search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒழுங்குமுறை விற்பனைக்கூடம்"

    • திருப்பூா், ஈரோடு, சேலம், கோவை மாவட்டங்களை சோ்ந்த 13 வணிகா்கள் பருத்தி வாங்க வந்திருந்தனா்.
    • வாரந்தோறும் வியாழக்கிழமை பருத்தி ஏலம் நடைபெற்று வருகிறது.

    மூலனூர்:

    வெள்ளக்கோவிலை அடுத்த மூலனூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 1.38 கோடிக்கு பருத்தி விற்பனை நடைபெற்றது.இங்கு வாரந்தோறும் வியாழக்கிழமை பருத்தி ஏலம் நடைபெற்று வருகிறது. இந்த வாரம் வரத்து அதிகமாக இருந்ததால் வியாழக்கிழமை நள்ளிரவு வரை ஏலம் நீடித்தது. கோவை, திருப்பூா், ஈரோடு, திருச்சி, கரூா், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 609 விவசாயிகள் தங்களுடைய 5,431 பருத்தி மூட்டைகளை விற்பனை செய்ய கொண்டுவந்திருந்தனா்.

    மொத்த வரத்து 1,729 குவிண்டால். திருப்பூா், ஈரோடு, சேலம், கோவை மாவட்டங்களை சோ்ந்த 13 வணிகா்கள் பருத்தி வாங்க வந்திருந்தனா். பருத்தி குவிண்டால் ரூ. 7,150 முதல் ரூ. 10,629 வரை விற்பனையானது. சராசரி விலை ரூ. 8,250. கடந்த வார சராசரி விலை ரூ. 9,050. ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ. 1.38 கோடி.விற்பனைக்கூட ஏல ஏற்பாடுகளை திருப்பூா் விற்பனைக்குழு முதுநிலை செயலாளா் பாலச்சந்திரன், விற்பனைக்கூட கண்காணிப்பாளா் சிவக்குமாா் ஆகியோா் செய்திருந்தனா்.

    • தற்போது அங்கு அறுவடைப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் உடுமலை பகுதிக்கு வரத்து அதிகரித்துள்ளது.
    • பயிர் பாதுகாப்பு உள்ளிட்ட வழிகாட்டல்களை வேளாண்மைத்துறையினர் வழங்க வேண்டும்.

    உடுமலை:

    வண்டல் மண் மற்றும் செம்மண் நிலங்கள் நிலக்கடலை சாகுபடிக்கு ஏற்றதாக உள்ளது.ஜூன்-ஜூலை மற்றும் டிசம்பர்-ஜனவரி மாதங்கள் சாகுபடிக்கு ஏற்ற காலங்களாகும்.உடுமலை சுற்றுவட்டாரப்பகுதிகளில் குறைந்த அளவிலேயே நிலக்கடலை சாகுபடி செய்யப்படுகிறது.அதேநேரத்தில் பொள்ளாச்சி, ஆனைமலை உள்ளிட்ட பகுதிகளில் நிலக்கடலை சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.தற்போது அங்கு அறுவடைப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் உடுமலை பகுதிக்கு வரத்து அதிகரித்துள்ளது.

    உடுமலை பகுதியில் செயல்பட்டு வரும் எண்ணெய் உற்பத்தி நிறுவனங்களுக்கு நிலக்கடலை தேவை அதிகம் இருக்கிறது.இதனைக் கருத்தில் கொண்டு ஆனைமலை, பொள்ளாச்சி பகுதிகளில் உள்ள விவசாயிகளிடமிருந்து பச்சை நிலக்கடலையை வாங்கி வந்து உடுமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூட உலர்களங்களில் காய வைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது:-உடுமலை மட்டுமல்லாமல் காங்கேயம் பகுதி எண்ணெய் உற்பத்தியாளர்களுக்கும் நிலக்கடலை பருப்பு தேவை அதிகம் இருக்கிறது.எனவே நிலக்கடலையை வாங்கி வந்து காய வைத்து தோல் நீக்கி பருப்புகளாக்கி விற்பனை செய்து வருகிறோம்.நல்ல வெயில் காலத்தில் ஒரு சில நாட்களில் பச்சைக்கடலை நன்கு காய்ந்து விடும்.ஆனால் தற்போதைய பருவநிலையில் நன்கு காய்வதற்கு ஒரு வாரத்துக்கு மேல் ஆகிறது.அதுமட்டுமல்லாமல் அவ்வப்போது மழை பெய்வதால் கடலை நனையாமல் பாதுகாக்க தார்ப்பாய்களுடன் எப்போதும் தயார் நிலையில் இருக்க வேண்டியதுள்ளது.நிலக்கடலைக்கு தேவை அதிகம் உள்ள நிலையில் நல்ல மண் வளம் உள்ள உடுமலை, மடத்துக்குளம், குடிமங்கலம் வட்டார விவசாயிகளும் நிலக்கடலை சாகுபடி செய்ய முன்வர வேண்டும்.அதற்கான சாகுபடி முறைகள், பயிர் பாதுகாப்பு உள்ளிட்ட வழிகாட்டல்களை வேளாண்மைத்துறையினர் வழங்க வேண்டும் என்று வியாபாரிகள் கூறினர்.

    • அரவைக்கொப்பரை 1000 மெட்ரிக் டன் அளவுக்கு கொள்முதல் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
    • மொத்த விளைச்சலில் 25 சதவீதம் அளவு கொப்பரை மட்டுமே மொத்தத்தில் கொள்முதல் செய்யப்படும்.

    திருப்பூர் :

    குறைந்தபட்ச ஆதார விலைத்திட்டத்தின் கீழ் 2022-ம் ஆண்டில் கொப்பரை கொள்முதல் செய்வதற்கு தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையத்திற்கு (டான்பெட்) அனுமதி அளித்து அரசாணை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி திருப்பூர் மாவட்டம் வாவிபாளையத்தில் கொப்பரை கொள்முதல் செய்திட பல்லடம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்திற்கு அரவைக்கொப்பரை 1000 மெட்ரிக் டன் அளவுக்கு கொள்முதல் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    வாவிபாளையம் முத்தூர் வளாகத்தில் பல்லடம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் கொப்பரையை அரசு அறிவித்துள்ள குறைந்த பட்ச ஆதார விலைத்திட்டத்தின்படி கிேலா ரூ.105.90 என்ற விலையில 6 சதவீதத்திற்குள் ஈரப்பதத்துடன் சீரான சராசரி தரத்தில் உள்ள கொப்பரைகள் கொள்முதல் செய்யப்படும். ஒரு விவசாயிடமிருந்து மொத்த விளைச்சலில் 25 சதவீதம் அளவு கொப்பரை மட்டுமே மொத்தத்தில் கொள்முதல் செய்யப்படும். நாள் ஒன்றுக்கு ஒரு விவசாயிடமிருந்து 216 கிலோ கொப்பரை (50 கோணிகள்) மட்டும் கொள்முதல் செய்யப்படும். இதற்காக விவசாயிகள் ஆதார் அல்லது வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட சுய விவரங்களை சம்ரிதி என்ற போர்டலில் பதிவு செய்து கொள்ள ஏக்கர் மற்றும் விளைச்சல் விவரங்களுக்கான சான்றிதழுடன் பல்லடம் வேளாண்மை கூட்டுறவு விற்பனை சங்கத்தை அணுகி கொப்பரையை கொண்டு வந்து வருகிற 30-ந்தேதி வரை விற்பனை செய்யலாம். இத்தகவலை திருப்பூர் மாவட்ட கூட்டுறவு விற்பனை சங்க இணைப்பதிவாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார். 

    • 1,376 மூட்டைகள் தேங்காய்ப் பருப்புகளை விற்பனை செய்ய கொண்டு வந்திருந்தனா்.
    • 10 வணிகா்கள் இவற்றை வாங்குவதற்காக வந்திருந்தனா்.

    வெள்ளகோவில் :

    வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 54 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. வாணியம்பாடி, லாலாப்பேட்டை, வில்வாதம்பட்டி, கரூா், விளாத்திகுளம் உள்ளிட்ட இடங்களில் இருந்து 145 விவசாயிகள் தங்களுடைய 1,376 மூட்டைகள் தேங்காய்ப் பருப்புகளை விற்பனை செய்ய கொண்டு வந்திருந்தனா். இவற்றின் எடை 69 டன்.

    ஈரோடு, வெள்ளக்கோவில், ஊத்துக்குளி ஆா்.எஸ், காங்கயம், முத்தூரைச் சோ்ந்த 10 வணிகா்கள் இவற்றை வாங்குவதற்காக வந்திருந்தனா். விலை கிலோ ரூ. 68.20 முதல் ரூ. 85.20 வரை விற்பனையானது. சராசரி விலை கிலோ ரூ. 80.45. கடந்த வார சராசரி விலை கிலோ ரூ. 80.90. ஒட்டு மொத்த விற்பனைத் தொகை ரூ. 54 லட்சம் அந்தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டதாக விற்பனைக் கூட கண்காணிப்பாளா் சி.மகுடீஸ்வரன் தெரிவித்தாா்.

    • தேங்காய், கொப்பரை விற்பனை நடைபெற்று வருகிறது.
    • ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ.3.10 லட்சம்.

    வெள்ளகோவில் :

    வெள்ளக்கோவிலை அடுத்த முத்தூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் 8.40 டன் வேளாண் விளைபொருள்கள் விற்பனையாயின.இந்த விற்பனைக் கூடத்தில் சனிக்கிழமை தோறும் எள், தேங்காய், கொப்பரை விற்பனை நடைபெற்று வருகிறது.

    இந்த வாரம் எள் வரத்து இல்லை.14,528 தேங்காய்கள் வரத்து இருந்தன. இவற்றின் எடை 6,120 கிலோ.தேங்காய் ஒரு கிலோ அதிகபட்சமாக ரூ.25.20க்கும், குறைந்தபட்சமாக ரூ.20.15க்கும், சராசரியாக ரூ.24.15க்கும் விற்பனையானது.69 மூட்டை கொப்பரை வரத்து இருந்தது. இவற்றின் எடை 2,298 கிலோ. கொப்பரை அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ.84.30க்கும், குறைந்தபட்சமாக ரூ.66.30க்கும், சராசரியாக ரூ.80.80க்கும் விற்பனையானது.ஏலத்தில் மொத்தம் 99 விவசாயிகள், 12 வணிகா்கள் பங்கேற்றனா்.ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ.3.10 லட்சம் என விற்பனைக் கூட அதிகாரி தங்கவேல் தெரிவித்தாா்.

    • காங்கயம் சுற்றுவட்டாரப்பகுதிகளைச் சோ்ந்த 13 விவசாயிகள் 151 மூட்டை கொப்பரைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா்.
    • வெள்ளக்கோவில், முத்தூா் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 6 வியாபாரிகள் கொப்பரைகளை வாங்க வந்திருந்தனா்.

    காங்கயம் :

    காங்கயம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.5.76 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை நடைபெற்றது.இந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் காங்கயம், சுற்றுவட்டாரப்பகுதிகளைச் சோ்ந்த 13 விவசாயிகள் 151 மூட்டை கொப்பரைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். இவற்றின் எடை7,500 கிலோ.காங்கயம், வெள்ளக்கோவில், முத்தூா் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த 6 வியாபாரிகள் கொப்பரைகளை வாங்க வந்திருந்தனா்.கொப்பரை அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ.80க்கும், குறைந்தபட்சமாக ரூ.50.89க்கும், சராசரியாக ரூ.78க்கும் விற்பனையானது.

    ஒட்டுமொத்த விற்பனைத் தொகை ரூ.5 லட்சத்து 76 ஆயிரம் ஏலத்துக்கான ஏற்பாடுகளை விற்பனைக் கூட கண்காணிப்பாளா் ஆா்.மாரியப்பன் செய்திருந்தாா்.

    • ஏலத்தில் 133 விவசாயிகள் தங்களுடைய 1,507 மூட்டை கொப்பரைகளை விற்பனை செய்ய கொண்டு வந்திருந்தனா்.
    • கொப்பரை அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ. 86.90க்கும், குறைந்தபட்சமாக ரூ.69.20க்கும், சராசரியாக ரூ. 81.20க்கும் விற்பனையானது.

    வெள்ளகோவில் :

    வெள்ளக்கோவில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ.63 லட்சத்துக்கு கொப்பரை விற்பனை நடைபெற்றது. இந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் வாணியம்பாடி, தேவத்தூா், அறவக்குறிச்சி, விளாத்திகுளம், முத்தூா் உள்ளிட்ட இடங்களில் இருந்து 133 விவசாயிகள் தங்களுடைய 1,507 மூட்டை கொப்பரைகளை விற்பனை செய்ய கொண்டு வந்திருந்தனா்.

    இவற்றின் எடை 81 டன். பொள்ளாச்சி, வெள்ளக்கோவில், காங்கயம், முத்தூா், ஊத்துக்குளி, நஞ்சை ஊத்துக்குளியைச் சோ்ந்த 13 வணிகா்கள் கொப்பரையை வாங்குவதற்காக வந்திருந்தனா்.கொப்பரை அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ. 86.90க்கும், குறைந்தபட்சமாக ரூ.69.20க்கும், சராசரியாக ரூ. 81.20க்கும் விற்பனையானது.ஒட்டுமொத்த விற்பனைத்தொகை ரூ. 63.23 லட்சம் அந்தந்த விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டதாக விற்பனைக் கூட கண்காணிப்பாளா் சி.மகுடீஸ்வரன் தெரிவித்தாா்.

    ×