search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அமைச்சர் சுப்பிரமணியன்"

    • மருத்துவ பட்ட மேற்படிப்புக்கான தரவரிசைப்பட்டியல் வெளியிடப்பட்டன.
    • மருத்துவ மாணவர்கள், பல் மருத்துவ மாணவர்கள் சேர்க்கைக்கு நேற்று வரை விண்ணப்பங்கள் பெற பதிவு செய்தவர்கள் 21,183 ஆகவும், இதுவரை 12,429 பூர்த்தி செய்த விண்ணப்பங்களும் பெறப்பட்டுள்ளது.

    சென்னை:

    சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை அலுவலகத்தில், 2022-2023-ம் ஆண்டிற்கான மருத்துவ பட்ட மேற்படிப்பு, பட்டய படிப்பு மற்றும் பல் மருத்துவ பட்ட மேற்படிப்பு மற்றும் தேசிய வாரிய பட்ட படிப்பிற்கான தரவரிசைப் பட்டியலை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    மருத்துவ பட்ட மேற்படிப்புக்கான தரவரிசைப்பட்டியல் வெளியிடப்பட்டன. இவை அனைத்திற்கான கலந்தாய்வு இணையதள வாயிலாக நடைபெறும். கலந்தாய்வு அட்டவணை பட்டியல் இணையதளத்தில் வெளியிடப்படும். மருத்துவ பட்ட மேற்படிப்பு, பட்டய படிப்பு, மேற்படிப்புகளுக்கான அரசு கல்லூரிகளில் 1162 இடங்களும், மருத்துவ பட்ட, பட்டய, மேற்படிப்புகளுக்கான நிர்வாக கல்லூரிகளில் 763 இடங்களும், பல் மருத்துவ பட்ட மேற்படிப்பிற்கான அரசு கல்லூரிகளில் 31 இடங்களும், பல் மருத்துவ பட்ட மேற்படிப்பிற்கான சுயநிதி கல்லூரிகளில் 296 இடங்களும், தேசிய வாரிய பட்டபடிப்பு இடங்கள் 94 ஆக மொத்தம் 2,346 இடங்களும் உள்ளன. விண்ணப்பித்த மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 11,178 ஆகவும் உள்ளன.

    மேலும், மருத்துவ மாணவர்கள் மற்றும் பல் மருத்துவ மாணவர்கள் சேர்க்கைக்கு நேற்று வரை விண்ணப்பங்கள் பெற பதிவு செய்தவர்கள் 21,183 ஆகவும், இதுவரை 12,429 பூர்த்தி செய்த விண்ணப்பங்களும் பெறப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் முதன்மைச் செயலாளர் ப. செந்தில்குமார், மருத்துவக் கல்வி இயக்குநர்நாராயண பாபு, மருத்துவக்கல்வி தேர்வுக்குழு செயலாளர் முத்துச்செல்வன், மருத்துவக் கல்வி துணை இயக்குநர் மரு.சிவராஜ் மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    • ஈரோடு மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் சோமசுந்தரம் முன்னிலை வகித்தார்.
    • கர்ப்பிணி பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் பொது மக்களுக்கு மருத்துவ நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் தாளவாடி ஓசூர் மலை கிராமத்தில் ஹீமோகுளோபினோபதி திட்ட விரிவாக்கம் முகாம் மற்றும் இருவாரகால தீவிரமான வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்துதல் திட்டம் தொடக்க விழா இன்று நடந்தது.

    நிகழ்ச்சிக்கு கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தலைமை தாங்கினார். ஈரோடு மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் சோமசுந்தரம் முன்னிலை வகித்தார். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு ஹீமோகுளோபினோபதி திட்ட விரிவாக்க முகாமை தொடங்கி வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

    இதில் கர்ப்பிணி பெண்களுக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் பொது மக்களுக்கு மருத்துவ நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் தாளவாடியில் நேரடி கள ஆய்வு தொழுநோய் கண்டுபிடிப்பு பணியில் ஈடுபடும் முன்கள பணியாளர்களின் வழிகாட்டி கையேடு வெளியிடப்பட்டது.

    மேலும் தொழுநோயில் இருந்து குணமடைந்த 40 மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்ட ஊன தடுப்பு சிகிச்சை முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டு சுய பாதுகாப்பு முதல் உதவி சிகிச்சை பெட்டகம், மாதாந்திர பராமரிப்பு உதவித்தொகை ஆணை, மறு சீரமைப்பு அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நபர்களுக்கு அரசு உதவித்தொகை காசோலை, 2 மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை கால் உள்பட பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

    பொதுமக்கள் கலந்து கொண்ட தோல் சிகிச்சை முகாம், பள்ளி மாணவர்களுக்கான தொழுநோய் பரிசோதனை முகாமை பார்வையிட்டார். இதேபோல் தொழுநோய் விழிப்புணர்வு கண்காட்சி, பள்ளி மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி ஆகியவற்றையும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டார்.

    நிகழ்ச்சியில் அந்தியூர் செல்வராஜ் எம்.பி., ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ, மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இயக்குனர் குருநாதன், மருத்துவம் மற்றும் ஊரக நலத்துறை (தொழுநோய் பொறுப்பு) கூடுதல் இயக்குனர் அமுதா, தமிழ்நாடு கேபிள் டிவி நிறுவன தலைவர் குறிஞ்சி என்.சிவகுமார், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் நவமணி, ஈரோடு நலப்பணிகள் (பொறுப்பு) இணை இயக்குனர் பிரேமகுமாரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • தமிழக-கேரள எல்லையில் 13 வழிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
    • சென்னையில் கடந்த 14 நாட்களில் வெளிநாடுகளில் இருந்து வந்த 1 லட்சம் பயணிகளில் 1,987 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது.

    சென்னை:

    சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று ஆய்வு மேற்கொண்டார். குரங்கு அம்மை நோய் விழிப்புணர்வு மற்றும் பரிசோதனைகள் வெளிநாட்டு பயணிகளுக்கு செய்வதை நேரில் பார்த்தார்.

    பின்னர் மா.சுப்பிரமணியன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:-

    ஐரோப்பியா, ஆப்பிரிக்காவைச் சேர்ந்த 63 நாடுகளில் குரங்கு அம்மை நோய் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவிலும் முதல் தொற்று கேரள சிறுமிக்கு ஏற்பட்டது. அரபு நாட்டில் இருந்து திருவனந்தபுரம் வந்த சிறுமிக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

    இதைத் தொடர்ந்து தமிழக-கேரள எல்லையில் 13 வழிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சென்னை, மதுரை, கோவை, திருச்சி ஆகிய 4 பன்னாட்டு விமான நிலையங்களில் பயணிகள் கண்காணிக்கப்படுகிறார்கள். முகம், கைகளில் கொப்பளங்கள் இருக்கிறதா? என்று பரிசோதிக்கப்படுகிறது.

    சென்னையில் கடந்த 14 நாட்களில் வெளிநாடுகளில் இருந்து வந்த 1 லட்சம் பயணிகளில் 1,987 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 39 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்ததால் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டனர். குரங்கு அம்மை நோய் இல்லை.

    குரங்கு அம்மை நோயை கண்டுபிடிக்க ஐ.சி.எம்.ஆர். ஆய்வகங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆய்வகம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது. நிச்சயம் ஏற்பார்கள். சென்னையில் அந்த ஆய்வகம் ஏற்படுத்தப்படும்.

    மேலும் குரங்கு அம்மை நோய் பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளிக்க சிறப்பு வார்டு ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் 10 படுக்கைகளுடன் தயார் படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் இந்நோய் இதுவரையில் தென்படவில்லை. அதனால் பதற்றம் அடைய தேவையில்லை.

    முதல்-அமைச்சர் ரொம்ப நன்றாக இருக்கிறார். மருத்துவர்கள் ஓய்வு எடுக்க கூறியதால் தங்கி இருக்கிறார். ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார்.

    ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் நாசர் உள்ளிட்டவர்களுக்கு பி4, பி5 வகை கொரோனா தொற்றாகும். இது வேகமாக பரவும். பெரிய அளவில் பாதிப்பு இருக்காது.

    நோய் தொற்று ஆள் பார்த்து வருவது இல்லை. உள்நாட்டு விமான நிலையத்திலும் பரிசோதனை நடத்தப்படும்.

    சென்னையில் தொற்று குறைந்து வருகிறது. மற்ற மாவட்டங்களில் கூடியுள்ளது. ஆனால் பெரிய அளவில் உயரவில்லை. கட்டுப்பாடுகள் விதிக்க கூடிய சூழல் தற்போது இல்லை. இந்த வைரஸ் தாக்கம் தொடர்ந்து இருந்து கொண்டுதான் இருக்கும். வைரசுடன் போராடி வாழ கற்றுக்கொள்ள வேண்டும். அதற்கு அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின்போது சுகாதாரத்துறை செயலாளர் செந்தில்குமார், இயக்குனர் செல்வவிநாயகம் உடன் இருந்தனர்.

    ×