என் மலர்
செய்திகள்

கோபாலபுரம் மற்றும் காவேரி மருத்துவமனையில் குவிந்த திமுக தொண்டர்கள்
திமுக தலைவர் கருணாநிதிக்கு இன்று அதிகாலை மீண்டும் உடல்நலக் குறைவு ஏற்பட்டதை தொடர்ந்து கோபாலபுரம் இல்லத்தின் முன்பும், காவேரி மருத்துவமனையிலும் தொண்டர்கள் குவிந்தனர். #Karunanidhi #DMK
சென்னை:
திமுக தலைவர் கருணாநிதிக்கு இன்று அதிகாலை மீண்டும் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. தகவலறிந்து ஆழ்வார்பேட்டை வீட்டில் இருந்து மு.க.ஸ்டாலின் மீண்டும் கோபாலபுரம் வீட்டுக்கு சென்றார். தனி மருத்துவர் கோபால் மற்றும் காவேரி மருத்துவமனையின் மருத்துவ குழுவினரும் வந்தனர்.
அதன்பின்னர், அவரை சிகிச்சைக்காக காவேரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடிவு செய்யப்பட்டது. அங்கிருந்து ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டது. கருணாநிதியை ஆம்புலன்சில் ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
தகவலறிந்து திமுக தொண்டர்கள் கோபாலபுரம் இல்லத்தின் முன் அதிகாலையில் குவிந்தனர். கருணாநிதி உடல் நிலை குறித்து வருந்தினர். அதிகாலையில் கோபாலபுரம் இல்லத்திலும், காவேரி மருத்துவமனையிலும் தொண்டர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
Next Story






