என் மலர்tooltip icon

    இந்தியா

    முடா ஊழல்- நேரில் ஆஜராகும்படி முதல்வர் சித்தராமையாவுக்கு நோட்டீஸ்
    X

    முடா ஊழல்- நேரில் ஆஜராகும்படி முதல்வர் சித்தராமையாவுக்கு நோட்டீஸ்

    • கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவுக்கு, லோக் ஆயுக்தா போலீசார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
    • சித்தராமையாவின் மனைவி மற்றும் சகோதரர் ஆகியோர் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர்.

    கர்நாடகாவில் 'முடா' நில முறைகேடுதொடர்பாக முதல்-மந்திரி சித்தராமையா மீது ஊழல் வழக்கு தொடரப்பட்டது.

    இந்த விவகாரத்தில் 3 பேர் அளித்த புகாரின் பேரில் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி சித்தராமையாவுக்கு எதிராக மைசூரு லோக் ஆயுக்தா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    அதன்படி, இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக சித்தராமையாவும், 2வது குற்றவாளியாக அவரது மனைவி பார்விதியும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    தொடர்ந்து, 3வது குற்றவாளியாக சித்தராமையாவின் மைத்துனர் மல்லிகார்ஜூன சுவாமி, 4வது குற்றவாளியாக தேவராஜ் என்பவரும் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக, கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவுக்கு, லோக் ஆயுக்தா போலீசார் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

    முடா ஊழல் தொடர்பாக நவம்பர் 6ம் தேதி மைசூவில் உள்ள லோக் ஆயுக்தா அலுவலகத்தில் நேரில் ஆஜராகும்படி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

    ஏற்கனவே சித்தராமையாவின் மனைவி மற்றும் சகோதரர் ஆகியோர் ஆஜராகி விளக்கம் அளித்த நிலையில் தற்போது சித்தராமையாவுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

    Next Story
    ×