search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    கேரளாவைத் தொடர்ந்து டெல்லியிலும் குரங்கு அம்மை நோய்- இந்தியாவில் பாதிப்பு 4 ஆக உயர்வு
    X

    கேரளாவைத் தொடர்ந்து டெல்லியிலும் குரங்கு அம்மை நோய்- இந்தியாவில் பாதிப்பு 4 ஆக உயர்வு

    • கேரளாவில் 3 பேருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    • குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ள டெல்லி நபர், சமீபத்தில் ஒரு விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்றிருக்கிறார்.

    புதுடெல்லி:

    கொரோனா பாதிப்பைத் தொடர்ந்து, குரங்கு அம்மை நோய் உலகம் முழுவதும் பரவி பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. 75 நாடுகளில் 16 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவிலும் இந்நோய் பரவி உள்ளது. கேரளாவில் 3 பேருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் கண்காணிக்கப்படுகின்றனர்.

    இந்நிலையில், டெல்லியில் இன்று ஒருவருக்கு குரங்கு அம்மை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேற்கு டெல்லியைச் சேர்ந்த அந்த நபருக்கு குரங்கு அம்மை நோய்க்கான அறிகுறி தென்பட்ட நிலையில், மவுலானா ஆசாத் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பரிசோதனையில் அவருக்கு தொற்று இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டது. இதன்மூலம் இந்தியாவில் குரங்கு அம்மை நோய் பாதிப்பு 4 ஆக உயர்ந்துள்ளது.

    குரங்கு அம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ள டெல்லி நபர், வெளிநாட்டு பயணம் எதுவும் மேற்கொள்ளவில்லை. ஆனால், சமீபத்தில் இமாச்சல பிரதேச மாநிலம் மனாலியில் நடந்த விருந்து நிகழ்ச்சியில் பங்கேற்றதாக தகவல் வெளியாகி உள்ளது. எனவே, அந்த விருந்தில் பங்கேற்றவர்கள் குறித்த தகவல்கள் சேகரிக்கக்கப்படும் என தெரிகிறது. அவருடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்களும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவார்கள்.

    Next Story
    ×