search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலீஸ் ஏட்டு"

    • உச்சிமாகாளி நெல்லையை அடுத்த முன்னீர்பள்ளம் போலீஸ் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருகிறார்.
    • உச்சிமாகாளி திடீரென 10-க்கும் மேற்பட்ட தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு மயங்கி விழுந்தார்.

    நெல்லை:

    பாளை குலவணிகர் புரத்தை சேர்ந்தவர் உச்சி மாகாளி(வயது 39). இவருக்கு வெங்கடேஷ்வரி என்ற மனைவியும், குழந்தைகளும் உள்ளனர். உச்சிமாகாளி நெல்லையை அடுத்த முன்னீர்பள்ளம் போலீஸ் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருகிறார். மேலும் தென்மண்டல ஐ.ஜி. தலைமையில் இயங்கும் தனிப்படையிலும் இவர் பணியாற்றி வருகிறார்.

    இவரது மனைவி வெங்கடேஷ்வரி தென்காசி மாவட்ட போலீசில் டெக்னிக்கல் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இவர்கள் 2 பேரும் தங்களது பெற்றோருடன் ஒரே வீட்டில் வசித்து வருகின்றனர்.

    இந்நிலையில் நேற்று வீட்டில் இருந்த உச்சிமாகாளி திடீரென 10-க்கும் மேற்பட்ட தூக்க மாத்திரைகளை சாப்பிட்டு மயங்கி விழுந்தார்.

    உடனே அவரை உறவினர்கள் மீட்டு வண்ணார்பேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மேலப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடந்த சில நாட்களாகவே உச்சிமாகாளி மன அழுத்தத்தில் இருந்ததாகவும், யாரிடமும் பேசாமல் இருந்தி வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அவர் பணிச்சுமை காரணமாக தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாரா? அல்லது குடும்ப பிரச்சினை ஏதேனும் உண்டா? என்பது குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.

    • சரவணன் (வயது 40). இவர் சென்னை ஆர். கே. நகரில் உள்ள போலீஸ் நிலையத்தில் ஏட்டுவாக பணிபுரிந்து வருகிறார்.
    • நேற்று கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது.

    சேலம்:

    சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி அருகே உள்ள தும்பல்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சரவணன் (வயது 40). இவர் சென்னை ஆர். கே. நகரில் உள்ள போலீஸ் நிலையத்தில் ஏட்டுவாக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் சரவணன் 3 நாட்கள் விடுமுறையில் மனைவி மற்றும் குழந்தைகளுடன் நேற்று முன்தினம் சொந்த ஊருக்கு வந்தார். நேற்று கணவன்-மனைவி இடையே குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு ஏற்பட்டது. இதில் மனம் உடைந்த சரவணன் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்துவிட்டு மயங்கி விழுந்தார். இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து பனமரத்துப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தீவிர சிகிச்சை பிரிவில் உள்ள சரவிஷம் குடித்த போலீஸ் ஏட்டுவுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சைவணனுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. 

    • போலீஸ் ஏட்டு விட்டு சென்ற பணத்தை வாலிபர்கள் திரும்ப ஒப்படைத்தனர்.
    • அந்த பணத்தை கமுகி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    கமுதி

    ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே அபிராமம் போலீஸ் நிலையத்தில் தலைமை காவலராக வேலை பார்ப்பவர் வீரமுத்துமணி. இவர் நேற்று முன்தினம் இரவு கமுதி பஸ் நிலையம் அருகே உள்ள ஒரு ஏ.டி.எம். மையத்துக்கு சென்றார். அங்கு வங்கி கணக்கிற்கு ரூ.9500 அனுப்பினார். எந்திரத்தில் பணம் அனுப்பப்பட்டு விட்டது என்று நினைத்து அவர் அங்கிருந்து சென்று விட்டார்.

    ஆனால் பணம் அனுப்பப்படாமல் ஏ.டி.எம். எந்திரத்திலேயே இருந்து உள்ளது. அதன் பிறகு அந்த மையத்திற்கு காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சிவா (19), சரவணகுமார் (21) ஆகிய 2 வாலிபர்கள் வந்தனர். அப்போது ஏ.டி.எம். எந்திரத்தில் பணம் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    உடனடியாக அந்த பணத்தை கமுகி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்த னர். இதைத்தொடர்ந்து கமுதி போலீஸ் துணை சூப்பிரண்டு மணிகண்டன் உத்தரவின்பேரில், சப்-இன்ஸ்பெக்டர்கள் முருகன், பிரகாஷ், குத்தாலிங்கம், மற்றும் தலைமை எழுத்தர் சித்ரா ஆகியோர் பணத்தை ஒப்படைத்த 2 வாலிபர்களை யும் பரிசு வழங்கி பாராட்டினர். மேலும் ஏட்டு வீரமுத்துமணியிடம் பணம் ஒப்படைக்கப்பட்டது.

    • நேற்று இரவு வழக்கம்போல் பணிய முடித்துவிட்டு இரவு 10 மணியளவில் தனகொடி வீட்டுக்கு வந்துள்ளார்.
    • அவரது உறவினர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் தனகொடி பரிதாபமாக இறந்தார்.

    ஈரோடு:

    ஈரோடு சூரம்பட்டி போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வந்தவர் தனகொடி (59). இவர் சேலம் மகுடஞ்சாவடியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

    இந்நிலையில் நேற்று இரவு வழக்கம்போல் பணிய முடித்துவிட்டு இரவு 10 மணியளவில் தனகொடி வீட்டுக்கு வந்துள்ளார். பின்னர் சாப்பிட்டு விட்டு கட்டிலில் படுத்து தூங்க சென்றார். அப்போது திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அவரது உறவினர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியில் தனகொடி பரிதாபமாக இறந்தார். அவரது உடலுக்கு போலீஸ் உயரதிகாரிகள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

    • ராஜா வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    • இது குறித்து பவானி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் அருகே உள்ள பர்கூர் போலீஸ் நிலை யத்தில் ராஜா (40). என்பவர் போலீஸ் ஏட்டாக பணி புரிந்து வந்தார்.

    இவருக்கு திருமணமாகி 2 பெண் குழந்தைகள் உளளனர். இவர் பவானி காவலர் குடி யிருப்பில் குடும்பத்துடன் தங்கி வேலைக்கு சென்று வந்தார்.

    பவானி காவலர் குடியிருப்பில் குடி இருந்து வரும் ராஜா கடந்த 3 மாத ங்களாக உடல் நிலை சரியில்லாமல் இருந்ததாகவும், இதையடுத்து கடந்த 3 மாதங்களாக பணி விடுப்பில் அவர் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

    இந்த நிலையில் ராஜா பவானி காவலர் குடி இருப்பில் உள்ள அவரது வீட்டில் யாரும் இல்லாத போது திடீரென தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதை கண்ட அந்த பகுதியில் உள்ள மற்ற போலீசார் அவரது உடலை மீட்டு பவானி அரசு மருத்துவமனைக்கு பிரோத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து பவானி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மணல் கடத்தலுக்கு உடந்தையாய் இருந்ததால் நடவடிக்கை
    • மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரி கிரண் பிரசாத் உத்தர விட்டார்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் மணல் கடத்தல் சம்பவங்கள் நடப்பதாக போலீசாருக்கு புகார்கள் வந்தன. இதனை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் உத்தரவிட்டார்.

    அதன் பேரில் போலீசார் மாவட்டம் முழுவதும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் அஞ்சுகிராமம் பகுதியில் செம்மண் கடத்தல் சம்பவம் தொடர்ந்து நடந்து வருவதாக கூறப்படுகிறது.

    செம்மண் கடத்தல் கும்ப லோடு அஞ்சுகிராமம் போலீஸ் நிலைய தலைமை காவலர் லிங்கேஷ் என்ப வருக்கு தொடர்பு இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது குறித்து உரிய விசாரணை நடத்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரி கிரண் பிரசாத் உத்தர விட்டார்.

    இந்த நிலையில் தலைமை காவலர் லிங்கேஷ் நேற்று பணி இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளார். இதற்கான உத்தரவை மாவட்ட போலீஸ் சூப்பி ரண்டு ஹரிகிரண் பிரசாத் பிறப்பித்து உள்ளார்.

    • கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு போலீஸ் ஏட்டு மாதேஸ்வரனுக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டது.
    • மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த போலீஸ் ஏட்டு மாதேஸ்வரன் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    பவானி:

    ஈரோடு மாவட்டம் பங்களாபுதூர் போலீஸ் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வந்தவர் மாதேஸ்வரன் (54). இவர் குடும்பத்துடன் பவானி அருகே உள்ள ஆர்.என்.புதூர் சூரியம்பாளையம் போலீஸ் குடியிருப்பில் வசித்து வந்தார்.

    கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு போலீஸ் ஏட்டு மாதேஸ்வரனுக்கு திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டது. அல்சர் காரணமாக அவர் ரத்த வாந்தி எடுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

    இந்த நிலையில் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த போலீஸ் ஏட்டு மாதேஸ்வரன் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

    இது தொடர்பாக அவர் மனைவி சித்தோடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • இசக்கி முத்துக்குமார் சங்கரன்கோவில் டவுன் போலீஸ் நிலையத்தில் தனிப்பிரிவு ஏட்டாக பணிபுரிந்து வருகிறார்.
    • சங்கரேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் டவுண் போலீசார் வழக்குப்பதிவு செய்து சோலைவேலை கைது செய்தனர்.

    சங்கரன்கோவில்:

    சங்கரன்கோவில் திரு.வி.க. நகரை சேர்ந்தவர் இசக்கி முத்துக்குமார்(வயது 35). இவர் சங்கரன்கோவில் டவுன் போலீஸ் நிலையத்தில் தனிப்பிரிவு ஏட்டாக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சங்கரேஸ்வரி (33).

    இந்நிலையில் திரு.வி.க. தெருவை சேர்ந்த சத்தியமூர்த்தி, சோலைவேல், உதயா ஆகிய 3 பேரும் சங்கரேஸ்வரியிடம் உங்கள் கணவர் எங்களை பற்றி போலீஸ் நிலையத்தில் அடிக்கடி தகவல் கொடுத்து வருகிறார் என்று கூறி அசிங்கமாக பேசி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

    இது குறித்து சங்கரேஸ்வரி கொடுத்த புகாரின் பேரில் டவுண் போலீசார் வழக்குப்பதிவு செய்து சோலைவேலை கைது செய்தனர். தப்பி ஓடிய 2 பேரை தேடி வருகின்றனர். 

    ×