என் மலர்
உள்ளூர் செய்திகள்

வெற்றிபெற்ற அணிக்கு கோப்பை வழங்கப்பட்டது.
சீர்காழியில், கபடி போட்டியில் வெற்றிபெற்ற அணிக்கு பரிசு
- கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களை சேர்ந்த 42 அணிகள் கலந்து கொண்டார்கள்.
- 2 மற்றும் 3-வது இடங்களை எருக்கூர், பூங்குடி அணிகள் பெற்றன.
சீர்காழி:
சீர்காழி தாலுக்கா கொள்ளிடம் ஒன்றியம் குன்னம் சந்தோஷ்,கவி ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் ரோட்டரி கிளப் ஆப் சீர்காழி டெம்பிள்டவுன் இணைந்து நடத்திய 5 ஆம் ஆண்டு கபாடி போட்டி நடைபெற்றது .
கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் சேர்ந்த42 அணிகள் கலந்து கொண்டார்கள். இதில் முதல் பரிசை குன்னம் அணி தட்டி சென்றது. 2 மற்றும் 3-வது இடங்களை எருக்கூர், பூங்குடி அணிகள் பெற்றன.
போட்டியில் முதல் பரிசு ரூ. 15,000 மற்றும் கேடயம் ஆகியவற்றை டெம்பிள் ரன் ரோட்டரி சங்கத் தலைவர் கார்த்திகேயன் வழங்கினார்.
நிகழ்ச்சியில் சங்க செயலாளர் ரவி, பொருளாளர் சந்தோஷ், முன்னாள் தலைவர்கள் மலர்க் கண்ணன் , சொர்ண பால், உறுப்பினர்கள் அருணாச்சலம், ராதாகிருஷ்ணன் ,ஹாஜா ஷெரிப், ஆகியோர் கலந்து கொண்டனர்.
Next Story






