search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கபடி"

    • தமிழகம் முழுவதிலும் இருந்து 900-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
    • ஆண்கள் பிரிவில் 9 பேரும், பெண்கள் பிரிவில் 11 பேரும் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

    தரங்கம்பாடி:

    மயிலாடுதுறை நகரின் மையப்பகுதியில், இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் பயிற்சி மையம் அமைந்துள்ளது. இங்கு பல்வேறு போட்டிகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

    இதனிடையே கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக கபடி பயிற்சியாளர்கள் இல்லாததால் விளையாட்டு வீரர்கள் தேர்வு செய்யப்ப டாத சூழல் இருந்தது.

    இதற்கு பல்வேறு அமைப்பினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

    தொடர்ந்து பல கட்ட போராட்டங்களுக்குப் பிறகு இந்திய விளையாட்டு ஆணையம் சார்பில் நடப்பு 2023 - 24-ம் ஆண்டிற்கான கபாடி வீரர்கள் தேர்வு நேற்று சாய் விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

    இதனை தமிழ்நாடு அமெச்சூர் கபடி கழக மாநில தலைவர் சோலை என்.ராஜா பங்கேற்று துவக்கி வைத்தார்.

    மேலும் தமிழகம் முழுவதிலும் இருந்து ஆண்கள் மற்றும் பெண்கள் என 900 பேர் போட்டிகளுக்கான தேர்வில் பங்கேற்றனர்.

    தேர்ந்தெடுக்கப்படும் வீரர்களுக்கு பயிற்சி அளிக்கும் விதமாக தற்போது மூன்று பயிற்சியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    ஒரு நாள் நடைபெறும் இந்த தேர்வில் ஆண்கள் பிரிவில் 9 பேரும் , பெண்கள் பிரிவில் 11 பேரும் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். தொடர்ந்து மாணவர்கள் தகுந்த சான்றுகளை சமர்ப்பித்து போட்டியில் பங்கேற்றனர்.

    பின்னர் பேசிய மாநில தலைவர் ராஜா கபடிக்கு என்று இங்கு பிரத்தியேகமாக நேஷனல் சென்ட்ரல் ஆப் எக்ஸலென்ஸ் அமைக்க வேண்டும் என்றும், இதுகுறித்து மத்திய அமைச்சர்கள் உட்பட அனைவருக்கும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும், அப்படி அமைக்காவிட்டால் மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம் எனவும் தெரிவித்தார்.

    பேட்டியின் போது நகர மன்ற கவுன்சிலர் ரஜினி உள்ளிட்ட உடற்பயிற்சி ஆசிரியர்கள் இருந்தனர்.

    • போட்டியில் ஆலங்குடி அணியினர் வெற்றி பெற்றனர்.
    • தொடாந்து, ஏனங்குடி அணியினர் 3-து பரிசும், கல்லார் அணியினர் 4-வது பரிசும் பெற்றனர்.

    நாகப்பட்டினம்:

    நாகப்பட்டினத்தில் ஈஷா கிராமோத்சவம் மாவட்ட அளவிலான கபடி போட்டி நடைபெற்றது. தமிழ்நாடு அமைச்சூர் கபடி கழகம் நடத்திய ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கபடி போட்டியில், திருமருகல் ஆலங்குடி, நம்பியார்நகர், அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், பெரியதும்பூர், நாகூர், நாகை வேதாரண்யம் பகுதிகளைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மற்றும் பொது பிரிவை சேர்ந்த 40, அணி வீரர்கள் இதில் கலந்து கொண்டனர்.

    திருமருகல் மற்றும் ஆலங்குடி வீரர்களுக்கு இடையே விறுவிறுப்பாக நடைபெற்ற கபடி போட்டியில் ஆலங்குடி அணியினர் வெற்றி பெற்றனர்.

    இதைப்போல் நாகை மற்றும் வேதாரண்யம் அணிகளுக்கு இடையே நடைபெற்ற கபடி போட்டியில் நாகை அணியினர் கூடுதல் வெற்றி புள்ளிகள் பெற்று வேதாரண்யம் அணியினரை தோற்கடித்தனர்.

    இதில் வெற்றி பெற்று தேர்ந்தெடுக்கப்படும் அணியினர், செப்டம்பர் மாதம் திருச்சி மற்றும் கோவையில் நடைபெறும் மண்டல அளவிலான போட்டிகளில் பங்கேற்க உள்ளனர். நம்பியார் நகர் முதல் பரிசு, கீச்சாங்குப்பம் 2-வது பரிசு, ஏனங்குடி 3-து பரிசு, கல்லார் 4-வது பரிசு பெற்றனர்.

    • தி.மு.க. இளைஞரணி சார்பில் கபடி போட்டி நடந்தது.
    • வெங்கடேசன் எம்.எல்.ஏ. பரிசு வழங்கினார்.

    சோழவந்தான்

    மதுரை புறநகர் தி.மு.க. வடக்கு மாவட்ட இளை ஞரணி, சோழவந்தான் பேரூர் இளைஞர் அணி சார்பாக சோழவந்தானில் 2 நாட்கள் மின்னொளி கபடி போட்டி நடந்தது. இதில் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்ட கபடி அணியினர் கலந்து கொண்டனர்.

    வெற்றி பெற்ற அணி யினருக்கு சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் பரிசுகள் வழங்கினார். மதுரை புறநகர் வடக்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் ராஜா தலைமை வகித்தார்.

    இதில் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் பசும்பொன்மாறன், சோழ வந்தான் பேரூராட்சி சேர்மன் ஜெயராமன், பேரூர் செயலாளர் சத்ய பிரகாஷ், பொதுக்குழு உறுப்பினர் ஸ்ரீதர், பேரூர் துணை செயலாளர்கள் ஸ்டாலின், கொத்தாலம் செந்தில், பேரூராட்சி வார்டு கவுன்சிலர்கள் ஈஸ்வரி, ஸ்டாலின், குருசாமி, செல்வராணி, ஜெயராமச்சந்திரன், நிஷா, கவுதம ராஜா, முத்துச் செல்வி, சதீஷ், அவைத் தலைவர் தீர்த்தம் ராமன், மாவட்ட இளைஞர் அணி துணைச் செயலாளர் வெற்றிச்செல்வன்.

    வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய இளைஞரணி செயலாளர் பால் கண்ணன், பேரூர் இளைஞ ரணி செய லாளர் முட்டை கடை காளி, குருவி த்துறை அலெக்ஸ், மில்லர், தவம், மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்ட னர்.

    • ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பாக நடந்த மாவட்ட அளவிலான கபடி போட்டியில் பங்கேற்றனர்
    • 41 அணிகள் பங்கேற்ற இப்போட்டியில் 3-வது இடத்தை பிடித்தது

    நாகர்கோவில், ஜூலை.16-

    அஞ்சுகிராமம் அருகே பால்குளத்தில் உள்ள ரோகிணி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியின் கபடி அணி மாணவர்கள் ஆவரைகுளம் தென் ஆவரை ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பாக நடந்த மாவட்ட அளவிலான கபடி போட்டியில் பங்கேற்றனர்.41 அணிகள் பங்கேற்ற இப்போட்டியில் 3-வது இடத்தை பிடித்து சுழற் கோப்பையையும். ரூ.10 ஆயிரத்தையும் வென்றனர். பரிசு பெற்ற கல்லூரியின் கபடி அணி வீரர்கள் மற்றும் பயிற்சி அளித்த உடற்கல்வி இயக்குனர் சபரீஷ் காட்வின் மற்றும் ராம்கி ஆகியோரை கல்லூரியின் தலைவர் நீலமார்த்தண்டன், துணை தலைவர் நீல விஷ்ணு, நிர்வாக இயக்குனர் பிளஸ்சி ஜியோ, கல்லூரியின் முதல்வர் ராஜேஷ், துறை தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்தனர்.

    • கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களை சேர்ந்த 42 அணிகள் கலந்து கொண்டார்கள்.
    • 2 மற்றும் 3-வது இடங்களை எருக்கூர், பூங்குடி அணிகள் பெற்றன.

    சீர்காழி:

    சீர்காழி தாலுக்கா கொள்ளிடம் ஒன்றியம் குன்னம் சந்தோஷ்,கவி ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் ரோட்டரி கிளப் ஆப் சீர்காழி டெம்பிள்டவுன் இணைந்து நடத்திய 5 ஆம் ஆண்டு கபாடி போட்டி நடைபெற்றது .

    கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் சேர்ந்த42 அணிகள் கலந்து கொண்டார்கள். இதில் முதல் பரிசை குன்னம் அணி தட்டி சென்றது. 2 மற்றும் 3-வது இடங்களை எருக்கூர், பூங்குடி அணிகள் பெற்றன.

    போட்டியில் முதல் பரிசு ரூ. 15,000 மற்றும் கேடயம் ஆகியவற்றை டெம்பிள் ரன் ரோட்டரி சங்கத் தலைவர் கார்த்திகேயன் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் சங்க செயலாளர் ரவி, பொருளாளர் சந்தோஷ், முன்னாள் தலைவர்கள் மலர்க் கண்ணன் , சொர்ண பால், உறுப்பினர்கள் அருணாச்சலம், ராதாகிருஷ்ணன் ,ஹாஜா ஷெரிப், ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • கமுதி அருகே நடந்த கபடி போட்டியில் 43 அணிகள் பங்கேற்றனர்.
    • சாமிபட்டி அணி முதல் பரிசை பெற்றது.

    பசும்பொன்

    ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே சேர்ந்த கோட்டை கிராமத்தில், ஆண்டுதோறும் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் ஆண்டு விழா நடைபெறுவது வழக்கம். இதையொட்டி கபடி போட்டி நடத்தப்படும். இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் உள்ள இந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கலந்து கொள்வார்கள். மேலும் பல்வேறு விளை யாட்டுப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

    இந்த ஆண்டு 42-வது ஆண்டு விழா நடைபெற்றது. இதனைமுன்னிட்டு ஓட்டப்பந்தயம், சாக்கு ஓட்டம், லக்கி கார்னர் உள்பட பல போட்டிகள் நடைபெற்றது. இதில் பெரியவர்கள், சிறியவர்கள்,பெண்கள் உட்பட 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    அரசு பணியில் புதிதாக இணைந்தவர்கள் மற்றும் அரசு பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது. 10-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவி களுக்கு பரிசுத்தொகை மற்றும் புத்தகங்கள் வழங்கப்பட்டது.

    எஸ்.ஆர்.எம். கபடி குழுவினர் நடத்திய கபடி போட்டியில் சேர்ந்த கோட்டை, சாமிபட்டி, ஆலங்குளம், கலையூர், ஏனாதி ஆகிய கிராமங்கள் உட்பட ஏராளமான பகுதியிலிருந்து 43 கபடி அணிகள் பங்கேற்றன. போட்டியில் சாமிபட்டி அணி வெற்றி பெற்று முதல் பரிசை பெற்றது.

    இந்த அணிக்கு சுழற் கோப்பை மற்றும் ரொக்க பரிசு ரூ.15 ஆயிரம் வழங்கப்பட்டது. 2-ம் இடம் பிடித்த சேர்ந்த கோட்டை எஸ்.ஆர்.எம். "பி" அணிக்கு சுழற்கோப்பை மற்றும் ரூ.12 ஆயிரம் ரொக்க பரிசும், 3-ம் இடம் பிடித்த எஸ்.ஆர்.எம். "ஏ" அணிக்கு சுழற் கோப்பை மற்றும் ரூ.10 ஆயிரம் ரொக்க பரிசும், 4-ம் இடம் பிடித்த ஆலங்குளம் அணிக்கு சுழற் கோப்பை மற்றும் ரூ.8 ஆயிரம் ரொக்கப் பரிசும் வழங்கப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்திரனாக நீதிபதி ஜெய்சங்கர் கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார். இதற்கான ஏற்பாடுகளை இளைஞர் நற்பணி மன்றம் மற்றும் எஸ்.ஆர்.எம். ஸ்போர்ட்ஸ் கிளப் நண்பர்கள் செய்திருந்தனர்.

    • கபடி போட்டியை நகர்மன்ற தலைவர் தொடங்கி வைத்தார்.
    • இரு அணிகளும் சம பலத்துடன் மோதியது.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் ராம்கோ தொழில் நிறுவனங்களின் ஸ்தாபகர் பி.ஏ.சி. ராமசாமி ராஜா நினைவு விளையாட்டு மன்றம் சார்பில் 60-வது மணிவிழா ஆண்டு கபடி போட்டிகள் தொடங்கியது. ராஜபாளையம் ஊர்க்காவல் படை மைதானத்தில் மின்னொளி விளையாட்டு அரங்கில் நகர்மன்ற தலைவர் பவித்ரா சியாம் தலைமை தாங்கி போட்டிகளை தொடங்கி வைத்தார்.

    விருதுநகர் மாவட்ட தலைவர் கபடி சுப்பிரமணிய ராஜா வரவேற்றார். கோவில்பட்டி தொழில் பிரமுகர் வெங்கடசுப்பிரமணிய ராஜா, கவுன்சிலர் சோலைமலை, அரிமா சங்கம் சார்பில் ராம் சிங் மற்றும் சிவக்குமார், முத்துராமலிங்க பாண்டியன், விளையாட்டு மன்ற செயலாளர் கனி முத்து குமரன் உள்பட பலர் பேசினர்.

    விளையாட்டு மன்ற பொருளாளர் சம்சுதீன் வரவேற்றார். முன்னணி விளையாட்டு வீரர் காளிதாஸ் தொகுத்து வழங்கினார். முதலாவது போட்டியாக முகவூர் நண்பர்கள் அணியும், வத்திராயிருப்பு அணியும் மோதின. இரு அணிகளும் சம பலத்துடன் மோதியது. 

    • ராஜபாளையத்தில் 40-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்கும் கபடி போட்டி இன்று மாலை தொடங்குகிறது.
    • நகர்மன்ற தலைவர் பவித்ரா சியாம் தலைமை தாங்குகிறார்.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் ராம்கோ தொழில் நிறுவனங்களின் நிறுவனர் பி.ஏ.சி.ராமசாமி ராஜா நினைவு விளையாட்டு மன்றம் சார்பில் 60-வது மணிவிழா ஆண்டு கபடி போட்டிகள் இன்று (20-ந் தேதி) மாலை முதல் தொடங்குகிறது.

    ராஜபாளையம் ஊர்க்காவல் படை மைதானத்தில் மாலை 4 மணியளவில் கபடி போட்டிகள் தொடங்குகின்றன.

    நகர் மன்ற தலைவர் பவித்ரா சியாம் தலைமை தாங்குகிறார். ராஜுக்கள் கல்லூரி செயலாளர் சிங்கராஜ் மற்றும் பலர் கலந்துகொண்டு கபடி போட்டிகளை தொடங்கி வைக்கின்றனர்.

    கே.எஸ்.ஆர். பஸ் சர்வீஸ் அதிபர் பிரகாஷ் சங்கர், அர்ஜுனா விருது பெற்ற வீரர் கணேசன், கலால்துறை கண்காணிப்பாளர் கனிமுத்து குமரன், மதுரை வல்லத்தரசு ஆகியோர் பங்கேற்று பேசுகிறார்கள்.

    இதற்கான ஏற்பாடுகளை விருதுநகர் மாவட்ட கபடி தலைவர் சுப்பிரமணிய ராஜா, செயலாளர் கனிமுத்து குமரன், துணைத் தலைவர் சம்சுதீன் உள்ளிட்ட நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

    இந்த போட்டிகளை காவல்துறை அணி உள்பட 40-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்று விளையாட உள்ளன.

    • உடுமலை நேதாஜி விளையாட்டு மைதானத்தில் மாநில அளவிலான கபடி போட்டி நடைபெற்றது.
    • அடிப்படை அத்தியாவசிய தேவையான சுகாதார வளாகத்தை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு அதிகாரிகள் முன்வர வேண்டும்.

    உடுமலை:

    தமிழர்களின் அடையாளம் வீரவிளையாட்டாக கருதப்படும் ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்கும் முன்பு செய்யப்படும் பயிற்சியே கபடியாகும்.உடலையும் மனதையும் பலப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இந்த விளையாட்டு தமிழ் மண்ணில் தமிழர்களால் உருவாக்கப்பட்டு ஆசிய கண்டத்தின் தெற்கு பகுதியில் பிரபலமாக உள்ளது.

    கபடி,சடுகுடு,பலிஞ்சடுகுடு என்று அழைக்கப்படும் கபடி நமது மாநிலத்தின் மாநில விளையாட்டாக உள்ளது. வரலாற்றுப் பெருமைமிக்க கபடியை பள்ளி கல்லூரி படிக்கும் மாணவ மாணவியர்கள் பயின்று போட்டிகளிலும் பங்கேற்று நமது கலாச்சாரம் பாரம்பரியத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

    அந்த வகையில் உடுமலை நேதாஜி விளையாட்டு மைதானத்தில் மாநில அளவிலான கபடி போட்டி நடைபெற்றது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த ஆண்கள் பிரிவில் 55 அணிகளும் பெண்கள் பிரிவில் 22 அணிகளும் கலந்து கொண்டன.மழையின் அச்சுறுத்தல் இருந்ததால் கூடாரம் அமைக்கப்பட்டு செயற்கை தளத்தில் போட்டிகள் நடைபெற்றது.

    முதல் தளத்தில் பெண்களும் 2- ம் தளத்தில் ஆண்களும் போட்டியில் ஈடுபட்டனர்.விருவிருப்பு உற்சாகம் பரபரப்புடன் நடந்து முடிந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. முதல் பரிசாக 10 ஆயிரத்து 202 ம்,2-ம் பரிசாக 6ஆயிரத்து 202ம்,3 மற்றும் 4-ம் பரிசாக 3ஆயிரத்து 202 ம் இரு பிரிவினருக்கும் வழங்கப்பட்டது.

    கால் இறுதி ஆட்டத்தில் தோல்வியுற்ற ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளுக்கு சிறப்பு பரிசாக ஆயிரம் மற்றும் கோப்பையும் வழங்கப்பட்டது.ஆனால் நேதாஜி மைதானத்தில் சுகாதார வளாக வசதி இல்லாததால் போட்டிக்கு வந்திருந்த வீரர் வீராங்கணைகள் இயற்கை உபாதைகளை கழிக்க முடியாமல் அவதிக்கு உள்ளாகி வந்தனர்.இதனால் அவர்கள் மனம் மற்றும் உடல்ரீதியாக சோர்வு அடைந்ததால் ஆட்டத்தில் முழு ஈடுபாடு காட்ட முடியாத சூழல் நிலவியது.

    இந்த மைதானத்தில் சுகாதார வளாகம் அமைக்க வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது.ஆனால் நிர்வாகம் கண்டு கொள்ளாமல் உள்ளது. அடிப்படை அத்தியாவசிய தேவையான சுகாதார வளாகத்தை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு அதிகாரிகள் முன்வர வேண்டும்.இதனால் வீரர் வீராங்கனைகள் போட்டியில் உடல்ரீதியாக முழு பலத்தோடு ஈடுபடுவதற்கு ஏதுவாக இருக்கும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.

    • மாநில அளவிலான 70-வது சாம்பியன்ஷிப் போட்டி தாம்பரத்தில் நடைபெற உள்ளது.
    • கலந்து கொள்ளும் வீரர்கள் எடை 85 கிலோவிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

    பூதலூர்:

    தஞ்சாவூர் மாவட்ட அமைச்சூர் கபடி கழக செயலாளர் தியாக இளையரசன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-

    மாநில அளவிலான 70ஆவது சாம்பியன்ஷிப் போட்டி செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரத்தில் வரும் 5-ம் தேதி முதல் 7ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

    இந்த போட்டியில் தஞ்சை மாவட்ட கபடி அணிக்கான வீரர்கள் தேர்வு திருக்காட்டுப்பள்ளிசர் சிவசாமி ஐயர் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் நாளை மறுநாள் 3-ம் தேதி (புதன்கிழமை) காலை 8 மணி முதல் நடைபெற உள்ளது.

    இதில் கலந்து கொள்ளும் வீரர்கள் எடை 85 கிலோவிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

    வயது வரம்பு கிடையாது.

    தகுதியான தஞ்சை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் தேர்வில் கலந்து கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கபடி போட்டியில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக வாலிபருக்கு கத்திக்குத்து விழுந்தது.
    • இதில் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

    மதுரை

    மேல பொன்னகரம், கொம்ப முத்து மகன் கார்த்திக் என்ற கொம்பன் (வயது19). இவருக்கும் அதே பகுதியில் வசிக்கும் சிலருக்கும் கபடி போட்டி தொடர்பாக முன்விரோதம் உள்ளது. சம்பவத்தன்று நள்ளிரவு கார்த்திக் கோமஸ்பாளையம், அங்கன்வாடி மையம் அருகே நின்று கொண்டிருந்தார்.

    மோட்டார் சைக்கிளில் வந்த 5 பேர் கும்பல் அவரை கத்தியால் குத்தியதுடன் இரும்பு கம்பியால் தாக்கி விட்டு தப்பினர். இது குறித்த புகாரின் பேரில் கரிமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்மாய்க்கரை ஜான்பாஷா மகன் ஹபிமுகமது (23), கிருஷ்ண பாளையம் மாடசாமி மகன் ஆனந்தகுமார் என்ற ஏட்டு கண்ணன் (24), புது ஜெயில் ரோடு சைலேந்திரன் மகன் அஜய்குமார் என்ற குள்ளமணி (23), முரட்டன்பத்திரி, ராம் நகர் பிச்சைமுத்து மகன் வினித்குமார் என்ற மீசை (23), திண்டுக்கல் குமரன் திருநகர், கவுதம்ராஜ் (25) ஆகியோரை கைது செய்தனர்.

    • இறுதி போட்டியில் வெற்றிபெறும் அணிகளுக்கு பரிசளிப்பு விழா நடைபெறுகிறது.
    • தமிழகத்தில் எல்லோரும் எல்லாம் பெற வேண்டும் என்பதே அரசின் நோக்கம்.

    கும்பகோணம்:

    திருவிடைமருதூர் தாலுகா, அணைக்கரை அருகே பட்டம் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் அரங்கத்தில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் 70-வது பிறந்தநாளை யொட்டி மாநில அளவிலான மின்னொளி கபடி போட்டி நடைபெற்றது. இதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் 60 அணிகளை சேர்ந்த கபடி வீரர்கள் கலந்து கொண்டனர்.

    இறுதி போட்டியில் வெற்றி பெறும் அணிக ளுக்கு இன்று இரவு பரிசளிப்பு விழா நடை பெறுகிறது. ஒன்றிய செயலாளர் அண்ணாதுரை வரவேற்றார். விழாவிற்கு மாவட்ட செயலாளர் எஸ். கல்யாணசுந்தரம் தலைமை தாங்கினார். அரசு தலைமை கொறடா கோவி.செழியன், முன்னிலை வகித்தார்.

    இதில் பள்ளிக்கல்வி த்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டு கபடி வீரர்களுக்கு வாழ்த்து தெரிவித்து டாஸ்போட்டு விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்து பேசுகையில்:-

    முதல்-அமைச்சர் தலைமையில் தமிழகத்தில் நடைபெறும் ஆட்சி இந்தியா விற்கே முன்னுதாரணமாக செயல்பட்டு கொண்டி ருக்கிறது. தமிழகத்தில் எல்லோரும் எல்லாம் பெற வேண்டும் என்பதே அரசின் நோக்கம். அதன்படி அரசின் அனைத்து துறைகளிலும் திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.

    பல இடங்களில் கபடி விளையாட்டு போட்டியை பார்த்திருக்கிறேன். ஆனால் இங்கு போட்டியை கடமைக்கு நடத்தாமல் உண்மையிலேயே சிறப்பான ஏற்பாடுகளை செய்து மின்னொளியில் நடத்துவது பாராட்டுக்குரியது. இரவு 11:45 மணிக்கு ஒரு மாநாட்டை போல இங்குள்ள கூட்டம் இருப்பதற்கு காரணம் பார்வையாளர்கள்தான் என்பதை பார்த்து பாராட்டுகிறேன் என்றார்.

    ×