என் மலர்

  நீங்கள் தேடியது "Karnataka chief minister"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கர்நாடக மாநில முதல்வராக வேண்டும் என்ற பேராசை இல்லை, ஆனால் அடுத்த தேர்தலில் பார்க்கலாம் என சித்தராமையா தெரிவித்துள்ளார். #Siddaramaiah #congress
  கர்நாடக மாநிலத்தில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி செய்து வந்தது. ஆனால் மே மாதம் நடைபெற்ற சட்டசபை தேர்தலின்போது காங்கிரஸ் கட்சி 2-வது இடமே பிடித்தது. பா.ஜனதாவிற்கு அதிக தொகுதிகள் கிடைத்த போதிலும் ஆட்சி அமைக்கும் அளவிற்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் குமாரசாமி ஆட்சியமைக்க காங்கிரஸ் ஆதரவு கொடுத்தது. நீண்ட இழுபறிக்குப்பின் குமாரசாமி ஆட்சியமைத்தார்.

  இந்நிலையில் தனக்கு மீண்டும் முதல்வராகும் பேராசை இல்லை என்று சித்தராமையா தெரிவித்துள்ளார். இதுகுறித்து சித்தராமையா கூறுகையில் ‘‘நான் முதல்வராக போகிறேன் என்ற எடியூரப்பா கூறுவது போல் நான் எங்கேயாவது அப்படி கூறினேனா?. அது போன்ற கேள்விகள் எழும்ப வேண்டியதில்லை. அடுத்த தேர்தலில் மக்கள் ஆதரவு அளித்தால், அப்போது பார்க்கலாம்.

  முதலமைச்சராக பதவி வகிக்கும் வாய்ப்பு எனக்கு ஐந்து வருடங்கள் கிடைத்தது. நாங்கள் திறமையான அரசை நடத்தி, மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றினோம். அதில் எனக்கு திருப்தி ஏற்பட்டுள்ளது. முதல்வராக வேண்டும் என்ற பேராசை எனக்கில்லை’’ என்றார். #Siddaramaiah #congress 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கர்நாடக ஐகோர்ட்டு பிறப்பித்துள்ள உத்தரவை ஏற்று ‘காலா’ படம் திரையிடப்படும் திரையரங்குகளுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும் என கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி கூறியுள்ளார். #Kaala #Kumarasami
  பெங்களூரு:

  கர்நாடக மந்திரிசபை விரிவாக்கம் நேற்று நடைபெற்றது. நடிகை ஜெயமாலா உள்பட 25 பேர் புதிய மந்திரிகளாக பதவி ஏற்றனர். புதிய மந்திரிகள் பதவி ஏற்புக்கு பின், மந்திரிசபை கூட்டம் முதல்-மந்திரி குமாரசாமி தலைமையில் பெங்களூரு விதான சவுதாவில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு பின் குமாரசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-  ‘காலா’ படத்திற்கு கர்நாடகத்தில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அதனால் அந்த படத்தை இங்கு வெளியிடாமல் இருந்தால் நல்லது என்று விநியோகஸ்தர்களுக்கு நான் கூறினேன். இப்போதும் அதைத்தான் கூறுகிறேன்.

  ஆயினும் கர்நாடக ஐகோர்ட்டு பிறப்பித்துள்ள உத்தரவை அமல்படுத்துவோம். ‘காலா’ படம் திரையிடப்படும் திரையரங்குகளுக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்படும். புதிய மந்திரிகளுக்கு இலாகாக்கள் இன்று (அதாவது நேற்று) இரவோ அல்லது இன்று(வியாழக்கிழமை) காலையிலோ ஒதுக்கப்படும். அதன் பிறகு புதிய மந்திரிகள் தங்களின் பணிகளை தொடங்குவார்கள்.

  இவ்வாறு குமாரசாமி கூறினார்.  #Kaala #Kumarasami 
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஸ்ரீரங்கத்தில் சாமி தரிசனம் செய்ய வந்த கர்நாடக முதல் மந்திரி குமாரசாமியுடன் சிறுவன் ஒருவன் பாதுகாப்பு கெடுபிடிகளை மீறி செல்பி எடுத்த ருசிகர சம்பவம் நடந்துள்ளது.#Kumaraswamy
  திருச்சி:

  ஒருவார டென்‌ஷன் குறைந்ததும் திருச்சி ஸ்ரீரெங்கநாதரை தரிசித்து மனதையும், உடலையும் ஆசுவாசப்படுத்திக் கொள்வதற்காக குமாரசாமி ஸ்ரீரங்கம் வந்தார்.

  முதல்வராக பதவி ஏற்க போபவர் ஏற்கனவே அரசியல் சிக்களுக்குள் இருப்பவர். எனவே ஏதேனும் சிக்கல் வந்து விட கூடாதே என்று பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டிருந்தன.

  ஸ்ரீரங்கத்தில் காரை விட்டு இறங்கிய குமாரசாமி போலீஸ், உயர் அதிகாரிகள் புடை சூழ கோவிலுக்கு சென்றார். அப்போது ஒரு சிறுவன் பாதுகாப்பு வளையத்தையும் மீறி உள்ளே புகுந்து விட்டான்.

  போலீஸ் அதிகாரிகள் அவனை பிடித்து வெளியே தள்ளியும் அவன் விடவில்லை. தொடர்ந்து குமாரசாமியை நெருங்கி செல்வதிலேயே குறியாக இருந்தான்.

  ஒரு கட்டத்தில் கோபம் அடைந்த போலீஸ் அதிகாரி ஒருவர் அவனை பிடித்து விசாரித்த போது ‘குமாரசாமியுடன் ஒரு செல்பி எடுக்கணும் சார்’ என்று கெஞ்சினான். இப்போ ரொம்ப முக்கியம். டென்‌ஷனாக்காதே ஒடு என்று அந்த அதிகாரி எச்சரித்து விரட்டினார்.

  ஆனாலும் விடாமல் தொடர்ந்த அந்த சிறுவனை பார்த்ததும் குமாரசாமி நின்று என்ன வி‌ஷயம் என்று விசாரித்தார். செல்பி எடுக்கும் விருப்பத்தை அவன் சொன்னதும் அவனை அருகில் அழைத்து உற்சாகமாக போஸ் கொடுத்தார். செல்பி எடுத்த சந்தோ‌ஷத்தில் அந்த சிறுவனும் அங்கிருந்து சென்று விட்டான்.  அந்த சிறுவனின் பெயர் ஹரிகிருஷ்ணன் (14). கரூரில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறான். ஸ்ரீரங்கம் கிழக்கு உத்தர தெருவில் வசித்து வருகிறான். வாரம் தோறும் விடுமுறையில் வீட்டுக்கு வருவான்.

  வீட்டில் இருக்கும் போது கோவிலுக்கு வி.ஐ.பி.க்கள் வந்தால் எப்படியாவது அவர்களுடன் செல்பி எடுத்து கொள்வான். கடந்த செப்டம்பர் மாதம் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சென்ற போது அவருடனும் செல்பி எடுத்து இருக்கிறான்.

  நேற்றும் விடுமுறை நாள் என்பதால் வீட்டில் இருந்தான். மாலை 5 மணியளவில் கோவில் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர். அதை பார்த்ததும் யாரோ வி.ஐ.பி. வரப்போகிறார் என்பதை யூகித்துக் கொண்ட  ஹரிகிருஷ்ணன் அங்கு நின்ற போஸ்லீகாரரிடம் விசாரித்து இருக்கிறான்.

  குமாரசாமி வருவதை கேள்விப்பட்டதும் கர்நாடக முதல்வருடன் எப்படியாவது செல்பி எடுத்துவிட வேண்டும் என்று நினைத்து சுமார் 1½ மணி நேரம் வீட்டுக்கு வெளியே காத்து நின்று இருக்கிறான்.

  குமாரசாமியின் கார் வந்ததும் பின் தொடர்ந்து இருக்கிறான். அவனிடம், இவ்வளவு பாதுகாப்பு கெடுபிடிக்குள் தைரியமாக செல்கிறாயே உனக்கு பயம் இல்லையா? என்றதும் ஏன் பயப்பட  வேண்டும்? எல்லோரும் மனிதர்கள்தானே என்று சர்வசாதாரணமாக கூறினான்.

  குமாரசாமியுடன் செல்பி எடுத்த அனுபவத்தை பற்றி கூறும் போது, மிகவும் எளிமையாக இருந்தார். அது எனக்கு பிடித்தது என்றான்.#Kumaraswamy
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கர்நாடக மாநிலத்தின் 23-வது முதல்வராக எடியூரப்பா இன்று பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் வாஜுபாய் வாலா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். #Yeddyurappa #KarnatakaCM
  பெங்களூரு:

  கர்நாடக சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. 104 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள பாஜகவின் முதல்வர் வேட்பாளரான எடியூரப்பா ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார்.  

  அதேசமயம், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சியமைக்க காங்கிரஸ் ஆதரவு அளித்தது. இரு கட்சிகளும் இணைந்தால் மெஜாரிட்டி இருப்பதால், கூட்டணி ஆட்சி அமைக்க முடிவு செய்தது. அதன்படி முதல்வர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்ட குமாரசாமி ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார்.

  பா.ஜ.க.வுக்கு மெஜாரிட்டி இல்லாத நிலையில் காங்கிரஸ் மற்றும் மஜத எம்.எல்.ஏ.க்களை தங்கள் பக்கம் இழுக்க முயற்சி எடுத்து வருவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

  ஆனால், திடீர் திருப்பமாக எடியூரப்பாவை ஆட்சியமைக்க ஆளுநர் வஜுபாய் வாலா நேற்று இரவு அழைப்பு விடுத்தார். மேலும் பதவியேற்ற நாளில் இருந்து 15 நாட்களில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

  கர்நாடகாவில் பாஜகவை ஆட்சியமைக்க  ஆளுநர் அழைப்பு விடுத்ததை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் உச்சநீதிமன்றத்தில் நேற்றிரவு மனுதாக்கல் செய்யப்பட்டது. மனுவை உடனடியாக விசாரித்த உச்ச நீதிமன்றம், பதவியேற்புக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது.  இந்நிலையில் ஆளுநரின் அழைப்பையடுத்து ராஜ்பவனில் இன்று காலை பதவியேற்பு விழா நடைபெற்றது. கர்நாடக மாநிலத்தின் 23-வது முதல்வராக எடியூரப்பா பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு ஆளுநர் வஜுபாய் வாலா பதவிப்பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். பின்னர் எடியூரப்பாவுக்கு மலர்க்கொத்து கொடுத்து வாழ்த்தினார்.  பதவியேற்பு விழாவில் மத்திய மந்திரிகள் ஜே.பி.நட்டா, தர்மேந்திர பிரதான், பிரகாஷ் ஜவடேகர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள், கட்சி நிர்வாகிகள், அரசுத்துறை உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

  பதவியேற்பு விழாவையொட்டி கவர்னர் மாளிகை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகள், பா.ஜ.க. அலுவலகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

  இதனையடுத்து எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வை ஆதரித்தால் மட்டுமே இது சாத்தியம். இதற்கு 15 நாட்கள் அவகாசம் இருப்பதால் குதிரைபேரம் நடைபெற வாய்ப்பு அதிகம். எனவே, காங்கிரஸ் கட்சியும் மதச்சார்பற்ற ஜனதா தளமும் தங்கள் எம்.எல்.ஏ.க்களை பா.ஜ.க.வினர் நெருங்க விடாமல் பாதுகாத்து வருகின்றனர்.  #Yeddyurappa #KarnatakaCM

  ×