search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஒப்படைப்பு"

    • போலீஸ் ஏட்டு விட்டு சென்ற பணத்தை வாலிபர்கள் திரும்ப ஒப்படைத்தனர்.
    • அந்த பணத்தை கமுகி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    கமுதி

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே அபிராமம் போலீஸ் நிலையத்தில் தலைமை காவலராக வேலை பார்ப்பவர் வீரமுத்துமணி. இவர் நேற்று முன்தினம் இரவு கமுதி பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு ஏ.டி.எம். மையத்துக்கு சென்றார். அங்கு வங்கி கணக்கிற்கு ரூ.9500 அனுப்பினார். எந்திரத்தில் பணம் அனுப்பப்பட்டு விட்டது என்று நினைத்து அவர் அங்கிருந்து சென்று விட்டார்.

    ஆனால் பணம் அனுப்பப்படாமல் ஏ.டி.எம். எந்திரத்திலேயே இருந்து உள்ளது. அதன் பிறகு அந்த மையத்திற்கு காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சிவா (19), சரவணகுமார் (21) ஆகிய 2 வாலிபர்கள் வந்தனர். அப்போது ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    உடனடியாக அந்த பணத்தை கமுகி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்த னர். இதைத்தொடர்ந்து கமுதி போலீஸ் துணை சூப்பிரண்டு மணிகண்டன் உத்தரவின்பேரில், சப்-இன்ஸ்பெக்டர்கள் முருகன், பிரகாஷ், குத்தாலிங்கம், மற்றும் தலைமை எழுத்தர் சித்ரா ஆகியோர் பணத்தை ஒப்படைத்த 2 வாலிபர்களை யும் பரிசு வழங்கி பாராட்டினர். மேலும் ஏட்டு வீரமுத்துமணியிடம் பணம் ஒப்படைக்கப்பட்டது.

    • குழந்தையை விட்டுச்சென்றது யார் என்று தெரியவில்லை.
    • 30 நாட்களுக்குள் தொடர்பு கொள்ளாவிட்டால் அந்த குழந்தை தத்துக்கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர்:

    திருப்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த பிப்ரவரி மாதம் 25-ந் தேதி 3 மாத பெண் சிசுவை போட்டுவிட்டு தாயார் சென்று விட்டார்.

    குழந்தையை விட்டுச்சென்றது யார் என்று தெரியவில்லை. இதைத்தொடர்ந்து அந்த குழந்தையை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.அந்த பெண் குழந்தை குறித்து தகவல் தெரிந்தவர்கள், திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், குழந்தைகள் நலக்குழு மற்றும் சேலம் சின்னதிருப்பதியை சேர்ந்த லைப் லைன் டிரஸ்ட், தத்துவள மையத்தை தொடர்பு கொள்ளலாம்.

    30 நாட்களுக்குள் தொடர்பு கொள்ளாவிட்டால் அந்த குழந்தை தத்துக்கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    • இரட்டிப்பு மோசடி வழக்கில் பணத்தை மீட்டு உரியவரிடம் போலீசார் ஒப்படைத்தார்.
    • ராமமூர்த்தி அந்த லிங்கில் தனது விவரங்களை பதிவேற்றம் செய்தார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவரது செல்போனில் வாட்ஸ்-அப் மூலம் பணம் முதலீடு செய்தால் இரட்டிப்பாக கிடைக்கும் என்று குறுஞ்செய்தி அனுப்பப்பட்டிருந்தது. இதனை நம்பிய ராமமூர்த்தி அந்த லிங்கில் தனது விவரங்களை பதிவேற்றம் செய்தார். அதில் உள்ள பொருட்களை விற்றுக் கொடுத்தால் லாபம் கிடைக்கும் என்றிருந்ததை நம்பிய அவர் 16 தவணைகளாக ரூ.82 ஆயிரத்து 400-ஐ அனுப்பினார். இந்த பணத்தை பெற்றுக்கொண்டவர் ஏமாற்றியது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின்பேரில் சிவகங்கை சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

    இதையடுத்து இழந்த தொகை ரூ.82 ஆயிரத்து 400-ஐ போலீசார் மீட்டனர். பின்னர் அந்த தொகை இன்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ், ராமமூர்த்தியிடம் ஒப்படைத்தார்.

    • திருஞானம் 3.5 பவுன் நகையை வங்கியில் இருந்து மீட்டு வெளியில் வந்து சட்டையின் உள் பையில் வைக்கும் போது கீழே தவறவிட்டதாக தெரிகிறது.
    • போலீசார்ர் சம்பவ நடந்த வங்கி பகுதிக்கு சென்று சுற்றியுள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தனர்.

    கடலூர்:

    சிதம்பரத்தில் தவறவிட்ட நகையை சி.சி.டி.வி. கேமரா மூலம் கண்டுபிடித்த போலீசார். அதனை உரியவரிடம் ஒப்படைத்தனர்.  சிதம்பரம் உசூப்பூர் சபாநகரைச் சேர்ந்த ராமமூர்த்தி மகன் திருஞானம் (வயது 56). இவர் 3.5 பவுன் நகையை வங்கியில் இருந்து மீட்டு வெளியில் வந்து சட்டையின் உள் பையில் வைக்கும் போது கீழே தவறவிட்டதாக தெரிகிறது. இதுகுறித்து திருஞானம் சிதம்பரம் நகர போலீசாரிடம் புகார் அளித்தார். சிதம்பரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு ரகுபதி உத்தரவின்படி, சிதம்பரம் நகர போலீசார் மற்றும் குற்றப்பிரிவு தனிப்படை போலீசார்ர் சம்பவ நடந்த வங்கி பகுதிக்கு சென்று சுற்றியுள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்தனர்.

    அதில் அடையாளம் தெரியாத பெண் கீழே விழுந்த நகையை எடுத்து சென்றது தெரியவந்தது. போலீசாரின் விசாரணையில், அவர் பின்னலூரைச் சேர்ந்த பெண் என்பது தெரிய வந்தது. அப்பெண் நகையை போலீசாரிடம் ஒப்படைத்தார். நகையை மீட்டு தவறவிட்ட திருஞானத்திடம் சிதம்பரம் நகர சப்-இன்ஸ்பெக்டர் மணிகண்டன் மற்றும் குற்றப்பிரிவு போலீசார் நகையை ஒப்படைத்தனர்.

    • சில செல்போன்களை கீழே கிடந்ததாக கூறி பொதுமக்கள் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
    • அந்த செல்போன்களை உரியவர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பல்வேறு இடங்களில் காணாமல் மற்றும் திருட்டு போன செல்போன்கள் கண்டுபிடிக்க சம்பந்தப்பட்ட பொதுமக்கள் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

    இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத் உத்தரவின் பேரில் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் ஜெயமோகன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் முத்தழகன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் ,சைபர் கிரைம் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் குபேந்திரன், காவலர் ஜெகதீஸ்வரன் மற்றும் போலீசார் காணாமல் மற்றும் திருட்டு போன செல்போன்களை கண்டுபிடிக்கும் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

    செல்போன்களின் ஐ.எம்.இ.ஐ நம்பர் மூலம் தேடும் பணியை தொடங்கினர். மேலும் பல்வேறு நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தியும் செல்போனை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கினர்.

    அப்போது சம்பந்தப்பட்ட செல்போன்கள் தஞ்சாவூர் நகரம் மற்றும் திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட சில மாவட்டங்களில் உள்ள கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    மேலும் சில செல்போன்களை கீழே கிடந்ததாக கூறி பொதுமக்கள் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    கடைகளில் விற்பனைக்கு இருந்த செல்போன் ஐ.எம்.இ.ஐ எண்ணையும், புகார் கொடுத்திருந்த ஐ.எம்.இ.ஐ எண்ணையும் போலீசார் ஒப்பிட்டு பார்த்து கடை உரிமையாளரிடம் இருந்து அந்த செல்போன்களை மீட்டனர்.

    அப்போது சந்தேகத்திற்கு இடமான வகையில் யாராவது செல்போனை விற்க வந்தால் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என்று அறிவுறுத்தினர்.

    வெளியூரில் கண்டுபிடிக்கப்பட்ட சில செல்போன்கள் அவர்களாகவே கொரியர் மூலம் போலீஸ் நிலையத்துக்கு அனுப்பி விட்டனர்.

    இவ்வாறாக பொதுமக்களால் தவறவிட்டு, புகார் பெற்று ரூ.3 லட்சம் மதிப்புள்ள 25 செல்போன்களை போலீசார் கண்டுபிடித்து மீட்டனர். இன்று அந்த செல்போன்களை உரியவர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

    இன்ஸ்பெக்டர் ஜெயமோகன் , சம்பந்தப்பட்டவர்களிடம் செல்போன்களை ஒப்படைத்தார். அப்போது அவர் செல்போன்களை பத்திரமாக பாதுகாத்துக் கொள்ளும்படி அறிவுறுத்தினார்.

    • மதுரையில் திருடு போன 265 செல்போன்கள் மீட்கப்பட்டன.
    • போலீஸ் கமிஷனர் ஒப்படைத்தார்.

    மதுரை

    மதுரையில் செல்போன் திருட்டு தொடர்கதையாக நடந்து வருகிறது. இதன் குற்றவாளிகளை பிடிக்க போலீஸ் துணை கமிஷனர்கள் சாய் பிரனீத் (தெற்கு), அரவிந்த் (வடக்கு), கவுதம் கோயல் (தலைமையிடம்) ஆகியோர் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டன.

    அவர்கள் சைபர் கிரைம் போலீசாருடன் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இதன் பயனாக திருடுபோன 265 செல்போன்கள் மீட்கப்பட்டன.

    தல்லாகுளம் சரகத்தில் மட்டும் 106 செல்போன்களும், அண்ணாநகரில் 64 செல்போன்களும், திடீர் நகரில் 42 செல்போன்களும் மீட்கப்பட்டது. இதே போன்று செல்லூர்-17, மீனாட்சி அம்மன் கோவில் சரகம்-13, அவனியாபுரம்-9, திருப்பரங்குன்றம்-4, தெற்கு வாசல்-6 செல்போன்களும் மீட்கப்பட்டன.

    மீட்கப்பட்ட செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி, மதுரை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடந்தது. இதில் மாநகர போலீஸ் கமிஷனர் நரேந்திரன் நாயர் கலந்து கொண்டு செல்போன்களை உரியவர்களிடம் ஒப்படைத்தார்.

    இதில் இன்ஸ்பெக்டர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மேலூரில் பெண் தவறவிட்ட பணத்தை தம்பதி போலீசிடம் ஒப்படைத்தனர்.
    • சப்- இன்ஸ்பெக்டர் அழகர்சாமி முன்னிலையில் நதியாவிடம் பணம் ஒப்படைக்கப்பட்டது.

    மேலூர்

    மேலூர் அருகே வினோபா காலனியை சேர்ந்தவர் நதியா. இவர் மேலூரில் பொருட்கள் வாங்குவதற்காக தனது கைப்பையில் ரூ.21 ஆயிரத்தை எடுத்துக் கொண்டு எஸ்.எஸ்.வி. சாலா தெருவில் சென்றார்.

    அப்போது அவர் வைத்திருந்த கைப்பை தவறி கீழே விழுந்து விட்டது. அதனை கவனிக்காமல் அவர் கடைக்கு சென்று பொருட்களை வாங்கினார். பின்னர் பணம் கொடுப்பதற்காக பணப்பையை தேடினார். அப்போது அதனை காணவில்லை.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் இதுகுறித்து மேலூர் போலீஸ் நிலை யத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் நதியா தவறவிட்ட பணத்தை தேடி வந்தனர்.

    இதற்கிடையே இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த முன்னாள் அ.வல்லாளபட்டி பேரூராட்சி கவுன்சிலர் பெரியவர் மற்றும் அவரது மனைவி மூக்கம்மாள் ஆகியோர் கீழே கிடந்த பணப்பையை கண்டெடுத்தனர். அதனை யார் தவற விட்டார்களோ என்று கருதி மேலூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அந்த பணம் நதியா தவறவிட்டது என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து சப்- இன்ஸ்பெக்டர் அழகர்சாமி முன்னிலையில் நதியாவிடம் பணம் ஒப்படைக்கப்பட்டது.

    கீழே கிடந்த பணத்தை எடுத்து நேர்மையாக ஒப்படைத்த தம்பதிகளுக்கு போலீசார் பாராட்டு தெரிவித்தனர்.

    • மனநிலை பாதிக்கப்பட்டிருந்தவர்கள் குணமாகியதை தொடர்ந்து கணவரிடம் ஒப்படைக்கப்பட்டார்
    • போலீசார் விசாரணைக்கு பின்னர் ஒப்படைப்பு

    பெரம்பலூர்

    பெரம்பலூர் ரோவர் ஆர்ச் அருகே கடந்த 2017-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 11-ந்தேதி மதியம் மனநிலை பாதிக்கப்பட்ட சுமார் 50 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் சுற்றித்திரிந்தார். இதனை கண்ட பெரம்பலூர் போலீசார் அவரை மீட்டு ஒரு கருணை இல்லத்தில் ஒப்படைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதில் தற்போது அவர் நலமுடன் இருந்ததால், அவரை பற்றி தகவலை போலீசார் விசாரித்தனர். விசாரணையில், அவர் பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, அயன்பேரையூரை சேர்ந்த துரை அரசன் மனைவி ஜெயா என்பது தெரியவந்தது. இதையடுத்து ஜெயாவை போலீசார் அவரது கணவரிடம் நேற்று ஒப்படைத்தனர்


    • சாலையில் கிடந்த 45 ஆயிரம் ரூபாயை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்
    • காவல்துறையினர், பொது மக்கள் பாராட்டு

    அறந்தாங்கி,

    புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஆயிங்குடி பகுதியைச் சேர்ந்தவர் அமுதாராணி (55).விவசாயக் கூலி வேலை பார்க்கும் இவர் தனது பேரக்குழந்தைக்கு மருத்துவ பரிசோதனை செய்வதற்காக, ஆயிங்குடி யிலிருந்து அறந்தாங்கி பேருந்தில் சென்றுள்ளார்.கட்டுமாவடி முக்கம் பேருந்து நிறுத்தத்தில் பேருந்தில் இருந்து இறங்கி சாலையில் நடந்துள்ளார். அப்போது கட்டு கட்டாக பணம் கிடப்பதை அவர் கண்டுள்ளார். யாரும் இல்லாத நிலையில், சாலையில் கிடந்த பணத்தை எடுத்து, அருகே இருந்த பெட்டிக்கடை ஒன்றில் கொடுத்துள்ளார். பணத்தை தவற விட்டவர்கள் வந்து கேட்டால் ஒப்படைத்து விடுமாறு கூறிச் சென்றுள்ளார்.மீண்டும் மருத்துவமனை யிலிருந்து திரும்பி வந்த அவர் பெட்டிக்கடைக்கு சென்று யாரேனும் வந்தார்களா என கேட்டு உள்ளார். அதற்கு யாரும் வரவில்லையென பெட்டிக்கடைகாரர் கூறிய தையடுத்து, அவரிடமி ருந்து 45 ரொக்கப் பணத்தை வாங்கிய அமுதாராணி அறந்தாங்கி காவல்நிலையத்தில் சென்று ஒப்படைத்துள்ளார்.ஏற்கனவே அறந்தாங்கி எல்என்புரம் பகுதியைச் சேர்ந்த குமார் (45) என்பவர் கடைவீதிக்கு செல்லு ம்போது தான் வைத்திருந்த ரொக்கப்பணம் ரூ.45 காணவில்லையென புகார் கொடுத்துள்ளார்.அவரை வரவழைத்த காவல்துறையினர், பணம் தொலைந்த நேரத்தையும், கண்டெடுக்கப்பட்ட நேரத்தையும் ஒப்பிட்டு பார்த்து விசாரணைக்கு பிறகு 45 ஆயிரம் ரொக்கப் பணத்தை உரியவரிடம் ஒப்படைத்தனர். கூலி வேலை பார்த்து பிழைப்பு நடத்தும் பெண்மணியாக இருந்தாலும் அடுத்தவ ர்களின் பணத்திற்கு ஆசை படாத பெண்மணியை காவல்துறையினரும், பொதுமக்களும் வெகுவாக பாராட்டினர்.




    • உமாதேவி 2 ஆண்டுகளுக்கு பின் மீட்கப்பட்டார்
    • உமாதேவியை பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

    கோவை,

    கோவை கருமத்தம்பட்டி அருகே உள்ள சோமனூரை சேர்ந்தவர் உமாதேவி (வயது40).மனநலம் பாதிக்கப்பட்டவர். திருமணமாகவில்லை.

    இவரை அவரது அக்கா ருக்மணி என்பவர் கவனித்து வந்தார். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திடீரென உமாதேவி மாயமானார். அவரை அவரது அக்கா பல்வேறு இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை.

    இதுகுறித்து ருக்மணி மாயமான தனது தங்கையை கண்டுபிடித்து தரும்படி கருமத்தம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான உமா தேவியை தேடி வந்தனர். ஆனால் கடந்த 2 வருடமாக அவர் கிடைக்கவில்லை.

    இந்த நிலையில் கேரள அரசு, வீடு இல்லாமல் சாலைகளில் சுற்றித் திரிபவர்களை கண்டுபிடித்து அவர்களது உறவினர்களிடம் ஒப்படைக்கும் பணியை தனியார் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து திட்டத்தை செயல்படுத்தி வந்தனர்.

    அப்போது தொண்டு நிறுவனத்தினர் கேரள மாநிலம் கொல்லத்தில் சாலையோரத்தில் சுற்றித்திரிந்தவர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு சிகிச்சை மற்றும் கவுன்சிலிங் வழங்கி அவர்கள் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர்கள் என்று விசாரித்தனர்.

    அப்போது அவர்களில் உமாதேவியும் ஒருவர். அவரிடம் விசாரித்ததில் அவர் கோவையை சேர்ந்தவர் என்பதும், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறி வந்தது தெரிய வந்தது.

    இதனையடுத்து அந்த தொண்டு நிறுவனத்தினர் கருமத்தம்பட்டி போலீசாரை தொடர்பு கொண்டு உமாதேவியின் குடும்பம் எங்கு உள்ளது என விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

    இதனையடுத்து கருமத்தம்பட்டி போலீசார் உமாதேவி அக்கா ருக்மணி இருக்கும் இடத்தை கண்டுபிடித்தனர். பின்னர் தொண்டு நிறுவனத்தினருடன் இணைந்து கருமத்தம்பட்டி போலீசார் உமாதேவியை அவரது அக்கா ருக்மணியிடம் ஒப்படைத்தனர்.

    • ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர்
    • 75 நாட்களுக்கு பின்னர் குணமடைந்தார்

    கரூர்,

    குளித்தலையை அடுத்த, கழுகூர் பஞ்., உடையாபட்டி பஸ் நிறுத்தம் அருகே, கடந்த டிசம்பர் 15ல், மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில், 32 வயது, ஆந்திர மாநில இளைஞர் மஞ்சுநாதா என்பவர் மீட்கப்பட்டார்.

    தோகைமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ் குமார், சாந்திவனம் மனநல மீட்பு குழு ஒருங்கி து ணைப்பாளர் தீனதயாளன், செவிலியர் அனிதா, ஓட்டுனர் வேல்முருகன் ஆகியோர் முயற்சியில், சாந்திவனம் மன நல மருத்துவம் மற்றும் மறு வாழ்வு பயிற்சி மையத்தில் அந்த இளைஞர் சேர்க் கப்பட்டார். 75 நாட்களுக்கு பின், குணமடைந்த மஞ்சுநாதாவை, ஆந்திர மாநிலம், அன்னமய்யா மாவட்டம், வெங்கமாவரிப்பள்ளி கிராமத்தில் உள்ள அவரது சித்தி ஹேமலதா, ஊர் முக்கி பஸ்தர்கள் முன்னிலையில், சாந்திவனம் இயக் குனர் அரசப்பன், ஒருங்கிணைப்பாளர் தீனதவாளன், செவிலியர் சித்ரா, ஓட்டுநர் மோகன்ராஜ் ஆகியோர் ஒப்படைத்தனர்.

    • சுதா( 30) அங்கன்வாடி ஊழியர். இவர் ஊருக்கு செல்ல அரசு பஸ்சில் ஏறி,டிக்கெட் எடுக்க கைப்பையை தேடிய போது அது காணாமல் போனது தெரிய வந்தது.போலீசில் புகார் கொடுத்தார். .
    • போலீசார் கண்டறிந்து சுதாவை வரவழைத்து அவரிடம் ஒப்படைத்தனர்.

    கடலூர்:

    திட்டக்குடி அடுத்துள்ள தொழுதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பூமாலை.இவரது மனைவி சுதா( 30) அங்கன்வாடி ஊழியர் .இவர் நேற்று முன்தினம் மாலை திட்டக்குடிக்கு சொந்த வேலை காரணமாக வந்தார். மீண்டும் ஊருக்கு செல்ல அரசு பஸ்சில் ஏறினார். டிக்கெட் எடுக்க கைப்பையை தேடிய போது அது காணாமல் போனது தெரிய வந்தது. அந்த பையில் ரூ. 1500 பணம், 2 செல்போன்கள் ஏ.டி.எம்.கார்டு, ஆதார் கார்டு, வீட்டு சாவி உள்ளிட்ட பொருட்கள் இருந்தது சுதா தனது கைப்பை காணாமல் போனது குறித்து போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் திட்டக்குடி சப்- இன்ஸ்பெக்டர் பாக்யராஜ் தலைமையில் போலீசார் தீவிரமாக விசாரணை கொண்டனர். அப்ேபாது காணாமல் போன ைகப்பை கோழியூர் பகுதியில் கிடந்ததை போலீசார் கண்டறிந்து சுதாவை வரவழைத்து அவரிடம் ஒப்படைத்தனர்.

    ×