search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடையம்"

    • ஸ்தோத்திர பண்டிகை கடந்த 8-ந்தேதி மாலை பவனி மற்றும் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • கூட்டத்தில் சேகரகுரு ஜோயல் சாம் மெர்வின், தி.மு.க. தெற்கு மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கடையம்:

    சி.எஸ்.ஐ. நெல்லை திருமண்டல மேட்டூர் சேகர ஸ்தோத்திர பண்டிகை மேட்டூர் பரி திரித்துவ ஆலயத்தில் கடந்த 8-ந்தேதி மாலை பவனி மற்றும் கொடியேற்றத்துடன் தொடங்கி 3 நாட்கள் நடைபெற்றது.நேற்று மாலை வருடாந்திர கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு சேகர தலைவர் கிங்ஸ்லி ஜான்ஸ்டீபன் தலைமை தாங்கினார்.

    சாராள் தக்கர் கல்லூரி செயலர் சவுந்தரபாண்டியன் செய்தி அளித்தார். கூட்டத்தில் சேகரகுரு ஜோயல் சாம் மெர்வின், தி.மு.க. தென்காசி தெற்கு மாவட்ட பொறுப்பாளர் ஜெயபாலன், கடையம் வடக்கு ஒன்றிய செயலாளர் மகேஷ் மாயவன், மாவட்ட துணை அமைப்பாளர்கள் கிருஷ்ணராஜ் காளித்துரை, அற்புதராஜ், ஆய்க்குடி பேரூராட்சி மன்ற தலைவர் சுந்தர், மாவட்ட பிரதிநிதி பொன் செல்வன், ஏ.ஜி.கணேசன், துரைராஜ் பாண்டியன், மோசே ராம்ராஜ், அரியப்புரம் ஊராட்சித்தலைவர் தினேஷ்குமார், துணைத்தலைவர் சக்திகுமார், சேகர செயலர் செல்வராஜ், திருமண்டல பெருமன்ற உறுப்பினர்கள் டேவிட் செல்வராஜ், சிம்சோன் தேவதாசன் மற்றும் சேகர கமிட்டி உறுப்பினர்கள், சபை மக்கள் கலந்து கொண்டனர்.

    • கடையம் அருகே உள்ள மேட்டூர் சேகர ஸ்தோத்திர பண்டிகை மேட்டூர் பரி திரித்துவ ஆலயத்தில் கடந்த 8-ந்தேதி மாலை பவனி மற்றும் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • அருணோதய பிரார்த்தனையை நல் ஆலோசனை திருப்பணி இயக்குனர் ஆமோஸ் நடத்தி வைத்தார்.

    கடையம்:

    கடையம் அருகே உள்ள மேட்டூர் சேகர ஸ்தோத்திர பண்டிகை மேட்டூர் பரி திரித்துவ ஆலயத்தில் கடந்த 8-ந்தேதி மாலை பவனி மற்றும் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இரவு ஆயத்த ஆராதனையை மஞ்சு விளை சேகரத் தலைவர் ஜேசன் தர்மராஜ் நடத்தி வைத்தார்.

    நேற்று காலை அருணோதய பிரார்த்தனையை நல் ஆலோசனை திருப்பணி இயக்குனர் ஆமோஸ் நடத்தி வைத்தார். பின்னர் ஞானஸ்நான ஆராதனையை பாவூர்சத்திரம் மேற்கு சேகரதலைவர் வரதராஜ் நடத்தினார். பின்னர் நடைபெற்ற பண்டிகை ஆராதனையில் சி.எஸ்.ஐ. நெல்லை திருமண்டல பேராயர் ஏ.ஆர்.ஜி.எஸ்.டி.பர்ணபாஸ் கலந்து கொண்டு சிறப்பு செய்தி அளித்தார்.

    நிகழ்ச்சியில் மேட்டூர் சேகரத்தலைவர் கிங்ஸ்லி ஜான் ஸ்டீபன், கவுரவ குரு லதா கிங்ஸ்லி, மேட்டூர் சேகர குரு ஜோயல் ஸாம் மெர்வின் பேராயர் உதவி குரு பொன்ராஜ், சேகரத் தலைவர்கள் கடையம் கேமில்டன், வி.கே.புரம் கிறிஸ்டோபர், ஸ்டாலின், புலவனூர் நிக்சன், மஞ்சு விளை ஜேசன் தர்மராஜ், மேல மெஞ்ஞானபுரம் ராஜ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை சேகர கமிட்டியினர், மேட்டூர், ஆவுடையானூர் வன்னிய நாடார்பட்டி சபை மக்கள் செய்திருந்தனர்.

    • விழாவில் முதல் நாள் காலையில் பாபநாசத்தில் இருந்து புனித நீர் கொண்டுவரப்பட்டது.
    • சந்தன மாரியம்மன் மற்றும் பரிவார தேவதைகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    கடையம்:

    கடையம் அருகே உள்ள கோதாண்ட ராமபுரம் சந்தன மாரியம்மன் கோவில் கட்டுமான பணிகள் கடந்த சில மாதங்களாக நடைபெற்றது.இதைத் தொடர்ந்து கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவில் முதல் நாள் காலையில் பாபநாசத்தில் இருந்து புனித நீர் கொண்டுவரப்பட்டது. மாலையில் மங்கள இசை, திருமுறை பாராயணத்துடன் விழா தொடங்கப்பட்டது.

    பின்னர் மகாகணபதி பூஜை, மகாகணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், வாஸ்துசாந்தி , யாகசாலை பூஜை நடைபெற்றது. பின்னர் பிரசாதம் வழங்குதல் நடைபெற்றது. இதையடுத்து 2-வது நாள் இரண்டாம் கால யாக பூஜை, மகாகணபதி பூஜை பின்னர் சந்தன மாரியம்மன் மற்றும் பரிவார தேவதைகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து அன்னதானம் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டாரப் பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.

    • வெய்க்காலிப்பட்டி அருந்ததியர் காலனியில் பல்நோக்கு கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
    • நிகழ்ச்சியில் மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.

    கடையம்:

    கடையம் பெரும்பத்து ஊராட்சி வெய்க்காலிப்பட்டி அருந்ததியர் காலனியில் ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு தொகுதி நிதியில் இருந்து ரூ.20 லட்சம் மதிப்பில் பல்நோக்கு கட்டிடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

    கடையம் பெரும்பத்து ஊராட்சி மன்ற தலைவர் பொன்ஷீலா பரமசிவன் தலைமை தாங்கினார். மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார்.

    நிகழ்ச்சியில் ஓ.பன்னீர்செல்வம் அணி மாநில அமைப்பு செயலாளர் ராதா, மாவட்ட செயலாளர் கணபதி, மாநில அண்ணா தொழிற்சங்க போக்குவரத்து பிரிவு செயலாளர் சேர்மதுரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • ஆர்ப்பாட்டத்தின்போது பஞ்சாயத்து ராஜ் திட்டத்தை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.
    • ஏ.ஜி.எம்.டி. திட்டத்தின் வேலைகளை அந்தந்த ஊராட்சியின் மூலமாக டெண்டர் நடைபெற வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    கடையம்:

    கடையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் முன்பாக, ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பின் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தென்காசி மாவட்ட கூட்டமைப்பு தலைவரும், கோவிந்தபேரி ஊராட்சி தலைவருமான டி.கே. பாண்டியன் தலைமை தாங்கி பேசினார். கூட்டமைப்பு செயலாளர் பூமிநாத் முன்னிலை வகித்தார்.

    ஆர்ப்பாட்டத்தின்போது பஞ்சாயத்து ராஜ் திட்டத்தை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது. மேலும் ஏ.ஜி.எம்.டி. திட்டத்தின் வேலைகளை அந்தந்த ஊராட்சியின் மூலமாக டெண்டர் நடைபெற வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் ஊராட்சி தலைவர்கள் கணேசன், மாரியப்பன், மாரி சுப்பு ,குயிலி லட்சுமணன், முத்துச்செல்வி ரஞ்சித், முத்துலட்சுமி ராமதுரை, ஸாருகலா ரவி, அழகு துரை, முருகன், கல்யாண சுந்தரம் , முப்புடாதி பெரியசாமிஆகியோர் கலந்து கொண்டு பேசினர். முடிவில் கீழாம்பூர் ஊராட்சி தலைவர் மாரிசுப்பு நன்றி கூறினார்.

    • ராஜீவ்காந்தி நெல்லையில் உள்ள ஒரு ஓட்டலில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
    • வாகன நிறுத்தம் பகுதியில் ராஜீவ்காந்தி மோட்டார் சைக்கிளை விடுவதற்குள் ரெயில் புறப்பட்டுள்ளது.

    கடையம்:

    கடையம் அருகே உள்ள ஆழ்வார்குறிச்சியை அடுத்த அழகப்பபுரத்தை சேர்ந்தவர் ராஜீவ் காந்தி(வயது 35). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 3 குழந்தை உள்ளனர்.

    ராஜீவ் காந்தி நெல்லையில் உள்ள ஒரு ஓட்டலில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இதற்காக அவர் தினமும் மோட்டார் சைக்கிளில் ஆழ்வார்குறிச்சி ரெயில் நிலையத்திற்கு சென்று அங்கிருந்து செங்கோட்டை-நெல்லை பயணிகள் ரெயிலில் ஏறி நெல்லைக்கு வருவது வழக்கம்.

    இந்நிலையில் இன்று காலை வழக்கம்போல் வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் அவர் புறப்பட்டுள்ளார். அவர் ரெயில்வே வாகன நிறுத்தம் பகுதியில் மோட்டார் சைக்கிளை விடுவதற்குள் ரெயில் புறப்பட்டுள்ளது. இதனால் அங்கிருந்து ரெயில்வே நடைமேடைக்கு வேகமாக ஓடி உள்ளார். அங்கு ரெயிலில் ஏறுவதற்கு முயன்றபோது தடுமாறி கீழே விழுந்த அவரது தலையில் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தாா.

    இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும், தென்காசி ரெயில்வே போலீசார் அங்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • சாலை அமைப்பதற்காக தெருவில் ஒருபுறம் வாறுகால் கட்டப்பட்டு, ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கியது.
    • சாலைப்பணி கிடப்பில் போடப்பட்டுள்ளதால் இவ்வழியாக செல்பவர்கள் அவதியடைகின்றனர்.

    கடையம்:

    கடையம் ஊராட்சி ஒன்றியம் பாப்பான்குளம் அருகே உள்ள மயிலப்பபுரம் பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்திற்கும் அருகில் இருக்கும் மற்றொரு கிராமமான மலையான்குளம் கிராமத்திற்கும் இடையே உள்ள ஒரு தெருவில் மணல் சாலையாக காணப்பட்ட நிலையில் அந்த பகுதியில் புதிய சாலை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.

    இதையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்னர் தெருவில் சாலை அமைப்பதற்காக ஒருபுறம் வாறுகால் கட்டப்பட்டு, ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கியது. அப்போது சாலை அமைக்க, சிறியரக கற்களை அதாவது ஜல்லிகளை கொட்டாமல், கிணறுகளில் வெட்டி எடுக்கக்கூடிய பெரிய அளவிலான கற்களை கொட்டி சாலையை அமைக்கும் முயற்சியில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    இதனால் சாலை பலமாக இருக்காது என கருதிய அப்பகுதியினர் இது குறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் தற்போது சாலை போடும் பணி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

    இது குறித்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் கூறுகையில், சாலைப்பணி நடக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் இவ்வழியாக செல்பவர்கள் அவதியடைகின்றனர். மேலும் தரமான முறையில் இந்த சாலையை அமைக்க மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

    • தெற்கு கடையம் பஞ்சாயத்தில் மக்கள் பயன்பாட்டிற்காக அங்கன்வாடி கட்டிடம், ரேசன் கடை கட்டப்பட்டது.
    • கட்டிடம் கட்டப்பட்டு பல மாதங்களாகியும் அவை திறக்கப்படாத நிலையில் காட்சியளிக்கிறது.

    கடையம்:

    தென்காசி மாவட்டம் கடையம் ஒன்றியத்திற்கு உட்பட்ட தெற்கு கடையம் பஞ்சாயத்தில் மக்கள் பயன்பாட்டிற்காக அங்கன்வாடி கட்டிடம் மற்றும் ரேசன் கடை சுமார் ரூ. 25 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டது.

    இந்நிலையில் கட்டிடம் கட்டப்பட்டு பல மாதங்களாகியும் அவை மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்படாத நிலையில் காட்சியளிக்கிறது. இது குறித்து அப்பகுதி பொது மக்கள் கூறுகையில், அதிகாரி களின் அலட்சியத்தால் கட்டிடங்கள் மக்கள் பயன்பாட்டுக்கு வராமல், மக்கள் பணம் வீணாகி கொண்டிருக்கிறது. எனவே மாவட்ட நிர்வாகமும் உள்ளாட்சித் துறையும் இது குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கூட்டத்தில் தென்காசி மாவட்ட கூட்டமைப்பு தலைவர் டி.கே.பாண்டியன் கலந்து கொண்டு பேசினார்.
    • கடையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வருகிற 25-ந்தேதி கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

    கடையம்:

    கடையம் ஊராட்சி ஒன்றியத்தில் 23 ஊராட்சி மன்ற தலைவர்களின் அவசர கூட்டம் திருமலையப்பபுரம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் தலைவர் மாரியப்பன் தலைமையில், கூட்டமைப்பு செயலாளர் பூமிநாத் முன்னிலையில் நடைபெற்றது.

    சிறப்பு அழைப்பாளராக தென்காசி மாவட்ட கூட்டமைப்பு தலைவர் டி.கே.பாண்டியன் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில் ஒற்றைத் தீர்மானமாக 23 ஊராட்சி மன்ற தலைவர்களும் ஒருங்கிணைந்து அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் நடைபெறுகின்ற ஏ.ஜி.எம்.டி. வேலைகள் ஊராட்சி மன்ற தலைவர்களின் மேற்பார்வையில் நடைபெற வேண்டும், அதில் பிறர் தலையிட அனுமதிக்க மாட்டோம். இக்கோரிக்கையை 20 மாத காலமாக வலியுறுத்தி வருகிறோம். இது சம்பந்தமாக வட்டார வளர்ச்சி அலுவலர், மாவட்ட கலெக்டர், ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் மற்றும் தமிழக முதல்-அமைச்சரிடம் பலமுறை எடுத்துரைத்தும் எந்த பயனும் கிடைக்கவில்லை.

    ஆகவே வருகிற 25-ந்தேதி (வெள்ளிக்கிழமை) காலையில், கடையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று தீர்மானிக்கப்பட்டது.

    கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர்கள் செண்பகவல்லி ஜெகநாதன், அழகுதுரை, முகைதீன் பீவி அசன், பிரேமராதா ஜெயம், ரவிச்சந்திரன், மாரி சுப்பு, முருகன், முகமது உசேன், பொன் ஷீலாபரமசிவன், முத்துலட்சுமி ராமதுரை, கல்யாணசுந்தரம், ஜீனத் பர்வீன் யாகூப், கணேசன், மதியழகன், முத்தமிழ் செல்வி ரஞ்சித், குயிலி லட்சுமணன், ஜன்னத் சதாம், மலர்மதி சங்கரபாண்டியன், சாருகலா ரவி, முப்புடாதி பெரியசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.

    • திருமலையப்பபுரத்தில் மகளிர்களுக்கு மாடித்தோட்டம் அமைத்தல் குறித்த பயிற்சி நடைபெற்றது.
    • ரூபா தேவி, சிவசுப்பிரமணியன் ஆகியோர் மாடித்தோட்டத்தை பற்றி செயல்முறை விளக்கமளித்தனர்.

    கடையம்:

    தென்காசி மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் ஜெயபாரதி மாலதி அறிவுரைப்படி, கடையம் வட்டாரம் 2023-24 கலைஞரின் திட்ட கிராமமான திருமலையப்ப புரத்தில் விவசாயிகள் மற்றும் அப்பகுதி மகளிர்களுக்கு மாடித்தோட்டம் அமைத்தல் மற்றும் பராமரித்தல் குறித்த பயிற்சி நடைபெற்றது.

    பயிற்சியில் முன்னணி வீட்டு தோட்டம் செய்பவரான ரூபா தேவி, சிவசுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு மாடித்தோட்டத்தை பற்றி செயல்முறை விளக்கமளித்தனர். மேலும் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் ஞானசேகரன் திட்ட விளக்கவுரை மற்றும் சிறப்புரையாற்றினார். பயிற்சியில் வட்டார தோட்டக்கலை அலுவலர் சபா பாத்திமா மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர்கள் பானுமதி, இசக்கியம்மாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    • ராமநதி அணை அருகில் ஊராட்சிக்கு சொந்தமான 3 திறந்தவெளி கிணறுகள் உள்ளன.
    • காற்று வேகமாக வீசுவதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு மோட்டார் இயக்குவதில் சிரமம் ஏற்படுகிறது.

    கடையம்:

    கடையம் பெரும்பத்து ஊராட்சி மன்ற தலைவர் பொன் ஷீலா பரமசிவன், தென்காசி மாவட்ட கலெக்டர் ரவிச்சந்திரனிடம் நேரில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    கடையம் பெரும்பத்து ஊராட்சியில் 14 குக்கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களில் சுமார் 10 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களில் விவசாயம் சார்ந்த மக்களிடம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கால்நடைகள் உள்ளன. இந்த நிலையில் பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், ராமநதி அணை அருகில் சூச்சமுடையார் கோவிலுக்கு தென்புறம் ஊராட்சிக்கு சொந்தமான 3 திறந்தவெளி கிணறுகள் உள்ளன. இக்கிணற்றில் விசை பம்புகள் மூலம் மோட்டார்கள் இயக்கப்பட்டு பொதுமக்களின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மோட்டார்களை இயக்க மின்சாரம் பழைய மின்மாற்றி மூலம் சீரின்றி வழங்கப்பட்டு வருகிறது.

    மேலும் தற்போது காற்று வேகமாக வீசுவதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டு மோட்டார் இயக்குவதில் சிரமம் ஏற்படுகிறது. எனவே பொதுமக்களின் நலன் கருதி, பழைய மின்மாற்றியை அகற்றிவிட்டு புதிய மின்மாற்றி அமைக்கவும், கடையத்திலிருந்து கிழமேலாக மின்தடத்தை கொண்டு வந்து , புதிய மின்மாற்றி அமைத்து பொதுமக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேன்டும்.இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    மனுவை பெற்ற கொண்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார். அப்போது கடையம் பெரும்பத்து தி.மு.க. நிர்வாகியும், தொழிலதிபருமான பரமசிவன் மற்றும் பொதுமக்கள் உடனிருந்தனர்.

    • மந்தியூர் ஊராட்சியில் ரூ.7 லட்சம் ஒதுக்கி புதிய கலையரங்கம் கட்டப்பட உள்ளது.
    • நிகழ்ச்சிக்கு ஊராட்சி தலைவர் கல்யாணசுந்தரம் தலைமை தாங்கினார்.

    கடையம்:

    கடையம் அருகே உள்ள மந்தியூர் ஊராட்சியில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து ரூ.7 லட்சம் ஒதுக்கி புதிய கலையரங்கம் கட்டப்பட உள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினர் மனோஜ் பாண்டியன் அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சிக்கு மந்தியூர் ஊராட்சி மன்ற தலைவர் கல்யாணசுந்தரம் தலைமை தாங்கினார். மாநில அமைப்பு செயலாளர் ராதா, மாவட்ட செயலாளர் கணபதி, மாவட்ட பொருளாளர் நூருல் ஹமீர், ஒன்றிய செயலாளர்கள் இளங்கோ, ராஜவேல், ஊராட்சி மன்ற துணைத்தலைவர் ராகவேந்திரன், ஊர் நாட்டாமைகள் சுந்தர், சிவகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ×