search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காவேரி மருத்துவமனை"

    காவேரி மருத்துவமனைக்கு இன்று வந்த கமல்ஹாசன், கருணாநிதியின் உடல்நலம் குறித்து ஸ்டாலின் மற்றும் கனிமொழியிடம் கேட்டறிந்தார். #KarunanidhiHealth #Karunanidhi #KamalHaasan
    சென்னை:

    தமிழக முன்னாள் முதல்வரும், தி.மு.க. தலைவருமான மு.கருணாநிதி வயோதிகம் சார்ந்த உடல்நலக்குறைவு காரணமாக வீட்டிலேயே ஓய்வெடுத்து வந்தார். பின்னர் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டதை அடுத்து ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் கடந்த மாதம் 27-ம் தேதி அனுமதிக்கப்பட்டார்.

    மருத்துவ சிகிச்சைக்கு பின்னர் அவர் உடல்நிலை தேறி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில், நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் மருத்துவமனைக்கு வந்து கருணாநிதி உடல்நிலை குறித்து ஸ்டாலின் மற்றும் கனிமொழியிடம் கேட்டறிந்தார்.

    கருணாநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அன்றும் கோபாலபுரம் இல்லத்துக்கு வந்து கமல்ஹாசன் உடல்நிலை விசாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னாதாக முன்னாள் பிரதமர் தேவே கவுடாவும் மருத்துவமனைக்கு வந்து கருணாநிதி உடல்நிலை தொடர்பாக ஸ்டாலின் மற்றும் கனிமொழியிடம் விசாரித்தார். 
    காவேரி மருத்துவமனைக்கு இன்று வருகை தந்த முன்னாள் பிரதமர் தேவே கவுடா, கருணாநிதியின் உடல்நலம் குறித்து ஸ்டாலின் மற்றும் கனிமொழியிடம் கேட்டறிந்தார். #KarunanidhiHealth #Karunanidhi
    சென்னை:

    தமிழக முன்னாள் முதல்வரும், தி.மு.க. தலைவருமான மு.கருணாநிதி வயோதிகம் சார்ந்த உடல்நலக்குறைவு காரணமாக வீட்டிலேயே ஓய்வெடுத்து வந்தார். பின்னர் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டதை அடுத்து ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் கடந்த மாதம் 27-ம் தேதி அனுமதிக்கப்பட்டார்.

    மருத்துவ சிகிச்சைக்கு பின்னர் அவர் உடல்நிலை தேறி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்நிலையில், முன்னாள் பிரதமர் தேவே கவுடா காவேரி மருத்துவமனைக்கு வருகை தந்து கருணாநிதியின் உடல்நிலை தொடர்பாக ஸ்டாலின் மற்றும் கனிமொழியிடம் கேட்டறிந்தார். 

    இதனை அடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கருணாநிதி நூறாண்டுகள் வரை நலமுடன் வாழ்வார்” என கூறினார்.
    திமுக தலைவர் கருணாநிதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், நடிகர் ரஜினிகாந்த் அவரது உடல்நிலை குறித்து இன்று மருத்துவமனைக்கு வந்து விசாரித்தார். #Karunanidhi #KarunanidhiHealth #RajiniKanth
    சென்னை:

    தமிழக முன்னாள் முதல்வரும், தி.மு.க. தலைவருமான மு.கருணாநிதி வயோதிகம் சார்ந்த உடல்நலக்குறைவு காரணமாக வீட்டிலேயே ஓய்வெடுத்து வந்தார். கடந்த 27-ம் தேதி நள்ளிரவில் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டதை அடுத்து ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணித்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

    கருணாநிதிக்கு நான்காவது நாளாக சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், நடிகர் ரஜினிகாந்த் மருத்துவமனைக்கு வருகை தந்து ஸ்டாலின் உள்ளிட்ட குடும்பத்தினரிடம் கருணாநிதியின் உடல்நலம் அளிக்கப்பட்டு வரும் சிகிச்சைகள் ஆகியவை குறித்து கேட்டறிந்தார். 

    வெளிநாட்டில் படப்பிடிப்பில் இருந்த அவர் படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு, சென்னை வந்த அவர் விமான நிலையத்தில் இருந்து நேரடியாக மருத்துவமனைக்கு வந்திருந்தார்.

    சந்திப்புக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த் கூறுகையில், “இந்திய அரசியலில் முக்கிய தலைவர் கருணாநிதி. அவரது உடல்நிலை குறித்து ஸ்டாலின்,அழகிரி, கனிமொழி ஆகியோரிடம் விசாரித்து ஆறுதல் கூறினேன். அவர் விரைவில் குணமாக எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்” என கூறினார்.

    முன்னதாக இன்று மாலை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கருணாநிதியை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 
    திமுக தலைவர் கருணாநிதி நன்றாக தேறி வருகிறார் என்றும் மேலும் சில நாட்கள் மருத்துவ சிகிச்சை தேவைப்படுகிறது எனவும் காவேரி மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. #KarunanidhiHealth #Karunanidhi #DMK #KauveryHospital
    சென்னை:

    திமுக தலைவர் கருணாநிதி சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக கடந்த 27-ம் தேதி நள்ளிரவு அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், அவரது உடல்நிலை குறித்த 5 ஆவது அறிக்கையை காவேரி மருத்துவனை இன்று வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:-

    திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை நன்றாக தேறி வருகிறது. மருத்துவ சிகிச்சைகளுக்கு அவர் முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறார். வயது முதிர்வு, உடல்நிலை காரணமாக அவர் மேலும் சில நாட்கள் தங்கி சிகிச்சை பெற வேண்டும். 29-ம் தேதியில் ஏற்பட்ட பின்னடைவுக்கு பின்னர் தற்போது உடல்நிலையில் முன்னேற்றம் உள்ளது.



    அவரது உடல்நிலை படிப்படியாக இயல்புநிலைக்கு திரும்பிக்கொண்டுள்ளது. மருத்துவ உபகரணங்கள் உதவியுடன் முக்கிய உறுப்புகள் சிறப்பாக இயங்கி வருகின்றன. அவரது கல்லீரல் செயல்பாடு, ரத்த ஓட்டம் சீராக்கப்பட வேண்டியதுள்ளது.

    என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நலம் விசாரித்துள்ளார். #KarunanidhiHealth #Karunanidhi #RahulGandhi #DMK
    சென்னை:

    தமிழக முன்னாள் முதல்வரும், தி.மு.க. தலைவருமான மு.கருணாநிதி வயோதிகம் சார்ந்த உடல்நலக்குறைவு காரணமாக வீட்டிலேயே ஓய்வெடுத்து வந்தார். பின்னர் அவரது உடல்நிலை மோசமடைந்ததைடுத்து ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. தற்போது அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும், தொடர்ந்து மருத்துவர்கள் கண்காணித்து வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

    கருணாநிதிக்கு நான்காவது நாளாக சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவரை சந்தித்து உடல்நலம் விசாரிக்க இன்று வருகை தந்தார்.  ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களிடம் கருணாநிதியின் உடல்நலம் குறித்தும் அளிக்கப்படும் சிகிச்சை குறித்தும் அவர் கேட்டறிந்தார். 

    பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராகுல் காந்தி, “கருணாநிதி தைரியமானவர் நலமாக இருக்கிறார். அவர் நலமாக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது” என கூறினார்.
    காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதியை நேரில் பார்த்து துணை ஜனாதிபதி வெங்கையாநாயுடு நலம் விசாரித்துள்ளார். #Karunanidhi #DMK #VenkaiahNaidu
    சென்னை:

    திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவால் காவேரி மருத்துவமனையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாக மருத்துவமனை நேற்று அறிக்கை வெளியிட்டது. பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் கருணாநிதியின் உடல்நலம் குறித்து நேரில் வருகை தந்து விசாரித்து வருகின்றனர்.

    இந்நிலையில், இன்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு காவேரி மருத்துவமனைக்கு வருகை தந்தார். அங்கு, ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்ட கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்களிடம் கருணாநிதிக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து கேட்டறிந்தார்.  

    கருணாநிதி சிகிச்சை பெற்று வரும் அறைக்கு சென்று அவரை நேரடியாக வெங்கையா நாயுடு மற்றும் கவர்னர் பன்வாரிலால் பார்த்தனர். இதுவரை மற்ற அரசியல் கட்சித்தலைவர்கள் கருணாநிதியை நேரடியாக பார்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

    கருணாநிதியை சந்தித்த தகவலை வெங்கையா நாயுடு  தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
    காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்த சீமான், ‘நலம்பெற்று மீண்டும் அரசியல் பணியாற்ற வேண்டும்’ என கூறியுள்ளார். #KarunanidhiHealth #Karunanidhi #Seeman
    சென்னை:

    திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவால் சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று திரினாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி டெரிக் ஓ பிரையன், பாஜகவின் முரளிதர் ராவ், தமிழிசை, கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி ராஜா ஆகியோர் மருத்துவமனைக்கு வந்து ஸ்டாலினை சந்தித்து கருணாநிதியின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தனர்.

    நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும் மருத்துவமனைக்கு வந்து கருணாநிதியின் உடல்நலம் விசாரித்தார். இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், “கருணாநிதி நலம்பெற்று மீண்டும் அரசியல் பணியாற்ற வேண்டும் என பிரார்த்திக்கிறேன். கருணாநிதி உடல்நலம் குறித்து நாம் தமிழர் கட்சி என்ற பெயரில் சிலர் அவதூறு பரப்புகின்றனர்; முகம் தெரியாத நபரின் பதிவுக்கு நாங்கள் பொறுப்பேற்க முடியாது, எனினும் வருந்துகிறோம்” என கூறினார்.
    காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிக்க துணை ஜனாதிபதி வெங்கையாநாயுடு இன்று வருகை தர உள்ளார். #Karunanidhi #DMK #VenkaiahNaidu
    சென்னை:

    திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவால் காவேரி மருத்துவமனையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலையில் முன்னேற்றம் இருப்பதாக மருத்துவமனை நேற்று அறிக்கை வெளியிட்டது. பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

    இந்நிலையில், இன்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு காவேரி மருத்துவமனை வர உள்ளார். இதனால், அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டுள்ளது.  
    ×