search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சட்டவிரோதமாக மின்வேலிகள் அமைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்-கலெக்டர் சாந்தி எச்சரிக்கை
    X

    சட்டவிரோதமாக மின்வேலிகள் அமைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்-கலெக்டர் சாந்தி எச்சரிக்கை

    • வனவிலங்குகளை வேட்டையாடுதல், வனத்தி ற்கோ, வனவிலங்களுக்கோ குந்தகம் விளைவித்தல் போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை.
    • அதிகபட்சமாக 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கவும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யவும் சட்டத்தில் வழிவகையுள்ளது.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:-

    தருமபுரி மாவட்டத்தில் இருக்கும் காப்புக் காடுகளில் வாழும் வன மற்றும் வன விலங்குகளின் பாதுகாப்பு கருதி தமிழக அரசால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    காப்பு காடுகளில் அத்துமீறி நுழைவது, காப்பு காடுகளிலிருந்து வெளிவரும் விலங்குகளை வேட்டையாடுவது மற்றும் மின்வேலி அமைத்து விலங்குகளை விரட்டியடிப்பது, துன்புறுத்துவது சட்டப்படி குற்றமாகும். வனங்களையும், வன விலங்குகளையும் காப்பாற்றுவது ஒவ்வொரு தனிப்பட்ட மனிதனின் தலையாய கடமையாகும்.

    வனத்துறை, வருவாய்த்துறை மற்றும் மின்சாரத்துறை இணைந்து வரும் காலங்களில் சிறப்பு ரோந்து பணி மேற்கொண்டு சட்ட விரோத மின்வேலிகள் அமைக்கப்பட்டுள்ளதா என தணிக்கை மேற்கொள்ளப்படுகிறது.

    அவ்வாறு சட்டவிரோத மின்வேலிகள் அமைக்க ப்பட்டது தெரியவந்தால் அம்மின்னிணைப்பு மின்சார துறையினரால் துண்டிக்கப்படுவதோடு சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படும். அவ்வாறான சட்டவிரோத மின்வேலியில் சிக்கி வனவிலங்குகளுக்கு பாதிப்பு ஏதேனும் ஏற்ப ட்டால் வனத்துறையினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.

    வனவிலங்குகளை வேட்டையாடுதல், வனத்தி ற்கோ, வனவிலங்களுக்கோ குந்தகம் விளைவித்தல் போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது வன உயிரினப்பாதுகாப்பு சட்டம் 1972-இன் கீழ் கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அதிகபட்சமாக 7 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கவும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யவும் சட்டத்தில் வழிவகையுள்ளது.

    இது போன்ற குற்றச்ச ம்பவங்கள் நடைபெ றுவதாக அறிந்தால் பொதுமக்கள் இலவச தொலைப்பேசி எண் 1800 425 4586 வாயிலாக வனத்துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கலாம். அவ்வாறு தகவல் அளிப்பவர்களின் விவரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படும்.

    இவ்வாறு மாவட்ட கலெக்டர் சாந்தி அதில் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×