search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "minister subramaniyan"

    • தமிழகத்தில் குரங்கு அம்மை நோய் பாதிப்பு இல்லை.
    • தொற்று கண்டறியப்பட்டால் அவர்களை தனிமைப்படுத்த ஏற்பாடு.

    கோவையில் உள்ள பன்னாட்டு விமான நிலையத்தில் குரங்கு அம்மை நோய் தடுப்பு நடவடிக்கை தொடர்பாக மேற்கொள்ளப் பட்டு வரும் கண்காணிப்பு பணிகளை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று ஆய்வு செய்தார்.

    பின்னர் செய்தியாளர்களுக்கு அமைச்சர் பேட்டி அளித்தார். அப்போது அவர் தெரிவித்துள்ளதாவது:

    உலகளவில் 63 நாடுகளில் குரங்கு அம்மை நோயின் தாக்கம் அதிகமாக உள்ளது. நமது நாட்டில் கேரளா, தெலுங்கானா ஆகிய மாநிலத்தில் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. தமிழகத்தில் யாருக்கும் குரங்கு அம்மை பாதிப்பு இல்லை

    சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய பகுதிகளில் உள்ள பன்னாட்டு விமான நிலையங்களில் குரங்கு அம்மை பாதிப்பு உள்ள நாடுகளில் இருந்து வரும் வெளிநாட்டு பயணிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறார்கள்.

    அதன் அடிப்படையில் கோவை விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கண்காணிப்பு பணிகள் ஆய்வு செய்யப்பட்டது. கோவை விமான நிலையத்தில் காலை மற்றும் மாலை என 2 வெளிநாட்டு விமானங்கள் வருகின்றன.

    இந்த மாதத்தில் பயணிகளுக்கு நடத்தப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனையில் இதுவரை யாருக்கும் குரங்கு அம்மை அல்லது கொரோனா தொற்று கண்டறியப்படவில்லை.

    யாருக்காவது தொற்று கண்டறியப்பட்டால் அவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிக்க ஒரு படுக்கை வசதியுடன் கூடிய அறை கோவை விமான நிலையத்தில் தயார் நிலையில் உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ×