என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்புப்படம்.
விதிமுறைகளை பின்பற்றாத நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை
- 20 நிறுவனங்களில் ஆய்வு செய்து முரண்பாடு கண்டறியப்பட்டது.
- விதிகளை பின்பற்றாத நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்
ஈரோடு:
ஈரோடு தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) திருஞான சம்பந்தம் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் சட்டமுறை எடையளவு சட்டம், பொட்டல பொருட்கள் விதிகள் தொடர்பாக இம்மாதம் முழுவதும் சிறப்பாய்வு செய்தனர்.
மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதியில் ஹார்டுவேர், எலக்ட்ரிக்கல் கடைகள், நிறுவனங்கள் என 20 நிறுவனங்களில் ஆய்வு செய்து 8 நிறுவனங்களில் முரண்பாடு கண்டறியப்பட்டது.
காய்கறி கடை, பழக்கடை, விற்பனை கூடங்கள், சந்தை போன்றவற்றில் 25 கடை களில் ஆய்வு செய்ததில் 4 கடைகளில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டது.
பொட்டல பொருட்கள் விதிப்படி வெளிநாட்டு பொருட்கள் விற்பனை செய்யும் 1 கடை, எலக்ட்ரி க்கல், எலக்ட்ரானிக் பொருட்கள் விற்பனை செய்யும் 30 நிறுவனங்களில் ஆய்வு செய்ததில் 3 இடங்களிலும், பழக்கடை, காய்கறி கடைகள் என 17 இடங்களில் நடந்த ஆய்வில் 1 கடையில் முரண்பாடுகள் கண்டறியப்பட்டது.
இதனையடுத்து எடை யளவு சட்டம், பொட்டல பொருட்கள் விதிகளை பின்பற்றாத நிறுவன ங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தொழி லாளர் உதவி ஆணையர் திருஞான சம்பந்தம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.