search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "குரங்கு அம்மை நோய்"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • குரங்கு அம்மை நோய் பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.
    • ஐதராபாத் மற்றும் டெல்லியிலும் குரங்கு அம்மை பாதிப்பு இருப்பது தெரியவந்தது.

    திருவனந்தபுரம்:

    வளைகுடா நாட்டில் இருந்து கேரளா வந்த 35 வயதான நபர் ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. அவருக்கு சிகிச்சை அளித்து வந்த நிலையில் மேலும் 2 பேருக்கு இதுபோன்ற பாதிப்பு ஏற்பட்டது.

    இந்த நிலையில் ஐதராபாத் மற்றும் டெல்லியிலும் குரங்கு அம்மை பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சுகாதார துறையினர் குரங்கு அம்மை நோய் பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.

    மேலும் கேரளா மற்றும் டெல்லியில் உள்ள விமான நிலையங்களில் குரங்கு அம்மை நோய் அறிகுறியுடன் வருவோரை கண்காணிக்கவும் சுகாதார துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    • ஆப்ரிக்கா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் பரவி வந்த இந்த குரங்கு அம்மை நோய் இந்தியாவிலும் நுழைந்துள்ளது.
    • டெல்லியில் பாதிப்புக்கு உள்ளானவர் எந்தவித சர்வதேச பயணமும் மேற்கொள்ளாதவர்.

    புதுடெல்லி:

    கொரோனாவை தொடர்ந்து தற்போது குரங்கு அம்மை நோய் உலக நாடுகளை அச்சுறுத்த தொடங்கி உள்ளது.

    தற்போது வரை உலகம் முழுவதும் 75-க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த நோய் பரவி உள்ளதால் உலக சுகாதார அமைப்பு குரங்கு அம்மை பரவலை 'உலகளாவிய சுகாதார அவசர நிலை' என்று அறிவித்துள்ளது.

    ஆப்ரிக்கா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் பரவி வந்த இந்த குரங்கு அம்மை நோய் இந்தியாவிலும் நுழைந்துள்ளது. முதலில் கேரளாவில் ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு கண்டறியப்பட்டது. தொடர்ந்து கேரளாவில் மேலும் 2 பேர், டெல்லியில் ஒருவருக்கும் குரங்கு அம்மை கண்டறியப்பட்டுள்ளது.

    இதில் டெல்லியில் பாதிப்புக்கு உள்ளானவர் எந்தவித சர்வதேச பயணமும் மேற்கொள்ளாதவர்.

    இதைத் தொடர்ந்து மத்திய அரசு குரங்கு அம்மை நோய் பரவலை தடுக்க நடவடிக்கைகளை தீவிரப்படுத்துமாறு அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளது.

    குரங்கு அம்மை பாதிக்கப்பட்டவர்களுக்கு உடல் அசதி, காய்ச்சல், உடல் முழுவதும் கொப்பளங்கள், தொண்டை புண், இருமல், தலைவலி, உடல் சோர்வு, கண் வலி அல்லது பார்வை மங்குதல், மூச்சு திணறல் உள்ளிட்டவை அறிகுறிகளாக கண்டறியப்பட்டுள்ளது.

    இந்த நோய் 6 முதல் 13 நாட்களில் தீவிரம் அடையலாம் எனவும் 2 முதல் 4 வாரங்கள் வரை நீடிக்கலாம் எனவும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

    மேலும் இந்த நோய் அனைத்து வயதினரையும் தாக்கும் என்றாலும், ஊட்டச்சத்து குறைபாடு, இணை நோய் பாதிப்பு கொண்டவர்கள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ளோர்கள், ஓரினச் சேர்க்கை வைத்துக் கொள்ளும் நபர்களை எளிதில் தாக்கும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

    குரங்கு அம்மைக்கு இதுவரை தடுப்பூசி எதுவும் கிடையாது. என்றாலும் பெரியம்மை வைரஸ் போலவே இதுவும் இருப்பதால் அந்த தடுப்பூசியே இதற்கும் பயன்படுத்தப்படுகிறது. இதனால் 80 சதவீதம் தீர்வு கிடைக்கிறது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

    இதற்கிடையே குரங்கு அம்மை நோயை பரிசோதனை செய்வதற்கான கருவிகளை தயாரிக்கும் பணிகள் இந்தியாவில் தீவிரப் படுத்தப்பட்டுள்ளன.

    தற்போதைய நிலவரப்படி குரங்கு அம்மையை பரிசோதனை செய்வதற்கு வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கருவிகள் தான் இந்தியாவில் உள்ள ஆய்வகங்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    குறிப்பாக புனேவில் உள்ள தேசிய வைராலஜி நிறுவனம் ஆய்வகம் உள்பட இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்கு உட்பட்ட 15 ஆய்வகங்களில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட கருவிகள் மூலமே குரங்கு அம்மை பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

    இதனால் பரிசோதனை கருவிகளை இந்தியாவிலேயே உற்பத்தி செய்யும் பணிகளை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

    கோவாவை சேர்ந்த மால்பியோ டயக்னாஸ் டிக்ஸ் என்ற நிறுவனம் இந்த பணிகளில் ஈடுபட்டுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • குரங்கு அம்மை நோய் பரவியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
    • 6 பேர் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

    திருப்பதி:

    உலக நாடுகளை தொடர்ந்து இந்தியாவில் தற்போது குரங்கு அம்மை நோய் பரவி வருகிறது.

    கேரளாவில் 3 பேர் குரங்கு அம்மைநோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இமாச்சல் பிரதேசம், மணாலிலிருந்து டெல்லிக்கு உறவினர் திருமணத்திற்கு வந்த 34 வயது வாலிபருக்கு குரங்கமை நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

    அவரது ரத்த மாதிரிகள் புனேயில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தனர். இதில் அவருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

    இதையடுத்து அவரை டெல்லியில் உள்ள லோக் நாயக் ஜெயபிரகாஷ் ஆஸ்பத்திரியில் தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் தெலுங்கானா மாநிலம் காமெட்டியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கு சொறி ஏற்பட்டதால் சந்தேகம் அடைந்த சுகாதாரத் துறை அதிகாரிகள் அவரை காமெட்டி அரசு ஆஸ்பத்திரியில் தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்தனர்.

    இதையடுத்து ஐதராபாத் அரசு ஆஸ்பத்திரிக்கு அவர் மாற்றப்பட்டார். வாலிபரின் ரத்த மாதிரி பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அதன் முடிவுகள் இன்று வந்தது. இதில் அவருக்கு குரங்கு அம்மை நோய் பரவியுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    இதையடுத்து அவருக்கு சிகிச்சை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

    மேலும் அவருடன் தொடர்பில் இருந்த 6 பேர் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

    • குரங்கு அம்மை நோய் புதிய வைரஸ் கிடையாது ஆப்பிரிக்காவில் 50 ஆண்டுகளாக உள்ளது.
    • வன விலங்குகளின் மாமிசம் சாப்பிடுவதாலும் இந்த நோய் மனிதர்களுக்கு எளிதாக பரவுகிறது.

    திருப்பதி:

    கொரோனா உலகை அச்சுறுத்தியது போல் தற்போது புதிய வகை நோயாக குரங்கு அம்மை உலகம் முழுவதிலும் வேகமாக பரவி வருகிறது.

    தற்போது வரை 70 நாடுகளில் 16 ஆயிரம் பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    குரங்கு அம்மை நோய் புதிய வைரஸ் கிடையாது ஆப்பிரிக்காவில் 50 ஆண்டுகளாக உள்ளது. இந்த நோய் விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவி வருகிறது.

    குரங்கம்மை நோய் 2 வகையாக உள்ளது ஒன்று மத்திய ஆப்பிரிக்கா குரங்கம்மை மற்றொன்று மேற்கு ஆப்பிரிக்கா குரங்கம்மை. இது ஆக்டோ பாக்ஸ் வைரஸ் குடும்ப வகையையை சார்ந்ததாகும். கொரோனா வைரஸ் கண்களுக்கு தெரியாது.ஆனால் குரங்கம்மை வைரஸ் பெரிய அளவில் உள்ளதால் கண்களுக்கு தெரியும்.

    மத்திய ஆப்பிரிக்காவில் காங்கோ என்ற இடத்தில் 1950-ம் ஆண்டு வனப்பகுதியை ஒட்டி உள்ள குடும்பத்தை சேர்ந்த 9 மாத குழந்தைக்கு குரங்கம்மை நோய் முதன் முதலில் பரவியது. வனப்பகுதியில் பலத்த மழை பெய்ததால் விலங்குகளிடம் இருந்து அங்குள்ள சில கிராமங்களில் உள்ள மக்களுக்கு இந்த நோய் எளிதில் பரவியது.

    வன விலங்குகளின் மாமிசம் சாப்பிடுவதாலும் இந்த நோய் மனிதர்களுக்கு எளிதாக பரவுகிறது.

    கடந்த 2003-ம் ஆண்டு இந்த வைரஸ் அமெரிக்காவுக்கு பரவியதால் 70 பேர் பாதிக்கப்பட்டனர்.

    இதையடுத்து மற்ற நாடுகளுக்கும் இந்த நோய் பரவி வருகிறது. மேலும் எலி, குரங்கு, வண்டுகள் மூலமும் பரவுகிறது. நோய் தொற்று ஏற்படுவது உடனடியாக தெரியாது. 6 முதல் 13 நாட்கள் கழித்து உடலில் சிறிய அளவில் புண்கள் ஏற்பட்டு சொறி ஏற்படும். மேலும் சளி, இருமல், கழுத்து வலி, உடல் வலி, தலைவலி உண்டாகும்.

    நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்களுக்கு 21 நாட்களுக்குப் பிறகு நோயின் தாக்கம் சிறிது சிறிதாக குறையும்.

    பி.சி.ஆர். சோதனை மூலம் இந்த நோய் தொற்றை கண்டறியலாம் இதற்கு முன்பு குரங்கம்மை பாதித்தவர்களில் 100-க்கு 10 பேர் என இறப்பு இருந்தது.

    தற்போது 100க்கு 3 பேர் மட்டுமே இறக்கின்றனர்.எமினியு குளோபிலின் என்ற ஆன்ட்டி பயாடிக் மூலம் இந்த நோயை குணப்படுத்த முடியும்.

    இந்தியாவில் தற்போது இமாச்சல் பிரதேசம், மணாலிலிருந்து டெல்லிக்கு உறவினர் திருமணத்திற்கு வந்த 34 வயது வாலிபருக்கு குரங்கமை நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

    அவரது ரத்த மாதிரிகள் புனேயில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தனர். இதில் அவருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

    இதையடுத்து அவர் டெல்லியில் உள்ள லோக் நாயக் ஜெயபிரகாஷ் ஆஸ்பத்திரியில் தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் தெலுங்கானா மாநிலம் காமெட்டியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கு சொறி ஏற்பட்டதால் சந்தேகம் அடைந்த சுகாதாரத் துறை அதிகாரிகள் அவரை காமெட்டி அரசு ஆஸ்பத்திரியில் தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்தனர்.

    இதையடுத்து ஐதராபாத் அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார். வாலிபரின் ரத்த மாதிரி பரிசோத னைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

    மேலும் அவருடன் தொடர்பில் இருந்த 6 பேர் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.

    • கேரளாவில் 3 பேருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    • குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ள டெல்லி நபர், சமீபத்தில் ஒரு விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கிறார்.

    புதுடெல்லி:

    கொரோனா பாதிப்பைத் தொடர்ந்து, குரங்கு அம்மை நோய் உலகம் முழுவதும் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. 75 நாடுகளில் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவிலும் இந்நோய் பரவி உள்ளது. கேரளாவில் 3 பேருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் கண்காணிக்கப்படுகின்றனர்.

    இந்நிலையில், டெல்லியில் இன்று ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேற்கு டெல்லியைச் சேர்ந்த அந்த நபருக்கு குரங்கு அம்மை நோய்க்கான அறிகுறி தென்பட்ட நிலையில், மவுலானா ஆசாத் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பரிசோதனையில் அவருக்கு தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் இந்தியாவில் குரங்கு அம்மை நோய் பாதிப்பு 4 ஆக உயர்ந்துள்ளது.

    குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ள டெல்லி நபர், வெளிநாட்டு பயணம் எதுவும் மேற்கொள்ளவில்லை. ஆனால், சமீபத்தில் இமாச்சல பிரதேச மாநிலம் மனாலியில் நடந்த விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்றதாக தகவல் வெளியாகி உள்ளது. எனவே, அந்த விருந்தில் பங்கேற்றவர்கள் குறித்த தகவல்கள் சேகரிக்கக்கப்படும் என தெரிகிறது. அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.

    • இந்தியாவிலேயே குரங்கு அம்மை நோய் அறிகுறி உள்ள ஒரே மாநிலமாக கேரளா உள்ளது.
    • கேரளா சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் நிலையில் குறைந்தபட்ச சோதனை கூட நடத்தப்படாமல் அவர்கள் அனுமதிக்கப்படு வதால் உள்ளூர் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்

    கொடைக்கானல்:

    மலைகளின் இளவரசி யான கொடைக்கானலுக்கு சீசன் முடிந்த நிலையிலும் சுற்றுலா பயணிகள் வருகை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. கடந்த சில வாரங்களாக ெகாடை க்கானலில் தொடர் சாரல் மழையும், இதமான சீதோஷ்ணமும் நிலவி வருகிறது.

    இதனை அனுபவிக்க தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். குறி ப்பாக கேரளாவில் இருந்து தினந்தோறும் ஆயிரக்கண க்கான சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வருகை தருகின்றனர்.

    கொரோனா கட்டுப்பாடு கள் விதிக்கப்பட்ட காலத்தில் வெள்ளி நீர் வீழ்ச்சி அருகே சோதனைச்சாவடி அமைக்க ப்பட்டு வெளி மாநில சுற்றுலா பயணிகள் கடுமை யான பரிசோதனைக்கு பிறகே அனுமதிக்கப்பட்ட னர்.

    குறிப்பாக கேரளாவில் இருந்து வருபவர்களுக்கு 2 டோஸ் தடுப்பூசி செலுத்திய தற்கான சான்று கட்டாயம் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது எந்தவித சோதனையும் நடத்தப்படு வது இல்லை.

    இதனால் அனைத்து சுற்றுலா பயணிகளும் தடையின்றி பல்வேறு இடங்களில் கூட்டம் கூட்ட மாக சுற்றி வருகின்றனர். குறைந்தபட்சம் அவர்கள் முக கவசம் கூட அணியாமல் சுற்றி வருகின்றனர்.

    கேரளாவில் குரங்கு அம்மை நோயால் 3 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவிலேயே குரங்கு அம்மை நோய் அறிகுறி உள்ள ஒரே மாநிலமாக கேரளா உள்ளது. இதனால் இரு மாநில எல்லைகளில் தீவிர பரிசோதனை நடத்த சுகாதாரத்துறை அறிவுறுத்தி வருகிறது. அதன்படி விமான நிலையங்களில் கடுமையான பரிசோதனை க்கு பிறகே பொதுமக்கள் வெளியேற்றப்பட்டு வரு கின்றனர்.

    ஏதேனும் அறிகுறி இருந்தால் அவர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை மற்றும் வீடுகளில் தனிமைபடுத்திக் கொள்ளுதல் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்படு கிறது. ஆனால் கொடை க்கானலில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான கேரளா சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் நிலையில் குறைந்தபட்ச சோதனை கூட நடத்தப்படாமல் அவர்கள் அனுமதிக்கப்படு வதால் உள்ளூர் மக்கள் அச்சமடைந்து வருகின்றனர்.

    திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கொடைக்கானலைச் சேர்ந்த பள்ளி மாணவிக்கு தொற்று உறுதியானது. இதனைத் தொடர்ந்து அந்த மாணவியுடன் பயின்ற 40 மாணவிகளுக்கும், பாடம் எடுத்த ஆசிரியர்களுக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் எத்தனை பேருக்கு தொற்று உறுதியாக உள்ளதோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ள நிலையில் குரங்கு அம்மை பீதியும் மக்களை வாட்டி வருகிறது.

    எனவே கடந்த கால ங்களில் மேற்கொள்ள ப்பட்டது போல வெளி மாநில சுற்றுலா பயணிகளை சோதனை செய்து கொடை க்கானல் நகருக்குள் அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

    • உலகம் முழுவதும் இதுவரை 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரை குரங்கு அம்மை தாக்கியுள்ளது.
    • உலக நாடுகளை மிரட்டி வரும் குரங்கு அம்மை இந்தியாவிலும் ஊடுருவியுள்ளது.

    ஜெனீவா:

    ஆப்பிரிக்காவில் முதல் முறையாகக் கண்டறியப்பட்ட குரங்கு அம்மை நோய், தற்போது பல்வேறு நாடுகளில் பரவியுள்ளது. குரங்கு அம்மை நோயால் உலகம் முழுவதும் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்களுக்கு இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில், குரங்கு அம்மை நோயை சர்வதேச அவசர நிலையாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.

    இது தொடர்பாக, உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் அதனாம் டெட்ரோஸ் கூறுகையில், இதுவரை 75 நாடுகளைச் சேர்ந்த 16 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நோய்க்கு 5 பேர் வரை பலியாகி உள்ளனர். பல்வேறு நாடுகளில் பரவி வரும் குரங்கு அம்மை நோயைக் கட்டுப்படுத்த தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு உலக நாடுகளை கேட்டுக் கொண்டுள்ளோம் என்றார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • குரங்கு அம்மை நோய் பரவலை கட்டுப்படுத்த சுகாதார துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
    • கேரளா வந்த 35 வயதான நபருக்கு குரங்கு அம்மை நோய் அறிகுறி இருந்தது தெரியவந்தது.

    திருவனந்தபுரம்:

    அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் வளைகுடா நாடுகளில் பரவி வரும் குரங்கு அம்மை நோய், கேரளா மாநிலத்திலும் பரவி உள்ளது.

    வளைகுடா நாட்டில் இருந்து கேரளா வந்த நபருக்கு முதன்முதலில் குரங்கு அம்மை நோய் பாதிப்பு கண்டறியப்பட்டது. உடனடியாக அவர் தனிமை படுத்தப்பட்டார். இதுபோல மேலும் ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் இருப்பது தெரியவந்தது. அவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இந்த நிலையில் கடந்த 6-ந் தேதி வளைகுடா நாட்டில் இருந்து கேரளா வந்த 35 வயதான நபருக்கு குரங்கு அம்மை நோய் அறிகுறி இருந்தது தெரியவந்தது. அவரது ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்ப பட்டது. இதில் அவருக்கும் நோய் பாதிப்பு இருப்பது உறுதி ஆனது.

    கேரளாவில் 3 பேருக்கு குரங்கு அம்மை பாதிப்பு இருப்பது உறுதியாகி இருப்பதால் மாநில சுகாதார துறையினர் நோய் மேலும் பரவாமல் தடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு உள்ளனர். இதுபற்றி சுகாதார துறை மந்திரி வீணா ஜார்ஜ் கூறியதாவது:-

    கேரளாவில் குரங்கு அம்மை நோய் பரவலை கட்டுப்படுத்த சுகாதார துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. நோய் பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் யார்-யார்? என்பதை கண்டறியும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதில் யாருக்காவது அறிகுறி இருப்பது தெரியவந்தால், அவர்களின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனை செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • குரங்கு அம்மை நோய் 60க்கு மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது.
    • குரங்கு அம்மையின் பாதிப்பு இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளது.

    ஜெனீவா:

    ஆப்பிரிக்க நாடுகளில் பரவிய குரங்கு அம்மை நோய் தற்போது ஆஸ்திரேலியா, அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி வருகிறது.

    குரங்கு அம்மையின் பாதிப்பு இந்தியாவிலும் கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, நாடு முழுவதும் தீவிர கண்காணிப்பு, முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    தமிழகத்தில் முக்கிய நகரங்களில் உள்ள விமான நிலையங்களில குரங்கு அம்மைநோய் தடுப்பு கண்காணிப்பு மையம் அமைக்கப் பட்டு உள்ளது.

    இந்நிலையில், உலக அளவில் குரங்கு அம்மை நோயால் பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆயிரத்தைக் கடந்துள்ளது. ஆப்பிரிக்காவில் 5 பேர் உயிரிழந்துள்ளனர் என உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெட்ரஸ் அதனோம் தெரிவித்துள்ளார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கேரள மாநிலத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
    • போலீசார், வருவாய்த்துறை, சுகாதாரத்துறை அடங்கிய குழுவினர் 24 மணி நேரமும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    கேரள மாநிலத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் அங்கு வெளிநாட்டில் இருந்து வந்த 2 பேருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு கண்டறியப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    எனவே கேரளாவில் இருந்து கோவை வரும் வாகனங்கள் தீவிர சோதனைகளுக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றன. கோவை மாவட்டத்தில் கேரள எல்லையை ஒட்டி உள்ள 13 சோதனைச்சாவடிகளும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டுவருகிறது.

    அங்கு போலீசார், வருவாய்த்துறை, சுகாதாரத்துறை அடங்கிய குழுவினர் 24 மணி நேரமும் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

    கோவை வாளையார், வேலந்தாவலம், பொள்ளாச்சியில் உள்ள 2 சோதனைச்சாவடிகள், வால்பாறை, ஆனைக்கட்டி, ஆனைமலை ஆகிய பகுதிகளில் உள்ள 13 முக்கிய சோதனைச்சாவடிகளில் தீவிர வாகன சோதனை நடத்தப்படுகிறது.

    இதுகுறித்து மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-

    கேரளாவில் இருந்து கோவை வருபவர்களுக்கு கொரோனா அறிகுறி மற்றும் குரங்கு அம்மை நோய் அறிகுறிகள் உள்ளதா? என சுகாதாரத்துறை அதிகாரிகள் மூலம் சோதனை நடத்தப்படுகிறது.

    அறிகுறிகளுடன் யாராவது வந்தால் அவர்கள் உடனடியாக தடுத்து நிறுத்தப்படுவார்கள்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    கோவை மாவட்டம் வால்பாறைக்கு கேரள மாநிலம் சாலக்குடியில் இருந்து மளுக்கம்பாறை வழியாக வரும் வாகனங்களை சுகாதாரத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    கேரளாவில் இருந்து வருபவர்களின் கை, கால் மற்றும் உடலில் கொப்புளங்கள் உள்ளதா? என்று பரிசோதனை செய்யப்படுகிறது. உடல் வெப்ப நிலை பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

    மேலும் வாகன ஓட்டுனர்களின் உரிம எண், செல்போன் எண், வாகனங்களின் பதிவு எண் ஆகியவற்றை பதிவு செய்த பின்னரே அவர்கள் வால்பாறைக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.

    சேக்கல் முடி சோதனைச்சாவடியில் வால்பாறை அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களின் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் பாபுலட்சுமண் தலைமையில் சோலையாறு நகர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் போலீசார் அடங்கிய குழுவினர் நேற்று முதல் சோதனையில் ஈடுபட்டு உள்ளனர்.

    இது குறித்து நகராட்சி ஆணையாளர் பாலு கூறியதாவது:-

    வால்பாறை பகுதியில் உள்ள பொதுமக்கள் பலரும் கேரளாவிற்கு அடிக்கடி சென்று வரக்கூடிய நிலை உள்ளது. கேரள மாநிலத்தை சேர்ந்த தனியார் பஸ் தினந்தோறும் கேரள மாநிலம் சாலக்குடியில் இருந்து வால்பாறைக்கு வந்து செல்கிறது. தற்போது கேரளாவில் குரங்கு அம்மை பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் வால்பாறை மற்றும் சுற்று வட்டார பகுதி மக்கள் கவனமாக இருக்கவேண்டும்.

    யாருக்காவது நோய் அறிகுறி இருந்தால் உடனடியாக அரசு ஆரம்ப சுகாதார நிலையம், அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • உலகளவில் 63 நாடுகளில் குரங்கு அம்மை நோயின் தாக்கம் அதிகமாக உள்ளது.
    • 15-க்கும் மேற்பட்ட படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது.

    கோவை:

    உலகளவில் 63 நாடுகளில் குரங்கு அம்மை நோயின் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்தியாவில் கேரளா, தெலுங்கானா ஆகிய மாநிலத்தில் தலா ஒருவருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.

    இதைத்தொடர்ந்து சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய பன்னாட்டு விமான நிலையங்களில் சோதனை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. குரங்கு அம்மை நோய் பாதிப்புக்குள்ளான நாடுகளில் இருந்து வரும் பயணிகள் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகிறார்கள்.

    இந்தநிலையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பி ரமணியன், கோவையில் நேற்று ஆய்வு மேற்கொ ண்டார். கோவை விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள குரங்கு அம்மை நோய் தடுப்பு கண்காணிப்பு மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது அரவர் கூறுகையில் கோவை அரசு ஆஸ்பத்திரியில் குரங்கு அம்மைக்கு சிகிச்சை அளிப்பதற்காக சிறப்பு வார்டு அமைக்கப்பட உள்ளதாக கூறினார். அதன்படி கோவை அரசு ஆஸ்பத்திரியில் முன்எச்சரிக்கை நடவடிக்கையாக சிறப்பு வார்டு ஒன்று திறக்கப்பட்டு உள்ளது. 15-க்கும் மேற்பட்ட படுக்கைகள் அங்கு போடப்பட்டு தயார் நிலையில் உள்ளது. நோய் பாதிப்புக்கு ள்ளான வர்கள் வந்தால் அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதற்கான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

    கேரளா- தமிழகம் இடையே பொள்ளாச்சி, வாளையாறு உள்பட 13 இடங்களில் தரை மார்க்கமாக கேரளாவில் இருந்து தமிழகத்துக்கு வந்து செல்வோரை சோதனை மையம் அமைத்து கண்காணித்து வருகிறார்கள். இங்கு முகங்களிலோ அல்லது முழங்கைக்கு கீழேயோ கொப்பளங்கள் வந்தால் அவர்களை உடனடியாக பரிசோதிப்பது என்ற நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது.

    • நமது அண்டை நாடான இலங்கை ஊரடங்கிற்கு பிறகு திவாலாகிவிட்டது.
    • குரங்கு அம்மை கர்நாடகத்தில் பரவாமல் தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.

    பெங்களூரு:

    சுகாதாரத்துறை மந்திரி சுதாகர் பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

    முதல்-மந்திரியாக பசவராஜ் பொம்மை பொறுப்பேற்று வருகிற 28-ந்தேதியுடன் ஓராண்டு நிறைவடைகிறது. இதையொட்டி தொட்டபள்ளாப்புராவில் பிரமாண்ட மாநாடு நடத்த முடிவு செய்துள்ளோம். இதில் 4 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கிறோம். கடந்த ஓராண்டில் பசவராஜ் பொம்மை சிறப்பான முறையில் ஆட்சி நிர்வாகத்தை நடத்தியுள்ளார்.

    இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள் என அனைத்து தரப்பினருக்கும் திட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா வைரஸ் பரவி பெரும் சவால் ஏற்பட்டது. அந்த சவாலை வெற்றிகரமாக எதிர்கொண்டு வளர்ச்சி பணிகளை மேற்கொண்டுள்ளோம். நமது அண்டை நாடான இலங்கை ஊரடங்கிற்கு பிறகு திவாலாகிவிட்டது.

    ஆனால் அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் இந்தியா முக்கிய இடத்தை பிடித்துள்ளது. கர்நாடகத்தில் குரங்கு அம்மை பரவவில்லை. விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களுக்கு வெளிநாடுகளில் இருந்து வருகிறவர்களை கண்காணிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளோம்.

    இந்த குரங்கு அம்மை கர்நாடகத்தில் பரவாமல் தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன. ஜெயதேவா ஆஸ்பத்திரி இயக்குனராக டாக்டர் மஞ்சுநாத் பணியாற்றி வருகிறார். அவரது பணியை நீட்டிப்பு செய்வது குறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை முடிவு செய்வார்.

    இவ்வாறு சுதாகர் கூறினார்.

    ×