பத்தினை அளித்து, தகுதி வாய்ந்த விவசாயிகளுக்கு அதிகபட்சமாக நஞ்சை நிலமாக இருப்பின் ஏக்கர் ஒன்றிக்கு 75 கன மீட்டரும், புஞ்சை நிலமாக இருப்பின் ஏக்கர் ஒன்றிக்கு 90 கன மீட்டரும் வண்டல் மண் இலவசமாக எடுக்கலாம்.

    வேளாண்மைத் துறை சார்ந்த அனைத்து திட்டங்களையும் விவசாயிகளுக்கு சரிவர எடுத்துச் சென்று அவர்களின் உற்பத்தியையும், வருமானத்தையும் அதிகரிக்கும் வகையில் வேளாண்மைத் துறையின் அனைத்து நிலை அலுவலர்களும் விவசாயிகளுக்கு வேளாண் சார்ந்த அனைத்து நலத்திட்ட உதவிகளும் கிடைக்கப்பெறுவதை அலுவலர்கள் உறுதி செய்திட வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா, தருமபுரி வேளாண்மை இணை இயக்குநர் விஜயா, கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் சாமிநாதன், வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் மாது, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) (பொ) வி.குணசேகரன், தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை துணை இயக்குநர் மாலினி, உதவி திட்ட அலுவலர் (வீடுகள்) தமிழரசன் உட்பட தொடர்புடைய அலுவலர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×