search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குரங்கு அம்மை நோய்"

    • தமிழகத்தில் குரங்கு அம்மை நோய் பாதிப்பு இல்லை.
    • தொற்று கண்டறியப்பட்டால் அவர்களை தனிமைப்படுத்த ஏற்பாடு.

    கோவையில் உள்ள பன்னாட்டு விமான நிலையத்தில் குரங்கு அம்மை நோய் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக மேற்கொள்ளப் பட்டு வரும் கண்காணிப்பு பணிகளை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று ஆய்வு செய்தார்.

    பின்னர் செய்தியாளர்களுக்கு அமைச்சர் பேட்டி அளித்தார். அப்போது அவர் தெரிவித்துள்ளதாவது:

    உலகளவில் 63 நாடுகளில் குரங்கு அம்மை நோயின் தாக்கம் அதிகமாக உள்ளது. நமது நாட்டில் கேரளா, தெலுங்கானா ஆகிய மாநிலத்தில் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. தமிழகத்தில் யாருக்கும் குரங்கு அம்மை பாதிப்பு இல்லை

    சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய பகுதிகளில் உள்ள பன்னாட்டு விமான நிலையங்களில் குரங்கு அம்மை பாதிப்பு உள்ள நாடுகளில் இருந்து வரும் வெளிநாட்டு பயணிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.

    அதன் அடிப்படையில் கோவை விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கண்காணிப்பு பணிகள் ஆய்வு செய்யப்பட்டது. கோவை விமான நிலையத்தில் காலை மற்றும் மாலை என 2 வெளிநாட்டு விமானங்கள் வருகின்றன.

    இந்த மாதத்தில் பயணிகளுக்கு நடத்தப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனையில் இதுவரை யாருக்கும் குரங்கு அம்மை அல்லது கொரோனா தொற்று கண்டறியப்படவில்லை.

    யாருக்காவது தொற்று கண்டறியப்பட்டால் அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க ஒரு படுக்கை வசதியுடன் கூடிய அறை கோவை விமான நிலையத்தில் தயார் நிலையில் உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • கேரளாவில் 2வது நபருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு.
    • இந்தியா வரும் சர்வதேச பயணிகளிடம் மருத்துவ பரிசோதனை நடத்த அறிவுரை

    ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளா வந்த 35 வயது நபருக்கு குரங்கு அம்மை நோய் உறுதி செய்யப்பட்ட நிலையில், துபாயில் இருந்து 2 நாட்களுக்கு முன்பு கேரளா வந்த கன்னூர் மாவட்டத்தை நபரிடம் நடத்தப்பட்ட பரிசோதனையின் முடிவில் அவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துஐற அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில் நாட்டில் உள்ள முக்கிய விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களில் பணியாற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறையின் பிராந்திய அலுவலகங்களைச் சேர்ந்த இயக்குநர்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் சார்பில் இந்த கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    இந்த கூட்டத்தில் நாட்டில் குரங்கு அம்மை நோய் பரவலைக் கட்டுப்படுத்த, இந்தியா வரும் அனைத்து சர்வதேச பயணிகளின் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் குரங்கு அம்மை நோய் குறித்தும், தடுப்பு முறைகள் குறித்தும் மருத்துவ விளக்கக் காட்சிபடி இந்த கூட்டத்தில் ஆலோசனை வழங்கப்பட்டது.

    • துபாயில் இருந்து 2 நாட்களுக்கு முன்பு 40 வயதான நபர் ஒருவர் கேரளா வந்தார்.
    • அவருக்கு காய்ச்சல் மற்றும் உடலில் லேசான கொப்பளங்கள் இருந்ததை தொடர்ந்து அவருக்கு குரங்கு அம்மை நோய் இருக்கலாம் என்ற சந்தேகம் சுகாதாரத்துறையினருக்கு ஏற்பட்டது.

    திருவனந்தபுரம்:

    நாட்டிலேயே முதல்முறையாக கேரளாவில் குரங்கு அம்மை நோய் கண்டறியப்பட்டது.

    ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளா வந்த 35 வயது நபருக்கு குரங்கு அம்மை நோய் அறிகுறி இருந்தது தெரியவந்தது. அவரது உமிழ்நீர் மற்றும் ரத்த மாதிரிகள் பூனாவில் உள்ள தேசிய ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டது.

    அங்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அவர் திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கும் நோய் தொற்று இருக்கிறதா? என்று பரிசோதனை செய்யப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் துபாயில் இருந்து 2 நாட்களுக்கு முன்பு 40 வயதான நபர் ஒருவர் கேரளா வந்தார். அவருக்கு காய்ச்சல் மற்றும் உடலில் லேசான கொப்பளங்கள் இருந்ததை தொடர்ந்து அவருக்கு குரங்கு அம்மை நோய் இருக்கலாம் என்ற சந்தேகம் சுகாதாரத்துறையினருக்கு ஏற்பட்டது. இதையடுத்து அவரது உமிழ் நீர் மற்றும் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பூனாவில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.

    இதன்முடிவுகள் வந்த பிறகே அவருக்கும் நோய் பாதிப்பு இருக்கிறதா? என்பது தெரியவரும்.

    இதற்கிடையே கேரள சுகாதாரத்துறையினர் அங்குள்ள அனைத்து விமான நிலையங்களிலும் கண்காணிப்பு பணியினை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    குரங்கு அம்மை பாதிப்பு உள்ள நாடுகளில் இருந்து வருவோருக்கு பரிசோதனை செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக மத்திய அரசின் சிவில் விமான போக்குவரத்து துறையுடன் இணைந்து ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

    • உலகை தற்போது அச்சுறுத்தி வரும் நோய்களில் குரங்கு அம்மை நோய் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
    • ஐக்கிய அரபு அமீரகம் உள்பட 55 நாடுகளில் இந்த நோயின் பாதிப்பு அதிகரித்து உள்ளது.

    திருவனந்தபுரம்:

    உலகை தற்போது அச்சுறுத்தி வரும் நோய்களில் குரங்கு அம்மை நோய் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

    ஐக்கிய அரபு அமீரகம் உள்பட 55 நாடுகளில் இந்த நோயின் பாதிப்பு அதிகரித்து உள்ளது. எனவே இந்த நாடுகளில் இருந்து இந்தியா வருவோரை தீவிர சோதனைக்கு உட்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

    அதன்படி ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து சமீபத்தில் கேரளா வந்த ஒருவரின் ரத்த மாதிரிகளை ஆய்வு செய்ததில்அவருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

    இதையடுத்து அவருடன் விமானத்தில் பயணித்தவர்கள் அனைவரும் உடனடியாக தனிமை படுத்தப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டனர். இதில் 2 பேருக்கு நோய் அறிகுறி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளனர்.

    நாட்டிலேயே குரங்கு அம்மை நோய் முதல்பதிவு கேரளாவில் உறுதி செய்யப்பட்டதை அடுத்து, மாநிலத்தில் குரங்கு காய்ச்சலைத் தடுக்கும் நடவடிக்கைகளை கேரள அரசு தீவிரப்படுத்தியது.

    இந்த நிலையில் கேரளாவில் நிலவும் நிலைமையை மதிப்பிடுவதற்காக வந்த மத்தியக் குழு கேரளா விரைந்தது. மத்திய சுகாதாரத் துறையின் ஆலோசகர் டாக்டர் ரவீந்திரன், தேசிய நோய் கட்டுப்பாட்டு மையம் டாக்டர் சங்கேத் குல்கர்னி, புது தில்லி ஆர்.எம்.எல். மருத்துவமனையின் டாக்டர் அனுராதா, தோல் மருத்துவர் அகிலேஷ் தோல் மற்றும் பொது சுகாதார நிபுணர் டாக்டர் ருச்சி ஜெயின் ஆகியோர் மத்திய குழுவில் இடம்பெற்று உள்ளனர்.

    இவர்கள் நோய் பாதித்தவர் பயணம் செய்த 5 மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டனர். மேலும் அங்கு மேற்கொள்ள வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விரிவான ஆலோசனை நடத்தினர்.

    தொடர்ந்து கேரள மாநில சுகாதார துறை அதிகாரிகளுடன் அவர்கள் ஆலோசனை நடத்தினார்கள். இது தொடர்பாக கேரள சுகாதாரத் துறை மந்திரி வீணா ஜார்ஜ் கூறுகையில், மத்திய குழு தன்னுடனும் சுகாதார அதிகாரிகளுடனும் கலந்துரையாடியது. திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரியில் நோயாளியை பார்வையிட்டனர்.

    குரங்கு காய்ச்சலைத் தடுப்பதற்கான பயிற்சிகள் விரிவான முறையில் நடைபெற்று வருவதாகவும், இதுவரை 1,200-க்கும் மேற்பட்ட சுகாதாரப் பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் கூறினார்.

    மேலும்தொற்று உறுதி செய்யப்பட்ட நோயாளியின் உடல்நிலை சீராக உள்ளது என்றும் வேறு யாருக்கும் நோய் இருப்பது கண்டறியப்படவில்லை. அவரது தொடர்புகள் அனைத்தும் கண்காணிப்பில் உள்ளன. சுகாதாரத் துறையினர் தொடர்ந்து நிலைமையை கண்காணித்து வருகின்றனர் என்றும் அவர் கூறினார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தமிழக-கேரள எல்லையில் 13 வழிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
    • சென்னையில் கடந்த 14 நாட்களில் வெளிநாடுகளில் இருந்து வந்த 1 லட்சம் பயணிகளில் 1,987 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

    சென்னை:

    சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று ஆய்வு மேற்கொண்டார். குரங்கு அம்மை நோய் விழிப்புணர்வு மற்றும் பரிசோதனைகள் வெளிநாட்டு பயணிகளுக்கு செய்வதை நேரில் பார்த்தார்.

    பின்னர் மா.சுப்பிரமணியன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

    ஐரோப்பியா, ஆப்பிரிக்காவைச் சேர்ந்த 63 நாடுகளில் குரங்கு அம்மை நோய் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் முதல் தொற்று கேரள சிறுமிக்கு ஏற்பட்டது. அரபு நாட்டில் இருந்து திருவனந்தபுரம் வந்த சிறுமிக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

    இதைத் தொடர்ந்து தமிழக-கேரள எல்லையில் 13 வழிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை, மதுரை, கோவை, திருச்சி ஆகிய 4 பன்னாட்டு விமான நிலையங்களில் பயணிகள் கண்காணிக்கப்படுகிறார்கள். முகம், கைகளில் கொப்பளங்கள் இருக்கிறதா? என்று பரிசோதிக்கப்படுகிறது.

    சென்னையில் கடந்த 14 நாட்களில் வெளிநாடுகளில் இருந்து வந்த 1 லட்சம் பயணிகளில் 1,987 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 39 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்ததால் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டனர். குரங்கு அம்மை நோய் இல்லை.

    குரங்கு அம்மை நோயை கண்டுபிடிக்க ஐ.சி.எம்.ஆர். ஆய்வகங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆய்வகம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. நிச்சயம் ஏற்பார்கள். சென்னையில் அந்த ஆய்வகம் ஏற்படுத்தப்படும்.

    மேலும் குரங்கு அம்மை நோய் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு வார்டு ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் 10 படுக்கைகளுடன் தயார் படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் இந்நோய் இதுவரையில் தென்படவில்லை. அதனால் பதற்றம் அடைய தேவையில்லை.

    முதல்-அமைச்சர் ரொம்ப நன்றாக இருக்கிறார். மருத்துவர்கள் ஓய்வு எடுக்க கூறியதால் தங்கி இருக்கிறார். ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார்.

    ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் நாசர் உள்ளிட்டவர்களுக்கு பி4, பி5 வகை கொரோனா தொற்றாகும். இது வேகமாக பரவும். பெரிய அளவில் பாதிப்பு இருக்காது.

    நோய் தொற்று ஆள் பார்த்து வருவது இல்லை. உள்நாட்டு விமான நிலையத்திலும் பரிசோதனை நடத்தப்படும்.

    சென்னையில் தொற்று குறைந்து வருகிறது. மற்ற மாவட்டங்களில் கூடியுள்ளது. ஆனால் பெரிய அளவில் உயரவில்லை. கட்டுப்பாடுகள் விதிக்க கூடிய சூழல் தற்போது இல்லை. இந்த வைரஸ் தாக்கம் தொடர்ந்து இருந்து கொண்டுதான் இருக்கும். வைரசுடன் போராடி வாழ கற்றுக்கொள்ள வேண்டும். அதற்கு அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது சுகாதாரத்துறை செயலாளர் செந்தில்குமார், இயக்குனர் செல்வவிநாயகம் உடன் இருந்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • திருவனந்தபுரம், கொல்லம், பத்தினம்திட்டா, ஆலப்புழா, கோட்டயம் ஆகிய 5 மாவட்டங்களில் கூடுதல் கண்காணிப்புக்கு ஏற்பாடு.
    • நோய் பாதித்தவர் பயணம் செய்த 5 மாவட்டங்களில் இன்று ஆய்வு மேற்கொண்டனர்.

    திருவனந்தபுரம்:

    வளைகுடா நாடான ஐக்கிய அரபு அமீரகம் உள்பட 55 நாடுகளில் குரங்கு அம்மை நோய் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

    இதையடுத்து குரங்கு அம்மை நோய் பாதிப்பு உள்ள நாடுகளில் இருந்து வருவோரை கண்காணிக்க மத்திய அரசு உத்தரவிட்டு இருந்தது. அதன்படி ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளா வந்த நபர் ஒருவருக்கு நோய் அறிகுறி இருப்பது தெரியவந்தது.

    சுகாதார துறையினர் அவரது ரத்த மாதிரிகளை சேகரித்து பூனாவில் உள்ள தேசிய ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

    இதையடுத்து நோய் பாதித்தவர் பயணம் செய்த விமானத்தில் அவருடன் சேர்ந்து பயணித்தவர்கள், குறிப்பாக அவரது அருகில் இருந்தவர்கள் மற்றும் அவர் கேரளா வந்த பின்பு அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் என 11 பேர் கண்டறியப்பட்டனர்.

    அவர்கள் அனைவரும் உடனடியாக தனிமைபடுத்தப்பட்டு கண்காணிப்பில் வைக்கப்பட்டனர்.

    இந்த நிலையில் குரங்கு அம்மை நோய் உறுதி செய்யப்பட்ட நபருடன் தொடர்பில் இருந்த 2 பேருக்கு நோய் அறிகுறி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டு உள்ளனர்.

    இதுபற்றி கேரள சுகாதார மந்திரி வீணா ஜார்ஜ் கூறும்போது, குரங்கு அம்மை நோய் பாதிப்புக்கு உள்ளான நபர் பயணம் செய்த பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளோம். சுகாதார ஊழியர்கள் இங்கு வீடு வீடாக ஆய்வு செய்து வருகிறார்கள்.

    இதில் திருவனந்தபுரம், கொல்லம், பத்தினம்திட்டா, ஆலப்புழா மற்றும் கோட்டயம் ஆகிய 5 மாவட்டங்களில் கூடுதல் கண்காணிப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    இந்த மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களிலும் சுகாதார துறையினர் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர் என்றார்.

    கேரளாவில் குரங்கு அம்மை நோய் பாதிப்பு இருப்பது உறுதியானதால் அங்கு மேற்கொள்ள வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்ய மத்திய சுகாதார துறையின் அதிகாரிகள் சென்றுள்ளனர்.

    மத்திய சுகாதார துறையின் ஆலோசகர் ரவீந்திரன் மற்றும் டாக்டர்கள் சங்கேத் குல்கர்ணி, அரவிந்த் குமார், அகிலேஷ் ஆகியோர் கொண்ட 4 பேர் குழு கேரளாவில் முகாமிட்டு உள்ளது. இவர்கள் நோய் பாதித்தவர் பயணம் செய்த 5 மாவட்டங்களில் இன்று ஆய்வு மேற்கொண்டனர். மேலும் அங்கு மேற்கொள்ள வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மாநில சுகாதார துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்கள்.

    • உலகம் முழுவதும் இதுவரை 3 ஆயிரத்து 413 பேருக்கு குரங்கு அம்மை தாக்கி உள்ளது.
    • உலக நாடுகளை மிரட்டி வரும் குரங்கு அம்மை இந்தியாவிலும் ஊடுருவியுள்ளது.

    திருவனந்தபுரம்:

    உலகம் முழுவதும் இதுவரை 3 ஆயிரத்து 413 பேருக்கு குரங்கு அம்மை தாக்கி உள்ளது. மேற்கு, மத்திய ஆப்பிரிக்க நாடுகளில் அதிகமாக பரவி உள்ளது.

    இந்தியாவில் குரங்கு அம்மை நுழையாமல் இருந்த நிலையில், நேற்று கேரளாவில் ஒருவருக்கு குரங்கு அம்மை உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இந்நிலையில், கேரளாவில் உஷார் நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. திருவனந்தபுரத்தில் நடைபெற்ற உயர்நிலை ஆலோசனைக் கூட்டத்திற்கு பின் சுகாதாரத் துறை மந்திரி வீணா ஜார்ஜ் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

    அப்போது அவர் கூறுகையில், 5 மாவட்டங்களில் சிறப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. திருவனந்தபுரம், கொல்லம், பத்தினம் திட்டா, ஆலப்புழா மற்றும் கோட்டயம் ஆகிய 5 மாவட்டங்களை சேர்ந்த பயணிகள் குரங்கு அம்மை பாதிக்கப்பட்டுள்ள நபருடன் ஒரே விமானத்தில் வந்துள்ளதால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்

    • ஐக்கிய அரபு நாட்டில் இருந்து கேரளா வந்தவருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு.
    • நோய் பரவாமல் தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தல்.

    குரங்கு அம்மை நோய் தற்போது 55 நாடுகளில் பரவி உள்ள நிலையில், உலகம் முழுவதும் சுமார் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த நோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் 4 நாட்களுக்கு முன்பு ஐக்கிய அரபு நாட்டில் இருந்து கேரளா வந்த 35 வயது நபர் ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    அந்த நபர் திருவனந்தபுரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரது குடும்பத்தார், நண்பர்கள் என நெருங்கிய தொடர்பில் இருந்த 11 பேரிடம் நோய் பரிசோதனை செய்யப்படுகிறது. இந்நிலையில் இந்தியாவில் கண்டறியப்பட்டுள்ள குரங்கு அம்மை நோயால் தென் கிழக்கு ஆசிய நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு உலக சுகாதார அமைப்பு வலியுறுத்தி உள்ளது.

    குரங்கு அமைப்பு நோய் பரவாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசிய பகுதிக்கான இயக்குநர் பூனம் சிங் தெரிவித்துள்ளார். குரங்கு அம்மை நோய் பாதிப்பு திறனை மதிப்பீடு செய்வதற்கும், நோய் பாதிப்பு தடுப்பு திறனை வலுப்படுத்துவதற்கும் இந்த பிராந்தியத்தில் உள்ள அனைத்து உறுப்பு நாடுகளுக்கு உலக சுகாதார அமைப்பு ஆதரவு அளித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • குரங்கு அம்மை நோய் இந்தியாவில் முதல் முறையாக ஊடுருவி உள்ளது
    • முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தல்

    கொரோனா தொற்றை தொடர்ந்து குரங்கு அம்மை நோயும் உலக நாடுகளை தொடர்ந்து அச்சுறுத்திக் கொண்டே இருக்கிறது. சுமார் 50 நாடுகளில் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே பரவ தொடங்கிய குரங்கு அம்மை நோய் தொற்றால் பலர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    இதைத் தொடர்ந்து குரங்கு அம்மை நோய் நமது நாட்டிலும் பரவினால் அதனை எதிர்கொள்வது எப்படி? என்கிற ஆலோசனையிலும் மத்திய சுகாதார துறையினர் ஈடுபட்டு வந்தனர். இது தொடர்பாக அனைத்து மாநில சுகாதார துறை அதிகாரிகளும் ஏற்கனவே உஷார்படுத்தப்பட்டு இருந்தனர்.

    இந்த நிலையில் குரங்கு அம்மை நோய் இந்தியாவில் முதல் முறையாக ஊடுருவி உள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து கேரளா வந்த ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் உறுதி செய்யப்பட்டு இருப்பதை தொடர்ந்து மத்திய சுகாதார துறை அதிகாரிகள் கேரளாவுக்கு விரைந்து சென்று தடுப்பு நடவடிக்கைகளை முடுக்கி விட்டுள்ளனர்.

    இது தொடர்பாக மத்திய சுகாதார துறை செயலாளரான ராஜேஷ்பூசன், மாநில சுகாதார துறை அதிகாரிகளுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் குரங்கு அம்மைக்கு எதிரான முன்எச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளார்.

    உலகம் முழுவதும் 50 நாடுகளில் 3413 பேருக்கு குரங்கு அம்மை தொற்று ஏற்பட்டிருப்பதாகவும் இதில் ஒருவர் உயிரிழந்திருப்பதாகவும் அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    ஐரோப்பிய நாடுகளில் 86 சதவீதம் பேருக்கும், அமெரிக்காவில் 11 சதவீதம் பேருக்கும் குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளதால் இந்த நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வருபவர்களை கண்டிப்பாக பரிசோதனை செய்ய வேண்டும் என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

    விமான நிலையத்திலேயே சளி மற்றும் ரத்த மாதிரிகளை எடுத்து பரிசோதிக்க வேண்டும். இதில் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது தெரியவந்தால் சம்பந்தப்பட்டவர்களை தனிமைப்படுத்தி கண்காணிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    கொரோனா தொற்றுடன் இதுபோன்ற தொற்றுகளையும் கண்டறிந்து வேரறுக்க வேண்டியது நமது கடமையாகும் என்றும் மத்திய அரசு, மாநில அரசுகளை கேட்டுக் கொண்டுள்ளது.

    இதைத் தொடர்ந்து அனைத்து மாநிலங்களிலும் குரங்கு அம்மை நோய் தொற்று தடுப்பு பணிகள் முழுவீச்சில் முடுக்கி விடப்பட்டுள்ளன.

    பக்கத்து மாநிலமான கேரளாவில் குரங்கு அம்மை நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதை தொடர்ந்து தமிழகத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகள் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர். எல்லையோர மாவட்டங்களான கன்னியாகுமரி, தென்காசி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் நோய் தடுப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.

    சென்னை விமான நிலையத்திலும் அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். குரங்கு அம்மை நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் இருந்து வருபவர்களை கண்டறிந்து அவர்கள் முழுமையாக பரிசோதனைக்குட் படுத்தப்படுகிறார்கள்.

    குரங்கு அம்மை தொற்றின் அறிகுறிகளாக காய்ச்சல், தலைவலி, உடல் தசை வலிகள் இருக்கும் என்று கண்டறியப்பட்டு உள்ளது.

    இந்த அறிகுறிகளுடன் வருபவர்களையும் இணை நோய் உள்ளவர்களையும் கண்டுபிடித்து குரங்கு அம்மை தொற்று பரவாமல் தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகளால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    குரங்கு அம்மை நோய் தொடர்பாக கேரளாவில் இருந்து அடிக்கப்பட்டுள்ள எச்சரிக்கை மணியை கவனமாக எடுத்துக் கொண்டு தமிழகத்திலும் நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு அந்த நோய் நமது மாநிலத்துக்குள் ஊடுருவாமல் பார்த்துக் கொள்ளப்பட வேண்டியது அனைவரின் கடமையாகவும் மாறி இருக்கிறது.

    குரங்கு அம்மை பரவலைத் தடுக்கும் நடவடிக்கைகள்:

    * குரங்கு அம்மைக்கான அறிகுறி போல தோற்றமளிக்கும் சொறி உள்ளவர்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருப்பதை தவிர்க்கவும்.

    * குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்ட நபரின் சொறி அல்லது சிரங்குகளைத் தொடாதீர்கள்.

    * இந்த நோய் உள்ள நபருடன் முத்தமிடவோ, கட்டிப்பிடிக்கவோ அல்லது உடலுறவு கொள்ளவோ கூடாது.

    * பாதிக்கப்பட்டவருடன் உண்ணும் பாத்திரங்கள் அல்லது கோப்பைகளை பகிர்ந்து கொள்ளாதீர்கள்.

    * பாதிக்கப்பட்டவரின் படுக்கை, துண்டுகள் அல்லது ஆடைகளை பயன்படுத்தவோ தொடவோ கூடாது.

    * சோப்பு மற்றும் தண்ணீருடன் கைகளை அடிக்கடி கழுவவும், அல்லது ஆல்கஹால் சார்ந்த கை சுத்திகரிப்பானை பயன்படுத்தவும்.

    * நோய்வாய்ப்பட்ட அல்லது இறந்த விலங்குகள், அவற்றின் படுக்கை அல்லது அவை தொட்ட பிற பொருட்களைத் தவிர்க்கவும்.

    * குரங்கு அம்மைக்கான அறிகுறிகள் குறிப்பாக சொறி போன்று தென்பட்டால், முடிந்தவரை தனிமைப்படுத்திக்கொள்ளுங்கள். 

    • விலங்குகளிடம் இருந்தே இந்த நோய் மனிதர்களுக்கு பரவுகிறது.
    • இந்நோய் 5 முதல் 21 நாட்கள் வரை இருக்கும்.

    குரங்கு அம்மை நோய் ஒருவித வைரசால் ஏற்படுகிறது. இந்த வைரசில் இரண்டு தனித்தனி மரபியல் பிரிவுகள் உள்ளன. முதலாவது பிரிவு மத்திய ஆப்பிரிக்கா நாடுகளிலும், 2-வது பிரிவு மேற்கு ஆப்பிரிக்கா நாடுகளிலும் கண்டறிப்பட்டது.

    நோய் பரவுவது எப்படி?

    பொதுவாக விலங்குகளிடம் இருந்தே இந்த நோய் மனிதர்களுக்கு பரவுகிறது. தொற்றால் பாதிக்கப்பட்ட விலங்குகளை தொடுவதன் மூலமும், அதன் உடல் திரவங்கள் மூலமும் பரவுவதாக கூறப்படுகிறது.

    குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்ட விலங்குகளில் இறைச்சியை சரியாக வேகவைக்காமல் சாப்பிட்டாலும் இந்த நோய் பரவ வாய்ப்பு உள்ளது.

    அறிகுறிகள்

    குரங்கு அம்மை நோய் பாதித்தவர்களுக்கு கடுமையான காய்ச்சல் ஏற்படும். அதோடு தலைவலி, உடல் வலியுடன் முதுகு வலியும் இருக்கும். மேலும் உடல் நடுக்கம், சோர்வடைதல் போன்றவையும் இந்நோயின் அறிகுறிகளாகும்.

    இந்நோய் பாதிப்பு ஏற்பட்டதும் உடலில் சிகப்பு நிற புள்ளிகள் தோன்றும். பின்னர் அவை கொப்புளங்களாக மாறும். 2 அல்லது 3 நாட்களில் இந்த கொப்புளங்கள் உதிர்ந்து விடும்.

    குரங்கு அம்மை நோய் அறிகுறிகள் 2 முதல் 4 வாரங்கள் வரை இருக்கும். பொதுவாக நோய் பாதிப்புக்குள்ளாகி 7 முதல் 14 நாட்களுக்குள் அறிகுறி வெளிப்படும். இந்நோய் 5 முதல் 21 நாட்கள் வரை இருக்கும்.

    செய்யக்கூடாதவை என்ன?

    குரங்கு அம்மை நோய் பாதித்தவரின் படுக்கை உள்ளிட்ட எந்தவொரு பொருட்களையும் தொடக்கூடாது.

    பாதிக்கப்பட்ட நோயாளியிடம் இருந்து விலகி இருக்க வேண்டும்.

    பாதிக்கப்பட்ட விலங்குகளை தொடக்கூடாது.

    கைகளை எப்போதும் கழுவி சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

    ஆஸ்பத்திரிகளுக்கு செல்லும் போது பாதுகாப்பு உடைகளை அணிந்து செல்ல வேண்டும்.

    முக கவசம் அணியவேண்டும்.

    உடலில் தோன்றும் தோல் வெடிப்புகளை கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்ய வேண்டும்.

    வாய்புண்களை வெதுவெதுப்பான உப்பு நீர் மூலம் கொப்பளிக்க வேண்டும்.

    • திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு வந்திறங்கிய அவர், இங்கிருந்து ஒரு கார் மூலம் தனது சொந்த ஊரான கொல்லத்துக்கு சென்றுள்ளார்.
    • வீட்டிற்கு சென்ற பின்பு காய்ச்சல் அறிகுறி இருந்ததால் ஒரு ஆட்டோவில் அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சென்றிருக்கிறார்.

    திருவனந்தபுரம்:

    உலகை மிரட்டிய கொரோனா பாதிப்பு இந்தியாவில் முதன்முதலில் கேரளாவில் தான் கண்டறியப்பட்டது.

    இப்போது கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் புதிய வகை வைரஸ் நோயான குரங்கு அம்மை நோய் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது.

    தற்போது 55 நாடுகளில் இந்த நோய் பரவி இருப்பது தெரியவந்துள்ளது. உலகம் முழுவதும் குரங்கு அம்மை நோய்க்கு சுமார் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    குரங்கு அம்மை நோய் பற்றிய விபரங்கள் வெளியானதும், அதனை தடுக்க மத்திய அரசு பல்வேறு எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி மாநில அரசுகளுக்கு அறிவுறுத்தியது.

    அதன்படி அனைத்து மாநிலங்களும் குரங்கு அம்மை நோய் பாதிப்பை தடுக்க கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டது. இதில் 4 நாட்களுக்கு முன்பு ஐக்கிய அரபு நாட்டில் இருந்து கேரளா வந்த 35 வயது நபர் ஒருவருக்கு குரங்கு அம்மை நோய்க்கான அறிகுறி இருப்பது தெரியவந்தது.

    இதையடுத்து அந்த நபரின் ரத்தம், சிறுநீர் ஆகியவை பூனாவில் உள்ள தேசிய ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அங்கு அந்த நபருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

    இதனை கேரள சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் தெரிவித்தார். இதையடுத்து அந்த நபர் உடனடியாக திருவனந்தபுரத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் உள்ள சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது பற்றி சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் கூறியதாவது:- குரங்கு அம்மை நோய் உறுதி செய்யப்பட்டவருக்கு இணை நோய்கள் எதுவும் இல்லை. அவர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளார். சிறப்பான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் அவர் விரைவில் குணமடைவார் என நம்புகிறோம்.

    பாதிப்புக்கு ஆளான நபர் ஐக்கிய அரபு நாட்டில் இருந்து கேரளா வந்துள்ளார். திருவனந்தபுரம் விமான நிலையத்திற்கு வந்திறங்கிய அவர், இங்கிருந்து ஒரு கார் மூலம் தனது சொந்த ஊரான கொல்லத்துக்கு சென்றுள்ளார். வீட்டிற்கு சென்ற பின்பு காய்ச்சல் அறிகுறி இருந்ததால் ஒரு ஆட்டோவில் அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு சென்றிருக்கிறார்.

    தற்போது அவருக்கு குரங்கு அம்மை நோய் உறுதியாகி இருப்பதால் அந்த டிரைவர்கள் இருவருக்கும் நோய் பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதுபோல அந்த நபரின் குடும்பத்தாரும் அவரது நண்பர்கள் என நெருங்கிய தொடர்பில் இருந்த 11 பேர் கண்டறியப்பட்டு உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் நோய் பரிசோதனை செய்யப்பட உள்ளது.

    இதில் யாருக்காவது நோய் பாதிப்பு இருப்பது தெரியவந்தால் அவர்கள் உடனடியாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுவார்கள்.

    இதுபோல நோய் பாதித்தவருடன் விமானத்தில் பயணம் செய்தவர்களையும் பரிசோதிக்க முடிவு செய்துள்ளோம்.

    குரங்கு அம்மை நோய் மற்றவர்களுக்கு பரவும் சாத்திய கூறுகள் மிகமிக குறைவு. எனவே மக்கள் பீதியடைய தேவையில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தமிழகத்தில் குரங்கு அம்மை நோய் பாதிப்பு இதுவரையில் இல்லை.
    • சென்னை விமான நிலையத்தில் அம்மை பரவிய நாடுகளில் இருந்து வரும் பயணிகள் தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

    சென்னை:

    ஐரோப்பிய நாடுகளில் குரங்கு அம்மை நோய் பரவி வருவதால் சர்வதேச பயணிகள் கண்காணிப்பு வளையத்தில் கொண்டு வரப்பட்டுள்ளனர்.

    300-க்கும் மேற்பட்ட நாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்திய இந்நோய் இந்தியாவிலும் பரவியது.

    அண்டை மாநிலமான கேரளாவில் ஒருவருக்கு குரங்கு அம்மை தொற்று பரவியது. இதையடுத்து தமிழக சுகாதாரத்துறை கண்காணிப்பை தீவிரப்படுத்தி உள்ளது.

    சென்னையில் உள்ள பன்னாட்டு விமான நிலையத்தில் அந்த நாடுகளில் இருந்தும், ஒட்டி உள்ள பகுதிகளில் இருந்தும் வரக்கூடிய பயணிகளை கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

    அதன் அடிப்படையில் சென்னை விமான நிலையத்தில் நேற்று அம்மை பரவிய நாடுகளில் இருந்து வரும் பயணிகள் தீவிர பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் இருந்தால் பரிசோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    இதுகுறித்து பொது சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் செல்வ விநாயகம் கூறியதாவது:-

    தமிழகத்தில் குரங்கு அம்மை நோய் பாதிப்பு இதுவரையில் இல்லை. இந்நோய் பாதித்துள்ள நாடுகளில் இருந்து வரும் சர்வதேச பயணிகள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

    சென்னை, கோவை விமான நிலையங்களில் கண்காணிப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த அம்மை நோய் கொப்பளம் போல உருவாகும். அது உடலில் இருந்து விழும் வரை மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்படுவர்கள்.

    நோய் அறிகுறி இருந்தால் அவர்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள். சில நாட்கள் மருத்துவ கண்காணிப்புக்கு பின்னர் இயல்பு நிலைக்கு செல்வர். ஆனால் இதுவரையில் ஒருவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.

    பாதிப்புள்ள நாடுகள் மட்டுமின்றி எல்லையோர பகுதி, மாநிலம், மாவட்டங்களில் இருந்து வரும் பயணிகளுக்கு விமான நிலையத்தில் பரிசோனை நடத்தப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×