search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "BS Yeddyurappa"

    கர்நாடகாவில் பாவம், பொம்மை கவிழ்ந்து உடைந்து விட்டது என்று எடியூரப்பா ராஜினாமா குறித்து முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். #KarnatakaElection2018 #KarnatakaFloorTest #PChidambaram
    சென்னை:

    கர்நாடக சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி கிடைக்கவில்லை. 104 தொகுதிகளில் வென்ற பாரதிய ஜனதா சட்டசபையில் மெஜாரிட்டியை நிரூபிக்க உத்தரவிடப்பட்டது.

    நேற்று சட்டசபையில் மெஜாரிட்டி நிரூபிக்க நம்பிக்கை ஓட்டெடுப்பு நடப்பதற்கு முன்பே எடியூரப்பா ராஜினாமா செய்தார். அதனால் பாரதிய ஜனதா அரசு 3 நாளில் முடிவுக்கு வந்தது.

    கர்நாடக மாநில தேர்தல் விவகாரம் குறித்து காங்கிரஸ் முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில் தொடர்ந்து கருத்து பதிவு செய்து வந்தார்.

    கவர்னருக்கு எழுதிய கடிதத்தில் தனக்கு எத்தனை உறுப்பினர்களின் ஆதரவு என்று கூட எடியூரப்பா குறிப்பிடவில்லை. ஆனால் அவருக்கு முதல்-மந்திரி பதவி ஏற்க அழைப்பு, நம்பிக்கை வாக்கெடுப்பை தவிர்ப்பதற்காக எத்தன வித்தைகள் பாரீர்! 15 நாள் அவகாசம், ரகசிய வாக்கெடுப்பு, கைப்பாவை தற்காலிக சபாநாயகர், இன்னும் எத்தனையோ? என்று ப.சிதம்பரம் கருத்து கூறி வந்தார்.

    எடியூரப்பா ராஜினாமா குறித்து ப.சிதம்பரம் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள கருத்து வருமாறு:-


    கர்நாடக மாநிலத்தில், பாவம், பொம்மை கவிழ்ந்து விழுந்து உடைந்தது. ஆனால் பொம்பலாட்டக்காரன்கள் ஓடி ஒளிந்து கொண்டார்கள். ஜனநாயகம் பிழைத்தது என்று மகிழ்ச்சி அடைவோம் என்று தெரிவித்துள்ளார். #KarnatakaElection2018 #KarnatakaFloorTest #PChidambaram #BSYeddyurappa
    கர்நாடக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற எடியூரப்பா உள்ளிட்ட 3 எம்.பி.க்கள் மற்றும் 5 எம்.எல்.சி.க்கள் அவர்களின் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதால் அந்த இடங்கள் காலியாகும் நிலை ஏற்பட்டுள்ளது. #KarnatakaBypoll
    பெங்களூரு:

    கர்நாடக மாநில முதல்வராக இன்று பதவியேற்ற எடியூரப்பா ஷிமோகா எம்.பி.யாக இருந்து வருகிறார். நடந்து முடிந்த தேர்தலில் ஷிகாரிபூரா சட்டசபை தொகுதியில் வெற்றி பெற்றுள்ளதால் ஷிமோகா எம்.பி பதவியை ராஜினாமா செய்ய உள்ளார். எடியூரப்பாவை தவிர மொலகல்முறு சட்டசபை தொகுதியில் வெற்றி பெற்ற பல்லாரி எம்.பி ஸ்ரீராமுலு மற்றும் மெலுகோட் சட்டசபை தொகுதியில் வெற்றி பெற்ற மாண்யா எம்.பி சி.எஸ். புட்டராஜூ ஆகியோர் தங்களது எம்.பி பதவியை ராஜினாமா செய்யும் நிலையில் உள்ளனர்.

    மேலும், சட்டசபை தேர்தலில் போட்டியிட்ட 11 கர்நாடக எம்.எல்.சி உறுப்பினர்களில் ஷிமோகா தொகுதியில் வெற்றி பெற்ற கர்நாடக மேல்சபையின் எதிர்க்கட்சி தலைவர் ஈஸ்வரப்பா, கொரட்கேர் தொகுதியில் வெற்றி பெற்ற மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வரா, பிஜபூர் தொகுதியில் வெற்றி பெற்ற பசாசங்கவுடா பாட்டில் யட்னால், ஹெப்பல் தொகுதியில் வெற்றி பெற்ற பைராடி சுரேஷ் மற்றும் கோவிந்த் ராஜ் நகர் தொகுதியில் வெற்றி பெற்ற வி.சோமன்னா ஆகிய 5 பேரும் தங்களின் கர்நாடக எம்.எல்.சி உறுப்பினர் பதவிகளை ராஜினாமா செய்ய உள்ளனர்.

    கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு பின்னர் 3 எம்.பி.களும், 5 எம்.எல்.சி.களும் அவர்களின் பதவியை ராஜினாமா செய்ய உள்ளதால் இந்த இடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. #KarnatakaBypoll #BSYeddyurappa
    கர்நாடக மக்களின் எதிர்பார்ப்புகளை புதிதாக பதவியேற்றுள்ள எடியூரப்பா அரசு நிறைவேற்றும் என பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா தெரிவித்துள்ளார். #BSYeddyurappa #Amitsha
    புதுடெல்லி:

    கர்நாடக சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில் திடீர் திருப்பமாக எடியூரப்பாவை ஆட்சியமைக்க ஆளுநர் வஜுபாய் வாலா நேற்று இரவு அழைப்பு விடுத்தார். ஆளுநரின் அழைப்பையடுத்து ராஜ்பவனில் இன்று காலை பதவியேற்பு விழா நடைபெற்றது. கர்நாடக மாநிலத்தின் 23-வது முதல்வராக எடியூரப்பா பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு ஆளுநர் வஜுபாய் வாலா பதவிப்பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

    இந்நிலையில், முதல்வராக பதவியேற்றுள்ள எடியூரப்பாவிற்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக டுவிட்டரில் பா.ஜ.க. தேசிய தலைவர் அமித்ஷா பதிவிட்டுள்ளதாவது :-


    கர்நாடகா மாநில முதல்வராக பதவியேற்றுள்ள எடியூரப்பாவுக்கு எனது வாழ்த்துக்கள். எடியூரப்பா முதல்வரானதன் மூலம் காங்கிரஸ் கட்சியின் ஊழல் மற்றும் பிரிவினை அரசியலை எதிர்த்து வாக்களித்த அனைத்து கன்னடர்களுக்கும் வெற்றி கிடைத்துள்ளது. புதிதாக அமைந்துள்ள அரசு பிரதமர் மோடியின் வழிகாட்டுதலின் படி கர்நாடகா மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். #BSYeddyurappa #Amitsha
    கர்நாடக மாநிலத்தின் 23-வது முதல்வராக எடியூரப்பா இன்று பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் வாஜுபாய் வாலா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். #Yeddyurappa #KarnatakaCM
    பெங்களூரு:

    கர்நாடக சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. 104 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள பாஜகவின் முதல்வர் வேட்பாளரான எடியூரப்பா ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார்.  

    அதேசமயம், மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆட்சியமைக்க காங்கிரஸ் ஆதரவு அளித்தது. இரு கட்சிகளும் இணைந்தால் மெஜாரிட்டி இருப்பதால், கூட்டணி ஆட்சி அமைக்க முடிவு செய்தது. அதன்படி முதல்வர் வேட்பாளராக தேர்வு செய்யப்பட்ட குமாரசாமி ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார்.

    பா.ஜ.க.வுக்கு மெஜாரிட்டி இல்லாத நிலையில் காங்கிரஸ் மற்றும் மஜத எம்.எல்.ஏ.க்களை தங்கள் பக்கம் இழுக்க முயற்சி எடுத்து வருவதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

    ஆனால், திடீர் திருப்பமாக எடியூரப்பாவை ஆட்சியமைக்க ஆளுநர் வஜுபாய் வாலா நேற்று இரவு அழைப்பு விடுத்தார். மேலும் பதவியேற்ற நாளில் இருந்து 15 நாட்களில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.

    கர்நாடகாவில் பாஜகவை ஆட்சியமைக்க  ஆளுநர் அழைப்பு விடுத்ததை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் உச்சநீதிமன்றத்தில் நேற்றிரவு மனுதாக்கல் செய்யப்பட்டது. மனுவை உடனடியாக விசாரித்த உச்ச நீதிமன்றம், பதவியேற்புக்கு தடை விதிக்க மறுத்துவிட்டது.



    இந்நிலையில் ஆளுநரின் அழைப்பையடுத்து ராஜ்பவனில் இன்று காலை பதவியேற்பு விழா நடைபெற்றது. கர்நாடக மாநிலத்தின் 23-வது முதல்வராக எடியூரப்பா பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு ஆளுநர் வஜுபாய் வாலா பதவிப்பிரமாணமும் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். பின்னர் எடியூரப்பாவுக்கு மலர்க்கொத்து கொடுத்து வாழ்த்தினார்.



    பதவியேற்பு விழாவில் மத்திய மந்திரிகள் ஜே.பி.நட்டா, தர்மேந்திர பிரதான், பிரகாஷ் ஜவடேகர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள், கட்சி நிர்வாகிகள், அரசுத்துறை உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

    பதவியேற்பு விழாவையொட்டி கவர்னர் மாளிகை மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகள், பா.ஜ.க. அலுவலகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

    இதனையடுத்து எடியூரப்பா பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வை ஆதரித்தால் மட்டுமே இது சாத்தியம். இதற்கு 15 நாட்கள் அவகாசம் இருப்பதால் குதிரைபேரம் நடைபெற வாய்ப்பு அதிகம். எனவே, காங்கிரஸ் கட்சியும் மதச்சார்பற்ற ஜனதா தளமும் தங்கள் எம்.எல்.ஏ.க்களை பா.ஜ.க.வினர் நெருங்க விடாமல் பாதுகாத்து வருகின்றனர்.  #Yeddyurappa #KarnatakaCM

    ×