search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கர்நாடக முதல் மந்திரி குமாரசாமி"

    காவிரி விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டாம் என்று கர்நாடக முதல் மந்திரி குமாரசாமி தெரிவித்துள்ளார். #Kumaraswamy #CauveryIssue
    சென்னை:

    கர்நாடகம் மாநில முதல் மந்திரி குமாரசாமி இன்று சென்னைக்கு வருகை தந்தார். மேகதாது விவகாரம் தொடர்பாக செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறியதாவது:

    தமிழக மக்களும், கர்நாடக மக்களும் சகோதரர்கள். காவிரி விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டாம். 125 ஆண்டுகால காவிரி நதிநீர் பிரச்சனையை பேசி தீர்க்க வேண்டும்.

    மேகதாது அணை விவகாரத்தை தமிழக அரசு புரிந்து கொள்ள வேண்டும். தமிழகத்தில் 50 சதவீத தண்ணீர் கடலில் கலக்கிறது என தெரிவித்துள்ளார். #Kumaraswamy #CauveryIssue
    பெங்களூருவில் நடந்த விழாவில் கண்ணீர் விட்டு அழுதது ஏன் என்று கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி விளக்கம் அளித்துள்ளார்.
    புதுடெல்லி:

    கர்நாடக மாநில முதல்-மந்திரி குமாரசாமி கடந்த 14-ந்தேதி பெங்களூரு ஜே.பி.பவனில், ஜனதாதளம்(எஸ்) கட்சி சார்பில் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோருக்கு நடந்த பாராட்டு விழாவில் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் கர்நாடக மாநில மக்கள் ஜனதாதளம்(எஸ்) கட்சியை புறக்கணித்து விட்டார்கள் என்றும் தான் முதல்-மந்திரியாக இருந்தாலும் சந்தோஷமாக இல்லை என்றும் கண்ணீர் விட்டு அழுதபடி தெரிவித்தார்.

    இந்த நிலையில் அந்த நிகழ்ச்சியில் கண்ணீர் விட்டு அழுதது ஏன் என்பதற்கு குமாரசாமி விளக்கம் அளித்துள்ளார்.

    நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டியளித்த அவர் இதுபற்றி கூறியதாவது:-

    மாநில மக்களின் பிரச்சினைக்காக நான் பகிரங்கமாக கண்ணீர் சிந்தினேன். அரசு துறைகளில் தவறுகள் மீது நடவடிக்கை எடுப்பதில் எவ்வளவு கண்டிப்புடன் இருக்கிறேனோ அதே அளவுக்கு நான் உணர்ச்சிவசப்படும் நபராகவும் இருக்கிறேன். இது என்னுள் இருக்கும் சகஜமான குணம். இதற்கு வேறு அர்த்தம் கற்பிக்க வேண்டிய அவசியம் இல்லை.

    எனது நடவடிக்கையும் கண்ணீர் சிந்தும் அளவுக்கே பாரபட்சமற்ற முறையில் இருக்கிறது. எனது குடும்பத்தை போல் உள்ள கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசும்போது உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் சிந்தியது உண்மை தான். எனது கட்சி நிர்வாகிகளிடம் எனது வேதனையை பகிர்ந்து கொண்டேன். எனது கண்ணீருக்கு வேறு அர்த்தம் கற்பிக்க வேண்டிய அவசியம் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார். 
    கர்நாடகாவில் வெளியாகும் காலா படத்துக்கு உரிய பாதுகாப்பு வழங்கவேண்டும் என நடிகர் விஷால் கர்நாடக முதல் மந்திரி குமாரசாமிக்கு கடிதம் எழுதியுள்ளார். #Kaala #ActorVishal #Kumarasami #Letter
    சென்னை:

    இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள காலா திரைப்படம் நாளை வெளியாகிறது. வெளிநாடுகளில் காலா படம் ஒருநாள் முன்னதாகவே வெளியிடப்பட்டது. 

    இதற்கிடையே, காலா படத்தை பேஸ்புக் லைவ் மூலம் நேரடியாக சுமார் 40 நிமிடம் ஒளிபரப்பு செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தென்னிந்திய நடிகர் சங்க தலைவரும், தயாரிப்பாளர் சங்க தலைவருமான நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.



    இந்நிலையில், காலா படத்துக்கு உரிய பாதுகாப்பு வழங்க கோரி கர்நாடக முதல் மந்திரி குமாரசாமிக்கு நடிகர் விஷால் கோரிக்கை விடுத்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் எழுதிய கடிதத்தில், கர்நாடகாவில் காலா படம் வெளியாவதை உறுதி செய்து, திரையரங்குகளுக்கு வரும் ரசிகர்களுக்கு பாதுகாப்பு வழங்குங்கள்.

    முதல் மந்திரி குமாரசாமி எடுக்கும் முடிவு தமிழகம் மற்றும் கர்நாடகம் இடையே உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையும் என குறிப்பிட்டிருந்தார். #Kaala #ActorVishal #Kumarasami #Letter
    ஸ்ரீரங்கத்தில் சாமி தரிசனம் செய்ய வந்த கர்நாடக முதல் மந்திரி குமாரசாமியுடன் சிறுவன் ஒருவன் பாதுகாப்பு கெடுபிடிகளை மீறி செல்பி எடுத்த ருசிகர சம்பவம் நடந்துள்ளது.#Kumaraswamy
    திருச்சி:

    ஒருவார டென்‌ஷன் குறைந்ததும் திருச்சி ஸ்ரீரெங்கநாதரை தரிசித்து மனதையும், உடலையும் ஆசுவாசப்படுத்திக் கொள்வதற்காக குமாரசாமி ஸ்ரீரங்கம் வந்தார்.

    முதல்வராக பதவி ஏற்க போபவர் ஏற்கனவே அரசியல் சிக்களுக்குள் இருப்பவர். எனவே ஏதேனும் சிக்கல் வந்து விட கூடாதே என்று பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருந்தன.

    ஸ்ரீரங்கத்தில் காரை விட்டு இறங்கிய குமாரசாமி போலீஸ், உயர் அதிகாரிகள் புடை சூழ கோவிலுக்கு சென்றார். அப்போது ஒரு சிறுவன் பாதுகாப்பு வளையத்தையும் மீறி உள்ளே புகுந்து விட்டான்.

    போலீஸ் அதிகாரிகள் அவனை பிடித்து வெளியே தள்ளியும் அவன் விடவில்லை. தொடர்ந்து குமாரசாமியை நெருங்கி செல்வதிலேயே குறியாக இருந்தான்.

    ஒரு கட்டத்தில் கோபம் அடைந்த போலீஸ் அதிகாரி ஒருவர் அவனை பிடித்து விசாரித்த போது ‘குமாரசாமியுடன் ஒரு செல்பி எடுக்கணும் சார்’ என்று கெஞ்சினான். இப்போ ரொம்ப முக்கியம். டென்‌ஷனாக்காதே ஒடு என்று அந்த அதிகாரி எச்சரித்து விரட்டினார்.

    ஆனாலும் விடாமல் தொடர்ந்த அந்த சிறுவனை பார்த்ததும் குமாரசாமி நின்று என்ன வி‌ஷயம் என்று விசாரித்தார். செல்பி எடுக்கும் விருப்பத்தை அவன் சொன்னதும் அவனை அருகில் அழைத்து உற்சாகமாக போஸ் கொடுத்தார். செல்பி எடுத்த சந்தோ‌ஷத்தில் அந்த சிறுவனும் அங்கிருந்து சென்று விட்டான்.



    அந்த சிறுவனின் பெயர் ஹரிகிருஷ்ணன் (14). கரூரில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறான். ஸ்ரீரங்கம் கிழக்கு உத்தர தெருவில் வசித்து வருகிறான். வாரம் தோறும் விடுமுறையில் வீட்டுக்கு வருவான்.

    வீட்டில் இருக்கும் போது கோவிலுக்கு வி.ஐ.பி.க்கள் வந்தால் எப்படியாவது அவர்களுடன் செல்பி எடுத்து கொள்வான். கடந்த செப்டம்பர் மாதம் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சென்ற போது அவருடனும் செல்பி எடுத்து இருக்கிறான்.

    நேற்றும் விடுமுறை நாள் என்பதால் வீட்டில் இருந்தான். மாலை 5 மணியளவில் கோவில் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர். அதை பார்த்ததும் யாரோ வி.ஐ.பி. வரப்போகிறார் என்பதை யூகித்துக் கொண்ட  ஹரிகிருஷ்ணன் அங்கு நின்ற போஸ்லீகாரரிடம் விசாரித்து இருக்கிறான்.

    குமாரசாமி வருவதை கேள்விப்பட்டதும் கர்நாடக முதல்வருடன் எப்படியாவது செல்பி எடுத்துவிட வேண்டும் என்று நினைத்து சுமார் 1½ மணி நேரம் வீட்டுக்கு வெளியே காத்து நின்று இருக்கிறான்.

    குமாரசாமியின் கார் வந்ததும் பின் தொடர்ந்து இருக்கிறான். அவனிடம், இவ்வளவு பாதுகாப்பு கெடுபிடிக்குள் தைரியமாக செல்கிறாயே உனக்கு பயம் இல்லையா? என்றதும் ஏன் பயப்பட  வேண்டும்? எல்லோரும் மனிதர்கள்தானே என்று சர்வசாதாரணமாக கூறினான்.

    குமாரசாமியுடன் செல்பி எடுத்த அனுபவத்தை பற்றி கூறும் போது, மிகவும் எளிமையாக இருந்தார். அது எனக்கு பிடித்தது என்றான்.#Kumaraswamy
    ×