search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கறிக்கோழி"

    • கறிக்கோழி உற்பத்தியாளர்கள், வியாபாரிகள் ஆலோசனை கூட்டம் பல்லடத்தில் நடந்தது.
    • கறிக்கோழியின் தேவை மற்றும் உற்பத்தி குறித்தும் விரிவாக ஆலோசனை செய்யப்பட்டது.

    நாமக்கல்:

    நாமக்கல் மண்டலத்தில் நாமக்கல், சேலம், ஈரோடு, திருப்பூர், பல்லடம் உள்பட பல பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கறிக்கோழிப்பண்ணைகள் உள்ளன. இந்த பண்ணைகள் மூலம் 25 லட்சத்திற்கும் மேல் கறிக்கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இந்த கறிக்கோழிகள் நாடு முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

    கறிக்கோழி விலை பல்லடத்தில் நிர்ணயம் செய்யப்படுகிறது. இதற்கிடையே கறிக்கோழி உற்பத்தியாளர்கள், வியாபாரிகள் ஆலோசனை கூட்டம் பல்லடத்தில் நடந்தது. இதில் கறிக்கோழியின் தேவை மற்றும் உற்பத்தி குறித்தும் விரிவாக ஆலோசனை செய்யப்பட்டது.

    பின்னர் கறிக்கோழி விலையை கிலோவுக்கு 5 ரூபாய் உயர்த்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி கறிக்கோழி விலை 84 ரூபாயில் இருந்து 89 ருபாயாக உயர்ந்தது.

    இதற்கிடையே நாமக்கல்லில் முட்டை கோழி உற்பத்தியாளர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் முட்டை கோழி விலையில் எந்த மாற்றமும் செய்யாமல் 72 ரூபாயாக நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டது. இதே போல முட்டை விலையிலும் எந்த மாற்றமும் இல்லாமல் 440 காசுகளாகவும் நீடிக்கிறது.

    • வெள்ளிச்சந்தையில் ஓட்டல் மற்றும் கறிக்கோழி கடை நடத்தி வருகிறார்
    • 2 பேர் முன் விரோதம் காரணமாக அனித்தை வழிமறித்து தாக்கி மிரட்டல் விடுத்தனர்.

    கன்னியாகுமரி :

    வெள்ளிச்சந்தை அருகே சூரப்பள்ளத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மகன் அனித் (வயது24). இவர் வெள்ளிச்சந்தையில் ஓட்டல் மற்றும் கறிக்கோழி கடை நடத்தி வருகிறார். சம்பவத்தன்று அனித் உறவினரை பார்ப்பதற்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு முட்டம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

    அம்மாண்டிவிளை தேரி காடு சாலையில் செல்லும்போது அங்கு வந்த கண்டன்விளையை சேர்ந்த சுபின், மணவாளக்குறிச்சி வடக்கன்பாகத்தை சேர்ந்த அய்யப்பன், திருநயினார்குறிச்சியை சேர்ந்த ராஜன் மற்றும் அடையாளம் தெரியாத 2 பேர் முன் விரோதம் காரணமாக அனித்தை வழிமறித்து புல் வெட்டியால் தாக்கி மிரட்டல் விடுத்தனர்.

    இதில் படுகாயமடைந்த அனித் ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இச்ச ம்பவம் குறித்து மணவா ளக்குறிச்சி போலீசார் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பல்லடம் பகுதிகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணைகள் உள்ளன.
    • கறிக்கோழி கொள்முதல் விலை கிலோ ரூ.124 இருந்தது தற்போது கிலோ 80 ரூபாயாக நிர்ணயக்கப்பட்டு உள்ளது.

    பல்லடம் :

    பல்லடம் பகுதிகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணைகள் உள்ளன. இதன் மூலம், தினசரி 10 லட்சம் கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்பட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், மற்றும்கேரளா, ஆந்திரா, கர்நாடகா, உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. கறிக்கோழி நுகர்வை பொறுத்து இதன் விற்பனை விலையை பல்லடத்தில் உள்ள கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழுவினர் தினசரி நிர்ணயம் செய்து அறிவிக்கின்றனர்.

    இந்நிலையில் கறிக்கோழி விற்பனை நுகர்வு குறைவால், விற்பனையில் மந்தம் ஏற்பட்டு கொள்முதல் விலை சரிவு ஏற்பட்டுள்ளது. இதற்கிடையே கடந்த மாதத்தில் கறிக்கோழி கொள்முதல் விலை கிலோ ரூ.124 இருந்தது தற்போது கிலோ 80 ரூபாயாக நிர்ணயக்கப்பட்டு உள்ளது. இதனால் கறிக்கோழி உற்பத்தியாளர்களுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. இது குறித்து கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு செயலாளர் சுவாதி சின்னசாமி கூறியதாவது:-

    கடந்த புரட்டாசி மாதத்தால் கறிக்கோழி நுகர்வு குறைந்து கொள்முதல் விலை சரிவு ஏற்பட்டது. பின்னர் சபரிமலை சீசன், பொங்கல் பண்டிகைகளால் கறிக்கோழி விற்பனை சரிவு ஏற்பட்டது. வழக்கமாக பொங்கல் பண்டிகை முடிந்த பின்பு கறிக்கோழி விற்பனை அதிகரிக்கும். ஆனால் இந்த முறை, இன்னும் விற்பனை அதிகரிக்கவில்லை. இதனால் கொள்முதல் விலையும் உயரவில்லை. இந்த நிலையில் தற்போது கறிக்கோழி கொள்முதல் விலை ரூ.80 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் கறிக்கோழி உற்பத்திசெய்ய ஒரு கிலோவிற்கு ரூ. 90 வரை செலவாகும் நிலையில் கிலோ ஒன்றுக்கு 10 ரூபாய் வரை நஷ்டம் ஏற்படுகிறது. இந்த விலை வீழ்ச்சியால் பண்ணையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். வரும் வாரங்களில் திருமணம், போன்ற விழாக்கள் உள்ளதால் விற்பனை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • நாமக்கல் மண்டலத்தில் கறி கோழிக்கான விலை நிர்ணயம் பல்லடத்தில் நிர்ணயம் செய்யப்படுகிறது.
    • 102 ரூபாயாக இருந்த ஒரு கிலோ கறிக்கோழி கிலோவுக்கு 14 ரூபாய் குறைத்து ரூ.88 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.

    நாமக்கல்:

    நாமக்கல் மண்டலத்திற்கு உட்பட்ட நாமக்கல், சேலம், ஈரோடு, திருப்பூர் , பல்லடம் உட்பட பல பகுதிகளில் 25 லட்சத்திற்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணைகள் உள்ளன.

    இதன் மூலம் நாள் ஒன்றுக்கு 30 லட்சம் கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்பட்டு இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

    நாமக்கல் மண்டலத்தில் கறி கோழிக்கான விலை நிர்ணயம் பல்லடத்தில் நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் நேற்று

    பல்லடத்தில் நடந்த கறிக்கோழி உற்பத்தி யாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் 102 ரூபாயாக இருந்த ஒரு கிலோ கறிக்கோழி கிலோவுக்கு 14 ரூபாய் குறைத்து ரூ.88 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது .

    இந்த நிலையில் இன்று காலை மீண்டும் கறிக்கோழி உற்பத்தியாளர்கள் ஆலோசனை கூட்டம் பல்லடத்தில் நடந்தது. அப்போது கறிக்கோழியின் உற்பத்தி மற்றும் தேவைகள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. அதன் பின்னர் கிலோவுக்கு 3 ரூபாய் உயர்த்த முடிவு செய்யப்பட்டது .அதன்படி கறிக்கோழி விலை இன்று 91 ரூபாயாக உயர்த்தப்பட்டது.

    • கறிக்கோழி விலை குறைக்கப்பட்டு கிலோ ரூ.106 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.
    • முட்டை கொள்முதல் விலை 550 காசுகளாக இருந்து வந்தது. அவற்றின் விலைகளில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை என பண்ணையாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மண்டலத்தில் அதிக அளவில் கறிக்கோழி உற்பத்தி செய்யப்பட்டு நாடு முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    கடந்த சில நாட்களாக கறிக்கோழி கிலோ ரூ.113-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று பல்லடத்தில் நடந்த கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கறிக்கோழி உற்பத்தி மற்றும் அதன் தேவை குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.

    பின்னர் கறிக்கோழி விலையை மேலும் ரூ.7 குறைக்க முடிவு செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து கறிக்கோழி விலை குறைக்கப்பட்டு கிலோ ரூ.106 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.

    முட்டை கோழி கிலோ ரூ.90-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் மாற்றம் செய்யப்படவில்லை. மேலும் முட்டை கொள்முதல் விலை 550 காசுகளாக இருந்து வந்தது. அவற்றின் விலைகளில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை என பண்ணையாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

    • நாமக்கல் மண்டலத்தில் அதிக அளவில் கறிக்கோழி உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த கறிக்கோழிகள் நாடு முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
    • நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி ஒரு கிலோ ரூ.103-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.

    நாமக்கல்:

    நாமக்கல் மண்டலத்தில் அதிக அளவில் கறிக்கோழி உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த கறிக்கோழிகள் நாடு முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதற்கான விலை பல்லடத்தில் நிர்ணயம் செய்யப்படுகிறது. நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி ஒரு கிலோ ரூ.103-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் நேற்று பல்லடத்தில் நடந்த கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அதன் விலையை ஒரு கிலோவுக்கு மேலும் ரூ.3 உயர்த்த முடிவு செய்தனர். இதனால் கறிக்கோழி விலை கிலோவுக்கு ரூ.106 ஆக அதிகரித்து உள்ளது.

    நாமக்கல் மண்டலத்தில் கடந்த 14-ந் தேதி கறிக்கோழி ஒரு கிலோ ரூ.96-க்கு விற்பனை செய்யப்பட்டது. கடந்த 4 நாட்களில் படிப்படியாக ரூ.10 உயர்ந்து இருப்பதால் பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சபரிமலை சீசன் தொடங்கி இருப்பதால் கறிக்கோழி உற்பத்தியை 20% குறைத்துள்ளது தான் இந்த விலை உயர்வுக்கு காரணம் என பண்ணையாளர்கள் தரப்பில் கூறப்பட்டு உள்ளது.

    முட்டை கொள்முதல் விலை 535 காசுகள் ஆகும். முட்டை கோழி விலை கிலோ ரூ.102 ஆகவும் நீடிக்கிறது. அதன் விலைகளில் மாற்றம் செய்யப்படவில்லை என பண்ணையாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

    • புரட்டாசி மாதம் பிறந்துள்ளதால் பெரும்பாலான மக்கள் அசைவத்தை தவிர்த்துள்ளனர்.
    • ஆடு, கறிக்கோழி இறைச்சி கடைகளில் விற்பனை பெருமளவில் சரிந்துள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் மண்டலத்தில் 1100-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இவற்றில் 6 கோடிக்கும் மேல் முட்டையிடும் கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன.

    இதன்மூலம் நாள் ஒன்றுக்கு 4 கோடியே 50 லட்சம் முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த முட்டைக்கான விலையை தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு நிர்ணயம் செய்கிறது. பொதுவாக தட்பவெட்ப நிலை, பண்டிகை காலங்களின் தேவை ஆகியவற்றை கருத்தில் கொண்டு விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

    இதே போல தமிழகத்தில் சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, கோவை, பல்லடம் ஆகிய மாவட்டங்களில் 25 ஆயிரம் கறிக்கோழிப் பண்ணைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த பண்ணைகள் மூலம் தினமும் சராசரியாக தலா 2 கிலோ எடை கொண்ட 15 லட்சம் கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

    குறிப்பாக பல்லடம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணைகள் உள்ளன. இதன் மூலம் தினசரி 10 லட்சம் கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்பட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பிற மா நிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

    கறிக்கோழி நுகர்வை பொறுத்து இதன் கொள்முதல் விலையை பல்லடத்தில் உள்ள கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழுவினர் (பிசிசி) தினசரி நிர்ணயம் செய்து அறிவிக்கின்றனர்.

    இந்த நிலையில் புரட்டாசி மாதம் பிறந்துள்ளதால் பெரும்பாலான மக்கள் அசைவத்தை தவிர்த்துள்ளனர். இதனால் ஆடு, கறிக்கோழி இறைச்சி கடைகளில் விற்பனை பெருமளவில் சரிந்துள்ளது.

    மேலும் விலையும் படிப்பாடியாக சரிந்து வந்தது. இதனால் கறிக்கோழி விலை மேலும் சரியும் என்று பொது மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அதற்கு மாறாக விலை உயர்ந்து வருகிறது .

    புரட்டாசி மாதம் என்பதால் கறிக்கோழி உற்பத்தியை பண்ணையாளர்கள் குறைத்தனர். இதனால் கறிக்கோழி தட்டுப்பாடு ஏற்பட்டது . இதையடுத்து கறிக்கோழி விலை படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதனால் கறிக்கோழி பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    நாமக்கல் மண்டலத்தில் கறிக்கோழி பண்ணை கொள்முதல் மொத்த விலை கடந்த வாரம் (உயிருடன்) ஒரு கிலோ ரூ.86 ஆக இருந்த நிலையில் தற்போது 6 ரூபாய் உயர்ந்து ரூ.92 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

    சில்லரை விற்பனை கடைகளில் கறிக்கோழி ஒரு கிலோ கடந்த வாரம் 180 ரூபாய்க்கு விற்ற நிலையில் தற்போது 200 ரூபாயாக உயர்ந்துள்ளது. உற்பத்தி குறைந்ததால் விலை உயர்ந்ததாக கறிக்கோழி வியாபாரிகள் தெரிவித்தனர்.

    நாமக்கல் மண்டலத்தில் கடந்த வாரம் 4.30 காசுக்கு விற்பனையான முட்டை விலை தற்போது மேலும் 20 காசுகள் குறைந்து 4.10 காசுக்கு விற்பனையாவது குறிப்பிடத்தக்கது.

    • கறிக்கோழி விலை குறைந்துள்ள நிலையில் அதிக அளவில் தேக்கம் அடைய தொடங்கி உள்ளது.
    • இனி வரும் நாட்களில் கறிக்கோழி விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதால் கறிக்கோழி உற்பத்தியாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மண்டலத்தில் 1100-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இவற்றில் 6 கோடிக்கும் மேல் முட்டையிடும் கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன.

    இதன்மூலம் நாள் ஒன்றுக்கு 4 கோடியே 50 லட்சம் முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த முட்டைக்கான விலையை தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு நிர்ணயம் செய்கிறது. பொதுவாக தட்பவெட்ப நிலை, பண்டிகை காலங்களின் தேவை ஆகியவற்றை கருத்தில் கொண்டு விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

    இதே போல தமிழகத்தில் சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, கோவை, பல்லடம் ஆகிய மாவட்டங்களில் 25 ஆயிரம் கறிக்கோழிப் பண்ணைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த பண்ணைகள் மூலம் தினமும் சராசரியாக தலா 2 கிலோ எடை கொண்ட 15 லட்சம் கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

    குறிப்பாக பல்லடம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணைகள் உள்ளன. இதன் மூலம் தினசரி 10 லட்சம் கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்பட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பிற மா நிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

    கறிக்கோழி நுகர்வை பொருத்து இதன் கொள்முதல் விலையை பல்லடத்தில் உள்ள கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழுவினர் (பிசிசி) தினசரி நிர்ணயம் செய்து அறிவிக்கின்றனர்.

    இந்த நிலையில் புரட்டாசி மாதம் பிறந்துள்ளதால் பெரும்பாலான மக்கள் அசைவத்தை தவிர்த்துள்ளனர். இதனால் ஆடு, கறிக்கோழி இறைச்சி கடைகளில் விற்பனை பாதியாக சரிந்துள்ளது. இதனால் கறிக்கோழி விலை சரிய தொடங்கி உள்ளது. இனி வரும் நாட்களில் விலை மேலும் சரிய வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    நாமக்கல் மண்டலத்தில் உயிருடன் ஒரு கிலோ கறிக்கோழி கடந்த வாரம் பண்ணைகொள்முதல் விலை 130 ரூபாயாக இருந்த நிலையில் தற்போது ஒரு கிலோவுக்கு 26 ரூபாய் குறைந்து 104 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. மேலும் கடந்த 10 நாட்களுக்கு முன்பு 4.50-க்கு விற்ற ஒரு முட்டைவிலை படிப்படியாக குறைந்து தற்போது 4.30 ஆக குறைந்துள்ளது. முட்டைகள் வடமாநிலங்களுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுவதால் அதன் விலை பெருமளவில் குறையவில்லை என்று வியாபாரிகள் கூறுகின்றனர்.

    கறிக்கோழி விலை குறைந்துள்ள நிலையில் அதிக அளவில் தேக்கம் அடைய தொடங்கி உள்ளது. இதனால் இனி வரும் நாட்களில் கறிக்கோழி விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதால் கறிக்கோழி உற்பத்தியாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.

    • தினசரி 10 லட்சம் கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்படுகிறது.
    • கன மழையின் காரணமாக கறிக்கோழிகளை அனுப்ப முடியாத நிலை உள்ளது.

    பல்லடம் :

    பல்லடம் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணைகள் உள்ளன. இதன் மூலம் தினசரி 10 லட்சம் கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்பட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், கேரளா,ஆந்திரா,கர்நாடகா, உள்ளிட்ட பிற மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது, கறிக்கோழி நுகர்வை பொறுத்து இதன் விற்பனை விலையை பல்லடத்தில் உள்ள கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழுவினர் தினசரி நிர்ணயம் செய்து அறிவிக்கின்றனர்.

    இந்த நிலையில் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் தொடர்ந்து பெய்து வரும் கன மழையின் காரணமாக கறிக்கோழிகளை அனுப்ப முடியாத நிலை உள்ளதால் நுகர்வு குறைந்து கறிக்கோழிகள் தேக்கமடையும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் கறிக்கோழி நுகர்வு குறைவானதால் அதன் விலையும் கடும் வீழ்ச்சியடைந்துள்ளது. கடந்த 9-ந் தேதி கறிக்கோழி 1கிலோ கொள்முதல் விலை100 ரூபாயாக இருந்த நிலையில் நேற்று 66 ரூபாயாக விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. கறிக்கோழி உற்பத்திசெய்ய ஒரு கிலோவிற்கு ரூ.80 முதல் ரூ. 90 வரை செலவாகும் நிலையில், இந்த கடும் விலை வீழ்ச்சியால் பண்ணையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    கோடை வெப்பம் காரணமாக கறிக்கோழி விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. சென்னையில் நேற்று கறிக்கோழி விலை 1 கிலோ ரூ.240-க்கு விற்கப்பட்டது.
    சென்னை:

    கோடை வெப்பம் காரணமாக கறிக்கோழி விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. சென்னையில் நேற்று கறிக்கோழி விலை 1 கிலோ ரூ.240-க்கு விற்கப்பட்டது. கடந்த மாதம் கறிக்கோழி கிலோ ரூ.160-க்கு விற்கப்பட்டது.

    கடந்தவாரம் ரூ.160 முதல் ரூ.190 வரை விற்கப்பட்டது. நேற்று திடீரென்று ரூ.240 ஆக உயர்ந்தது. அதாவது ஒரே வாரத்தில் கிலோவுக்கு ரூ.50 உயர்ந்துள்ளது. இதனால் நேற்று கறிக்கோழி வாங்கிய வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    கறிக்கோழி விலை உயர்வுக்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. தற்போது 60 நாட்கள் மீன்பிடி தடைகாலம் அமலில் உள்ளதால் மீன்வரத்து குறைந்துவிட்டது. இதனால் பெரும்பாலானவர்கள் கறிக்கோழி வாங்க தொடங்கிவிட்டனர். எனவே கறிக்கோழி விலை உயர்ந்து விட்டதாக கடைக்காரர் ஒருவர் தெரிவித்தார்.

    தற்போது கோடைவெயில் அதிகமாக கொளுத்தி வருகிறது. இதனால் கோழிப் பண்ணைகளில் கோழி உற்பத்தி குறைந்துவிட்டது. வெப்பம் தாங்க முடியாமல் பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிகள் இறப்பும் அதிகரித்து வருகிறது. எனவே கோழிகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனாலேயே கறிக்கோழி விலை அதிகரித்து விட்டதாக நாமக்கல்லை சேர்ந்த கோழிப்பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

    மேலும் கோடை அல்லாத காலங்களில் பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிகள் விரைவில் எடைகூடும். வெயில் காலங்களில் கோழிகள் எடை அதிகரிப்பது தாமதமாகும். இதனால் ஏற்பட்ட தட்டுப்பாடு காரணமாக கோழிப்பண்ணைகளில் கடந்த 2 வாரத்தில் கிலோவுக்கு விலை ரூ.16 முதல் ரூ.19 வரை அதிகரித்திருப்பதாக கோழிப்பண்ணையாளர்கள் தெரிவித்தனர். தமிழகம் மற்றும் கேரளாவுக்கு விற்பனைக்காக செல்லும் கறிக்கோழிகளுக்கு பிராய்லர் ஒருங்கிணைப்பு கமிட்டி தான் விலையை நிர்ணயிக்கிறது. கோழிகள் உற்பத்தி மற்றும் தட்டுப்பாடு ஆகியவற்றுக்கு ஏற்ப விலை நிர்ணயிக்கப்படுகிறது. கோடைகாலம் முடிந்தபிறகு ஜூலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் கறிக்கோழி விலை ரூ.50 வரை குறைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

    சென்னையை பொறுத்த வரை தற்போது கறிக்கோழி கிலோ ரூ.240-க்கு விற்கப்படுகிறது. எலும்பு இல்லாத கறிக்கோழி கிலோ ரூ.340 முதல் ரூ.360 வரை விற்கப்படுகிறது. கோழிப்பண்ணைகளில் மே-1-ந்தேதி கறிக்கோழி கிலோ ரூ.90-க்கு விற்கப்பட்டது. நேற்று ரூ.109-க்கு விற்கப்பட்டது.

    மீன்பிடி தடைகாலம் காரணமாக காசிமேட்டில் சங்கரா மற்றும் கொடுவா மீன் 1 கிலோ ரூ.400 ஆக உயர்ந்துள்ளது. வஞ்சிரமீன் ரூ.750 ஆக உயர்ந்துள்ளது.#tamilnews
    ×