என் மலர்

  நீங்கள் தேடியது "Egg Price"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பண்ணை கொள்முதல் விலை பல்லடத்தில் உள்ள கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு சார்பில் தினமும் நிர்ணயம் செய்யப்படுகிறது.
  • கடந்த 1-ந்தேதி கொள்முதல் விலை ரூ.115 என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.

  நாமக்கல்:

  தமிழகத்தில் பல்லடம், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் 25 ஆயிரம் கறிக்கோழி உற்பத்தி பண்ணைகள் உள்ளன.

  இங்கு தினமும் 30 லட்சம் கிலோ கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்பட்டு தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா உட்பட பல்வேறு மாநிலங்களுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன. பண்ணை கொள்முதல் விலை பல்லடத்தில் உள்ள கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழு சார்பில் தினமும் நிர்ணயம் செய்யப்படுகிறது.

  அதன்படி கடந்த 1-ந்தேதி கொள்முதல் விலை ரூ.115 என நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. பின்னர் 5-ந் தேதி ரூ.106-ஆக சரிந்தது. 14-ந் தேதி மேலும் 10 ரூபாய் குறைக்கப்பட்டு ரூ.96-ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. நேற்று முன்தினம் 98 ரூபாயாக இருந்த நிலையில், நேற்று 5 ரூபாய் உயர்ந்து ஒரு கிலோ ரூ.103-ஆக நிர்ணயம் செய்யப்பட்டது.

  இதுகுறித்து தமிழ்நாடு முட்டை கோழி பண்ணையாளர்கள் சம்மேளன துணைத்தலைவர் வாங்கிலி சுப்பிரமணியம் கூறியதாவது,

  கறிக்கோழி ஒரு கிலோ உற்பத்தி செய்வதற்கு ரூ.105 செலவாகிறது. அதற்கு மேல் கொள்முதல் விலை நிர்ணயம் செய்தால் மட்டுமே பண்ணையாளர்களுக்கு லாபம் கிடைக்கும். ஆனால் தற்போது ரூ.103 என விலை நிர்ணயம் செய்தாலும் ரூ.95-க்கு கோழிகளை பிடிக்கின்றனர். ஒரு கிலோவுக்கு ரூ.8 இழப்பு ஏற்படுகிறது.

  கார்த்திகை மாதம் தொடங்கி உள்ளதால் சபரிமலைக்கு மாலை அணிந்து விரதம் கடைபிடிப்பர். அதனால் முன்கூட்டியே இவற்றை எதிர்பார்த்து 20சதவீதம் வரை உற்பத்தியை நிறுத்தி விட்டனர். அதன் காரணமாக வாரம் 2.50 கோடி கிலோ உற்பத்தி செய்த நிலையில் தற்போது 2 கோடி கிலோ கறிக்கோழி மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது என்றார்.

  இதற்கு இடையே நாமக்கல் மண்டல முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டம் தலைவர் டாக்டர் செல்வராஜ் தலைமையில் நேற்று நாமக்கல்லில் நடந்தது. இந்த கூட்டத்தில் வெளிமாநிலங்கள் மற்றும் தமிழகத்தில் உள்ள முட்டை விலை நிலவரம் மற்றும் அதன் தேவை குறித்தும் விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது. பின்னர் முட்டைக்கு 5 காசுகள் உயர்த்தி விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இதனால் 530 காசுகளாக இருந்த முட்டையின் விலை மேலும் 5 காசுகள் உயர்த்தப்பட்டு 535 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. சில்லறை விற்பனை கடைகளில் முட்டை 6 ரூபாய் 50 காசு வரை விற்பனை செய்வது குறிப்பிடத்தக்கது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • முட்டை உற்பத்தி நிலவரம் குறித்து பண்ணையாளர்கள் விரிவாக விவாதித்தனர்.
  • 515 காசுக்கு விற்கப்பட்ட முட்டை விலை, 5 காசு உயர்த்தி 520 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது.

  நாமக்கல்:

  நாமக்கல் மண்டலத்தில் இருந்து தமிழகம் மற்றும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும் வெளிநாடுகளுக்கும் முட்டை ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதனால் நாள் ஒன்றுக்கு 4 கோடிக்கும் அதிகமாக இங்கு முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த முட்டைகளுக்கு தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு விலை நிர்ணயம் செய்கிறது.

  அதன்படி நாமக்கல்லில் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நேற்று நடந்தது. அதில் முட்டை உற்பத்தி நிலவரம் குறித்து பண்ணையாளர்கள் விரிவாக விவாதித்தனர். இதை அடுத்து 515 காசுக்கு விற்கப்பட்ட முட்டை விலை, 5 காசு உயர்த்தி 520 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது.

  நாட்டின் பிற மண்டலங்களில் முட்டை விலை நிலவரம் காசுகளில் வருமாறு, சென்னை-540 காசுகள், ஹைதராபாத்-485, விஜயவாடா-504, பார்வாலா-504, மும்பை-550, மைசூர்-525, பெங்களூரு-525, கொல்கத்தா- 573, டில்லி-530 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

  இதே போல நாமக்கல்லில் பண்ணையாளர்கள் வியாபாரிகள் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் முட்டை கோழி விலையில் எந்தவித மாற்றமும் செய்யாமல் கிலோவுக்கு ரூ.95 என்ற அதே விலை நிர்ணயம் செய்யப்பட்டது.

  பல்லடத்தில் நடந்த கறிக்கோழி உற்பத்தியாளர் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில், ஒரு கிலோ ரூ.106-க்கு விற்பனை செய்யப்பட்ட கறிக்கோழி விலையிலும் எந்தவித மாற்றமும் செய்யாமல் அதே விலை நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • நாமக்கல் மற்றும் பல்லடத்தில் கறிக்கோழிகள் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது.
  • பல ஆயிரக்கணக்கான பண்ணைகளில் உற்பத்தி செய்யப்படும் லட்சக்கணக்கான கறிக்கோழிகள், நாடு முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

  நாமக்கல்:

  நாமக்கல் மண்டலத்தில் இருந்து தினமும் 4 கோடிக்கு அதிகமான முட்டைகள் வடமாநிலங்கள் மற்றும் கேரளாவுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. மேலும் தமிழகத்தின் தேவைக்கும், சத்துணவுக்கும் முட்டைகள் இங்கு இருந்து விநியோகிக்கப்படுகிறது.

  இந்நிலையில், நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை கடந்த 2 வாரமாக உயர்ந்து வருகிறது. நேற்று என்.இ.சி.சி மண்டல தலைவர் டாக்டர் செல்வராஜ் முட்டை விலையில் மேலும் 10 காசுகள் உயர்த்தி அறிவித்தார். இதை அடுத்து முட்டை பண்ணை கொள்முதல் விலை 500 காசில் இருந்து 510 காசாக உயர்ந்துள்ளது.

  வட மாநிலங்களில் நிலவி வரும் கடும் குளிரால் தேவை அதிகரித்துள்ளது. இதனால் முட்டை விலை தொடர்ந்து அதிகரித்து வருவதாக பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

  இதேபோல நாமக்கல் மற்றும் பல்லடத்தில் கறிக்கோழிகள் அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகிறது. பல ஆயிரக்கணக்கான பண்ணைகளில் உற்பத்தி செய்யப்படும் லட்சக்கணக்கான கறிக்கோழிகள், நாடு முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஆனால் கறிக்கோழியின் விலை பல்லடத்தில் நிர்ணயம் செய்யப்படுகிறது.

  பல்லடத்தில் கறிக்கோழி கொள்முதல் விலை நேற்று 112 ரூபாயாக இருந்தது. இன்றும் அதே‌ விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் சில்லறை விற்பனை கடைகளில் உரித்த கோழி ஒரு கிலோ 220 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இனிவரும் நாட்களில் கறிக்கோழி தேவை அதிகரிக்கும் என்பதால் மேலும் விலை உயரும் என்று கறிக்கோழி பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தினசரி சுமார் 4 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
  • அகில இந்திய அளவில் முட்டை உற்பத்தியில் நாமக்கல் மண்டலம் 2-வது இடம் வகிக்கிறது.

  நாமக்கல்:

  நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளிட்ட மாவட்டங்களைக் கொண்ட, நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி) நாமக்கல்லை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வருகிறது. மற்ற மாநிலங்களில் நிலவும் முட்டை விலைக்கேற்ப, நாமக்கல் என்.இ.சி.சி முட்டைக்கான விற்பனை விலையை நிர்ணயம் செய்து அறிவிக்கிறது.

  இந்த விலையை தமிழகத்தில் உள்ள கோழிப்பண்ணையாளர்கள் பின்பற்றி வருகின்றனர். முட்டை மொத்த விற்பனையாளர்களுக்கு, விற்பனைக்கான கமிஷனுக்காக, என்இசிசி விலையில் இருந்து, மைனஸ் விலையை, நெஸ்பாக் என்ற பண்ணையாளர்கள் மற்றும் முட்டை விற்பனையாளர்கள் கூட்டமைப்பு அறிவிக்கிறது.

  நாமக்கல் மண்டலத்தில் உள்ள 1000க்கும் மேற்பட்ட, கோழிப்பண்ணைகளில், மொத்தம் 5 கோடி முட்டையினக் கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இதன் மூலம் தினசரி சுமார் 4 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. அகில இந்திய அளவில் முட்டை உற்பத்தியில் நாமக்கல் மண்டலம் 2-வது இடம் வகிக்கிறது.

  இங்கு உற்பத்தியாகும் முட்டைகள் தமிழக அரசின் சத்துணவு திட்டத்திற்கும், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதிக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன. மேலும், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும், கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும், தினசரி லாரிகள் மூலம் முட்டைகள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.

  புரட்டாசி மாதத்தில் இந்துக்கள் அசைவ உணவு சாப்பிடுவதில்லை. இதனால் முட்டை விற்பனை சரிந்திருந்தது. தற்போது புரட்டாசி முடிவடைவதால் முட்டை விற்பனை அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதை தொடர்ந்து நாமக்கல் மண்டல தேசிய ஒருங்கிணைப்புக்குழு (என்இசிசி) கூட்டம், அதன் தலைவர் டாக்டர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில், ஏற்கனவே ரூ. 4.30ஆக இருந்த ஒரு முட்டையின் விலை 5 பைசா உயர்த்தப்பட்டு, ஒரு முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை ரூ. 4.35 ஆக நிர்ணயிக்கப்பட்டது.

  இந்த நிலையில் முட்டை மொத்த விற்பனையாளர்களுக்கு வழங்க வேண்டிய மைனஸ் விலை 30 பைசாவாக நெஸ்பாக் அறிவித்துள்ளது. இதனால் பண்ணையாளர்களுக்கு ஒரு முட்டைக்கு ரூ. 4.05 கிடைக்கும்.

  முக்கிய நகரங்களில் ஒரு முட்டையின் விலை (பைசாவில்) : சென்னை 460, பர்வாலா 435, பெங்களூர் 445, டெல்லி 457, ஹைதராபாத் 412, மும்பை 477, மைசூர் 447, விஜயவாடா 435, ஹெஸ்பேட் 405, கொல்கத்தா 500.

  கோழிவிலை பிராய்லர் கோழி உயிருடன் ஒரு கிலோ ரூ.109 ஆக பிசிசி அறிவித்துள்ளது. முட்டை க்கோழி ஒரு கிலோ ரூ. 84 ஆக பண்ணையாளர்கள் சங்கம் நிர்ணயித்துள்ளது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • கறிக்கோழி விலை குறைந்துள்ள நிலையில் அதிக அளவில் தேக்கம் அடைய தொடங்கி உள்ளது.
  • இனி வரும் நாட்களில் கறிக்கோழி விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதால் கறிக்கோழி உற்பத்தியாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.

  நாமக்கல்:

  நாமக்கல் மண்டலத்தில் 1100-க்கும் மேற்பட்ட கோழிப்பண்ணைகள் உள்ளன. இவற்றில் 6 கோடிக்கும் மேல் முட்டையிடும் கோழிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன.

  இதன்மூலம் நாள் ஒன்றுக்கு 4 கோடியே 50 லட்சம் முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த முட்டைக்கான விலையை தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு நிர்ணயம் செய்கிறது. பொதுவாக தட்பவெட்ப நிலை, பண்டிகை காலங்களின் தேவை ஆகியவற்றை கருத்தில் கொண்டு விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

  இதே போல தமிழகத்தில் சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, கோவை, பல்லடம் ஆகிய மாவட்டங்களில் 25 ஆயிரம் கறிக்கோழிப் பண்ணைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த பண்ணைகள் மூலம் தினமும் சராசரியாக தலா 2 கிலோ எடை கொண்ட 15 லட்சம் கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.

  குறிப்பாக பல்லடம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கறிக்கோழி பண்ணைகள் உள்ளன. இதன் மூலம் தினசரி 10 லட்சம் கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்பட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும், கேரளா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட பிற மா நிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

  கறிக்கோழி நுகர்வை பொருத்து இதன் கொள்முதல் விலையை பல்லடத்தில் உள்ள கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழுவினர் (பிசிசி) தினசரி நிர்ணயம் செய்து அறிவிக்கின்றனர்.

  இந்த நிலையில் புரட்டாசி மாதம் பிறந்துள்ளதால் பெரும்பாலான மக்கள் அசைவத்தை தவிர்த்துள்ளனர். இதனால் ஆடு, கறிக்கோழி இறைச்சி கடைகளில் விற்பனை பாதியாக சரிந்துள்ளது. இதனால் கறிக்கோழி விலை சரிய தொடங்கி உள்ளது. இனி வரும் நாட்களில் விலை மேலும் சரிய வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

  நாமக்கல் மண்டலத்தில் உயிருடன் ஒரு கிலோ கறிக்கோழி கடந்த வாரம் பண்ணைகொள்முதல் விலை 130 ரூபாயாக இருந்த நிலையில் தற்போது ஒரு கிலோவுக்கு 26 ரூபாய் குறைந்து 104 ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுகிறது. மேலும் கடந்த 10 நாட்களுக்கு முன்பு 4.50-க்கு விற்ற ஒரு முட்டைவிலை படிப்படியாக குறைந்து தற்போது 4.30 ஆக குறைந்துள்ளது. முட்டைகள் வடமாநிலங்களுக்கு அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுவதால் அதன் விலை பெருமளவில் குறையவில்லை என்று வியாபாரிகள் கூறுகின்றனர்.

  கறிக்கோழி விலை குறைந்துள்ள நிலையில் அதிக அளவில் தேக்கம் அடைய தொடங்கி உள்ளது. இதனால் இனி வரும் நாட்களில் கறிக்கோழி விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதால் கறிக்கோழி உற்பத்தியாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • முட்டை கொள்முதல் விலை 470 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டது.
  • தட்டுப்பாடு காரணமாகவும் முட்டை விலை அதிகரித்து இருப்பதாக பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

  நாமக்கல்:

  நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 420 காசுகளாக இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று நாமக்கல் லில் நடந்தமுட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் அதன் விலையை 50 காசுகள் உயர்த்த முடிவு செய்யப்பட்டது.

  அதைத்தொடர்ந்து முட்டை கொள்முதல் விலை 470 காசுக ளாக நிர்ணயம் செய்யப்பட்டது.தமிழகத்திலும், வடமாநி லங்களிலும் பண்டிகைகள் முடிந்து முட்டை நுகர்வு அதிக ரித்து இருப்பதாகவும், அதனால் ஏற்பட்ட தட்டுப்பாடு காரணமாகவும் முட்டை விலை அதிகரித்து இருப்பதாக பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

  மேலும் கறிக்கோழி கிலோ ரூ.66-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதற்கிடையே நேற்று நடந்த கறிக்கோழி ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் அதன் விலையை ரூ.10 உயர்த்த முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து கறிக்கோழி விலை கிலோ ரூ.76-ஆக உயர்ந்தது. 

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • முட்டை கொள்முதல் விலை 470 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டது.
  • தட்டுப்பாடு காரணமாகவும் முட்டை விலை அதிகரித்து இருப்பதாக பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

  நாமக்கல்:

  நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 420 காசுகளாக இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று நாமக்கல் லில் நடந்தமுட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் அதன் விலையை 50 காசுகள் உயர்த்த முடிவு செய்யப்பட்டது.

  அதைத்தொடர்ந்து முட்டை கொள்முதல் விலை 470 காசுக ளாக நிர்ணயம் செய்யப்பட்டது.தமிழகத்திலும், வடமாநி லங்களிலும் பண்டிகைகள் முடிந்து முட்டை நுகர்வு அதிக ரித்து இருப்பதாகவும், அதனால் ஏற்பட்ட தட்டுப்பாடு காரணமாகவும் முட்டை விலை அதிகரித்து இருப்பதாக பண்ணையாளர்கள் தெரிவித்தனர்.

  மேலும் கறிக்கோழி கிலோ ரூ.66-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதற்கிடையே நேற்று நடந்த கறிக்கோழி ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் அதன் விலையை ரூ.10 உயர்த்த முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து கறிக்கோழி விலை கிலோ ரூ.76-ஆக உயர்ந்தது. 

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது.
  • தொடர்ந்து முட்டை விற்பனையை அதிகரிக்கும் நோக்கத்தில் விலை குறைப்பு செய்யப்பட்டது.

  நாமக்கல்:

  நாமக்கல் மண்டலத்தில் முட்டை பண்ணை கொள்முதல் விலை ரூ.4.40 ஆக இருந்தது. இந்த நிலையில் தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடைபெற்றது. இதில் முட்டை விலையை 10 காசுகள் குறைத்து ரூ.4.30 ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. இதுகுறித்து பண்ணையாளர்கள் கூறுகையில், தமிழகத்தில் ஆடி மாதம் முடிந்த நிலையில் முட்டை விற்பனை சூடு பிடிக்க தொடங்கியது. கேரளாவில் ஓணம் பண்டிகை, வட மாநிலங்களில் ஸ்வரன் பண்டிகை காரணமாக முட்டை நுகர்வு குறைந்ததால் விற்பனை மந்தமானது. இதனால் முட்டை தேக்கம் அடைந்தது. இதை தொடர்ந்து முட்டை விற்பனையை அதிகரிக்கும் நோக்கத்தில் விலை குறைப்பு செய்யப்பட்டது என்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • முட்டை விலை நிர்ணயம் தொடர்பாக பண்ணையாளர்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டன.
  • முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை 25 காசுகள் குறைக்கப்பட்டு ரூ.4.20-ஆக நிர்ணயிக்கப்பட்டது.

  நாமக்கல்:

  தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நாமக்கல் மண்டல ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவா் தலைமையில் நடைபெற்றது.

  இதில், முட்டை விலை நிர்ணயம் தொடர்பாக பண்ணையாளர்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டன. மற்ற மண்டலங்களில் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாலும், ஆடி மாதப் பிறப்பால் மக்களிடையே முட்டை நுகா்வு சரிந்துள்ளதாலும், பண்ணைகளில் முட்டைகள் தேக்கம் அதிகரித்து வருவதாலும் விலையில் மாற்றம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டது.

  அதனடிப்படையில், முட்டையின் பண்ணைக் கொள்முதல் விலை 25 காசுகள் குறைக்கப்பட்டு ரூ.4.20-ஆக நிர்ணயிக்கப்பட்டது.

  அதேபோல் பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முட்டைக் கோழி விலை கிலோ ரூ. 71-ஆகவும், கறிக்கோழி விலை கிலோ ரூ. 95-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பொதுவாக பண்ணைகளில் உரிய எடைக்கும் கீழ் குறைவாக உள்ள முட்டைகள் வெளிமாநிலம், மாவட்டங்களுக்கு அனுப்பப்படுவதில்லை.
  • எடை குறைவான ஒரு கோடி முட்டைகளைக் கொள்முதல் செய்ய தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.

  நாமக்கல்:

  நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் அதன் தலைவர் செல்வராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் முட்டைகள் தேக்கத்தைக் கருத்தில் கொண்டு விலையில் மாற்றம் செய்யப்படாமல் ரூ.4.40-ல் நீடிக்கும் என்று பண்ணையாளர்களிடம் தெரிவிக்கப்பட்டது.

  பொதுவாக பண்ணைகளில் உரிய எடைக்கும் கீழ் குறைவாக உள்ள முட்டைகள் வெளிமாநிலம், மாவட்டங்களுக்கு அனுப்பப்படுவதில்லை. இதனால் அவை தேக்கம் அடைகின்றன.

  இதையடுத்து எடை குறைவான ஒரு கோடி முட்டைகளைக் கொள்முதல் செய்ய தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து அதன் தலைவர் சிங்கராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

  நாமக்கல் மண்டலத்தில் உள்ள கோழிப் பண்ணையாளர்களிடம் இருந்து தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர்கள் சங்கம் மூலம் 48 கிராம் முதல் 50 கிராம் எடையுடைய முட்டைகளை தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுவின் நிர்ணய விலையான ரூ.4.40-ல் இருந்து 70 காசுகள் குறைவாகவும், 50 கிராம் முதல் 52 கிராம் எடையுடைய முட்டைகளை 60 காசுகள் குறைவாகவும், ஒரு முட்டைகள் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது.

  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

  பல்லடத்தில் நடைபெற்ற தேசிய ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில், கறிக்கோழி விலை கிலோ ரூ.90 ஆகவும், முட்டைக் கோழி விலை கிலோ ரூ.95-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பண்ணை கொள்முதல் விலையாக ஒரு முட்டை 535 காசுகள் என இருந்த நிலையில் நேற்று மேலும் 15 காசுகள் உயர்ந்து 550 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டது.
  • இதனால் சில்லரை விற்பனை கடைகளில் 6 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

  நாமக்கல்:

  நாமக்கல் மண்டலத்தில் தினமும் 5 கோடிக்கும் அதிகமாக முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த முட்டைகள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கும், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

  முட்டை நுகர்வை பொருத்து தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழு என்ற தனியார் அமைப்பு முட்டை கொள்முதல் விலையை நிர்ணயம் செய்கிறது. இதன்படி நாமக்கல் மண்டலத்தில் (சென்னை தவிர தமிழகம் முழுவதும்) பண்ணை கொள்முதல் விலை நிர்ணயிக்கப்பட்டு விற்கப்படுகிறது.

  பண்ணை கொள்முதல் விலையாக ஒரு முட்டை 535 காசுகள் என இருந்த நிலையில் நேற்று மேலும் 15 காசுகள் உயர்ந்து 550 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டது. இதனால் சில்லரை விற்பனை கடைகளில் 6 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை நிர்ணயம் நாமக்கல் முட்டை விலை வரலாற்றில் உச்சபட்ச விலை என்பதால் கோழிப்பண்ணையாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

  அதே வேளையில் சில்லறை விற்பனை விலையில் ஒரு முட்டை ரூ.6 வரை விற்பனை செய்யப்படுகிறது. சில இடங்களில் ரூ. 6-க்கும் அதிகமாக விற்கப்படுகிறது. இது முட்டை விலை உயர்வு நுகர்வோரை அதிருப்தி அடைய செய்துள்ளது.

  இதனிடையே கோழி தீவனம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முட்டை உற்பத்தி செலவு அதிகரித்துள்ளது. இதை சமாளிக்கவோ முட்டை விலை உயர்த்தப்பட்டுள்ளதாக கோழிப்பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

  இதுகுறித்து தமிழ்நாடு முட்டை கோழிப்பண்ணையாளர்கள் சம்மேளன துணைத் தலைவர் வாங்கிலி சுப்ரமணியம் கூறியதாவது:-

  கடந்த ஓராண்டாக கோழிப்பண்ணையாளர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டு வருகிறது. ஒரு முட்டை உற்பத்திக்கான செலவு 400 காசுகளில் இருந்து 450 காசுகளாக அதிகரித்துள்ளது. தற்போது 550 காசாக நிர்ணயம் செய்யப்பட்டாலும் 515 காசு மட்டுமே கையில் கிடைக்கிறது.

  எனவே கோழிப்பண்ணைகளில் கோழிக்குஞ்சு விடுவது தவிர்க்கப்பட்டுள்ளது. இதனால் முட்டை உற்பத்தி குறைந்துள்ளது. இதன் மூலம் நாள் தோறும் 5 கோடி முட்டை உற்பத்தி செய்து வந்த நிலையில் தற்போது 4.20 கோடி முட்டைகள் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது.

  ஆண்டுதோறும் முட்டை உற்பத்தி 10 சதவீதம் உயரும் நிலையில் தற்போது 20 சதவீதம் குறைந்துள்ளது. உற்பத்தி குறைவு காரணமாக முட்டை கொள்முதல் விலை 600 காசுகள் வரை உயர வாய்ப்பு உள்ளது என்றார். பண்ணை கொள்முதல் விலை 600 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டால் சில்லறை விற்பனை கடைகளில் விலை மேலும் அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

  இவ்வாறு அவர் கூறினார்.

  முட்டை கொள்முதல் விலை கடந்த 1-ந்தேதி (பைசாவில்) 480காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டது. தொடர்ந்து 6-ம் தேதி 485 காசாகவும், 9-ந் தேதி 490 காசு, 11-ந்தேதி 495 காசு, 13-ந்தேதி 505 காசு, 16-ந் தேதி 510 காசு, 23-ந் தேதி 520 காசு, 25-ந் தேதி 535 காசு என ஏற்றம் கண்டு வந்த முட்டை விலை நேற்று மேலும் ஏற்றம் கண்டு 15 காசு அதிகரித்து 550 காசுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print