search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காவேரி மருத்துவமனை"

    • ஐ.சி.யு. சிகிச்சை பிரிவில் இருந்த செந்தில் பாலாஜி நேற்று முன்தினம் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டதாக கூறப்பட்டது.
    • செந்தில் பாலாஜிக்கு திட உணவுகள் வழங்குவதாகவும், நடைபயிற்சி அளிக்கப்படுவதாகவும் மருத்துவமனை வட்டாரத்தில் கூறப்பட்டது.

    சென்னை:

    அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த 13-ந்தேதி நள்ளிரவில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.

    நெஞ்சு வலிப்பதாக கூறியதால் ஓமந்தூரார் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு இருதய ரத்த குழாய்களில் அடைப்பு இருப்பதாக டாக்டர்கள் பரிசோதனையில் தெரிவித்தனர்.

    இதையடுத்து கோர்ட்டு அனுமதியின் பேரில் காவேரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். கடந்த வாரம் அவருக்கு பைபாஸ் சர்ஜரி நடத்தப்பட்டதாக மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது.

    அதைத் தொடர்ந்து ஐ.சி.யு. சிகிச்சை பிரிவில் இருந்த அவரை நேற்று முன்தினம் சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டதாக கூறப்பட்டது.

    இந்த நிலையில் தற்போது அவருக்கு திட உணவுகள் வழங்குவதாகவும், நடை பயிற்சி அளிக்கப்படுவதாகவும் மருத்துவமனை வட்டாரத்தில் கூறப்பட்டது.

    இன்னும் 20 நாட்கள் வரை அவர் சிகிச்சை பெற வேண்டியிருக்கும் என்றும் இயல்பான நிலைக்கு வரும் வரை மருத்துவ கண்காணிப்பில் இருப்பார் என்றும் மருத்துவமனை வட்டாரத்தில் கூறப்படுகிறது.

    • ஐ.சி.யூ. வார்டில் வைத்து அவரது உடல்நிலையை டாக்டர்கள் கண்காணித்து வந்தனர்.
    • எங்களை பொறுத்தவரை உடல் நலம் என்பதை அரசியலுக்கு அப்பாற்பட்டு மனிதாபிமானத்தோடுதான் அணுகி வருகிறோம்.

    சென்னை:

    அமலாக்கதுறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் இருக்கும் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு காவேரி மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

    ஐ.சி.யூ. வார்டில் வைத்து அவரது உடல்நிலையை டாக்டர்கள் கண்காணித்து வந்தனர். அவரது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து நேற்று மாலையில் தனி வார்டுக்கு மாற்றப்பட்டார். ஆஸ்பத்திரியின் 4-வது தளத்தில் அறை எண். 435-ல் தற்போது செந்தில்பாலாஜி தங்க வைக்கப்பட்டுள்ளார்.

    அவரது உடல்நிலை குறித்து அமைச்சர் மா. சுப்பிரமணியனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவர்கள் கண்காணிப்பிலேயே இருக்கிறார். மருத்துவர்களிடம் தொடர்ந்து பேசி வருகிறோம். அவர் உடல் நிலை தேறி வருவதாக தெரிவித்தார்கள். விரைவில் பூரண குணம் அடைவார்.

    எங்களை பொறுத்தவரை உடல் நலம் என்பதை அரசியலுக்கு அப்பாற்பட்டு மனிதாபிமானத்தோடுதான் அணுகி வருகிறோம்.

    சமீபத்தில் முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர் சி.வி.சண்முகம் அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு சென்ற போது கூட மருத்துவமனை நிர்வாகத்திடம் தொடர்பு கொண்டு அவரது உடல்நிலை குறித்து கேட்டேன்.

    இவ்வாறு மா.சுப்பிரமணியன் கூறினார்.

    திமுக தலைவர் கருணாநிதி உடல்நிலைக்குறைவால் இன்று காலமான நிலையில், நாளை தமிழகம் முழுவதும் பொதுவிடுமுறையை அரசு அறிவித்துள்ளது. #KalaignarHealth #Karunanidhi #KarunanidhiHealth #DMK
    சென்னை:

    காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த திமுக தலைவர் கருணாநிதி இன்று மாலை காலமானார். இதனை அடுத்து, நாளை தமிழகம் முழுவதும் பொதுவிடுமுறை அறிவித்து தமிழக அரசு அறிவித்துள்ளது.

    மேலும், 7 நாட்கள் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படும் என அரசு தெரிவித்துள்ளது. புதுவையிலும் நாளை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

    3 நாட்கள் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படும் எனவும் புதுவை முதல்வர் தெரிவித்துள்ளார். 
    திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை மிக மோசமாக உள்ளதாக மருத்துவ அறிக்கை வெளியாகியுள்ள நிலையில், சென்னை ராஜாஜி ஹால் போலீசாரின் முழு கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. #KalaignarHealth #Karunanidhi #KarunanidhiHealth #DMK
    சென்னை:

    காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை மிக மோசமாக உள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. இதனால், கருணாநிதி நலமுடன் வீடு திரும்புவார் என காத்திருந்த தொண்டர்கள் இந்த அறிக்கையால் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.

    மருத்துவமனைக்கு வெளியே இருந்து தொண்டர்கள் கண்ணீர் விட்டு அழுது கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், சென்னை அரசினர் தோட்டத்தில் உள்ள ராஜாஜி ஹால் போலீசாரின் முழு கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. சென்னை மாநகர கூடுதல் கமிஷ்னர் ஜெயராம் தலைமையில் அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டனர்.
    திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை மிக மோசமாக உள்ளதாக மருத்துவ அறிக்கை வெளியான நிலையில், அவரது குடும்ப உறுப்பினர்கள் கண்ணீர் விட்டு அழுதபடி கோபாலபுரம் இல்லம் வந்துள்ளனர். #KarunanidhiHealth #Karunanidhi #DMK #KalaignarHealth
    சென்னை:

    காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை மிக மோசமாக உள்ளதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. இதனால், கருணாநிதி நலமுடன் வீடு திரும்புவார் என காத்திருந்த தொண்டர்கள் இந்த அறிக்கையால் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.

    மருத்துவமனைக்கு வெளியே இருந்து தொண்டர்கள் கண்ணீர் விட்டு அழுது கொண்டிருக்கின்றனர். இந்நிலையில், காவேரி மருத்துவமனையில் இருந்து புறப்பட்டு கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்கள் துர்கா ஸ்டாலின், மோகனா தமிழரசு, செல்வி ஆகியோர் கண்ணீருடன் கோபாலபுரம் வந்தடைந்தனர்.
    திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை மிக மோசமாக உள்ளதாக வெளியான அறிக்கையால், கவலை அடைந்த தொண்டர்கள் கோபாலபுரத்தில் குவிந்து வருகின்றனர். #KarunanidhiHealth #Karunanidhi #DMK
    சென்னை:

    திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை மிக மோசமான நிலையில் இருப்பதாக காவேரி மருத்துவமனை சமீபத்தில் அறிக்கை வெளியிட்டுள்ளது. கருணாநிதி நலமுடன் வீடு திரும்புவார் என காத்திருந்த தொண்டர்கள் இந்த அறிக்கையால் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.

    காவேரி மருத்துவமனைக்கு வெளியே பலர் கதறி அழுந்த நிலையில், எழுந்து வா தலைவா என கண்ணீர் மல்க நம்பிக்கையுடன் கூறி வருகின்றனர். மருத்துவ அறிக்கை வெளியானதை அடுத்து, பலர் கோபாலபுரம் இல்லத்தின் முன் குவிந்து வருகின்றனர். இதனால், அங்கும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். 
    திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக காவேரி மருத்துவமனை புதிய மருத்துவ அறிக்கை வெளியிட்டுள்ளது. #KarunanidhiHealth #Karunanidhi #DMK
    சென்னை:

    காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதிக்கு கடந்த 11 நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவரது உடல்நிலை நேற்று மாலை முதல் கவலைக்கிடமாக உள்ளது. நேற்று மாலை வெளியான மருத்துவ அறிக்கையில், கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு இருப்பதாக கூறப்பட்டிருந்தது.

    இன்று காலை முதல் தொடர்ந்து பதற்றமான சூழல் நீடித்து வரும் நிலையில், பிற்பகலில் ஸ்டாலின், அழகிரி, கனிமொழி உள்ளிட்ட கருணாநிதி குடும்பத்தினர் மற்றும் திமுக நிர்வாகிகள் முதல்வர் எடப்பாடியை சந்தித்து பேசினர்.

    தமிழகம் முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்த போலீஸ் டிஜிபி ராஜேந்திரன் உத்தரவு பிறப்பித்துள்ளார். அனைத்து காவல் ஆணையர்கள், துணை ஆணையர்கள், காவல்துறை துணை தலைவர்கள், மண்டல ஐஜிக்கள், எஸ்.பிக்கள் அனைவருக்கும் டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

    இந்நிலையில், கருணாநிதியின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக காவேரி மருத்துவமனை புதிய அறிக்கை வெளியிட்டுள்ளது. சில மணி நேரங்களாக கருணாநிதியின் உடல்நிலை மோசமடைந்து வருவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    கருணாநிதியின் உடல்நிலை மோசமான நிலையில் இருக்கும் நிலையில், தமிழகம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். #KarunanidhiHealth #Karunanidhi #DMK
    சென்னை:

    காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதிக்கு கடந்த 11 நாட்களாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவரது உடல்நிலை நேற்று மாலை முதல் கவலைக்கிடமாக உள்ளது. நேற்று மாலை வெளியான மருத்துவ அறிக்கையில், கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு இருப்பதாக கூறப்பட்டிருந்தது.

    இன்று காலை முதல் தொடர்ந்து பதற்றமான சூழல் நீடித்து வரும் நிலையில், பிற்பகலில் ஸ்டாலின், அழகிரி, கனிமொழி உள்ளிட்ட கருணாநிதி குடும்பத்தினர் மற்றும் திமுக நிர்வாகிகள் முதல்வர் எடப்பாடியை சந்தித்து பேசினர்.

    இதற்கிடையே, சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் ஆயுதப்படை காவலர்கள் அணிவகுக்கப்பட்டுள்ளனர். 

    மேலும், தமிழகம் முழுவதும் பாதுகாப்பை பலப்படுத்த போலீஸ் டிஜிபி ராஜேந்திரன் உத்தரவு பிறப்பித்துள்ளார். அனைத்து காவல் ஆணையர்கள், துணை ஆணையர்கள், காவல்துறை துணை தலைவர்கள், மண்டல ஐஜிக்கள், எஸ்.பிக்கள் அனைவருக்கும் டிஜிபி உத்தரவிட்டுள்ளார்.

    கூடுதல் போலிசார்களை வரவழைத்து பாதுகாப்பை மேற்கொள்ள வேண்டும் என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை பின்னடவை சந்தித்துள்ள நிலையில், ஸ்டாலின் உள்பட திமுக எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் காவேரி மருத்துவமனையில் இருந்து புறப்பட்டனர். #KarunanidhiHealth #DMK #MKStalin
    சென்னை:

    காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை பின்னடவை சந்தித்துள்ளதாக மருத்துவமனை இன்று அறிக்கை வெளியிட்டது. இதனால், திமுக தொண்டர்கள் மருத்துவமனை வளாகத்தில் குவிந்துள்ளனர்.

    இந்நிலையில், திமுக செயல்தலைவரும் கருணாநிதியின் மகனுமாகிய முக ஸ்டாலின், கனிமொழி எம்.பி, ஆ.ராசா, துரை முருகன், அன்பழகன் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏ.க்களும் மருத்துவமனையில் இருந்து புறப்பட்டுச் சென்றனர். திமுகவின் முக்கிய நிர்வாகிகளும் புறப்பட்டுச் சென்றனர். 

    இதற்கிடையே, மயிலாப்பூர் துணை ஆணையர் அலுவலகத்தில், மாநகர போலீஸ் கமிஷ்னர் விஸ்வநாதன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்து வருகிறது. போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு பணிகள் தொடர்பாக ஆலோசனை நடந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 
    திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து சிறிது கவலை அளிக்கும் வகையில் அறிக்கை வெளியானதை அடுத்து, மருத்துவமனைக்கு வெளியே தொண்டர்கள் குவிந்து வருகின்றனர். #Karunanidhihealth #Karunanidhi #DMK #KauveryHospital
    சென்னை:

    திமுக தலைவர் கருணாநிதி வயது மூப்பு சார்ந்த பிரச்சனைகள் காரணமாக கடந்த 10 நாட்களாக ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சில நாட்களாக முன்னேறி வந்த அவரது உடல்நிலையில் இன்று சற்று பின்னடைவு ஏற்பட்டுள்ளது. 

    இது தொடர்பாக இன்று மருத்துவமனை வெளியிட்டுள்ள 6-வது அறிக்கையில், கருணாநிதியின் வயோதிகம் காரணமாக முக்கிய உடலுறுப்புகளின் இயக்கத்தை பராமரிப்பதில் சவால் நீடித்து வருகிறது. அவருக்கு தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பு மற்றும் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.



    இதில், மருத்துவ சிகிச்சைக்கு அடுத்த 24 மணி நேரத்தில் அவரது உடல் அளிக்கும் ஒத்துழைப்பை பொருத்து அவரது உடல்நிலையை தீர்மானிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

    இந்த மருத்துவ அறிக்கையால் கவலை அடைந்துள்ள திமுக தொண்டர்கள் காவேரி மருத்துவமனைக்கு வெளியே குவிந்து வருகின்றனர். ‘எழுந்து வா தலைவா’ என அவர்கள் தொடர்ந்து கோஷங்கள் எழுப்பி வருகின்றனர். இதனால், அப்பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.
    திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை தொடர்பாக இன்று மாலை காவேரி மருத்துவமனை வெளியிட்டுள்ள புதிய மருத்துவ அறிக்கையில் அவரது உடல்நிலையில் சற்று பின்னடைவு இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. #Karunanidhihealth #Karunanidhi #DMK #KauveryHospital
    சென்னை:

    திமுக தலைவர் கருணாநிதி வயது மூப்பு சார்ந்த பிரச்சனைகள் காரணமாக கடந்த 10 நாட்களாக ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சில நாட்களாக முன்னேறி வந்த அவரது உடல்நிலையில் இன்று சற்று பின்னடைவு ஏற்பட்டுள்ளது. 



    இது தொடர்பாக இன்று மாலை மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

    திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அவரது வயோதிகம் காரணமாக முக்கிய உடலுறுப்புகளின் இயக்கத்தை பராமரிப்பதில் சவால் நீடித்து வருகிறது. அவருக்கு தொடர்ந்து மருத்துவ கண்காணிப்பு மற்றும் தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.

    இதில், மருத்துவ சிகிச்சைக்கு அடுத்த 24 மணி நேரத்தில் அவரது உடல் அளிக்கும் ஒத்துழைப்பை பொருத்து அவரது உடல்நிலையை தீர்மானிக்க முடியும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 
    காவேரி மருத்துவமனைக்கு இன்று வருகை தந்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், கருணாநிதியின் உடல்நலம் குறித்து ஸ்டாலின் மற்றும் கனிமொழியிடம் கேட்டறிந்தார். #KarunanidhiHealth #Karunanidhi #DMK #PresidentKovind
    சென்னை:

    தமிழக முன்னாள் முதல்வரும், தி.மு.க. தலைவருமான மு.கருணாநிதி வயோதிகம் சார்ந்த உடல்நலக்குறைவு காரணமாக வீட்டிலேயே ஓய்வெடுத்து வந்தார். பின்னர் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டதை அடுத்து ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் கடந்த மாதம் 27-ம் தேதி அனுமதிக்கப்பட்டார்.

    மருத்துவ சிகிச்சைக்கு பின்னர் அவர் உடல்நிலை தேறி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதற்கிடையே, துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, மத்திய மந்திரிகள் சுரேஷ் பிரபு, நிர்மலா சீதாராமன், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, கேரள, ஆந்திர முதல்வர்கள், முன்னாள் பிரதமர் தேவே கவுடா உள்ளிட்ட தலைவர்கள், தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்கள், நடிகர்கள் அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனைக்கு வருகை தந்து விசாரித்தனர்.

    துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, கவர்னர் பன்வாரிலால் புரோகித் மற்றும் ராகுல் காந்தி காந்தி ஆகியோர் மட்டும் கருணாநிதியை நேரில் பார்த்தனர். மற்ற தலைவர்கள் ஸ்டாலின் மற்றும் கனிமொழியை சந்தித்து கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரித்துள்ளனர்.

    இந்நிலையில், ஆந்திராவில் நேற்று நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு கேரளாவுக்கு செல்ல திட்டமிட்டிருந்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், கருணாநிதி உடல்நலம் குறித்து விசாரிக்க சென்னை வருகை தந்தார். விமான நிலையத்தில் வந்திறங்கிய அவரை கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அமைச்சர்கள் வரவேற்றனர்.

    அங்கிருந்து, கார் மூலம் காவேரி மருத்துவமனைக்கு வந்தடைந்த அவரை ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்ட திமுகவினர் வரவேற்றனர். அங்கு, கருணாநிதியை சந்தித்த அவர், கருணாநிதிக்கு அளித்து வரும் சிகிச்சைகள் பற்றி ஸ்டாலின் மற்றும் கனிமொழியிடம் கேட்டறிந்தார். 

    பின்னர், மருத்துவமனையில் இருந்து புறப்பட்ட அவர் காரிலிருந்து இறங்கி மக்களை நோக்கி கைகளை காட்டினார். பின்னர் காரில் விமான நிலையம் சென்ற அவர், அங்கிருந்து கேரளாவுக்கு விமானம் மூலம் புறப்பட்டார்.

    இது தொடர்பாக ட்விட்டர் கணக்கில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளதாவது:-


    ×