என் மலர்
நீங்கள் தேடியது "Monkeypox"
- இங்கிலாந்து, ஸ்பெயின், போர்ச்சுகல், கனடா, அமெரிக்கா உள்ளிட்ட 50 நாடுகளில் குரங்கு அம்மை பாதித்துள்ளது.
- உலக அளவில் 3,417க்கும் மேற்பட்டோர் குரங்கு அம்மை பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர்.
ஜெனீவா:
உலகம் முழுவதும் குரங்கு அம்மையால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது. இதுவரை 58 நாடுகளில் இந்த நோய் தாக்கியுள்ளது. உலகளவில், 3,417க்கும் மேற்பட்டோர் குரங்கு அம்மை பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர்.
இந்நிலையில், குரங்கு அம்மை நோய் தொற்று பரவல் தொடர்பாக அவசரக் கூட்டத்தை நடத்த உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்திருந்தது. குரங்கு அம்மை நோய் தொற்றானது, சர்வதேச அளவில், கொரோனா போன்று பொது சுகாதார அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட வேண்டுமா என்பதை ஆராய்ந்து முடிவெடுக்க இந்தக் கூட்டம் நடைபெற்றது.
இதுதொடர்பாக, உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதனோம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், குரங்கு அம்மை நோய் பரவுவது அசாதாரணமானது மற்றும் கவலைக்குரியது என தெரிவித்தார்.
இதுகுறித்து உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:
குரங்கு அம்மை நோய் பாதிப்பை சர்வதேச அளவில் பொது சுகாதார அவசர நிலையாக உலக சுகாதார அமைப்பு அறிவிக்கிறது. இதைத் தொடர்ந்து, இந்த தொற்றுநோய் குறிப்பிட்ட ஒரு நாடு அல்லது பிராந்தியத்திற்கு மட்டும் பரவக்கூடியதல்ல என்பது தெளிவாகிறது.
சமூகப் பரவல் எங்கு நடந்தாலும் உடனடி நடவடிக்கைகளால் கவனிக்கப்பட வேண்டும். இந்த நோயால் சிறிய பாதிப்பு ஏற்படுவதை உலகம் உறுதி செய்வதற்காகவே அறிவிக்கப்பட்டுள்ளது.
கடுமையான வலி, பயம், கண் பார்வை இழப்பு மற்றும் உயிரிழப்பு ஆகிய பாதிப்புகள் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களில் காணப்படுகின்றன.
தற்போதைய சூழலில் சமூக பரவலாக நோய் தொற்றின் வேகம் விரிவடைவதால் இதுவரை காப்பாற்றப்பட்ட குழந்தைகளுக்கு கூட தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. வளர்ப்பு பிராணிகள் உள்பட வனவிலங்குகளுக்கு பரவும் ஆபத்தும் உள்ளது. இது உலகம் முழுவதும் விரிவடையும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
- இங்கிலாந்து, ஸ்பெயின், போர்ச்சுகல், கனடா, அமெரிக்கா உள்பட 20க்கு மேற்பட்ட நாடுகளில் குரங்கு அம்மை பாதித்துள்ளது.
- உலக நாடுகளில் குரங்கு அம்மை நோயை கண்காணிக்க அனைத்து அரசுகளுக்கும் உலக சுகாதார மையம் அறிவுறுத்தியது.
பெய்ரூட்:
ஆப்பிரிக்கா நாடுகளில் காணப்படும் குரங்கு அம்மை நோய் தற்போது பல உலக நாடுகளில் பரவி வருகிறது. இதன் காரணமாக பல நாடுகளில் தீவிர கண்காணிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இங்கிலாந்து, ஸ்பெயின், போர்ச்சுகல், கனடா, அமெரிக்கா உள்ளிட்ட 20-க்கு மேற்பட்ட நாடுகளில் குரங்கு அம்மை பாதித்துள்ளது என உலக சுகாதார அமைப்பு அறிவித்திருந்தது.
இந்நிலையில், லெபனான் நாட்டில் முதல் முறையாக ஒருவருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது என அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
வெளிநாட்டில் இருந்து திரும்பிய நபருக்கு குரங்கு அம்மை நோய் பாதிப்பு கண்டறியப்பட்டதும், அவர் தனிமையில் சிகிச்சை பெற்று வருகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.