search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமைச்சர் மாசுப்பிரமணியன்"

    • 5,95,660 பயனாளிகளுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடப்பட்டது.
    • 37 மெகா தடுப்பூசி முகாம்கள் மூலம் 5.43 கோடி பேர் பயனடைந்துள்ளனர்.

    மாநில மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

    தமிழ்நாட்டில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்களில் என மொத்தம் 50,000 சிறப்பு மெகா கொரோனா தடுப்பூசி முகாம்கள் நேற்று நடைபெற்றது.

    இதில் 12 வயதிற்கு மேற்பட்ட 7,75,193 பயனாளிகளுக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. முதல் தவணையாக 29,729 பயனாளிகளுக்கும் இரண்டாவது தவணையாக 1,49,804 பயனாளிகளுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. 5,95,660 பயனாளிகளுக்கு

    பூஸ்டர் டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 18 வயதிற்கு மேற்பட்டோரில் 96.59% பேருக்கு முதல் தவணையாகவும் 91.61% பேர்களுக்கு இரண்டாம் தவணையாகவும் கொரோனா தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ள.

    இதுவரை நடைபெற்ற 37 மெகா கொரோனா தடுப்பூசி முகாம்களில் 5 கோடியே 43 லட்சம் பயனாளிகள் பயனடைந்துள்ளார்கள். இன்று (26.09.2022) கொரோனா தடுப்பூசி பணிகள் நடைபெறாது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

    • பன்றி காய்ச்சல் வந்தால் 3 முதல் 5 நாட்களுக்குள் சரியாகி விடும்,
    • பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டிய அவசியம் எழவில்லை.

    தமிழகம் வந்துள்ள மேகாலயா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஜேம்ஸ் ஜே.கே.சங்கமா சென்னையில் மாநில மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனை சந்தித்தார். அப்போது இரு மாநிலங்கள் இடையே ஒருங்கிணைந்த மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல அவசர சிகிச்சை பயிற்சி, உயிர்காக்கும் மயக்கவியல் திறன் பயிற்சி மற்றும் மீயொலி கருவி பயிற்சி தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. 


    பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்ததாவது: பன்றி காய்ச்சால் தமிழ்நாடு முழுவதும் ஜனவரி மாதம் முதல் நேற்று வரை 1044 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். இன்று மட்டும் 368 நபர்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 5 வயதிற்கு குறைவாக 42 குழுந்தைகளும், 5 முதல் 14 வயதிற்குட்பட்டவர்கள் 65 பேரும், 15 முதல் 65 வயதிற்குட்பட்டோர்கள் 192 பேரும், 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் 69 பேரும் அடங்குவர்.

    மேலும், 89 பேர் வீடுகளில் தனிமைபடுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். தனியார் மருத்துவமனைகளில் பன்றிக் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருபவர்கள் 264 பேர், அரசு மருத்துவமனைகளில் 15 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்த காய்ச்சல் 3 முதல் 5 நாட்களுக்குள் சரியாகிவிடும், எனவே பதற்றமடைய வேண்டிய அவசியம் இல்லை.

    மேலும் பெற்றோர்கள் காய்சலினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளை, காய்ச்சல் சரியாகும் வரை பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டாம் என ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டிய அவசியம் எழவில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • முதல் தவணையாக 78,337 பயனாளிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டது.
    • பூஸ்டர் தடுப்பூசி 8,59,628 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

    தமிழகம் முழுவதும் நேற்று 50,000 சிறப்பு மெகா கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றது. இது தொடர்பாக மாநில மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை மந்திரி மா.சுப்பிரமணியன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: 


    ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் மற்றும் முக்கிய இடங்களில் என தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றது. இதுவரை நடைபெற்ற 34 மெகா கோவிட் தடுப்பூசி முகாம்களில் 5 கோடியே 10 லட்சம் பயனாளிகள் பயனடைந்துள்ளார்கள்.

    நேற்று நடைபெற்ற முகாமில் 12 வயதிற்கு மேற்பட்ட12,28,993 பயனாளிகளுக்கு கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. இதில் முதல் தவணையாக 78,337 பயனாளிகளுக்கும் இரண்டாவது தவணையாக 2,91,028 பயனாளிகளுக்கும் மற்றும் 8,59,628 பயனாளிகளுக்கு பூஸ்டர் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் இதுவரை 18 வயதிற்கு மேற்பட்டோரில் 96.39% முதல் தவணையாகவும் 90.61% இரண்டாம் தவணையாகவும் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளது. நேற்று தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றதால் இன்று கொரோனா தடுப்பூசி பணிகள் நடைபெறாது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • பிற மாநிலத்தவரும் வியக்கும் வகையில் பணிகள் நடைபெறுகின்றன.
    • 1,055 கிலோ மீட்டர் நீளத்திற்கு மழை நீர் வடிகால் அமைக்கப்படுகிறது.

    சென்னை தினம் கொண்டாட்டத்தையொட்டி பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை சாலையில் கலாச்சார நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது,

    சென்னையில் 16 நீர்நிலைகள் இருந்தன. இந்த நீர்நிலைகளில் கலந்துள்ள கழிவுநீர் அகற்றி அவற்றை மீண்டும் தூய்மைப்படுத்தி நீர்நிலைகளாக மாற்றும் பணிகள் முதலமைச்சர் உத்தரவின் பேரில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சென்னையில் மட்டும் சுமார் 1,055 கிலோ மீட்டர் நீளத்திற்கு மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    தமிழ்நாடு முதலமைச்சர், சென்னை மேயராக இருந்தபோதுதான் சென்னையில் மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன துரிதப்படுத்தப்பட்டன. பிற மாநிலத்தவரும் வியக்கும் வகையில் சென்னையில் அனைத்து சேவை துறைகளையும் ஒருங்கிணைத்து சாலைகள், தெருவிளக்குகள், குடிநீர் வசதிகள் மற்றும் பல்வேறு திட்டப் பணிகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.

    ஐரோப்பிய நாடுகளில் கிறிஸ்துமஸ் போன்ற முக்கிய திருவிழா நாட்களில் இது போன்ற சிறப்பு அங்காடிகள் அமைக்கப்பட்டு கலாச்சார நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம். அந்த வகையில் சென்னை தினம் சென்னை மாநகருக்கு பெருமை சேர்க்கும் வகையில் கலாச்சார நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • உள்துறை அமைச்சகத்தின் கேள்விகளுக்கு தமிழக அரசு பதில் அளித்துள்ளது.
    • திருமங்கலம் அரசு ஓமியோபதி மருத்துவக் கல்லூரியில் தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆய்வு.

     திருமங்கலம்:

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அரசு ஓமியோபதி மருத்துவக்கல்லூரியில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியதாவது:

    தற்போது இந்த ஓமியோபதி கல்லூரியில் 300 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். 7 ஏக்கர் பரப்பளவில் இந்த கல்லூரி அமைந்துள்ளது. கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டதால் கல்லூரி தாழ்வான பகுதியாகி விட்டது.

    இதனால் மழைக்காலங்களில் மாதக்கணக்கில் மழைநீர் தேங்கி நிற்கிறது. கல்லூரி கட்டிடங்கள், வகுப்பறைகள், ஆய்வகம் ஆகியவை பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

    இது குறித்து ஆய்வு செய்வதற்காக, கலெக்டர் தலைமையில் தியாகராஜர் பொறியியல் கல்லூரியை சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர்களைக் கொண்டு 10 தினங்களுக்குள் இந்த இடத்தில் ஆய்வு நடத்த உள்ளனர்.

    ஆய்வறிக்கையின்படி மழை காலங்களில் தண்ணீர் தேங்கி கட்டிடத்திற்கு சேதம் ஏற்படும் என தெரிய வந்தால், புதிய கட்டிடம் கட்ட முடிவு செய்யப்படும். இதற்கு கல்லூரி நிர்வாகம் மாணவப் பிரதிநிதிகள் உள்ளாட்சி அமைப்பினர் மாவட்ட நிர்வாகம் ஒப்புதல் பெற்று இந்த முடிவு செய்யப்படும்.

    அவர்கள் அளிக்கும் அறிக்கையின் படி ரூ.60 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிட வளாகம் கட்டப்படும். அந்தப் பணிகள் நிறைவடைய சுமார் 2 ஆண்டுகள் ஆகும்.

    அதுவரை கல்லூரியில் படிக்கும் மருத்துவ மாணவர்களின் படிப்பு பாதிக்காத வகையில் அருகே உள்ள விருதுநகர் மற்றும் திண்டுக்கல் பகுதியில் உள்ள மருத்துவ கல்லூரியில் இடம் கேட்க இந்திய மருத்துவ கவுன்சில் ஆணையாளரின் அனுமதி பெறும்படி வலியுறுத்தியுள்ளேன்.

    நீட் தேர்வில் இருந்து தமிழகம் விலக்கு பெறுவதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. இது தொடர்பாக உள்துறை அமைச்சகம் சில கேள்விகளை கேட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு சார்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.

    உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய தமிழகத்தை சேர்ந்த மருத்துவ மாணவர்கள் படிப்பை தொடர்வது குறித்து உதவ வேண்டும் என்று மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • தமிழகத்தில் குரங்கு அம்மை நோய் பாதிப்பு இல்லை.
    • தொற்று கண்டறியப்பட்டால் அவர்களை தனிமைப்படுத்த ஏற்பாடு.

    கோவையில் உள்ள பன்னாட்டு விமான நிலையத்தில் குரங்கு அம்மை நோய் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக மேற்கொள்ளப் பட்டு வரும் கண்காணிப்பு பணிகளை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று ஆய்வு செய்தார்.

    பின்னர் செய்தியாளர்களுக்கு அமைச்சர் பேட்டி அளித்தார். அப்போது அவர் தெரிவித்துள்ளதாவது:

    உலகளவில் 63 நாடுகளில் குரங்கு அம்மை நோயின் தாக்கம் அதிகமாக உள்ளது. நமது நாட்டில் கேரளா, தெலுங்கானா ஆகிய மாநிலத்தில் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. தமிழகத்தில் யாருக்கும் குரங்கு அம்மை பாதிப்பு இல்லை

    சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய பகுதிகளில் உள்ள பன்னாட்டு விமான நிலையங்களில் குரங்கு அம்மை பாதிப்பு உள்ள நாடுகளில் இருந்து வரும் வெளிநாட்டு பயணிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.

    அதன் அடிப்படையில் கோவை விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கண்காணிப்பு பணிகள் ஆய்வு செய்யப்பட்டது. கோவை விமான நிலையத்தில் காலை மற்றும் மாலை என 2 வெளிநாட்டு விமானங்கள் வருகின்றன.

    இந்த மாதத்தில் பயணிகளுக்கு நடத்தப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனையில் இதுவரை யாருக்கும் குரங்கு அம்மை அல்லது கொரோனா தொற்று கண்டறியப்படவில்லை.

    யாருக்காவது தொற்று கண்டறியப்பட்டால் அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க ஒரு படுக்கை வசதியுடன் கூடிய அறை கோவை விமான நிலையத்தில் தயார் நிலையில் உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ×