search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kaveri hospital"

    • ஐ.சி.யூ. வார்டில் வைத்து அவரது உடல்நிலையை டாக்டர்கள் கண்காணித்து வந்தனர்.
    • எங்களை பொறுத்தவரை உடல் நலம் என்பதை அரசியலுக்கு அப்பாற்பட்டு மனிதாபிமானத்தோடுதான் அணுகி வருகிறோம்.

    சென்னை:

    அமலாக்கதுறையால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் இருக்கும் அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு காவேரி மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

    ஐ.சி.யூ. வார்டில் வைத்து அவரது உடல்நிலையை டாக்டர்கள் கண்காணித்து வந்தனர். அவரது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதை தொடர்ந்து நேற்று மாலையில் தனி வார்டுக்கு மாற்றப்பட்டார். ஆஸ்பத்திரியின் 4-வது தளத்தில் அறை எண். 435-ல் தற்போது செந்தில்பாலாஜி தங்க வைக்கப்பட்டுள்ளார்.

    அவரது உடல்நிலை குறித்து அமைச்சர் மா. சுப்பிரமணியனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவர்கள் கண்காணிப்பிலேயே இருக்கிறார். மருத்துவர்களிடம் தொடர்ந்து பேசி வருகிறோம். அவர் உடல் நிலை தேறி வருவதாக தெரிவித்தார்கள். விரைவில் பூரண குணம் அடைவார்.

    எங்களை பொறுத்தவரை உடல் நலம் என்பதை அரசியலுக்கு அப்பாற்பட்டு மனிதாபிமானத்தோடுதான் அணுகி வருகிறோம்.

    சமீபத்தில் முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர் சி.வி.சண்முகம் அப்பல்லோ ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்கு சென்ற போது கூட மருத்துவமனை நிர்வாகத்திடம் தொடர்பு கொண்டு அவரது உடல்நிலை குறித்து கேட்டேன்.

    இவ்வாறு மா.சுப்பிரமணியன் கூறினார்.

    திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து மு.க.ஸ்டாலினிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே விசாரித்தார். #Karunanidhi #DMK #RanilWickramasinghe
    சென்னை:

    திமுக தலைவர் கருணாநிதி உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் கடந்த 27-ம் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். 

    தொடக்கத்தில் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்ட நிலையில், மருத்துவர்களின் தொடர் சிகிச்சைக்கு பிறகு கருணாநிதியின் உடல்நிலை நன்றாக தேறி வருகிறது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். மருத்துவ சிகிச்சைகளுக்கு அவர் முழு ஒத்துழைப்பு அளித்து வருவதாகவும், வயது முதிர்வு, உடல்நிலை காரணமாக அவர் மேலும் சில நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டும் என்றும் மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.



    இந்நிலையில், இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலினை தொலைபேசியில் தொடர்பு கொண்டார். அப்போது அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கருணாநிதியின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். #Karunanidhi #DMK #RanilWickramasinghe
    உடல் நலம் பாதிக்கப்பட்ட திமுக தலைவர் கருணாநிதிக்கு காவேரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. #Karunanidhi #DMK #KaveriHospital
    சென்னை:

    திமுக தலைவர் கருணாநிதிக்கு இன்று அதிகாலை மீண்டும் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. தகவலறிந்து ஆழ்வார்பேட்டை வீட்டில் இருந்து மு.க.ஸ்டாலின் மீண்டும் கோபாலபுரம் வீட்டுக்கு சென்றார். காவேரி மருத்துவமனை சார்பில் மருத்துவ குழுவினரும் வந்தனர்.

    அதன்பின்னர், ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு சிகிச்சைக்காக அவர் காவேரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

    காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கருணாநிதிக்கு அங்கு மருத்துவ குழுவினர் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    ஸ்டாலின், ராஜாத்தி அம்மாள், கனிமொழி, துரைமுருகன், ராஜா உள்பட பலரும் மருத்துவமனையில் வருகை தந்தனர்.

    தகவலறிந்து திமுக தொண்டர்கள் அதிகாலையில் கோபாலபுரம் இல்லம் மற்றும் காவேரி மருத்துவமனையில் குவிந்தனர். அவர்கள் கருணாநிதி வாழ்க, வாழ்க என கோஷம் போட்டனர்.
    திமுக தலைவர் கருணாநிதிக்கு இன்று அதிகாலை மீண்டும் உடல்நலக் குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து கோபாலபுரம் இல்லத்தின் முன்பும், காவேரி மருத்துவமனையிலும் தொண்டர்கள் குவிந்தனர். #Karunanidhi #DMK
    சென்னை:

    திமுக தலைவர் கருணாநிதிக்கு இன்று அதிகாலை மீண்டும் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. தகவலறிந்து ஆழ்வார்பேட்டை வீட்டில் இருந்து மு.க.ஸ்டாலின் மீண்டும் கோபாலபுரம் வீட்டுக்கு சென்றார். தனி மருத்துவர் கோபால் மற்றும் காவேரி மருத்துவமனையின் மருத்துவ குழுவினரும் வந்தனர்.

    அதன்பின்னர், அவரை சிகிச்சைக்காக காவேரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்யப்பட்டது. அங்கிருந்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. கருணாநிதியை ஆம்புலன்சில் ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.

    தகவலறிந்து திமுக தொண்டர்கள் கோபாலபுரம் இல்லத்தின் முன் அதிகாலையில் குவிந்தனர். கருணாநிதி உடல் நிலை குறித்து வருந்தினர். அதிகாலையில் கோபாலபுரம் இல்லத்திலும், காவேரி மருத்துவமனையிலும் தொண்டர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
    உடல்நலக் குறைவு காரணமாக கருணாநிதிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. வீட்டிலேயே மருத்துவமனை வசதிகள் செய்யப்பட்டு உள்ளது. எனவே, அவரை பார்க்க யாரும் வரவேண்டாம் என்று டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். #Karunanidhi #Dmk
    சென்னை:

    திமுக தலைவர் கருணாநிதிக்கு கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அவருக்கு டாக்டர்கள் வீட்டிலேயே சிகிச்சை அளித்த நிலையில், டிசம்பர் மாதம் 1-ம் தேதி அவர் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு ஒரு வாரம் தங்கியிருந்து சிகிச்சை பெற்ற கருணாநிதி அதன்பிறகு வீடு திரும்பினார்.

    இதற்கிடையே, டிசம்பர் மாதம் 15-ம் தேதி மூச்சு திணறல் காரணமாக கருணாநிதி மீண்டும் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் எளிதாக மூச்சு விடுவதற்காக தொண்டையில் ‘டிரக்கியாஸ்டமி’ என்னும் செயற்கை சுவாசக் குழாய் பொருத்தப்பட்டது. தொடர்ந்து, 9 நாட்கள் சிகிச்சையில் இருந்த அவர் பின்னர் வீடு திரும்பினார்.

    அதன்பிறகு, கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அவர் கட்சிப் பணிகளை எதுவும் மேற்கொள்ளவில்லை. சென்னை கோபாலபுரம் இல்லத்திலேயே ஓய்வெடுத்து வருகிறார்.

    கடந்த 18-ம் தேதி கருணாநிதியின் தொண்டையில் பொருத்தப்பட்டிருந்த ‘டிரக்கியாஸ்டமி’ செயற்கை சுவாசக் குழாய் மாற்றப்பட்டது. தொடர்ந்து, வீட்டிலேயே அவரை வைத்து டாக்டர்கள் கண்காணித்து வந்தனர்.

    இதற்கிடையே, கடந்த 24-ந் தேதி அவருக்கு சளித்தொந்தரவு ஏற்பட்டது. மூச்சு விடுவதற்கும் கடுமையாக சிரமப்பட்டார். இதனால், காவேரி மருத்துவமனையில் இருந்து வந்த சிறப்பு டாக்டர்கள் கருணாநிதிக்கு வீட்டில் வைத்தே சிகிச்சை அளித்தனர். அதற்காக மருத்துவமனையில் இருந்து சில மருத்துவ உபகரணங்களும் கொண்டுவரப்பட்டன.

    சக்கர நாற்காலியில் கருணாநிதியால் உட்கார முடியவில்லை. இதனால், கட்டிலில் அவர் படுக்க வைக்கப்பட்டுள்ளார். டாக்டர்கள் நேற்று அவரது கை நரம்பு வழியாக சில மருந்துகளை செலுத்தியுள்ளனர். வீட்டில் உள்ளவர்கள் யாரையும் பகல் நேரத்தில் அவரை பார்க்க டாக்டர்கள் அனுமதிக்கவில்லை.

    ஆனால், மாலையில் ஒவ்வொருவராக சென்று கருணாநிதியை பார்க்க டாக்டர்கள் அனுமதித்தனர். தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலினும் கோபாலபுரம் இல்லத்திலேயே இருந்தார்.

    தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு தொடர்ந்து டாக்டர்கள் சிகிச்சை அளித்து வரும் நிலையில், நேற்று இரவு 7 மணியளவில் காவேரி ஆஸ்பத்திரியின் செயல் இயக்குநர் டாக்டர் அரவிந்தன் செல்வராஜ் சார்பில் கருணாநிதியின் உடல்நிலை குறித்து அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:-



    தி.மு.க. தலைவரும், முன்னாள் தமிழக முதல்-அமைச்சருமான கருணாநிதியின் உடல் நலத்தில் வயதின் காரணமாக நலிவு ஏற்பட்டுள்ளது. தற்போது சிறுநீரக பாதையில் ஏற்பட்டுள்ள தொற்றின் காரணமாக காய்ச்சல் வந்துள்ளது.

    அதற்குத் தேவையான மருந்துகள் செலுத்தப்படுகின்றன. அவரை 24 மணி நேரமும் டாக்டர்கள், செவிலியர்கள் அடங்கிய குழு கவனித்துக்கொள்கிறது. வீட்டிலேயே ஆஸ்பத்திரி வசதிகள் அனைத்தும் செய்யப்பட்டிருக்கிறது.

    கருணாநிதியின் உடல் நிலையை கவனத்தில் கொண்டு, அவரை யாரும் நேரில் பார்க்க வர வேண்டாம் என்று டாக்டர் கள் கேட்டுக்கொள்கிறார்கள் என அதில் கூறப்பட்டுள்ளது.

    துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று இரவு 9.45 மணிக்கு கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் இல்லத்துக்கு சென்றார். அங்கு அவர் தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து கருணாநிதியின் உடல் நிலை குறித்து விசாரித்து அறிந்தார்.
    அவருடன் அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி, வேலுமணி ஆகியோரும் சென்று இருந்தனர். #Karunanidhi #Dmk
    ×