கடையம் அருகே கிறிஸ்தவர்களின் ஸ்தோத்திர பண்டிகை

கடையம் அருகே உள்ள மேட்டூர் சேகர ஸ்தோத்திர பண்டிகை மேட்டூர் பரி திரித்துவ ஆலயத்தில் கடந்த 8-ந்தேதி மாலை பவனி மற்றும் கொடியேற்றத்துடன் தொடங்கியது. அருணோதய பிரார்த்தனையை நல் ஆலோசனை திருப்பணி இயக்குனர் ஆமோஸ் நடத்தி வைத்தார்.
கடையம் அருகே கிறிஸ்தவர்களின் ஸ்தோத்திர பண்டிகை
Published on

கடையம்:

கடையம் அருகே உள்ள மேட்டூர் சேகர ஸ்தோத்திர பண்டிகை மேட்டூர் பரி திரித்துவ ஆலயத்தில் கடந்த 8-ந்தேதி மாலை பவனி மற்றும் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இரவு ஆயத்த ஆராதனையை மஞ்சு விளை சேகரத் தலைவர் ஜேசன் தர்மராஜ் நடத்தி வைத்தார்.

நேற்று காலை அருணோதய பிரார்த்தனையை நல் ஆலோசனை திருப்பணி இயக்குனர் ஆமோஸ் நடத்தி வைத்தார். பின்னர் ஞானஸ்நான ஆராதனையை பாவூர்சத்திரம் மேற்கு சேகரதலைவர் வரதராஜ் நடத்தினார். பின்னர் நடைபெற்ற பண்டிகை ஆராதனையில் சி.எஸ்.ஐ. நெல்லை திருமண்டல பேராயர் ஏ.ஆர்.ஜி.எஸ்.டி.பர்ணபாஸ் கலந்து கொண்டு சிறப்பு செய்தி அளித்தார்.

நிகழ்ச்சியில் மேட்டூர் சேகரத்தலைவர் கிங்ஸ்லி ஜான் ஸ்டீபன், கவுரவ குரு லதா கிங்ஸ்லி, மேட்டூர் சேகர குரு ஜோயல் ஸாம் மெர்வின் பேராயர் உதவி குரு பொன்ராஜ், சேகரத் தலைவர்கள் கடையம் கேமில்டன், வி.கே.புரம் கிறிஸ்டோபர், ஸ்டாலின், புலவனூர் நிக்சன், மஞ்சு விளை ஜேசன் தர்மராஜ், மேல மெஞ்ஞானபுரம் ராஜ்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை சேகர கமிட்டியினர், மேட்டூர், ஆவுடையானூர் வன்னிய நாடார்பட்டி சபை மக்கள் செய்திருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com