என் மலர்
செய்திகள்

காவிரி விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டாம் - கர்நாடக முதல் மந்திரி குமாரசாமி
காவிரி விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டாம் என்று கர்நாடக முதல் மந்திரி குமாரசாமி தெரிவித்துள்ளார். #Kumaraswamy #CauveryIssue
சென்னை:
கர்நாடகம் மாநில முதல் மந்திரி குமாரசாமி இன்று சென்னைக்கு வருகை தந்தார். மேகதாது விவகாரம் தொடர்பாக செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் கூறியதாவது:
தமிழக மக்களும், கர்நாடக மக்களும் சகோதரர்கள். காவிரி விவகாரத்தில் அரசியல் செய்ய வேண்டாம். 125 ஆண்டுகால காவிரி நதிநீர் பிரச்சனையை பேசி தீர்க்க வேண்டும்.
மேகதாது அணை விவகாரத்தை தமிழக அரசு புரிந்து கொள்ள வேண்டும். தமிழகத்தில் 50 சதவீத தண்ணீர் கடலில் கலக்கிறது என தெரிவித்துள்ளார். #Kumaraswamy #CauveryIssue
Next Story






