search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கடும் நடவடிக்கை"

    • ஈரோடு மாநகராட்சி பகுதியில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.
    • உணவு பாதுகாப்பு உரிமம் பெற்று வணிகம் செய்ய வேண்டும்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் செயல்படும் மாம்பழ குடோன், மொத்த விற்பனை கடைகள், இதர பழக்குடோன்களில் செயற்கை முறையில் ரசாயனம் மற்றும் கார்பைடு கற்கள் பயன்படுத்தி பழங்கள் பழுக்க வைக்கப்படுகிறதா? என்ற ஆய்வு மேற்கொள்ள உணவு பாதுகாப்பு துறை உத்தரவிட்டுள்ளது.

    இதன்படி ஈரோடு மாநகராட்சி பகுதியில் ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர்கள் எட்டிக்கன், செல்வன் ஆகியோர் தலைமையில் ஆய்வு செய்தனர்.

    பழ வியாபாரிகள் செயற்கை முறையில் ரசாயனம் பயன்படுத்தி பழங்களை பழுக்க வைப்பதால் அப்பழங்களை சாப்பிடும் மக்களுக்கு உடல் உபாதைகள் ஏற்படும். எனவே அவ்வாறு பழுக்க வைப்பதை தவிர்க்க வேண்டும்.

    மேலும் உணவு பாதுகாப்பு உரிமம் பெற்று வணிகம் செய்ய வேண்டும். தவறும் பட்சத்தில் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டப்படி சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    பொதுமக்கள் உணவு பொருட்கள் தொடர்பான குறைபாடுகளை 94440 42322 என்ற வாட்ஸ் ஆப் எண்ணில் தகவல் தெரிவிக்கலாம் என செய்திக்குறிப்பில் கேட்டு கொண்டனர்.

    • வளரிளம் பருவத்தினரை பணிக்கு அமர்த்துவது குற்றம்.
    • குழந்தை தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தியது கண்டறிந்தால் தண்டனை விதிக்க நேரிடும்.

    ஈரோடு:

    ஈரோடு தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) திருஞானசம்பந்தம் தலைமையில், துணை ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் குறைந்த பட்ச ஊதிய சட்டம், கொத்தடிமை முறை, குழந்தை தொழிலாளர் தடுப்பு சட்டத்தின் கீழ் இம்மாதம் சிறப்பாய்வு மேற்கொண்டனர்.

    குறைந்த பட்ச ஊதிய சட்டத்தில் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் என 25 நிறுவனங்களில் ஆய்வு செய்ததில் 4 நிறுவனங்களில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டது.

    அரசு நிர்ணயித்த குறைந்த பட்ச ஊதியத்தை தொழிலாளர்களுக்கு வழங்காத நிறுவனங்கள் மீது மேல் நடவடிக்கைக்கு இணை ஆணையரிடம் கேட்பு மனு தாக்கல் செய்தனர்.

    கொத்தடிமை தொழிலாளர் தடுப்பு சட்டத்தின் கீழ், 16 செங்கல் சூளைகளிலும், குழந்தை தொழிலாளர் முறை ஒழிப்பு பணியாக, 31 மோட்டார் வாகன பழுது பார்க்கும் தொழிற்கூடங்களில் கூட்டாய்வு செய்தனர்.

    இதுகுறித்து தொழிலாளர் உதவி ஆணையர் திருஞானசம்பந்தம் கூறியதாவது:

    கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்புக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். 14 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், 16 முதல் 18 வயதுக்கு உட்பட்ட வளரிளம் பருவத்தினரை பணிக்கு அமர்த்துவது குற்றம்.

    அவ்வாறு பணிக்கு அமர்த்தியது கண்டறிந்தால், நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு நிறுவன உரிமையாளர் மீது 20,000 ரூபாய் முதல் 50,000 ரூபாய் வரை அபராதம் அல்லது 6 மாதம் முதல் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அல்லது 2-ம் சேர்த்து தண்டனையாக விதிக்க நேரிடும்.

    குழந்தை தொழிலாளர் பணி புரிவது கண்டறிந்தால் பொதுமக்கள் 1098 என்ற இலவச தொலைபேசி எண்ணில் தெரிவிக்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • காப்பு காடுகள் மற்றும் காப்பு நிலங்கள் மற்றும் அதனை சுற்றி யுள்ள நிலங்களில் சட்டத்திற்கு புறம்பாக மின்வேலி மற்றும் கம்பி வேலிகள் அமைப்பதால் வன வில ங்குகள், மனித உயிரிழப்பு ஏற்படுகிறது.
    • இதனால் பொதுமக்கள் மற்றும் விலங்குகளின் உயிர்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்ட கலெக்டர் பழனி விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:விழுப்புரம் மாவட்ட த்தில், காப்பு காடுகள் மற்றும் காப்பு நிலங்கள் மற்றும் அதனை சுற்றி யுள்ள நிலங்களில் சட்டத்திற்கு புறம்பாக மின்வேலி மற்றும் கம்பி வேலிகள் அமைப்பதால் வன வில ங்குகள், மனித உயிரிழப்பு ஏற்படுகிறது. விவசாயிகள் தங்களின் நிலங்களில் சாகுபடி செய்துள்ள பயிர்களை வன விலங்குகள் சேதப்படுத்துவதை தடுப்பதற்காக சமீப காலங்களில் மின்வேலி அமைக்கும் செயல்களில் ஈடுபடுகிறார்கள்.இதனால் பொதுமக்கள் மற்றும் விலங்குகளின் உயிர்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் யானைகள் உயிரிழப்பு ஏற்படுகிறது. மின்வேலி அமைத்தல் வன உயிரின பாதுகாப்பு சட்டம் 1972 மற்றும் தமிழ்நாடு மின்சார சட்டம் 2003 பிரிவு 138 ன்படி மிகக் கடுமையான தண்டனைக்குரிய குற்றமாகும்.  விழுப்புரம் மாவட்டத்தைச் சார்ந்த விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் மின்வேலி அமைக்கக்கூடாது என கடுமையாக எச்சரிக்கப்ப டுகி றார்கள். இந்த எச்சரிக்கை யை மீறி மின்வேலி அமைத்தால் அதனால் ஏற்படும் அனைத்து விளைவுகளுக்கும் சம்மந்தப்பட்ட நபரே பொறுப்பேற்க நேரிடும். மேலும், மின்வாரிய மற்றும் வன அதிகாரிகள் ஆய்வு மேற்கொள்ளும்போது மின்வேலி அமைத்திருப்பது கண்டறியப்பட்டால் சம்மந்தப்பட்ட நபர்கள்மீது சட்டப்படி கடுமையான குற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    எனவே விவசாயிகள் மின்வேலி அமைப்பதை தவிர்த்து மற்ற உயிர்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய மாவட்ட நிர்வாகத்திற்கு தகுந்த ஒத்துழைப்பை நல்க வேண்டும்.   இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

    • 20 நிறுவனங்களில் ஆய்வு செய்து முரண்பாடு கண்டறியப்பட்டது.
    • விதிகளை பின்பற்றாத நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்

    ஈரோடு:

    ஈரோடு தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) திருஞான சம்பந்தம் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் சட்டமுறை எடையளவு சட்டம், பொட்டல பொருட்கள் விதிகள் தொடர்பாக இம்மாதம் முழுவதும் சிறப்பாய்வு செய்தனர்.

    மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதியில் ஹார்டுவேர், எலக்ட்ரிக்கல் கடைகள், நிறுவனங்கள் என 20 நிறுவனங்களில் ஆய்வு செய்து 8 நிறுவனங்களில் முரண்பாடு கண்டறியப்பட்டது.

    காய்கறி கடை, பழக்கடை, விற்பனை கூடங்கள், சந்தை போன்றவற்றில் 25 கடை களில் ஆய்வு செய்ததில் 4 கடைகளில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டது.

    பொட்டல பொருட்கள் விதிப்படி வெளிநாட்டு பொருட்கள் விற்பனை செய்யும் 1 கடை, எலக்ட்ரி க்கல், எலக்ட்ரானிக் பொருட்கள் விற்பனை செய்யும் 30 நிறுவனங்களில் ஆய்வு செய்ததில் 3 இடங்களிலும், பழக்கடை, காய்கறி கடைகள் என 17 இடங்களில் நடந்த ஆய்வில் 1 கடையில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டது.

    இதனையடுத்து எடை யளவு சட்டம், பொட்டல பொருட்கள் விதிகளை பின்பற்றாத நிறுவன ங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தொழி லாளர் உதவி ஆணையர் திருஞான சம்பந்தம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    • வனவிலங்குகளை வேட்டையாடுதல், வனத்தி ற்கோ, வனவிலங்களுக்கோ குந்தகம் விளைவித்தல் போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை.
    • அதிகபட்சமாக 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கவும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யவும் சட்டத்தில் வழிவகையுள்ளது.

    தருமபுரி, 

    தருமபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    தருமபுரி மாவட்டத்தில் இருக்கும் காப்புக் காடுகளில் வாழும் வன மற்றும் வன விலங்குகளின் பாதுகாப்பு கருதி தமிழக அரசால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    காப்பு காடுகளில் அத்துமீறி நுழைவது, காப்பு காடுகளிலிருந்து வெளிவரும் விலங்குகளை வேட்டையாடுவது மற்றும் மின்வேலி அமைத்து விலங்குகளை விரட்டியடிப்பது, துன்புறுத்துவது சட்டப்படி குற்றமாகும். வனங்களையும், வன விலங்குகளையும் காப்பாற்றுவது ஒவ்வொரு தனிப்பட்ட மனிதனின் தலையாய கடமையாகும்.

    வனத்துறை, வருவாய்த்துறை மற்றும் மின்சாரத்துறை இணைந்து வரும் காலங்களில் சிறப்பு ரோந்து பணி மேற்கொண்டு சட்ட விரோத மின்வேலிகள் அமைக்கப்பட்டுள்ளதா என தணிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

    அவ்வாறு சட்டவிரோத மின்வேலிகள் அமைக்க ப்பட்டது தெரியவந்தால் அம்மின்னிணைப்பு மின்சார துறையினரால் துண்டிக்கப்படுவதோடு சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படும். அவ்வாறான சட்டவிரோத மின்வேலியில் சிக்கி வனவிலங்குகளுக்கு பாதிப்பு ஏதேனும் ஏற்ப ட்டால் வனத்துறையினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

    வனவிலங்குகளை வேட்டையாடுதல், வனத்தி ற்கோ, வனவிலங்களுக்கோ குந்தகம் விளைவித்தல் போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது வன உயிரினப்பாதுகாப்பு சட்டம் 1972-இன் கீழ் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அதிகபட்சமாக 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கவும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யவும் சட்டத்தில் வழிவகையுள்ளது.

    இது போன்ற குற்றச்ச ம்பவங்கள் நடைபெ றுவதாக அறிந்தால் பொதுமக்கள் இலவச தொலைப்பேசி எண் 1800 425 4586 வாயிலாக வனத்துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கலாம். அவ்வாறு தகவல் அளிப்பவர்களின் விவரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும்.

    இவ்வாறு மாவட்ட கலெக்டர் சாந்தி அதில் தெரிவித்துள்ளார்.

    • நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்ட னர்.
    • விவசாயிகளிடம் குறைகளை கேட்டு அறிந்தனர்.

    ஈரோடு:

    தமிழக குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை கூடுதல் டி.ஜி.பி.யாக அருண் பொறுப்பு ஏற்றதில் இருந்து பொது விநியோக திட்டத்தின் கீழ் மானிய விலையில் பொது மக்களுக்கு வழங்கப்படும் ரேஷன் பொருட்களை வாங்கி பதுக்கல், கடத்தல் மற்றும் விற்பனை செய்தல் சம்பந்தமான குற்றங்கள் செய்வோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பணியாற்றும் அலுவலர்கள் விவசாயிகளிடம் போதுமான ஆவணங்களை பெற்று கொண்டு நெல் கொள்முதல் செய்ய வேண்டும்.

    விவசாயிகளிடம் லஞ்சம் பெறக் கூடாது. விவசாயிகளை காக்க வைக்க கூடாது. வியாபாரி களிடமிருந்து நெல் கொள்முதல் செய்யக் கூடாது என்று உத்தரவு பிறப்பித்திருந்தார்.

    அதன் பேரில் குடிமை பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுத்துறை கோவை மண்டல போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி தலைமையில் ஈரோடு சரக துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார்,

    ஈரோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் பன்னீர்செல்வம் மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக ஈரோடு மண்டல மேலாளர் பானுமதி ஆகியோர் அடங்கிய குழுவினர் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்ட னர்.

    ஈரோடு மாவட்டம் நசியனூர், காஞ்சி கோவில், பெத்தாம்பாளையம், பள்ளபாளையம் ஆகிய இடங்களில் செயல்படும் அரசு நேரடி நெல் கொள் முதல் நிலையங் களுக்கு நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

    அப்போது அங்கு விவசாயிகளிடம் இருந்து முறையாக கொள்முதல் செய்யப்படுகிறதா என ஆய்வு செய்ததுடன், அங்கிருந்த விவசாயிகளிடம் குறைகளை கேட்டு அறிந்தனர்.

    மேலும் முறைகேட்டில் ஈடுபடும் அலுவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி எச்சரிக்கை விடுத்தார். 

    • போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை
    • உலகம் முழுவதும் நாளை (14-ந் தேதி) காதலர் தினம் கொண்டாடப்பட உள்ளது.

    நாகர்கோவில்:

    உலகம் முழுவதும் நாளை (14-ந் தேதி) காதலர் தினம் கொண்டாடப்பட உள்ளது.

    காதலர் தினத்திற்கு ஆதரவும் எதிர்ப்பும் உள்ள நிலையில்,காதலை வெளிப்படுத்தும் கொண்டாட்டத்திற்கு பலரும் தயாராகி வரு கின்றனர். தங்கள் அன்பை வெளிப்படுத்தும் வகையில் பரிசு வழங்க பொருட்களை தேர்வு செய்வதிலும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    குமரி மாவட்டத்தில் சுற்றுலா தலங்கள் அதிகம் உள்ளதால், காதலர் தினத்தை கொண்டாட அங்கு ஏராளமானோர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக கன்னியாகுமரி கடற்கரை, சொத்தவிளை பீச், குளச்சல் பீச், வட்டவிளை, மாத்தூர் தொட்டில் பாலம், பத்மநாபபுரம் அரண்மனை, நாகர்கோவில் வேப்பமூடு பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் நாைள கூட்டம் அதிகமாக வரக்கூடும் என்பதால் அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

    இந்த நிலையில் காதலர் தின நாளில் சுற்றுலா தலங்களுக்கு வருவோர் எல்லை மீறிய செயல்களில் ஈடுபடக்கூடாது. யாராவது அத்துமீறி நடந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    • 200 லிட்டர் பிடிக்கக்கூடிய பிளாஸ்டிக் பேரலில் 200 லிட்டர் கள்ளச்சாராயத்தை அழித்தனர்
    • 5,200 லிட்டர் சாராய ஊரல் மற்றும் 200 லிட்டர் கள்ளச்சாராயத்தை போலீசார் சம்பவ இடத்தி லேயே கொட்டி அழித்தனர்

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் உத்தரவின்படி கள்ளக்குறிச்சி மாவட் டத்தில் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் காய்ச்ச பயன்படும் சாராய ஊறல்களை அழிப்பது, கள்ளச்சா ராயம் காய்ச்சு பவர்கள், கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடு பவர்களை கட்டுப்படுத்த தனிப்படை அமைத்து மாவட்டம் முழுவதும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படிகள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் தலைமை யில் தனிப்படை காவலர்கள் கல்வராயன் மலை பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்     அப்போது குரும்பா லூர் கிழக்கு மற்றும் மேற்கு ஓடையில் மறைத்து வைத்தி ருந்த கள்ளச்சாராயம் காய்ச்ச பயன்படும் புளித்த சாராய ஊரல் 500 லிட்டர் வீதம் பிடிக்கக்கூடிய 2 பிளாஸ்டிக் பேரல்களில் 1,000 லிட்டர்மற்றும் 200 லிட்டர் பிடிக்கக்கூடிய பிளாஸ்டிக் பேரலில் 200 லிட்டர் கள்ளச்சாராயத்தை அழித்தனர்.

    இதேபோல் கள்ளக் குறிச்சி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் தாரனே ஸ்வரி தலைமையில் எழுத்தூர் காட்டுப்பகுதியில் மறைத்து வைத்திருந்த கள்ளச்சாராயம் காய்ச்ச பயன்படும் புளித்த சாராய ஊரல் 200 லிட்டர் பிடிக்கக்கூடிய 21 பிளாஸ்டிக் பேரல்களில் சுமார் 4,200 லிட்டர் ஆக மொத்தமாக 5,200 லிட்டர் சாராய ஊரல் மற்றும் 200 லிட்டர் கள்ளச்சாராயத்தை போலீசார் சம்பவ இடத்தி லேயே கொட்டி அழித்தனர்     மேலும் குற்ற செயலில் ஈடுபட்டு தலைமறைவாகி யுள்ள குற்றவாளிகளை தனிப்படை காவலர்கள் தீவிரமாக தேடி வருகின்ற னர். கள்ளக்குறிச்சி மாவட் டத்தில் சமுதாயத்தை சீர்குலைக்கும் கள்ளச்சா ராயம், கஞ்சா மற்றும் குட்கா விற்பனை போன்ற சட்டத்திற்கு புறம்பான குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்துள்ளார்  போலீஸ் சூப்பிரண்டு கல்வராயன் மலைப்பகு திக்கு நேரடியாக வந்து சாராய ஊரல்கலை அழித்த சம்பவம் அப்பகுதி போலீசாரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் குற்றவாளிகள் மத்தி யில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • போக்குவரத்து துணை கமிஷனர் மதிவாணன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    • பராமரிக்கப்படா விட்டால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்.

    கோவை,

    கோவையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 23-ந் தேதி கார் குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது.

    அதனை தொடர்ந்து பழைய வாகனங்களை விற்பனை செய்வதிலும், வாங்குவதிலும் நடக்கும் தவறுகள் வெளிச்சத்துக்கு வந்தன.

    குறிப்பிட்ட அந்த கார் முதலில் வாங்கிய நபரிடம் இருந்து அடுத்தடுத்து 10 பேருக்கு விற்பனை செய்யப்பட்டிருந்தாலும் பெயர் மாற்றம் செய்யப்படவில்லை என்பது கண்டறியப்பட்டது.

    இத்தகைய குளறுபடி நடைமுறைகளுக்கு முடிவு கட்ட திட்டமிட்ட போலீசார் காலாவதியான மற்றும் பழுதடைந்த வாகனங்களை உடைப்பதற்கு, வாங்கும் வியாபாரிகளுடனான ஆலோசனை கூட்டத்தை நடத்தினர்.

    இதில் வியாபாரிகள் பின்பற்ற வேண்டிய சட்ட நடைமுறைகள் குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டன.

    இந்த நிலையில் பழைய வாகன வியாபாரிகள் கூட்டம் கோவை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் 2-வது முறையாக நடத்தப்பட்டது.

    இதில் 100-க்கும் மேற்பட்ட பழைய வாகன வியாபாரிகள், பணிமனை உரிமையாளர்கள் பங்கேற்றனர்.

    போக்குவரத்து துைண கமிஷனர் மதிவாணன் தலைைம தாங்கினார். கூடுதல் துணை கமிஷனர் போக்குவரத்து திட்டமிடல் சிற்றரசு, உதவி கமிஷனர் சரவணன் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் துணை கமிஷனர் மதிவாணன் பேசியதாவது:-

    பழைய வாகனங்களை வாங்குவதையும், விற்பதையும் அரசின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு மட்டுமே செய்ய வேண்டும்.

    உடைப்பதற்கு வாகனங்களை வாங்கும் ஒவ்வொரு வியாபாரியும் கடை அல்லது பணிமனையில் கட்டாயம் அது குறித்த பதிவேடுகளை பராமரிக்க வேண்டும்.

    வாகன உரிமையாளர்களின் ஆதார் எண், அடையாள அட்டை விபரங்கள், போன் எண் ஆகியவை சேகரிக்கப்பட வேண்டும். அந்த வாகனம் சட்ட பூர்வமான வாகனமா என்று உறுதி செய்த பிறகே வாங்க வேண்டும்.

    வாகனங்கள், உதிரிபாகங்களை விற்பனை செய்யும் போது, இதே நடைமுறை பின்பற்றப்பட வேண்டும். இந்த பதிவேடுகளை போலீசார் எப்போது வேண்டுமானாலும் ஆய்வு செய்வார்கள். பதிவேடுகள் சரியான முறையில் பராமரிக்கப்படா விட்டால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • சேலம் மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டாக மாவட்ட காவல் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார்.
    • சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றிய ஸ்ரீ அபிநவ், கடந்த சில தினங்களுக்கு முன்பு தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் போலீஸ் அகடாமிக்கு மாறுதல் செய்யப்பட்டார்.

    சேலம்:

    சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றிய ஸ்ரீ அபிநவ், கடந்த சில தினங்களுக்கு முன்பு தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் போலீஸ் அகடாமிக்கு மாறுதல் செய்யப்பட்டார்.

    இந்த நிலையில் சென்னை வண்டலூர் போலீஸ் அகடாமி துணை இயக்குனராக பணியாற்றிய டாக்டர் சிவகுமார் சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டார்.

    அதைத்தொடர்ந்து இன்று காலை சேலம் மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டாக மாவட்ட காவல் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். இவருக்கு ஏடிஎஸ்பிக்கள் செல்ல பாண்டியன், கென்னடி, ராஜ காளீஸ்வரன்,மாவட்டத்தில் உள்ள டிஎஸ்பிக்கள், இன்ஸ்பெக்டர்கள்,நேரில் வந்து வாழ்த்து தெரிவித்த னர். அதைத்தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சிவகுமார் மாவட்டத்திலுள்ள தனிப்பிரிவு போலீசார் உடன் ஆலோசனை நடத்தினார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற நடவடிக்கையில் ஈடுபடுபவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி, குட்கா, கள்ளச்சாராயம், விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,ரவுடிகள் ஒடுக்கப்படுவார்கள்,குற்றப் பின்னணி கொண்ட ரவுடிகள் கண்காணிக்கப்ப டுவார்கள்,காவல் நிலையங்களுக்கு வரும் ஏழைகள் தரும் மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

    மேலும் குற்றவாளி களுடன் கைகோர்க்கும் காவலர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

    • டி.எஸ்.பி. எச்சரிக்கை
    • விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்

    செய்யாறு புதிய டிஎஸ்பி ஆக சமீபத்தில் பொறுப்பேற்றுள்ள வெங்கடேசன் கூறியதாவது:-

    செய்யாறு போலீஸ் உட்கோட்டத்தில் கஞ்சாவை முழுவதுமாக ஒழிப்பது தான் முதல் கடமையாக இருக்கும். இளைஞர்களை நல்வழிப்படுத்தும் வகையில் போதைப்பொருள் எதிர்ப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியை போலீசார்கள் ஈடுபடுவார்கள். கஞ்சா விற்பவர்கள், மணல் கடத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    மணல் கடத்தலில் ஈடுபடும் நபர்களை கைது செய்து, மணல் கடத்தும் வாகனங்களை பறிமுதல் செய்வதோடு அவர்களது வங்கிக் கணக்குகள் முடக்கப்படும் அவர்களது சொத்துகள் மீதும் சட்டப்படியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் மணல் கடத்தல் குறித்து புகார் செய்தால் நானே களத்தில் இறங்கி பாரபட்சம் இன்றி நடவடிக்கை எடுக்க தயாராக இருக்கிறேன்.

    பஸ் நிலையம், மகளிர் மேல்நிலைப்பள்ளி அருகே தேவையில்லாமல் நிற்போர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். செய்யாறு டவுன் மற்றும் கிராம ஊராட்சி பகுதிகளில் இரவு நேர போலீசில் வந்து செய்வது அட்டவணை செய்து கண்காணிக்கப்படும். இவ்வாறு டிஎஸ்பி வெங்கடேசன் கூறினார்.

    • செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கள்ளக்குறிச்சி கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
    • மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள்மீது கடுமையானநடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது,

    கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விபத்துகளை தடுக்கும் வகையில் காவல்துறை, வருவாய்த்துறை மற்றும் போக்குவரத்துத்துறை ஆகியவைகள் பல்வேறு நடவடிக்கைக ள்மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது இருசக்கர வாகன ஓட்டிகள் தலைக்கவசம்அணியாமல் செல்லுதல், 4 சக்கர வாகனம் ஓட்டுபவர்கள் சீட் பெல்ட் அணியாமல் ஓட்டுதல், முக்கியமாக கைப்பேசியில் பேசிக்கொண்டே இரண்டு சக்கர மற்றும் 4 சக்கர வாகனத்தை இயக்குவது பெரும்பாலான விபத்து க்களுக்கு காரணமாக அமைகிறது. எனவே இதனை தடுக்கும் வகையில் கைப்பேசியில் பேசிக்கொண்டு இரண்டு சக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனத்தை ஓட்டுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். மேலும்4 சக்கர வாகனங்களில் வாகன ஓட்டுநர் மட்டுமின்றி வாகனத்தில் பயணம் செய்பவர்களும் சீட் பெல்ட் அணிவதன் அவசியத்தை உணர்ந்து, சீட் பெல்ட் அணிந்து பயணிக்க வேண்டும். மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள்மீது கடுமையானநடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதன்படி போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகள்மீது சட்ட ரீதியிலான நடவடிக்கைகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே கள்ளக்குறிச்சி மாவட்டத்தை விபத்தில்லாத மாவட்டமாக உருவாக்கிட மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

    ×