என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மேலும் 20 காசுகள் சரிவு
    X

    நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை மேலும் 20 காசுகள் சரிவு

    • முட்டை விலை நாளுக்கு நாள் சரிந்து வருவதால் பண்ணையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.
    • 420 காசுக்கு விற்பனை செய்யப்பட்ட முட்டை விலை, 20 காசுகள் மேலும் குறைந்து 400 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது.

    நாமக்கல்:

    நாமக்கல் மண்டலத்தில் 8 கோடிக்கும் அதிகமான முட்டை கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இந்த கோழிகள் மூலம் தினமும் 6 கோடி முட்டைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த மூட்டைகள் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    இந்த நிலையில் முட்டை விலை நாளுக்கு நாள் சரிந்து வருவதால் பண்ணையாளர்கள் கவலை அடைந்துள்ளனர். இதற்கிடையே தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டம், நாமக்கல்லில் நேற்று நடந்தது. இதில் முட்டை தேவை மற்றும் உற்பத்தி குறித்து விரிவாக ஆலோசனைக்கப்பட்டது. பின்னர் முட்டை விலை மேலும் 20 காசுகள் குறைக்கப்பட்டது.

    அதன்படி 420 காசுக்கு விற்பனை செய்யப்பட்ட முட்டை விலை, 20 காசுகள் மேலும் குறைந்து 400 காசாக நிர்ணயம் செய்யப்பட்டது. உற்பத்தி சரிவாலும், வடமாநிலங்களில் விலை குறைந்ததாலும் நாமக்கல் மண்டலத்தில் கொள்முதல் விலை சரிந்துள்ளது.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு 30 காசு சரிந்த நிலையில், நேற்று மேலும் 20 காசு சரிந்து 3 நாட்களில் மட்டும் 50 காசுகள் சரிந்துள்ளதால் கோழி பண்ணை உரிமையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

    மேலும் கோழிப்பண்ணைக்கு தேவையான உணவு தானியங்களை மானிய விலையில் வழங்க வேண்டும் இல்லாவிட்டால் தொழிலை தொடர்ந்து நடத்த முடியாது. பல லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்றும் தமிழக அரசுக்கு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மற்ற மண்டலங்களில் முட்டை விலை நிலவரம் வருமாறு:

    சென்னை-435 காசு, விஜயவாடா-395, ஹைதராபாத்-370, விஜயவாடா-395, பார்வால-375, மும்பை-430, மைசூர்-415, பெங்களூர்-410, கொல்கத்தா-455, டெல்லி-405 காசுகள் என விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கறிக்கோழி மற்றும் முட்டை கோழி விலையில் எவ்வித மாற்றமும் செய்யாமல் அதே விலை நிர்ணயம் செய்யப்பட்டது.

    Next Story
    ×